Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடவுள் நம்பிக்கை
Quote:நவீன மிஷனரிமாரின் தாக்குதலிருந்து சைவத்தைக் காக்க ஒரு ஆறுமுக நாவலன்


பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் ஆறுமுகநாவலர் என்பதனையும் அறிந்து கொள்வது நலம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
தமிழன் இந்து மதத்தால் என்ன பெரிதாகப் பெற்று விட்டான் மனிதத்தின் ஒழுக்கங்களை வேண்டுமானால் இந்து மதம் போதித்திருக்கலாம். ஆனால் அதோடு சாதிகள். சடங்குகள் எண்டபேரில மூடநம்பிக்கைகள் தான் புகுத்தியது அதிகம். இன்றும் நிறையப் பேர் பிரிவினையைக் காட்ட கையில அந்த இந்துமத சாதியத்தைதான் கையில வைச்சிருக்கின்றனர். எனது தாய்மொழி தமிழ் எந்ததுன்பத்திலயும் நாம் அம்மா எண்டுதான் அழுகிறம். அதனால நான் தமிழன். சாதி வெறியை தூண்டி துண்டாட தூண்டும். இந்தச் சமயம் எனக்கு வேண்டாம்.
:::::::::::::: :::::::::::::::
Reply
உண்மை அகிலன்....! கப்பல் கட்டி கிரேக்கம் வரை சென்று வணிகம் செய்து... புகழோடு வாழ்ந்த சோழன் எப்ப கோயில் கட்டினானோ அண்டோட தமிழன் பெருமை அழிஞ்சுது.. இண்டைக்கும் எங்கட நிலைக்கு காரணம் இந்த அடிமைச் சின்னங்கள்தான்.. நாங்கள் கட்டிவைத்திருந்த கப்பல் தொழில்நுட்பம் எங்க போனது எண்டு தெரியாதளவுக்கு அழிஞ்சு போச்சு..
::
Reply
narathar Wrote:யாரக் கேக்கிறியள் நல்லவன்,
இங்க வழக்கமாப் பதில் சொல்லுறவை கூகிள் இல தேடுகினம்,இன்னும் அகப் படேல்லப் போல.
என்னக் கேட்டா,கடவுளப் படச்சது மனிசன்(இதை வலு விலாவாரியா மேல எழுதியிருக்கிறார்,பிறகேன் நான் மினக்கடுவான்).ஆகவே உந்தக் கேள்விக்கு கடவுள் படச்ச மனிசர் தான் பதில் சொல்ல வேணும்.(உந்த வலைப் பதிவுகளப் பாத்து எனக்கும் ஒரு மாதிரியாக் கதைக்கிற வியாதி தொத்தீட்டுப் போல......பிறகு நானும் எழுதத் தொடங்கினா வீட்டில சண்ட தான்.....கண்டறியாத கணணியோட எண்டு....பிறகு வேலயிலேயும் தூங்கி வழிய வேணும்... வேண்டாம் ராசா....

நாரதா ஒவ்வரு வீட்டிலும் நடப்பதை அப்படியே கூறுகிறீர் உமது ஞானதிருஷ்டியே திருஷ்டி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
எங்கள் முன்னோரின் கப்பல் கட்டிய தொழில்நுட்ப வரலாறு பெயரளவிலாவது இன்னும் இருக்கு. அவர்களின் கட்டுமரத் தொழில்நுட்பம் தான் ஆங்கிலத்தில் catamaran என்று நாகரீகமாக அழைக்கப்படுகிறது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எங்களிடமிருந்து புதிய தொழில்நுட்ப பங்களிப்புகள் தான் இல்லை. பழசைக்கதைச்சுப்போட்டு பஸ்ரறைஸ்ட பாலில பாலாபிசேகம் செய்துகொண்டிருக்கிறம் :oops:
Reply
Quote:பிரீத்தி நீர் தானே இங்கே மதம்,மதம் எண்டு எழுதித் திரியிறீர் ,கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுமென்.ஏன் தனிப்பட்ட தாக்குதல்களிலேயே காலத்தைச் செலவழிக்கிறீர்.அப்படி உயரிய இந்துமதத்தைப் பற்றித்தானே நீர் பிராமணிகளின் மதம் எண்டு இவ்வளவு நாளும் வாதுட்டனீர்,இப்ப என்ன உயரிய இந்து மதம் எண்டு எழுதுறீர், நான் நினச்சன் நீர் எழுதினதுகளில இருந்து இந்து மதமும், நீர் எழுதுற சைவ மதமும் வேற எண்டு.எதோ மாயோன் ,சேயொன் எண்டு கடவுள் பேரெல்லாம் எழுதிணீர்,இப்ப பார்ப்பனீரின் மதம் தான் சிறந்து எண்டுறீர்.உமக்குள்ளயே தெளிவில்லை , நீர் முதலில ஒரு மூலயில இருந்து நீர் என்ன சொல்ல வாறீர் எண்டத் யோசிச்சுப் போட்டு எழுதும்.மேலும் நான் இந்துமதமோ,சைவ மத்மோ பற்றி மட்டும் எழுதேல்ல,மற்றதப் பற்றியும் எழுதி உள்ளேன்.இங்கே இசுலாமியச் சகோதரர்கள் எவரும் எழுதுவதாகத் தெரியவில்லை,ஆகவே பதில் அளிக்க ஒருவரும் இல்லாத இடத்து அது பற்றி எழுதுவது வெறும் பிரச்சாரமாகவே இருக்கும்.ஆரோக்கியமான கருத்தாடலுக்கு இரண்டு பக்கமும் வேணும்.


[b]நாரதர்! நான் பார்ப்பனீயத்தையும், தமிழையெதிர்க்கும், தமிழைத் தமிழன் கட்டிய கோயிலுக்குள்ளேயே தமிழை அனுமதிக்க மறுக்கும் பார்ப்பனர்களையும், தமிழனின் அறிவையும், ஆற்றலையும் உலகிற்குப் பறை சாற்றும் பழம் பெரும் கோயில்களைக் கட்டிய எங்களின் தமிழ் முன்னோர்களைப் பழித்து ஆரியரின் தொழில் நுட்பம் தான் அந்தக் கோயில்களைக் கட்டியது, தமிழர் வெறும் அடிமைகள் தான் என்று ஆணித்தரமாகச் சொல்லித் தமிழனின் வரலாற்றைத் திரிக்கும், தமிழரின் பெருமையை இகழும் பார்ப்பனர்களைத் தான் வெறுக்கிறேனேயல்லாமல் இந்து மதத்தையல்ல.

