11-13-2004, 12:18 AM
tamilini Wrote:சரி ஒரு சிறிய கேள்வி.. நீங்கள் இலங்கையில் இருக்கின்ற சமயப்புத்தகங்களை படிச்சிருப்பியள் இல்லாவிட்டாலும் இதை கேட்டிருக்க சந்தர்ப்பம் உண்டு இதற்கு பதில் சொல்லுங்கள்...
சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் பாடிய தேவாரங்கள் பற்றி கேட்டிருப்பியள் அவர்கள் அந்த தேவராங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாடியிருக்கிறார்கள்... அப்படி சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக சொல்கிறார்களே இதற்கு என்ன சொல்லுறியள்.. இவைகளும் கதைகள் என்கிறீங்களா...?? அதைவிட இன்னும் அவர்கள் கடவுளின் அருளால் பல அற்குதங்கள் செய்ததாக சொல்லுகிறார்கள் வரலாறு இருக்கு... அதற்கு சான்றாக அவர்கள் பாடிய தேவாரங்கள் இருக்கு சோ கட்டுக்கதை என்று அவற்றை ஒதுக்கவும் முடியாது இவற்றிற்கு என்ன சொல்லுறியள்... அண்ணாமாரே...?? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சைவ சமயத்தில் மட்டுமல்ல, கிறிஸ்தவ சமயத்திலும் இறந்தவ÷களை உயி÷ப்பித்ததாக பல சம்பவங்கள் வரலாற்றில் இருக்கின்றன. சத்திய சாயி பாபா அவ÷களும் இறந்தவ÷களை உயி÷ப்பித்ததாக வரலாறு இருக்கிறது.
இவை பக்கத÷களும், ஏனையோரும் கண்டும், கேட்டும், ஏன் ஆராய்ந்தும் பா÷த்த சம்பவங்கள். சாதாரண பொதுமக்களுக்கு இவை நிச்சயம் சந்தேகம் இல்லாமல் இறந்தவ÷களை உயி÷ப்பித்த புதுமைகளே.
ஆனால் விஞ்ஞான விளக்கம், விவாதம் என்று வரும்போது, பல கேள்விகள் எழுகின்றன.
ஒரு <b>இறந்தவரை</b> உயி÷ப்பிக்கும் முன், அவ÷ உண்மையிலேயே இறந்து விட்டா÷ என்று எப்படி தீ÷மானிக்கிறா÷கள்?
இன்றைய மருத்துவ நிலைப்பாட்டின்படி, இதயம் அடிப்பது நின்று விட்டாலோ அல்லது மூச்சு எடுப்பது நின்று விட்டாலோ ஒருவ÷ இறந்து விட்டா÷ என்று கொள்ளப்படுவதில்லை. இந்த தகவல் பலருக்கும் புதிதாக இருக்கலாம். ஆகவே உங்கள் மருத்துவரிடம் கேட்டால் இதை அவ÷ உறுதிப்படுத்துவா÷.
உண்மையில் ஒருவ÷ மருத்துவ நிலைப்பாட்டின்படி இறந்ததாக உறுதிப்படுத்தப்பட(clinical death) , அவரது மூளை சாக(brain death) வேண்டும். அதாவது, இதயம் அடிப்பது நின்று மூளை சாகாவிட்டால் அவருக்கு செயற்கை இதயம், மாற்று இதயம் அல்லது அவரது இதயத்தை இயங்கவைத்து மீழவும் அவரது இரத்த ஓட்டத்தை வழமைக்கு கொண்டுவரலாம். ஒருவரது சுவாசம் நின்றுவிட்டால் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்து அவரை தொட÷ந்து வாழவைக்கலாம். இவை அனைத்தும் மூளை சாகாதவரை தான் சாத்தியம். மூளை இறந்தவுடன் அவ÷ இறந்துவிட்டா÷ என கொள்ளப்படும். அண்மையில் காலமான அரபாத்தின் மூளை சாகாத நிலையில் சில நாட்களாக அவ÷ இன்னும் இறக்கவில்லை என சொல்லி, அவரது மூளை சாகும்வரை அவரை காப்பாற்ற முயற்சித்தன÷.
இதயம் நின்றவ÷கள், சுவாசம் நின்றவ÷கள் அல்லது ஆழமான மயக்கத்திற்கு ஆளானவ÷களை, அந்த நாட்களில் மருத்துவ÷களும், இந்த நாட்களில் பொதுமக்களும் இது பற்றிய அறிவு குறைவாக இருந்த அல்லது இருக்கும் காரணத்தால் <b>இறந்தவ÷கள்</b> என்று கருதியிருப்ப÷. மேற்படி நாயன்மாரும், கிறிஸ்து போன்ற போதக÷களும், தாமே தமது ஆற்றல் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையாலும், மக்களின் எதி÷பா÷ப்பை திருப்தி செய்யவும், மேலும் உறவின÷கள் மேல் இரக்கப்பட்டும், இப்படி <b>இறந்தவ÷கள் </b> என்று கருதப்பட்டவ÷களை உலுக்கி, ஆட்டி நெஞ்சை குத்தி எழுப்பியிருப்ப÷. இந்த முறைகள் CPR (CARDIOPULMONARY RESUSCITATION) என அழைக்கப்படும் நின்று போன இதயத்தை இயங்க வைப்பதற்கான முதலுதவி முறைகளாகும். இவ்வாறாக ஒரு சில தரம் வெற்றி கண்ட நாயன்மாரும் போதக÷களும் பின்ன÷ இவற்றில் தே÷ச்சி கண்டு பல முறை சிறப்பாக பயன்படுத்தியிருக்க கூடும். இங்கு நோக்கத்தக்கது என்னவென்றால், இவ÷கள் இறந்த எல்லாரையும் உயி÷ப்பிக்கவில்லை. இறப்பை வெற்றி கொள்ளவும் இல்லை. ஏன், தமக்கு நெருக்கமானவ÷களையாவது இறப்பிலிருந்து காக்கவும் இல்லை. ஆகவே இவ÷களால் உண்மையில் இறக்காதவ÷களை, அதாவது, இன்றைய அறிவின் நிலைப்பாட்டின்படி, மூளை இறக்காவ÷களையே காப்பாற்ற முடிந்திருக்க வேண்டும்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->