சினிமா என்பதும் சரி இலக்கியங்களும் சரி அந்தந்தக் காலத்தின் பிரதிபலிப்புக்களை உள்ளடக்கிய கலைவடிவங்கள்... அதில் சினிமா என்பது நவகால வர்த்தகக் கலைவடிவமாகவே பெரிதும் வெளிவருகிறது...அதில் நீங்களும் நாங்களும் ஒருமித்தே உள்ளோம்...!
எனி சினிமாவின் தன்மை பற்றி நோக்கினால்...
இப்போ...ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்யும் போது எத்தனை நளினமாக கண்ணைக் கருத்தைக் கவரத்தக்கதாக விளம்பரம் செய்கிறார்கள்...காரணம் அப்பொருளுக்கான வர்த்தகக் கேள்வியைக் கூட்ட வேண்டும்..அதற்கு வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக...! அதே பொருளை நீங்கள் வாங்கி உண்டோ அல்லது பாவிக்கும் போதோ விளம்பரத்தில் பிரதிபலித்த மாதிரி அது இல்லாமல் போகலாம்...! அதுபோலத்தான் சினிமாவும் பொருள் இது என்று சொல்கிறது...ஆனால் அதற்குள் பல அம்சங்கள் செருகப்பட்டு அவை கண்ணைக் கருத்தைக் கவரத்தக்கதாக வடிவமைக்கப்படுகின்ற போது பார்ப்பவரின் புலன் நோக்கி பொருள் மாறுபடலாம்,,...அவ்வளவும் தான்...!
நீங்கள் சினிமா சொல்லும் கருப் பொருளைப் பற்றிக் கருத்தில் எடுக்காது செருகல்களைக் கருத்தில் எடுப்பதற்கு சினிமா என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்..அது உங்கள் தவறே அன்றி சினிமாவினதல்ல...!
இப்போ கப்பல் கடலில் போனால் தாண்டு விடும் என்பதற்காகவோ..இல்ல கடலில் உள்ள திமிங்கிலம் கவிழ்த்துவிடும் என்பதற்காகவோ...விமானம் ஆகாயத்தில் இருந்து விழுந்துவிடும் என்பதற்காகவோ இரண்டிலும் போகாமலா இருக்கிறோம்...தொழில்நுட்பத்தினை நம்பி பயணிக்கிறோம் இல்லையா...அதுபோலத்தான் சினிமாவும்... ஆபத்துக்கள் அருவருப்புக்கள் அங்கும் இருக்கலாம்...அதற்காக அவற்றையே நாம் நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லையே...!
தென்னிந்திய தமிழ் சினிமாவில் காதல், குடும்ப வாழ்கை.. அங்கு எழும் சச்சரவுகள் என்று ஒரே குண்டுச்சட்டிக்குள் தான் அதிகம் குதிரை ஓட்டுகிறார்கள்...அது உண்மைதான்...ஆனால் அதற்காக சினிமா முற்றுமுழுதாக கெட்டதைத்தான் சொல்கிறது என்பது தவறு...அதுவே கலாசார சீரழிவுக்கு முழுக் காரணம் என்பதும் தவறு இதுவே எமது வாதத்தின் நோக்கம்...!
சினிமா என்பது மிகவும் சுத்தமானது அல்லது முழுக்க முழுக்க நல்லதையே தருகிறது என்பதல்ல எமது வாதம்...! அதற்குள் உள்ள கெட்டதுகளை நோக்காது நல்லதுகளை நோக்க ஏன் நீங்கள் தயங்குகிறீர்கள் என்பதே எமது வினா...??! கெட்டதுகள் நோக்கியே அதிகம் பார்வைகளைக் கொட்டுவது ஏன்...??! சினிமாவுக்குள் வரும் புளுகுக்காக சமூகத்தில் ஆதாரம் கேட்கிறீர்களே உங்களை எனென்று விமர்சிப்பது...அது புளுகு... ஒரு யதார்த்ததைச் சொல்ல பல யதார்த்தமற்றதைச் செருகி கண்ணைக் கருத்தைக் கவருகின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தும்..சினிமாவை ஏன் உதாரணமாகக் கொள்ள விளைகின்றீர்கள்...அதற்கு ஏன் முன்னுரிமையும் மிகைப்படுத்தலும் கொடுக்கிறீர்கள்...! அதையேன் பொழுதுபோக்கம்சமாக பார்க்காமல் பொழுதழிக்கும் அம்சமாக நோக்குகிறீர்கள்...!
சினிமாவுக்கு தமிழ் பெயர் வைத்தால்தான் தமிழ் வளரும் என்பதோ...சினிமாத் தமிழில் தான் எங்கள் தமிழன்னை வாழ்கிறாள் என்று நோக்குவதோ தவறு...!
முன்னரே சொன்னோம்...சினிமா ஒரு வர்த்தக்கக் கலைவடிவம்...இலக்கியம் முழுக்க முழுக்க மொழிசார் கலைவடிவம் போன்றதென்று...! அந்த இலக்கியத்துக்குள்ளேயே எத்தனை புளுகுகள்...குறிப்பாக இன்றைய சிறுகதைகள் நாவல்கள்...கவிதைகள்...இப்படியானவை எவ்வாறு மொழிநடையைக் கையாள்கின்றன என்று பார்த்தால் அவற்றுக்குள்ளேயே தமிழ் இறந்து கிடக்கிறது...! இந்தியத் தமிழ் நாவல்கள் ஆகட்டும் இலங்கை அல்லது புலம்பெயர் நாவல்கள் எழுத்துக்கள் ஆகட்டும் பலவற்றில் சிலவற்றை நோக்கி நாமே ஒரு சின்ன சுய ஆய்வு செய்தோம்...தூய தமிழ் தந்த சமகால எழுத்தாளர்களின் நாவல்கள் சிறுகதைகள் என்று ஒன்று கிடைப்பதே மிக அரிதாக இருந்தது..பாடசாலைக் காலத்தில் கல்கியில் வாசித்த பொன்னியின் செல்வனுக்குப் பிறகு....அப்படி ஒன்றை வாசிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை என்றால்...தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் நிலை என்ன என்று பாருங்கள்...அவர்களே அப்படி சமூகத்தோடு தமிழை மறந்து வியாபாரத்துக்காக புகழுக்காக மொழிச் சீரழிவோடு ஒன்ற முற்படும் போது வர்த்தகக் கலைக்காக சினிமாக் கதையெழுதும் கதாசிரியர்களிடம் எப்படி மொழித் தூய்மையை எதிர்பார்க்க முடியும்....!