நான் ஒரு போதும் பிராமணர்கள் மட்டும் தான் இந்து மதத்தின் முழு உரிமையாளர்கள் என்று கருதியதில்லை. நான் என்னை ஒரு இந்து என்று சொல்வதை விட ஒரு தமிழ்ச்சைவன் என்று சொல்வது தான் பொருந்தும் என்று நினைக்கிறேன், இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் சைவ சமயம் இந்து மதத்தின் ஒரு அங்கமாகத் தான் கருதப்படுவதால் எழுதும் போது இந்து என்று எழுதுகிறேன். உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் எங்கள் முன்னோர்கள் கூட சைவ சமயத்தைத் தான் கடைப்பிடித்தாலும், அவர்கள் கல்லூரிகளைக் கட்டி , இந்துக்கல்லூரி என்று தான் பெயரிட்டார்கள் அல்லவா? அது போலத் தான்.

யாராவது இந்துக்களைப் பழித்தாலோ, இகழ்ந்து பேசினாலோ அது சைவத்தையும் சேர்த்துத் தான். மாயோன், சேயோன் என்று பழந்தமிழர்களின் கடவுளரின் பெயரைக் குறித்தது, பார்ப்பனீயம் எப்படித் தமிழரின் சைவத்தையும் , வேதக்கடவுளரையும் இணத்தது என்பதைக் காட்டுவதற்காக. அதற்காக சங்க காலத்துக்குத் திரும்பிப் போய், சங்ககாலச் சமய நெறியைக் கொண்டு வருவோமென்பதல்ல என்னுடைய கருத்து.


இந்துசமயமும் அதாவது அதன் sub group சைவமும் தமிழும் பிரிக்க முடியாதனவையாகி விட்டன. அது பெரும்பாலான ஈழத் தமிழரின் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. இந்து மதத்தைத் தாக்கும் பலரும், அது பெரும்பாலான தமிழரின் மனதைப் புண்படுத்தும் என்பதைச் சிந்திப்பதில்லை. உங்களுடைய மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் , நீங்களோ அல்லது இங்கு யாராவது கிறிஸ்தவ மதத்தை, இந்து மதத்தைத் தாக்கிய அளவுக்குத் தாக்கி எழுதுகிறார்களா?



PS: [size=9]இந்த இணையத்தளத்தில் என்னை யார் எப்படித் திட்டினாலும், எனக்கெதிரான கருத்துக்கள் எதுவும் தணிக்கை செய்யப் படுவதில்லை. ஆனால் அதற்கு நான் பதில் எழுதினால் முற்று முழுதாகக் கத்தரித்து விடுவது மட்டுமல்ல, தணிக்கை செய்ததாகவோ, வெட்டப்பட்டதாகக்
கூடச் சொல்வதில்லை. ஏன் இந்தப் பாரபட்சம், தனி மனித துவேசமா?
Reply
Thala Wrote:உண்மை அகிலன்....! கப்பல் கட்டி கிரேக்கம் வரை சென்று வணிகம் செய்து... புகழோடு வாழ்ந்த சோழன் எப்ப கோயில் கட்டினானோ அண்டோட தமிழன் பெருமை அழிஞ்சுது.. இண்டைக்கும் எங்கட நிலைக்கு காரணம் இந்த அடிமைச் சின்னங்கள்தான்.. நாங்கள் கட்டிவைத்திருந்த கப்பல் தொழில்நுட்பம் எங்க போனது எண்டு தெரியாதளவுக்கு அழிஞ்சு போச்சு..

Quote:<b>எனது முடிவு இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியத் தொழில் நுட்பத்தில் தமிழர்( அடிமைகளால்) கட்டப் பட்டது</b>
...

[b]இதை நேற்றுச் சொன்னவர் இன்று பண்டைத் தமிழரின் கப்பல் கட்டும் தொழில் நுட்பம் பற்றிக் கதை விடும் "தமிழன்" தலா தான், இவர் தன்னுடைய வாயின் இரண்டு பக்கத்தாலும் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு கதைக்கிறார்.

இது தான் பிராமணர் செய்த கபடம், தேவநேயப்பாவாணர், மறைமலையடிகள் போன்ற தமிழ் அறிஞர்களும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும் பார்ப்பான்களின் குள்ளநரித்தனத்தை, தமிழர்கள் ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை, இலக்கணம், இலக்கியம் தொடக்கம் கட்டிடக் கலை வரை ஆரியர் அறிமுகப் படுத்தியதென்று எல்லாவற்றையும் திரித்து, ஊர்ப்பெயர்களைக் கூட சமஸ்கிருதப்படுத்திய பார்ப்பான்களைப் பற்றி அவர்கள் விளாவரியாக விளக்கியுள்ளார்கள்.

ஆனால் தமிழனிடம் ஒரு தொழில்நுட்பமுமில்லை அவர்கள் வெறும் அடிமைகள் தான் என்றவர் இன்று கிரேக்கத்துக்குக் கப்பல் விட்ட கதை விட்டு , இங்குள்ள பகுத்தறிவு வாதிகளுக்கு ஐஸ் வைக்கிறார்.

கோயில்கள் எல்லம் தமிழனின் புகழைச் சாற்றுகிறது. ஆனால் எங்களின் தமிழ் முன்னோர்கள் கட்டிய கோயில்களை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழுக்கு உரிய உயர்ந்த இடந்தைக் கொடுக்க மறுக்கும் பிராமணர்கள் தான் தமிழனின் அடிமைத்தனத்தினதும், கையாலாகாத்தனத்தினதும் சின்னம்.

