Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடவுள் நம்பிக்கை
vasisutha Wrote:கல்லை கண்டால் நாயை காணோம்..
நாயை கண்டால் கல்லை காணோம்! :roll: :roll:

இதில் எது அல்லது எவர்/எவை நாய்.... எது அல்லது
எவர்/எவை கல்லு....முழிக்க முதல் அதைச் சொல்லுறீங்களா.... கருத்தைச் திசை திருப்ப வேண்டாம் அப்படி என்று குருவிகள் சொல்லாதுகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நான் எழுதியதின் உட்கருத்தை விளங்காமல் என்மேல் கருத்தை திசை திருப்புவதாக
பழி போடுவது நியாமா குருவி??

"கல்லை கண்டால் நாயை காணோம்
நாயை கண்டால் கல்லை காணோம்"

அதாவது நாயின் சிற்பம் ஒன்று இருக்கிறது அதை நாய்
என்று பார்த்தால் உங்கள் கண்களுக்கு நாய் தெரியும்..
கல்லென்று பார்த்தால் அது வெறும் கல்லாகத்தான் உங்கள் பார்வைக்கு தெரியும்!
இதையே கவிஞர் ஒருவர் பாட்டில் இப்படி சொல்லியிருக்கிறார்..

"தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலையென்றால் அது சிலைதான்.
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை"
Reply
[quote=vasisutha]நான் எழுதியதின் உட்கருத்தை விளங்காமல்
என்மேல் கருத்தை திசை திருப்புவதாக பழி போடுவது
நியாமா குருவி??
"கல்லை கண்டால் நாயை காணோம்
நாயை கண்டால் கல்லை காணோம்" .. அதாவது
நாயின் சிற்பம் ஒன்று இருக்கிறது அதை நாய் என்று பார்த்தால் உங்கள் கண்களுக்கு நாய் தெரியும்.. கல்லென்று பார்த்தால் அது வெறும் கல்லாகத்தான் உங்கள் பார்வைக்கு தெரியும்!
இதையே கவிஞர் ஒருவர் பாட்டில் இப்படி சொல்லியிருக்கிறார்..
"தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலையென்றால் அது சிலைதான்.
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை"

பாத்திங்களா... அப்படிக் கேட்டிருக்காட்டி இப்படி ஒரு விளக்கம் வந்திருக்குமா என்ன....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இங்கே ஓர் இஸ்லாமிய இணையத்தில் இஸ்லாத்தை உயர்வாகவும் இந்து மதத்தை மட்டமாகவும் எழுதியுள்ளார்கள். படிக்க கீழே சொடுக்கவும்

http://www.islamkalvi.com/religions/islam_...%20விதி
Reply
<b>தியாகம்,</b> நீங்கள் பொதுவாக கடவுள் இருக்கிறாரா இல்லையா (அதவாது கடவுள் நம்பிக்கை சரியானதா) என விவாதத்தை ஆரம்பித்துவிட்டு இப்பொழுது ஓரு மத வெறியர் இன்னெரு மதம் பற்றி தாழ்வாக எழுதியதை இணைக்கிறீங்கள்? இது விவாதம் வேறு திசையில் போக வழிவகுக்கும் அல்லவோ?

<b>தமிழினி,</b> நீங்கள் எழுதியுள்ளீர்கள் இராமன் கடவுளின் அவதாரம் என்று நம்புவதாக. மேலும் இராவணின் புட்பக விமானம் எமது முன்னோரின் விஞ்ஞான அறிவிற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம் அல்லவா என்ற தொனியில். இதைவிட நீங்கள் பாடசாலையில் படித்த இந்து சமய புத்தகங்களில் உள்ளவை எல்லாம் பொய்யா என்று. தியாகத்தை சரியான புத்தகங்கள் வாசித்தால் கடவுள் இருக்கெண்டு தெரிந்து கொள்ளலாம் என்றீர்கள். நீங்கள் வாசித்த புத்தகங்களில் எல்லாம் இருந்து அறிந்து கொண்டது இராமன் கடவுளின் அவதாரம், அடைந்த தெளிவு எமக்கு பாடசாலையில் சொல்லித்தந்த இந்து சமயக்கதைகள் உண்மையானவை என்றால் அது மிகவும் கவலைக்குரிய விடயம் தான்.