உண்மையில் மொழித் தூய்மை என்பது சகல மட்டத்திலும் இருக்க வேண்டும்...அரச நிர்வாகம் தொடங்கி பாடசாலைகள் ஈறாக சாதாரண மக்களின் கலந்துரையாடகல்கள் வரை அது இருக்கும் பட்சத்திலேயே மொழித் தூய்மை என்பது பரிகரிக்கப்படும்...இதில் சினிமாவின் பங்களிப்பென்பது ஆதிக்கமுள்ள ஆனால் அளவில் சிறிதானதே...கடுகு போல....! அதை தூக்கிப் பிடித்து அதுதான் மொழியை சீரழிக்கிறது என்று உரக்க கூவுவது எய்தவன் இருக்க அம்பை நோவது போன்றதே...!
அதுபோலத்தான் உடையலங்காரங்கள்...உடலலங்காரங்கள்...சிகையலங்காரங்கள் என்பதாக வீதிக்கு வீதி மெழுகு பொம்மைகள் காவும் உடைகளை விடவா சினிமா அதிகம் காட்டுகிறது...வீட்டுக்குவீடு தொலைக்காட்சிகள் இணையத்தளங்கள் காட்டுவதை விடவா சினிமா காட்டுகிறது... தெருவுக்கு தெரு முளைத்துள்ள ஆண், பெண் அழகு நிலையங்கள் செய்து காட்டுவதை விடவா சினிமா காட்டுகிறது....சமூகத்தில் அனைத்துக் கண்றாவிகளும் சினிமாவை வென்று நடக்கும் போது அதை அமைதியாகச் செய்பவர்களே முகத்துக்கு நல்ல முகமூடி போட்டு அகத்துக்கு நல்ல இறுகப் பூட்டுப் போட்டு சினிமாவை விமர்சிக்கின்றனர்...ஏன் இந்தக் கேவலமான நிலை...! இவர்கள் உண்மையில் கலாசார சீரழிவுக்காகக் குரல்கொடுக்கின்றனரா அல்லது தங்கள் கூத்துக்களை சினிமா அரங்கேற்றுகிறது என்பதற்காக பழிவாங்க முற்படுகின்றனரா என்றே கேட்கத் தோன்றுகிறது...!
சினிமாவுக்குள் மாறுதலைக் கோர முதல் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வீதிக்கு வீதியும் வீட்டுக்குவீடும் நிகழும் மொழி மற்றும் கலாசார சீரழிவுக்கு முடிவுகட்ட ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணுங்கள்...சினிமா தானே தன்னை மாற்றிக் கொள்ளும்...! அது விரைந்தும் நடக்கும்....மற்றும் படி...நீங்களா தேடிப் பெறுவதற்கு சினிமாவைச் சாட்சி வைக்காதீர்கள்...அது உங்கள் போலித்தனத்தை நிரூபிக்கவே வழிகாட்டும்....!
மற்றும் படி சினிமாவில் தூய தமிழ் பேசு...சினிமாவில் அப்படி உடுத்தாதே இப்படி உடுத்து...சினிமாவில் பெண்களை அப்படிக் காட்டுறாங்க...கேவலப்படுத்துறாங்க என்பதெல்லாம் வெறும் கோசங்களே அன்றி வேறில்லை...உண்மையில் இவற்றை காதில் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை...!
ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை ஆளுமை செய்வது எது என்பதைப் பற்றி மீளாய்வு செய்வானாயின் நிச்சயமாக அவன் சமூகச்சீரழிவு கலாசார சீரழிவு நோக்கிய பாதையில் செல்லமாட்டான்...சினிமா காட்டினால் என்ன தெருவில் நின்றுகாட்டினால் என்ன...! அதைச் செய்யத் திராணி அற்ற பெண்களும் ஆண்களும் போடும் கூச்சலே சினிமா எதிர்ப்பு பெண்களைக் கேவலம் பண்ணுறாங்க என்பதெல்லாம்..பெண்களை கேவலம் பண்ணுறாங்க என்று தெரிந்தால் பிறகெதற்கு விழுந்தடிக்கிறீங்க சினிமா பார்க்க....! பார்க்காமல் விட வேண்டியதுதானே....! பாக்கிறதையும் பாக்கிறது பிறகு அதற்கு ஒரு விமர்சனம்...இப்போ எயிட்ஸ் வரும் என்பதற்காக எயிட்ஸ் நோயாளியையே துரத்தி அடிக்க வேண்டும் என்பவர்கள் நீங்கள் என்றால்...நாங்கள் எங்கும் எயிட்ஸ் வைரசையே அழிக்க வேண்டும் என்பவர்கள்...அவ்வளவும் தான் வேறுபாடு...! உங்களுக்குத் தெரியாது நோய் அறிகுறியில்லாமல் நீங்களும் எயிட்ஸோடு இருக்கலாம் என்பது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>