இன்னும் எத்தனை நாட்கள் தான் ஏமாற்றுவார்கள்
Reply
ஏம்மா பிரீத்தி hindu cultural ஏதாவது பீச்டி பட்டத்துக்கு தீசிஸ் எழததிகிறதுக்கு களத்திலை ஒத்திகை பார்த்திகியா.. எப்பவும் வந்துதிலிருந்து கோயில் குளம் சாமி கு்ட்டை தொண தொணண்ணு நிக்கிறியே..வேற சப்ஜக்ட் தெரியாதா...இன்னால்லாம் சொல்றாய்...கடவுளின் அட்றசை சொல்லு பார்ப்பம்...



Reply
எந்தக் கடவுளின்ர அட்றஸ் வேணும் மதராஸி?

ஏன் நீங்க நேரில போய் பார்க்கப் போறீங்களா? அல்லது கடுதாசி போடப் போறீங்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
ஏதோ ஊங்களாலை காட்டக்கூடிய கடவுளாய் பார்த்து ...ஏன்னா..red தாமரைங்க...சேரியிலை இருந்து எம்மா நாளு இருந்து போர் அடிச்சு போச்சா....அதாங்க கடவுளை நேரிலை கண்டு... சோழா flve Star ஹொட்டலையும் இந்த எல் ஜ சி கட்டிடத்தையும் ரிப்பன் பில்டிங்கையும் வாங்கி தரச்சொல்லி கேட்கலாமென்ற ஒரு நப்பாசை தாங்க... கேட்கிறதைப்பார்த்தால் red தாமரை ங்க கடவுளை பொக்கற்றிலை வைச்சு திரியிற போல இருக்குங்க...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->



Reply
மதராசி எழுதியது:

ஏதோ ஊங்களாலை காட்டக்கூடிய கடவுளாய் பார்த்து ...ஏன்னா..ரெட் தாமரைங்க...சேரியிலை இருந்து எம்மா நாளு இருந்து போர் அடிச்சு போச்சா....அதாங்க கடவுளை நேரிலை கண்டு... சோழா fல்வெ ஸ்டர் ஹொட்டலையும் இந்த எல் ஜ சி கட்டிடத்தையும் ரிப்பன் பில்டிங்கையும் வாங்கி தரச்சொல்லி கேட்கலாமென்ற ஒரு நப்பாசை தாங்க... கேட்கிறதைப்பார்த்தால் ரெட் தாமரை ங்க கடவுளை பொக்கற்றிலை வைச்சு திரியிற போல இருக்குங்க......
உப்பிடி கேக்கிறதாலதானே கடவுள் அட்ரஸ் இல்லாமல் இருக்கார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
மன்னிக்கவும். மாதரசியை மதராசி என்று போட்டுவிட்டேன்.
Reply
..
Reply
Jude Wrote:
preethi Wrote:இந்துசமயமும் அதாவது அதன் sub group சைவமும் தமிழும் பிரிக்க முடியாதனவையாகி விட்டன.

லக்ஷ்மியையும், சரஸ்வதியையும், பிள்ளையாரையும் வழிபடும் தமிழர்கள் தங்களை சைவர்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் இந்துக்கள். பிள்ளையாரை கடவுளாக கொண்ட கணபதியம், சைவம் போல, ஆறு இந்து மதப்பிரிவுகளில் வேறு ஒன்றாகும்.

இந்து மதம், சைவம், மட்டுமல்ல கிறிஸ்தவமும், இஸ்லாமும், புத்த சமயமும் கூட தமிழுடன் பிரிக்கமுடியாதபடி கலந்துவிட்டன. ஏதோ சைவமும், இந்து சமயமும் தமிழுடன் சிறப்பான உறவு இன்றும் கொண்டிருப்பதாக காட்டுபவர்கள், மற்ற சமயத்தவரை இரண்டாம்தர தமிழர் என்று காட்டுவது போல அமைகிறது.
தமிழரிடம் சைவமும், இந்து சமயமும், காலத்தால் முற்பட்டு வந்திருந்தாலும், மற்ற சமயங்களும் இன்று தமிழுடன் கலந்து விட்டன. தமிழில் நாம் இன்று பயன்படுத்தும் குத்துக்கள், கால்தரிப்பு, அரைத்தரிப்பு, முழுத்தரிப்பு போன்றவற்றை ஐரோப்பிய மொழிகளில் இருந்து தமிழுக்கு அறிமுகப்படுத்திய வீரமாமுனிவர் எனப்படும் இத்தாலிய பாதிரி பெஸ்கி, முதல் தமிழ் கிறிஸ்தவ இலக்கியமான தேம்பாவணியை இயற்றினார்.

http://www.tamilnation.org/literature/veer...ramamunivar.htm

கண்ணதாசனின் யேசு காவியம் அண்மைக்கால கிறிஸ்தவ இலக்கியமாகும். தமிழின் ஐம்பெரும் இலக்கியங்களில் ஒன்றான மணிமேகலை, புத்தசமயத்து இலக்கியமாகும். மணிமேகலை ஒரு புத்த துறவியாவார். இதே போல தமிழில் இஸ்லாமிய இலக்கியங்களும் உள்ளன. உமறுப்புலவர் 13 ம் நு}ற்றாண்டில் இயற்றிய 5000 பாடல்களை கொண்ட சீறாபபுராணம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

தமிழர் பக்கம்

தமிழுடன் தமிழரின் சயமங்கள் எல்லாம் தான் இரண்டற கலந்து விட்டன. எப்படி இந்து தமிழர்கள் மத்தியில் சமஸ்கிருதமோ, அப்படியே இஸ்லாமியர்கள் மத்தயில் அரபு மொழியும், கிறிஸ்தவர்கள் மத்தியில் லத்தீன், ஆங்கிலம் போன்ற மொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன.



preethi Wrote:அது பெரும்பாலான ஈழத் தமிழரின் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. இந்து மதத்தைத் தாக்கும் பலரும், அது பெரும்பாலான தமிழரின் மனதைப் புண்படுத்தும் என்பதைச் சிந்திப்பதில்லை.

ஈழத்து இந்துக்கள் ஐயர்களை ஐயா என்று மதிப்புடன் அழைப்பார்கள். அவர்கள் மனம் புண்படும்படி தாங்கள் எழுதியதெல்லாம் போதாதா என்று கேட்கிறீர்களா?

preethi Wrote:உங்களுடைய மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், நீங்களோ அல்லது இங்கு யாராவது கிறிஸ்தவ மதத்தை, இந்து மதத்தைத் தாக்கிய அளவுக்குத் தாக்கி எழுதுகிறார்களா?