<b>மீரா,</b> நீங்கள் மருதடி விநாயகர் தேவாலயம் முன்னுக்கட்டப்பட்டதை பொறுக்க முடியாமல் திரும்பி இருந்தவர் என்பதை கடவுள் இருக்கிறது எண்டதுக்கு ஆதாரமாக வைத்தது உங்கள் கடவுள் நம்பிக்கையின் தெளிவை காட்டுகிறது. வாழ்க வழர்க உங்கள் கடவுள் நம்பிக்கை பக்தி!

<b>சோழியன்,</b> அரைகுறையாக தெரிஞ்சு கொண்டு கடவுள் இல்லை எண்டு வாதிடாமல் முழுமையாக பயபக்தியோடு தேடினால் தெரியும் என்றவாதம் ஓரளவுக்குச்சரி தான். ஆனால் இன்னெரு கோணத்தில் பார்த்தல் உங்கள் பயபக்த்தியான தேடலின் முடிவில் நீங்கள் காண்பதெல்லாம் (கடவுளிற்கான விளக்க வியாக்கியானங்கள் ஆதாரங்கள்) நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட நிலையிலிருந்து காண்பது.
Reply
மேலும் வேதங்கள், ஆகமத்தில சொல்லி இருக்கு அதப் படிச்சா தெரியும் என்கிறார்கள்,அதில் என்னத்தை இவர்கள் படித்தார்கள் அது எவ்வாறு கடவுள் உள்ளார் என இவர்களை உணர வைத்தது என்பதை எழுதுகிறார்கள் இல்லை.

வேறு இடத்தில் இந்த ஆகமங்களைப் படித்துவிட்டி பிரீத்தி இதெல்லாம் பார்ப்பனரின் சூழ்ச்சி என்கிறார்,அதற்கு இந்த ஆகமங்களை எல்லாம் படித்தவர்கள் பதில் எழுதியதாகத் தெரியவில்லை.ஒன்றில் ஆகமங்களை இவர்கள் படிக்கவில்லை அல்லது அது பார்ப்பவர்,படிப்பவர் கண்களுக்கு வெவ்வேறு அர்த்தத்தில் தெரிகிறது.அப்படி யாயின் இதை எவ்வாறு கடவுளைக் காண்பத்தற்கான வழியாகக் கொள்ளலாம்.
Reply
நாரதர், உந்த ஆகமங்கள் வேதங்கள் என்பன தொடர்பாடல், ஆவணப்படுத்தல் என பல அடிபடை வசதிகள் மிககுறைந்த (சாதாரண மக்களின் கைகளிற்குஅப்பாற்றபட்ட) காலத்திலிருந்து மேற்கோள் காட்டப்படுகிறது.

நிகழ்காலத்தில் இத்தனை தெடர்பாடல் ஆவணப்படுத்தல் வசதிகள் கருத்துச்சுதந்திரம் அடிப்படை கல்வியறி (சாதாரணமக்கள் ஒப்பீட்ளவில் அதிகம் எட்டும் வகையில்) இருந்தும் ஜநனாயகம் மனித உரிமையை என்பவற்றை எவ்வாறு பகடைக்காய்களாக ஆளும்வர்க்கம் பாவிக்கிறது என்பதை காண்கிறோம் அல்லவா. இன்று கூட ஒரு அனர்த்தம் நிகழும் பொழுது (ஆழிப்பேரலையாக இருந்தாலும் சரி கற்றீனா சுறாவளியாக இருந்தாலும் சரி) அநாகரிமாக அரசியல் இலாபம் சம்பாதிக்க மேற்கொள்ளப்படும் நகர்வுகள் எம்மில் பலருக்கு புரிவதில்லை. இந்த நிலையில் வரலாற்று நுல்களை ஏடுகளை கண்மூடித்தனமாக நம்புவது சரியா?

