02-16-2005, 12:04 AM
வாய் வார்த்தையால்
வசமாய் ஜாலம் காட்டும்
ஈனப்பிறப்புகள் இன்றி
வாழ்வில்லையா...??
தாங்கிட ஒரு உறவென்று..
தடுக்கி விழாது பிடித்திட
ஒரு தூண் என்று..
வாழ்வெல்லாம் கூட வர
ஒரு துணை என்று
நம்பி வாழ்ந்தது போதாதா...??
அன்பினை நெஞ்சினில் அடக்கி
அவர்களை கண்களில் சுமந்து..
அன்பிற்காய் வாழும்
அற்பப்பிறவிகளாய்
அறியமையால்
அடைப்பட்டது போதாதா..??
வேசக்காராம் ஏமாற்றுக்காரராம்
அராய்ச்சியாம்.. அதற்கு பொருளாம்..
பெரிய அறிஞர்கள் இவர்கள்..
ஆராய்ச்சி செய்கின்றனர் பெண்களை
அன்னை என ஒருத்தி..
ஆருயிர் கொடுத்து..
முளையான முதலில் இருந்து...
பழமாகிய பின்பும்
பி்ள்ளையாய் நெஞ்சில் கொள்வாள்
தங்கையாய் அக்கைவாய்..
இன்னும் எத்தனை
எத்தனை வடிவங்களாய்..
இவர்களுக்கு பெண்கள்...!
கொண்டவனை உயிராய்
எண்ணும் பத்தினிகள் வேறு
எதற்கு ஆராய்ச்சி பெண்ணை..
அவள் பெருமை அறிந்தா..??
இல்லை சிறுமைப்படுத்தவா...??
மனைவி உயிருடன் இருக்கையில்
பிற மனை நாடும் கணவனும் உண்டு..
காதலி கண் முன் இருக்கையில்
கண் மேயும் காதலனும் உண்டு
தங்கையையே தாயாக்கிய..
தமயனும் உண்டு
தமக்கையை விற்றுப்பிழைக்கும்
தம்பியும் உண்டு...
தேவதாசாய் வாழ்கின்ற..
காதலரும் உண்டு..
தேவதாசை விட
வேதனையில் வாழும்
பார்வதிகளும் உண்டு
அமைதியாய் வாழ்வதால்
அவர்கள் போலிகளா..??
காதலித்தேன் தோல்வி என
கதறி அழுவது தான் காதலா..??
மனதோடு மெளனமாய் அழுகின்ற
பெண்மைகள் எத்தனை...??
சாஜகானைப்போல மாளிகை
கட்டினால் தான்
உண்மையான காதலா..??
தோல்விகள் என்பது எங்கும் சமனே..
மெளனமாய் இருப்பதனால்
பெண்கள் மேல் பழி தான்..
மாற்றுங்கள் பல்லவியை.
வெளிச்சத்திற்காய் நெருப்பிள்
விழும் விட்டில் பு}ச்சிகள் அல்ல நீங்கள்
பகுத்தறிவு கொண்ட மனிதர்கள்
சிந்தனையில் தான் செயல்திறம் உண்டு.
கதைவிடுவதில் காரியம் ஆவதில்லை
உண்மையை உணருங்கள்.
வாழ்க்கை அர்த்தப்படும்
பழிகளை வீசாதீர்
பெண்கள் மீது.
பெண்கள் பழி போட நினைத்தால்
தாங்கிட ஏது வலிமை உமக்கு
காதலுக்காய் நினைவாலையம்
ஆக்கத்தான் முடியும் உம்மால்
ஆனால்
அழிக்கவும் முடியும் பெண்ணால்
மாற்றுங்கள் எண்ணங்களை
இல்லையேல் மாற்றப்படும்....!
:twisted:
வசமாய் ஜாலம் காட்டும்
ஈனப்பிறப்புகள் இன்றி
வாழ்வில்லையா...??
தாங்கிட ஒரு உறவென்று..
தடுக்கி விழாது பிடித்திட
ஒரு தூண் என்று..
வாழ்வெல்லாம் கூட வர
ஒரு துணை என்று
நம்பி வாழ்ந்தது போதாதா...??
அன்பினை நெஞ்சினில் அடக்கி
அவர்களை கண்களில் சுமந்து..
அன்பிற்காய் வாழும்
அற்பப்பிறவிகளாய்
அறியமையால்
அடைப்பட்டது போதாதா..??
வேசக்காராம் ஏமாற்றுக்காரராம்
அராய்ச்சியாம்.. அதற்கு பொருளாம்..
பெரிய அறிஞர்கள் இவர்கள்..
ஆராய்ச்சி செய்கின்றனர் பெண்களை
அன்னை என ஒருத்தி..
ஆருயிர் கொடுத்து..
முளையான முதலில் இருந்து...
பழமாகிய பின்பும்
பி்ள்ளையாய் நெஞ்சில் கொள்வாள்
தங்கையாய் அக்கைவாய்..
இன்னும் எத்தனை
எத்தனை வடிவங்களாய்..
இவர்களுக்கு பெண்கள்...!
கொண்டவனை உயிராய்
எண்ணும் பத்தினிகள் வேறு
எதற்கு ஆராய்ச்சி பெண்ணை..
அவள் பெருமை அறிந்தா..??
இல்லை சிறுமைப்படுத்தவா...??
மனைவி உயிருடன் இருக்கையில்
பிற மனை நாடும் கணவனும் உண்டு..
காதலி கண் முன் இருக்கையில்
கண் மேயும் காதலனும் உண்டு
தங்கையையே தாயாக்கிய..
தமயனும் உண்டு
தமக்கையை விற்றுப்பிழைக்கும்
தம்பியும் உண்டு...
தேவதாசாய் வாழ்கின்ற..
காதலரும் உண்டு..
தேவதாசை விட
வேதனையில் வாழும்
பார்வதிகளும் உண்டு
அமைதியாய் வாழ்வதால்
அவர்கள் போலிகளா..??
காதலித்தேன் தோல்வி என
கதறி அழுவது தான் காதலா..??
மனதோடு மெளனமாய் அழுகின்ற
பெண்மைகள் எத்தனை...??
சாஜகானைப்போல மாளிகை
கட்டினால் தான்
உண்மையான காதலா..??
தோல்விகள் என்பது எங்கும் சமனே..
மெளனமாய் இருப்பதனால்
பெண்கள் மேல் பழி தான்..
மாற்றுங்கள் பல்லவியை.
வெளிச்சத்திற்காய் நெருப்பிள்
விழும் விட்டில் பு}ச்சிகள் அல்ல நீங்கள்
பகுத்தறிவு கொண்ட மனிதர்கள்
சிந்தனையில் தான் செயல்திறம் உண்டு.
கதைவிடுவதில் காரியம் ஆவதில்லை
உண்மையை உணருங்கள்.
வாழ்க்கை அர்த்தப்படும்
பழிகளை வீசாதீர்
பெண்கள் மீது.
பெண்கள் பழி போட நினைத்தால்
தாங்கிட ஏது வலிமை உமக்கு
காதலுக்காய் நினைவாலையம்
ஆக்கத்தான் முடியும் உம்மால்
ஆனால்
அழிக்கவும் முடியும் பெண்ணால்
மாற்றுங்கள் எண்ணங்களை
இல்லையேல் மாற்றப்படும்....!
:twisted:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->