இந்து மதத்தின் பெயரால் இடம்பெற்ற வழக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட பலரும் .இந்து மதத்தின் பெயரால் இடம்பெற்ற பாதிப்புகளை பற்றி எழுதுகிறார்கள். சாதிமுறையை இஸ்லாம் தமிழருக்கு அறிமுகப்படுத்தவில்லை. கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தவில்லை. புத்த சமயமோ, சமண சமயமோ அறிமுகப்படுத்தவில்லை. இந்து சமயம் அறிமுகப்படுத்தியது. சமயம் மாறியவர்களும் அவர்கள் வழித்தோன்றல்களும் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியவில்லை. அதனால் இந்து சமயத்தை குறை கூறுகிறார்கள். ஈழத்து இந்து சமய பெரியார்கள், சாதிமுறையை எதிர்த்து "அதை கைவிடுங்கள்" என்று கேட்கவில்லை. மாறாக ஆறுமுகநாவலர் போன்றவர்கள், வெளிப்படையாகவே முதலாம் சைவவினாவிடை போன்ற சமய நு}ல்களில், சாதிமுறை தீண்டாமையை ஆதரித்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களால் இந்து சமயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கிறிஸ்தவம் கேவலமான சமயம். அதன் அட்டகாசமெல்லாம் ஐரோப்பாவிலேதான் பெரும்பாலும் அரங்கேறியது. யாழ்ப்பாணத்திலும் தன்னினசேர்க்ககைக்கு சிறுவர்களை வன்புணர்வு செய்த பாதிரிகளும், ஆலயங்களில் பாட்டுப்பாட வந்த இளம் பெண்களுடன் ஓடிப்போன பாதிரிகளும் இருந்தார்கள். சலுகைகளுக்காக மதமாற்றம் நடந்தது. ஆனால் ஒழுக்கம் தவறிய பாதிரிகளை கிறிஸ்தவம் "இது எமது சமய பண்பாடு" என்று ( சாதி தீண்டாமையை இந்து பெரியார்கள் செய்தது போல) மூடி மறைக்கவில்லை. மக்கள் பாதிரிகளை கலைத்து விட்டார்கள். சமயம் அவர்களை ஒதுக்கி விட்டது.

சலுகைகளுக்காக மதம் மாறிவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதைக்கண்டுதான் இந்து போர்ட் உருவாக்கப்பட்டு இந்து கல்லு}ரி இந்துக்களுக்கு கட்டப்பட்டு இந்துக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது. இதனால் மக்களுக்கு நன்மையே விழைந்தது. அதை ஏன் மக்கள் எதிர்க்க போகிறார்கள்?
Reply
..
Reply
Quote:தமிழன் இந்து மதத்தால் என்ன பெரிதாகப் பெற்று விட்டான் மனிதத்தின் ஒழுக்கங்களை வேண்டுமானால் இந்து மதம் போதித்திருக்கலாம். ஆனால் அதோடு சாதிகள். சடங்குகள் எண்டபேரில மூடநம்பிக்கைகள் தான் புகுத்தியது அதிகம். இன்றும் நிறையப் பேர் பிரிவினையைக் காட்ட கையில அந்த இந்துமத சாதியத்தைதான் கையில வைச்சிருக்கின்றனர். எனது தாய்மொழி தமிழ் எந்ததுன்பத்திலயும் நாம் அம்மா எண்டுதான் அழுகிறம். அதனால நான் தமிழன். சாதி வெறியை தூண்டி துண்டாட தூண்டும். இந்தச் சமயம் எனக்கு வேண்டாம்
தமிழன் கனக்க பெற்று விட்டான் நண்பரே! ஆனால் நீங்கள் பெறததையிட்டு வருத்தப்படுகின்றேன். சாதிப்பிரிவினையை இந்து மதம் ஏற்ப்டுத்தியதா? மூட நம்பிக்கையை இந்து சமயம் கற்ப்பித்ததா? இந்து சமயத்தின் பெயரில் நீங்கள் (மனிதன்) செய்தவற்றுக்கெல்லாம் மதத்தின் மீது பழி போடுவது நியாயமா? புலத்தில் போட்டிக்கு கோவில் கட்டுவது இந்து சமயத்தில் தவறா? அல்லது கடவுளின் தவறா? மனிதர்களின் தவறு தானே!? சாதியத்தை கையில் வைதிருப்பது யார்? பிரம்மாவும் விஸ்னுவுமா? இல்லை விநாயகரும் முருகனுமா? நீங்களும் உங்கள் சமூதாயமும் தானே!? உ(எ)ங்கள் சமூதாயத்தை ஏன் திருத்த நீங்கள் விளைகின்றீர்கள் இல்லை? எழுத்திலே ஒன்றும் செயலிலே ஒன்றும் செய்யமால் எழுத்தில் எழுதியதை உங்கள் நடைமுறை வாழ்க்கையில் செய்ய முற்ப்படுங்கள். எந்த மதமும் மனிதனை தீய வழிக்கு கொண்டு செல்லவில்லை. அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு நெறியையே!

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
Nitharsan Wrote:சாதிப்பிரிவினையை இந்து மதம் ஏற்ப்டுத்தியதா? மூட நம்பிக்கையை இந்து சமயம் கற்ப்பித்ததா? இந்து சமயத்தின் பெயரில் நீங்கள் (மனிதன்) செய்தவற்றுக்கெல்லாம் மதத்தின் மீது பழி போடுவது நியாயமா? புலத்தில் போட்டிக்கு கோவில் கட்டுவது இந்து சமயத்தில் தவறா? அல்லது கடவுளின் தவறா? மனிதர்களின் தவறு தானே!? சாதியத்தை கையில் வைதிருப்பது யார்? பிரம்மாவும் விஸ்னுவுமா? இல்லை விநாயகரும் முருகனுமா? நீங்களும் உங்கள் சமூதாயமும் தானே!? உ(எ)ங்கள் சமூதாயத்தை ஏன் திருத்த நீங்கள் விளைகின்றீர்கள் இல்லை? எழுத்திலே ஒன்றும் செயலிலே ஒன்றும் செய்யமால் எழுத்தில் எழுதியதை உங்கள் நடைமுறை வாழ்க்கையில் செய்ய முற்ப்படுங்கள். எந்த மதமும் மனிதனை தீய வழிக்கு கொண்டு செல்லவில்லை. அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு நெறியையே!

