<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->சரி சரி காதலிக்கிறவங்க சிந்திச்ச செயற்பட்டால் எல்லாம் சரியாய் நடக்கும்.. பை த வே தம்பி அக்கா மேல கோவம் இல்லைத்தானே. நம்ம மனசில பட்டைதை சொன்னம். உங்கள் கவிதைக்கு எதிர்க்கருத்து வைப்பது எமது நோக்கமல்ல நம்ம கருத்தை வைக்க வேண்டியய நிலையில எப்பவோ எழுதிய இந்த கவிதையை இப்ப இணைச்சன்.

<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எனக்கு என்ன கோபம் .. கோவிக்கிறது எண்டால் நான் ஏன் வலிய கருத்து சொல்லுங்கள் என்று கேக்கிறேன்.. நானும் அறிய வேண்டி இருந்தது பலவிடையங்கள் அதனால் தான் இந்த கவிதையையே இங்கே இட்டேன்...
<!--QuoteBegin-ASWINI2005+-->QUOTE(ASWINI2005)<!--QuoteEBegin-->பின்னால் அலையாமல் இருப்பதற்காக முன்னால் இன்னொரு சமூகத்தையே பலியாக்குவதுதான் உங்கள் கருத்தோ கவிதன் தம்பி.
தம்பி கவிதன் பிற்போக்குவாதம் என நான் குறிப்பிட்டிருப்பதன் பொருள் யாதெனில் முற்காலம் முதல் இக்காலம் வரையிலும் ஆண்கவிகள் ää கலைஞரின் கண்களுக்குள்ளும் ää கவிதைக்குள்ளும் உவமையென்ற பெயரில் பெண்களை உரித்துத் தொங்கவிடும் வளக்கம்தான். அதை நீங்களும் பின்பற்றக்கூடாது என்ற நல்நோக்கத்திலேயே எழுதுகிறேன். மற்றும்படி உங்களில் கோபமில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
முன்னாலே யோசித்து செயற்படலாம் தானே ஆண்கள் கூட.. அதாவது இப்படி ஒன்று ஏற்பட்ட உடனை எல்லோரையும் போல் தாடி வளர்க்காமலும் .. தண்ணிஅடிக்காமலும் தன் சீரானவாழ்க்கையை தொடரலாமே.. இந்த கவிதை எழுதிய படியால் தானே அந்த அட்வைஸ் எல்லாத்தையும் நீங்கள் இதன் கீழ் சொல்லி இருக்கிறீர்கள்.. இல்லாவிட்டால் தெரியாத பலருக்கு அது தெரியாமலே இருந்திருக்கும்.... நான் சொல்வது சரி தானே...
நான் கவிதைகளில் எந்த விதமான தவறான வார்த்தைகளோ இரட்டை அர்த்த வார்த்தைகளோ பாவிப்பது இல்லை... கவிதை தோட்டத்திலும் படங்கள் கூட பார்ப்பதற்கு அழகாகவும் ஆபாசமின்றியும் உள்ளவை தான் இடப்படுகிறது. அங்கு கவிதைகளை எழுதுபவர்கள் அனைவரும் கூட இளஞ்ஞர் , இளஞ்ஞிகள் தான் .. அவர்கள் கவிதைகள் கூட நாகரிகமாக நவீனமாக தான் வருகின்றன...
இதோ நீங்களே பாருங்களேன் அவர்கள் திறமைகளை...
நன்றி அக்கா உங்கள் கருத்துக்களுக்கு