அதற்காக நாம் வரலாற்றை முற்றாக நிராகரிக்கவேண்டும் என்பது அர்த்தம் இல்லை. திறந்த மனதோடு திரிபுபடுத்தப்பட்ட பிரச்சாரங்களும் இவற்றுள் இருக்கும், அனைத்தும் புனிதமான தேவ வாக்கு வேதா வாக்கு எனற நிலைப்பாடில்லாம் அணுகுவது நல்லதென நினைக்கிறேன்.
Reply
இல்ல குறுக்காலபோவான் நான் எழுதியது இவர்கள் வைக்கும் வாதத்தில் உள்ள குறைபாட்டை சுட்டிக் காட்ட,அதாவது கடவுள் இல்லை என்று சொல்லுறவன் இதுகள் ஒண்டையும் படிச்சிருக்கமாட்டான் ஆகவே நாங்கள் இருக்கிறது எண்டு சொல்லுறனாங்கள் இதுகளைப் படிச்சிருக்கம் எண்டு சொன்னா இவை பேசாம இருப்பினம்,அதுக்கு காரணம் ஒன்றும் சொல்ல தேவயில்லைத் தானே .
மேலும் இந்து மதம் பல காலங்களில் பலரால் பல மதங்களின் சேர்க்கையால் தாபிக்கப் பட்ட ஒன்று அதனுள்ளேயே நேர் எதிரான கருத்தியுல்களைக் கொண்டது.இதனை பிரீத்தி எழுத்துவதில் இருந்து அவதானிக்கலாம்,அதற்கு எதிர்மறையாக வாதங்கள் எதுவும் இந்து மத்ததையும் பிராமணியத்தியும் ஆதரிப்பவர்களால் முன் வைக்கப் படவில்லை.பிரீத்தி முன் வைத்த சாதிய நோக்கில் அவர் தாக்கப் பட அதனுள் அவர் முன் வைத்த பிராமணியம் பர்றிய கருத்துக்களோ,ஆகமம் பற்றி அவர் எழுதியவைகளோ,ஆகமங்களை படித்து பாண்டித்தியம் பெற்றவர்களாகக் கூறிக் கொள்பவர்களால் உதாரணம் காட்டி மறுதலித்து வாதிடப்படவில்லை.

பொதுவாகவே இங்கே தனி நபர் மேலான தாக்குதல்களே கருத்துக்களாக முன் வைக்கப் படிகின்றன.ஒருவர் கேள்வி கேட்டாலோ அல்லது எதிர் மறயான கருத்துக்களை முன் வைத்தாலோ, அவரை இன்னார் என்று அறியாமலே சிலர் இவர் எதுவித பண்பாடும் அற்றவர் என்கின்ற ரீதியில் எழுதுவதால் இங்கே ஆரோக்கியமான கருத்தாடல்கள் நடை பெற்றதாகத் தெரியவில்லை.பாடசாலையில் படித்தது தான் உண்மை என்று கற்றுக் குட்டித்தனமாகக் கருத்து எழுதும் பக்கப் பாட்டுக்களும் இருப்பதுவே ,இவ்வாறு தனி நபர் தூற்றுதல் மூலம் கருத்தாடுபவர்களுக்கு ஒத்தாசை ஆக இருக்கிறது.மொத்தத்தில் இங்கே இவர்களுடன் கருத்தாடி என்ன பிரியோசனம் என்ற உணர்வே மேலிடுகிறது.அதுவே இவர்களுக்கு சாதகமானதாகவும் இருக்கிறது.
Reply
தூசு தட்டி எடுத்தாச்சா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
மருதடிப்பிள்ளையார் திரும்பினதிலயிருந்து மடுமாதா ஆடினது வரைக்கும் உப்பிடி நிறையக் கதைகள் கேட்டாச்சு.
தேவாலயத்தைப் பாத்து பிள்ளையார் மூஞ்சையத் திருப்பினவரெண்டாஇ கடவுள்களுக்குள்ளயே எவ்வளவு பெரிய சண்டை நடந்திருக்க வேணும். இன்னொரு கடவுளின்ர முகத்தைப் பாக்கவே சகிச்சாக மூஞ்சையத் திருப்பிற கடவுளை வணங்கிற மனுசர் எப்பிடி இன்னொரு மனுசனை மதிப்பினமோ தெரியேல.
போரில இந்துஇ கிறிஸ்தவக் கோயிலெண்டு எல்லாம் தான் அழிக்கப்பட்டிருக்கு. அப்ப உந்தக் கடவுளெல்லாம் எங்கபோனவையெண்டு கேக்கிற கேள்வி நியாயமானதாத்தான் படுது.