நிதர்சன் எல்லா மதங்களையும் மனிதனே உருவாக்கினான். எந்தவொரு மதமும் தானாக உருவாகவில்லை. அந்த வiயில் இந்து மதத்தையும் மனிதனே உருவாக்கினான் இந்து மதத்திற்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான சாதிப்பிரிவுகளையும் இந்து மதத்தைக் கடைக்பிடிக்கும், அதனால் வயிற்றை வளர்க்கும் பார்ப்பனர்களே (இந்து மொழியில் தேவர்கள்) உருவாக்கினார்கள்

சாதியத்தை இந்துமதம் உருவாக்கவில்லையென்றால் ஏன் இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவர்களிடம் மாத்திரம் பல நு}ற்றுக்கணக்கான சாதிப்பிரிவுகள் இருக்க வேண்டும் (மற்றைய மதங்களைக் கடைப்பிடிப்பவர்களிடமும் சாதியம் இருக்கலாம் ஆனால் இந்து மதத்தைக் கடைபிடிப்பவர்களைப் போன்றில்லை)

மதம் என்பது மனிதனை நல்வழிப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதிகளில் மதங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்தியிருக்கலாம் ஆனால் தற்காலத்தில் உலகில் உள்ள முதன்மைப் பிணக்குகள் எல்லாம் மதத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நல்வழிப்படுத்த கொண்டுவரப்பட்ட மதங்கள் இன்று மனிதனை வன்முறை போன்ற தீய்வழி செயல்களிற்கு கொண்டு சென்றுள்ளன.
மதங்கள் உருவான காலப்பகுதியில் மதங்களை காரணம் காட்டி மனிதர்கள் தம்மை நல்வழிப்படுத்திக் கொண்டார் ஆதேபோன்றே இன்றும் மதங்களை காரணங்காட்டி மனிதர்கள் தீய செயல்களில் ஈடுபடுகின்றார்.

இந்துமதம் மூடநம்பிக்கையைக் கொண்டுவந்ததா? எனக் கேள்வி எழுப்புகிறீர்கள் நிதர்சன்

2000ம் ஆண்டுகளிற்கு முன்பு கிரேக்கம் மற்றும் இந்தியாவில் வசித்த மனிதர்களிடம் வானியல் தொடர்பாக இருந்த அறிவு கிட்டத்தட்ட ஒரே நேரத்திலேயே சோதிடம் என்ற மூடநிலைக்கு சென்றது.

கிரேக்கத்தில் ஒருபகுதியினரிடம் மூடநம்பிக்கை சோதிடம் என்ற பெயரில் போய்க்கொண்டிருந்தாலும் மறுபுறத்தில் மற்றொரு பகுதியினரிடம் வானியல் அறிவு மேலும் வளர்ச்சி பெறத்தொடங்கியது. அதுவே இன்றைய அறிவியல் உலகிற்கு வழிகோலியது என்றால் அது மிகையல்ல.

ஆனால் இந்து மதத்தைக் கடைப்பிடிக்கும் இந்தியர்கள் முழுமையாக வானியலறிவு சோதிடமாக மாறிய பின்னர் நவக்கிரகங்களிற்கு கோயில்களும் கட்டி வழிபாடுகளும் இன்றுவரை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வானியல் தொடர்பான ஆராட்சிகள் எதனிலும் இந்தியர்கள் ஈடுபடவில்லை.
<b>
?
- . - .</b>
Reply
preethi Wrote:[b] இதை நேற்றுச் சொன்னவர் இன்று பண்டைத் தமிழரின் கப்பல் கட்டும் தொழில் நுட்பம் பற்றிக் கதை விடும் "தமிழன்" தலா தான், இவர் தன்னுடைய வாயின் இரண்டு பக்கத்தாலும் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு கதைக்கிறார். [/color]
பிரித்தி தமிழனின் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் என்பது வெறு கதையல்ல. உண்மையாகவே தமிழரிடம் கப்பல் கட்டும் தொழில்நுட்பம் இருந்ததென்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழர்கள் பெருள் தேடுவதற்காகவும், வணிக நோக்கத்திற்காகவும் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டதாக சங்க காலத்து இலக்கியங்களில் கூட குறிப்புக்கள் இருக்கின்றன.


[quote=preethi] கோயில்கள் எல்லம் தமிழனின் புகழைச் சாற்றுகிறது. ஆனால் எங்களின் தமிழ் முன்னோர்கள் கட்டிய கோயில்களை ஆக்கிரமித்துக் கொண்டு தமிழுக்கு உரிய உயர்ந்த இடந்தைக் கொடுக்க மறுக்கும் பிராமணர்கள் தான் தமிழனின் அடிமைத்தனத்தினதும், கையாலாகாத்தனத்தினதும் சின்னம்.
கோயில்கள் எல்லாம் தமிழரின் புகழைச் சாற்றுகின்றன எனச் சொல்லுகின்றீர்கள் கட்டடக்கலை ரீதியில் சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்கிறேன்.

அதேவேளை தமிழ் முன்னோர்கள்தான் கோயிலைக் கட்டினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆரியர்கள் தமிழர் பகுதிகளில் நிலையெடுத்த காலப்பகுதியான பல்லவர் காலப்பகுதிக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் எங்காவது இருக்கின்றனவா??? பல்லவர் காலப்பகுதியில் இருந்தே இந்த கோவில்களின் கட்டும் சாபக்கேடு தமிழர்களிடம் ஆரம்பித்தது. பல்லவர் காலத்துடனேயே சைவ சமயம் என்பது நிலைபெறத் தொடங்கியது. அதற்கு முன்பு பௌத்தமும் சமணமும் தமிழர்களிடம் நிலையாக வேரூன்றி இருந்தன. இதற்கு ஐம்பெரும் காப்பியங்களே சான்றாக உள்ளன.

