Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜேர்மனி செய்திகள்
http://rhein-zeitung.de/on/05/12/24/rlp/t/...arkup=rzo207882
Reply
Familiendrama in der Pfalz - Eheleute aus Landau tot

Landau - Einem Fami­lien­drama ist die Polizei in der Pfalz auf der Spur. Mueg­licher­weise hat ein 32-Jueh­riger seine Frau getuetet und dann Selbst­mord began­gen.

Die Leiche des Mannes - eines aus Sri Lanka stam­men­den Deut­schen - sei am Frei­tag­abend auf Bahn­glei­sen in der Nuehe des Bahn­hofs Landau gefun­den worden, teilten Polizei und Staats­anwalt­schaft am Samstag mit. In einem Wein­berg an der Bun­dess­traue zwi­schen Landau und Neu­stadt fand eine Auto­fah­rerin am Sams­tag­mor­gen die Leiche der 33 Jahre alten Ehefrau des Toten.
Reply
<span style='font-size:30pt;line-height:100%'>Germany Landau நகரில் கோரம்</span>

ஜேர்மனி லண்டவ் நகரிலே இலங்கை பிரஜை ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. இவரது சடலத்தை Landau போலீசார் Landau தொடரூந்து நிலையத்துக்கு அருகில் தண்டவாளங்களுக்கிடையில் கண்டுபிடித்துள்ளனர். மனைவியின் சடலத்தை சனிக்கிழமை அதிகாலை Landau இல் இருந்து Neustadt சென்ற பெண்மணி ஒருவர் 33 வதுடைய பெண்ணின் சடலத்தை கண்டு போலீசாருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.
Reply
மேலே உள்ள பத்திரிகை செய்தி கூறுகிறது கணவன் மனைவியை கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்ததாக, ஆனால் தம்பதியினர் வெளியில் செல்லும் போது பிள்ளைகளிடம் நாங்கள் வரபிந்தினால் (பிள்ளைகளுக்கு தெரிந்த உறவினர் அல்லது நண்பர்) ஒருவரின் தொலைபேசிக்கு தொடர்புகொள்ளுமாறு சொன்னார்களாம். முழு விபரமும் அறிந்தபின் கூறுகிறேன்.
" "
Reply
sri Wrote:பிள்ளைகளிடம் நாங்கள் வரபிந்தினால் (பிள்ளைகளுக்கு தெரிந்த உறவினர் அல்லது நண்பர்) ஒருவரின் தொலைபேசிக்கு தொடர்புகொள்ளுமாறு சொன்னார்களாம்.

இதை யார் தங்களுக்கு கூறியது. அது உண்மையாயின் தாங்கள் அறிந்த செய்தியை உடன் போலீசாருக்கு அறிவித்து. தமிழினத்தின் மேல் விழுந்துள்ள கறையை நீக்குங்கள்
Reply
ஊமை Wrote:இதை யார் தங்களுக்கு கூறியது. அது உண்மையாயின் தாங்கள் அறிந்த செய்தியை உடன் போலீசாருக்கு அறிவித்து. தமிழினத்தின் மேல் விழுந்துள்ள கறையை நீக்குங்கள்

மன்னிக்கவும் இச்செய்தியை இதுவரை என்னால் உறுதிப்படுத்தமுடியவில்லை. தமிழினத்தின் மேல் விழுந்துள்ள கறை என்று நீங்கள் கூறுவதால் என்னைவிட உங்களுக்குத்தான் இச்செய்தியின் முழுவிபரமும் தெரிந்துள்ளது மிகுதியை நீங்களே கூறிவிடுங்கள்.
" "
Reply
ஊமை சிறி

பத்திரிகைச் செய்தியின்படி இறந்த ஆணுக்கு 32 வயதென்றும் இறந்த பெண்ணுக்கு 33 வயதென்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களின் பிள்ளைகள் பற்றிய எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை. அப்போ எப்படி அவர்களுக்கு 4 பிள்ளைகள் என்ற சேதி வெளிவந்தது. இது தற்கொலையா அல்லது கொலையா என்ற உண்மை பிரேதப் பரிசோதனையின் பின்பு தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே லண்டோவ்விற்கு அருகிலுள்ள யாரிடமாவது தகவலைப் பெற்று சரியான தகவலை உறுதி செய்யுங்கள்.
Reply
Vasampu Wrote:அப்போ எப்படி அவர்களுக்கு 4 பிள்ளைகள் என்ற சேதி வெளிவந்தது


<img src='http://img288.imageshack.us/img288/8283/landau3wf.jpg' border='0' alt='user posted image'>

பத்திரிகை சொல்கிறதே :?: :?: :?:
Reply
<b>ஊமை</b>
முதலில் நீங்கள் இணைத்த இணைப்பில் பிள்ளைகள் பற்றிய செய்தி இல்லை. அப்போது நீங்கள் சிறிதான் அப்படிச் சொன்னார் என எழுதினீர்கள். இப்போ அந்தச் செய்தியை எடுத்துவிட்டு பத்திரிகை சொல்கிறதே என்று எழுதியுள்ளீர்கள்.
Reply
ஜேர்மனியில் பறவைக்காச்சல் அபாயம்?
Reply
ஜேர்மனியில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் ஈழத்தமிழர்களான தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
வேலணையைச் சொந்த இடமாகக் கொண்ட விநாயகமூர்த்தி கிருபா மூர்த்தி (வயது52), மகனான கிருபாமூர்த்தி வசந்தரூபன் (வயது 18) இருவருமே விபத்தில் உயிரிழந்தனர்.
இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஜேர்மனியில் குடும்பமாக வசிக்கும் இவர்கள் அங்கு சொந்தமாக வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை தந்தையும் மகனும் தமது வர்த்தக நிறுவனத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் அவர்கள் பயணம் செய்த கார் ஹன்டர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகிறது.
மகனான வசந்தரூபன் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை கிருபாமூர்த்தி படுகாயங்களுடன் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு அங்கு மரணமானார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ஜேர்மனி பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-உதயன்-

இந்த விபத்து ஜேர்மனியில் எந்த நகரத்தில் நடைபெற்றது. கள உறுப்பினர் யாருக்காவது தெரியுமா?
" "
Reply
இந்த விபத்து ஜேர்மனி Moenchengladbach எனும் நகரிலே நடை பெற்றுள்ளது. இவர்கள் சென்ற கார் LKW எனப்படும் கனரக பாரஊந்தின் கீழ் அகப்பட்டுக்கொண்டதாக அறியமுடிகிறது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)