அதேவேளை தமிழரின் இலக்கியத்தில் பல்லவ காலத்திற்கு பின்னான பக்திக் காலத்திலேயே சைவசமயம் இந்து மதம் தொடர்பான இலக்கியங்கள் உருவாக ஆரம்பித்தன. இருந்தபோதும் தமிழ் இலக்கியங்களில் வெறும் 15வீதமானவையே சைவ-இந்து மதங்களிற்குரியவை.

சைவம் தமிழர்களின் மதம் என்று கூறுவதற்கு சரியான ஆதரங்கள் இல்லை. இருந்தால் முன்வையுங்கள்
<b>
?
- . - .</b>
Reply
பிரீத்தி,

நான் பல சமூகவியல் ஆய்வுக் கட்டுரைகளை களத்தில் இணைத்திருந்தேன் அவற்றைப் படித்து விட்டு தமிழரின் சரித்திரத்தை நடு நிலயான ஆய்வு நோக்கில் அணுகவும்.
உங்களது கருத்தாடல்கள் சிந்தனை அனைத்திலும் தெழிவாகாத் தெரிவது தமிழரின் தொன்மை மற்றும் சைவ சமயம் பற்றிய தொன்மைச் சிறப்பு பற்றிய அபரித மாயை.(Romantesizing the past)

மற்றது தமிழரின் சமயங்கள் பல காலங்களில் பல வாறாக இருந்தன,சைவமும் அதில் ஒன்றே.இது அனைத்து தரப்பாரும் ஏற்றுக் கொண்ட ஒரு வரலாற்று உண்மை.தமிழர் மற்ற இனத்தாரைப் போன்றெ பல படயெடுப்புக்களுக்கும் ,குடிப் பரம்பல்களினாலும் சமயத்தை,தொழில் நுட்பத்தைப் பலரிடம் இருந்து உள்வாங்கி உள்ளனர்.சிறி ரமணன் கூறியதைப் போல் நாங்கள் தொழில் நுட்பத்தை மனித வளர்ச்சிக்குப் பயன் படுத்தாமல் இல்லாத கடவுளருக்கும்,அவர்தம் முகவர்களான பிராமணரின் வளர்ச்சிக்கும் பயன் படுத்தியதால் தான் இந்த இழி நிலயில் இருக்கிறோம். நீங்களெ கூறி உள்ளீர்கள் நான் பின் நோக்கி செல்ல இவற்றைக் கூறவில்லை என்று.அப்படியானால் என்னதான் செய்யவேன்டும் என்று கூறுகிறீர்கள்.பிராமணரை ஒழித்தால் எல்லாம் சரி யாகிவிடுமோ? நீங்களே கூறுகிறீர்கள் இந்து சமயத்தினுள் சைவம் இரண்டறக் கலந்து விட்டது என்று.ஆகவே இனி என்ன செய்வதாக உத்தேசம்.

மேலும் களத்தைப் பற்றி,உங்களது கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்ட பொழுது ஏன் என்று காரணத்தை வினாவியவர்களில் நானும் ஒருவன்,அதற்கான விடை வளங்கப் படவில்லை.இது இங்கே களத்தில் எல்லாருக்கும் ,குறிப்பாக புதிய அங்கத்தவர்களுக்கு நடக்கும் பொதுவான விடயம்.சில மட்டுறுத்தினர்கள் பாரபட்சமாக நடந்திருக்கின்றனர்,சிலர் காரண காரியங்கள் கூறாமல் ஒருவகை செருக்குத் தனமாகவும் நடந்திருக்கின்றனர் ,இவற்றுக் கெதிராகவும் நான் முன்னர் இங்கே எழுதியுள்ளேன். மட்டுறுத்தினர்களும் பிழை விடக் கூடிய மனிதர்களே,அவர்கள் பிழை விடும் போது சுட்டிக் காட்டுங்கள்,ஆளுமை உள்ளவர்கள் பிழயை ஏற்றுக் கொள்வர்,மற்றவர்கள் அடயாளங் காட்டப் படுவர்.தொடர்ந்து தனி நபர்கள் தாக்குதல் இன்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
Reply
மேலும் தருமி தான் ஏன் தனது மதமான கிருத்துவத்தை விட்டு மத நம்பிக்கை அற்றவராக மாறினார் என்பதைக் கீழே இடுகிறேன்.இதனை இந்து ?,சைவனாகப் ? பிறந்த நான் கூறுவதை விட அவர் கூறியவற்றைப் போடுவதே நலம்.

பிரீத்தி இப்போது உங்களுக்கு சந்தோசம் தானே?மற்றயவரின் மத்தைப் பற்றி இன்னொருவர் தாழ்த்திக் கூற வேண்டும் என்ற அவா, உங்களை உங்கள் மதம் எவ்வளவுக்கு மதங் கொள்ள வைத்துள்ளது என்பதைப் பற்றிச் சிந்திக்கவும்.





53. நான் ஏன் மதம் மாறினேன்...? - 2

முதலில் பதிந்த நாள்: 18.08.05



இரண்டு விஷயங்கள்:
ஒன்று - இந்தப் பதிப்பில் வேறு வழியில்லாததால் சில பல கிறித்துவத்திற்கே உரித்தான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கொஞ்சம் நெருடலாக இருக்கலாம். அந்தச் சொற்கள்: விவிலியம் ( பைபிள்), யேசு, ஜெபம் (prayer), பூசை (Holy Mass), பாவம், நரகம், மோட்சம், விசுவாசம் (faith), தேவதூஷணம் (blasphemy) சாத்தான் (satan). . .

இரண்டு - நிறைய விஷயங்களில் கீழே வரும் பகுதி கிறித்துவத்திற்கும், இஸ்லாமுக்கும் பொருந்தியே வரும்.

எண்பதுகளின் கடைசிகளில் என்றுதான் நினைக்கிறேன். ஒரு புத்தாண்டு தினம்; இரவுப் பூசை. மதுரை தூய மரியன்னை ஆலயம். பூசையின்போது நடுவில், முந்திரிப்பழ ரசம் யேசுவின் ரத்தமாக மாறுவதாக ஒரு கட்டம்; எழுந்தேற்றம் என்பார்கள். எல்லோரும் தலை வணங்கி, ஆராதிக்கும் இடம். அன்று, அந்த நேரத்தில் மனசுக்குள் ஒரு பொறி; இதெல்லாமே ஒரு அடையாளம்தானே; உண்மையிலேயே அப்படியேவா ரசம் யேசுவின் ரத்தமாக மாறுகின்றது என்ற எண்ணம். ச்சீ..ச்சீ ..இப்படியெல்லாம் நினைப்பதே பாவம் - என்னை நானே கடிந்துகொண்டு மேலும் தீவிரமாக பூசையில் ஜெபிக்கலானேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. எண்ணம் தீவிரமானது. இவை எல்லாமே வெறும் அடையாளங்கள் ஒரு simulation என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. இந்த எண்ணங்கள் எல்லாம் சாத்தானின் வேலைதான்; இதிலிருந்து வெளிவரவேண்டும் என்று உறுதிகொண்டேன். அதற்காகவே தினமும் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். 'கடவுளே, எனக்கு சந்தேகங்களைக் கொடுக்காதே; அப்படியே கொடுத்தாலும், அதற்குரிய பதில்களையும் கொடு' என்று உண்மையாக வேண்டினேன். ஆனால் மனதில் மேலும் மேலும் கேள்விகள் தோன்ற ஆரம்பித்தன. புதுப் புதுக் கேள்விகள். ஜெபமும் தொடர்ந்தது. பயன்தான் ஏதுமில்லை.

இப்போது ஜெபத்தின் மீதே ஒரு கேள்வி. ஜெபங்கள் கேட்கப்படுமா? "கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்" என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறதே - அது உண்மைதானா என்ற ஒரு புதுக்கேள்வி இப்போது. சந்தேகங்கள் திரண்டு ஒரு புது தொடர் கேள்வி கீழ்க்கண்டவாறு உருவானது.

'கடவுள்' இருந்தால் - 'அது' முழு வல்லமை பொருந்தியதாக இருக்கவேண்டும். - omniscient

முழு வல்லமை பொருந்தியதாக இருப்பின் 'முக்காலமும்' உணர்ந்ததாக இருக்கவேண்டும்.

அவனன்றி அணுவும் அசையாது - என்ற நிலை. நடப்பதெல்லாம் நாராயணன் (கடவுளென வாசிக்கவும்) செயல்தானே!

அதாவது, எல்லாக் காரியங்களுமே, predetermined ஆக இருக்க வேண்டும்; அந்த நிலை - PREDETERMINISM.

(உன் தலையில் உள்ள ஒவ்வொரு முடியும் கூட எண்ணப்பட்டுள்ளது..)( தேவனன்றி எதுவும் எழுவதுமில்லை, விழுவதுமில்லை...) இப்படியாக பைபிளில் பலவாராகவும் கூறப்பட்டுள்ளது.

எல்லாமே predetermined ஆக இருந்தால், எல்லாமே 'அவன்' திட்டப்படி நடப்பதாக இருந்தால் - மனிதன் என்னதான் ஜெபம், தவம் செய்தாலும் எல்லாமே கடவுளின் திட்டப்படிதானே நடக்கும்; நடக்க வேண்டும்.
ஜெபத்தால் நடக்குமென்றால், கடவுளின் திட்டம் மாறக்கூடியதா? மாறக்கூடியதாயின், predeterminism என்னாவது?

predeterminism-கேள்விக்குள்ளானால், 'கடவுளின்' முழு வல்லமை என்னாவது?

ஆகவே, ஜெபத்தால் முடியாதததில்லை என்ற கிறித்துவத்தின் அடிப்படைக் கருத்து எனக்குக் கேள்விக்குறியானது.

கடவுளின் குமாரனாகக் கருதப்படும் யேசு பல இடங்களில் ஜெபம் செய்ததாக பைபிளில் கூறப்பட்டாலும், சிலுவையில் அறையப்படுவதற்கு சிறிது முன்பு, 'முடியுமானால் இந்தக் கடினமான பாத்திரம் என்னை விட்டு அகலக்கடவது; ஆனால், அது உம் எண்ணப்படியே ஆகட்டும்' என்று ஜெபித்ததாகத் தெரியும். ஆனால் அவரது ஜெபமே கேட்கப்படவில்லை! அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஏனெனில், அது ஏற்கெனவே இப்படி நடக்குமென்று எழுதப்பட்டு விட்டது . அதைத்தான் நான் சொன்னென் - predeterminism என்று. அப்படியானால், கிறித்துவம் சொல்லும் 'ஜெபமே ஜெயம்' என்ற கூற்று என்னாவது?


இதனைத் தொடர்ந்த இரண்டாம் கட்டம்:

மனிதனுக்கு FREE WILL (தமிழில்..? - தன்னிச்சைச் செயல்நிலை-சரியாக இருக்குமா?) கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது; அதை அவன் நல்ல முறையில் செயல்படுத்தவேண்டும் என்பது கிறித்துவத்தில் கூறப்பட்டுள்ளது. கடவுள் = omniscient; அப்படியாயின், அவனன்றி அணுவும் அசையாது; அசையக்கூடாது. ஆடுபவனும் நானே; ஆட்டுவிப்பவனும் நானே! - என்ற தத்துவமே சரியானதாக இருக்கவேண்டும். அப்படியாயின், நடக்கும் காரியங்களுக்கு கடவுள்தானே பொறுப்பு? மனிதன் (ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்? ) எப்படி பொறுப்பாவான். கடவுளின் திட்டம் நிறைவேற மனிதன் ஒரு பகடைக்காய்தானே? FREE WILL உண்மை என்றால் PREDETERMINISM தவறாகாதா? PREDETERMINISM உண்மையெனின் FREE WILL தவறாகாதா? இரண்டில் ஒன்றுதானே இருக்கமுடியும். கடவுளின் omniscience சரியா? மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் freewill சரியா?

மதத்தை எதிர்த்தும், கடவுள் கோட்பாட்டையே கேள்வி கேட்கிறோமே என்ற அச்சநிலையிலிருந்து - எதுவும் கேள்விக்குட்பட்டதே என்ற நிலை நோக்கி நகரத்தொடங்கினேன். பெருத்த தயக்கமான தருணங்கள் அவை.

இந்த நேரத்தில் எனக்கு நானே ஒரு "பத்துக்கட்டளைகள்" ஏற்படுத்தியிருந்தேன். (இப்போது அதில் ஒன்றை மறந்து விட்டேன்!! இப்போது ஒன்பதுதான்!!) அதில் - என் இரண்டாவது கட்டளை: you open YOUR own eyes. உன் கண்களை நீயே திறந்து கொள். எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்; எனக்குள் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் பிறர் சொல்லிக்கொடுத்து வந்தது. எனக்கு நானே ஏன் உண்மை என்ன என்பதைக் காணக்கூடாது? காணக் கண் திறந்தேன் - என் கண்களை எனக்கு நானே திறந்துகொண்டேன். இந்த நேரத்தில் தான் நான் முன்பு சொன்னபடி எந்தவித வெளித் தாக்கங்களின்றி, என்னைக் காத்துக்கொண்டு, எனக்கு நானே ஆசானாய் மாறி, எனக்கு நானே மாணவனாய் மாறி...மெல்ல..மெல்ல...மாறினேன். அந்த மாற்றங்களைப்பற்றி சொல்வதற்கு முன் உங்களிடம் தனியாக ஒரு வார்த்தை.

நான் முன்பு (சமய நம்பிக்கையோடு)இருந்த நிலையில் வாசிப்பவர்கள் நீங்கள் யாராவது இருப்பின் உங்களுக்காக ஒரு கேள்வி; உங்கள் பதிலும் -நியாயமான, உண்மையான- பதிலும் தேவை:

நீங்கள் ஒரு கிறித்துவரோ, இஸ்லாமியரோ இரண்டில் எதுவாயினும் (இந்துக்களை இந்த 'ஆட்டை'யில் சேர்த்துக்கொள்வதாயில்லை; காரணம் உங்களுக்கே புரியும். அதோடு அதைப்பற்றி பிறகு பேசுவதாக ஒரு திட்டம். நீங்கள் அப்போது, அங்கே கோபித்துக்கொள்ளலாம்; சரியா ? ) சரி; ஒரு பேச்சுக்காகவேகூட, உங்களால் உங்கள் மதத்தைத் தவிர அடுத்த மதம் உண்மையானதாக இருக்கக்கூடும் என்று ஒத்துக்கொள்ள முடியுமா? Can you accept for the sake of argument that a faith other than yours could be the RIGHT one? ஒரு வேளை ஒத்துக்கொள்ளலாமோ என்று நினைத்தாலும், நம்மோடு பிறந்து வளர்ந்த நம் மத உணர்வுகள் நம்மை அப்படி ஒத்துக்கொள்ள விடாது என்பதே உண்மை. அதேபோல், நீங்கள் ஒரு கிறித்துவர் என்று கொள்வோம்; இஸ்லாம்தான் / யூதமதம்தான் உண்மையான மதம்; நம்மை உய்விக்கும் மதம் என்று கூறினால் ஒத்துக்கொள்வீர்களா? அதைப்போலவே, நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருப்பின், கிறித்துவம்தான் நம்மை இறைவனோடு ஐக்கியப்படுத்தும் உண்மையான மார்க்கம் என்று கூறினால் ... ?

அனேகமாக, இரு தரத்தாரும் ஒரே பதிலைக்கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். 'எங்கள் மதம் / மார்க்கம் சரியென்று தெரிந்தபிறகு எதற்காக அடுத்த மதம் சரியென்று நான் சொல்லவேண்டும்' - என்றுதான் இந்நேரம் நினைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படித்தான் நினைக்க முடியும்; ஏனெனில், நாம் அனைவரும் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதம் அப்படி. "என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை" என்று இரண்டு மதமும் போதிக்கின்றன; அவற்றில் வளர்ந்த நம்மால் அடுத்த மதத்தில் உண்மை இருக்கலாம் என்று நினைக்கவும் முடியாது. தன்னிலைப்படுத்துதல் = subjectivity -இதுதான் மதங்கள் விஷயத்தில் நாம் கொள்ளும் நிலைப்பாடு. இதிலிருந்து மீள, மாற, மீற நம்மால், மதங்களைப்பொறுத்தவரை obectivity -யோடு (obectivity = தமிழ்ச்சொல் ? ) நடந்துகொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மதங்கள் எல்லாமே பொதுவாக பிறப்போடு வருவது. நம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்ட விஷயம். நம்பிக்கையென்றாலே, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட காரியங்கள். அங்கே, rationality is the first victim - இங்கே, rationality என்பதற்கு ' பகுத்தறிவு' என்று மொழியாக்கம் செய்தால் சரியாக வராது. கேள்விகளுக்கு இங்கு அளிக்கப்படும் அந்தஸ்து - தேவதூஷணம். நம்மை நாமே ஒரு வட்டத்துக்குள் வைத்துக்கொள்கிறோம். அதிலிருந்து வெளியே தலை நீட்டுவதே பாவம் என்ற கருத்தோடு வளர்க்கப் பட்டவர்கள் நாம்.

இதில் கஷ்டமான விஷயம் என்னவென்றால், என் மதம்தான் சரியென்ற கருத்து நம் எல்லோரிடமும் மிக ஆழமாகப் பதிந்துபோய் விடுகிறது. என் அம்மா நல்லவர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், என் அம்மாதான் நல்லவர்கள் என்று சொல்வதுதான் தவறு.

இதைவைத்தே யோசிப்போமே; நம் தாய், தந்தையர்கள் எல்லோரும் தவறே இல்லா புனிதர்களா என்ன; ஆயினும், நம் அப்பா, அம்மா என்ற பாசத்தில், பிரியத்தில் அவர்களிடம் நாம் ஒட்டியிருக்கிறோமே அதுபோலத்தான் மதங்களோடு நம் உறவு. தாய், தந்தையரையாவது ஒரு கட்டத்தில் அவர்களின் தவறுகளை வைத்துக் கணிப்போம். ஆனால், நம் மதத்தில் தவறுகள் இருக்கக் கூடும் என்ற நினைவே நமக்கு ஒவ்வாதது .

சிக்கெனப்பிடித்தது மதம்.

http://dharumi.blogspot.com/2005/09/53-2.html
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)