எனக்கு கடவுள் இருக்கிறரோ இல்லயோ எண்டதப் பற்றிக் கவலையில்லை. கடவுள் உண்மையா இருந்தாக்கூட அந்தப் 'பரதேசிய' வணங்கமட்டும் எனக்கு விருப்பமில்ல. எங்கயேன் கண்டா நாலு சாத்துச் சாத்திக் கொல்ல வேணுமெண்டது தான் என்ர விருப்பம்.

கடவுளுக்காக வக்காலத்து வாங்கிற ஆக்களுக்கு ஒரு வேண்டுகோள். கடவுள்தான் மனுசனப் படைச்சாரெண்டால் என்ன காரணத்துக்காகப் படைச்சரெண்டு சொல்லுவியளோ. அதுக்குப்பிறகு ஏன் அவனைக் கொல்ல வேணுமெண்டு நான் விளக்கிறன்.
அவனை அடிக்கிறதுக்காகத் தேடியலையிறதிலயும் பாக்க அவன் இல்ல எண்டு இருக்கிறது எனக்கு நல்லதாப் படுது. நீங்கள் என்ன சொல்லிறியள்?
கடவுள்களின் கோட்பாடுகளையும் மதங்களின் கொள்கைகளையும் கூற்றுக்களையும் வச்சே கடவுளைக் கடுமையாக விமர்சிக்கலாம். கடவுள் ஓர் அயோக்கியன்இ சாடிஸ்ட்இ மனநோயாளி எண்டு நிறுவலாம்.
Reply
மேல கமா போட்ட இடங்களில 'இ' வந்திட்டுது. மன்னிச்சுக்கொள்ளுங்கோ.
Reply
nallavan Wrote:மருதடிப்பிள்ளையார் திரும்பினதிலயிருந்து மடுமாதா ஆடினது வரைக்கும் உப்பிடி நிறையக் கதைகள் கேட்டாச்சு.
தேவாலயத்தைப் பாத்து பிள்ளையார் மூஞ்சையத் திருப்பினவரெண்டாஇ கடவுள்களுக்குள்ளயே எவ்வளவு பெரிய சண்டை நடந்திருக்க வேணும். இன்னொரு கடவுளின்ர முகத்தைப் பாக்கவே சகிச்சாக மூஞ்சையத் திருப்பிற கடவுளை வணங்கிற மனுசர் எப்பிடி இன்னொரு மனுசனை மதிப்பினமோ தெரியேல.
போரில இந்துஇ கிறிஸ்தவக் கோயிலெண்டு எல்லாம் தான் அழிக்கப்பட்டிருக்கு. அப்ப உந்தக் கடவுளெல்லாம் எங்கபோனவையெண்டு கேக்கிற கேள்வி நியாயமானதாத்தான் படுது.

எனக்கு கடவுள் இருக்கிறரோ இல்லயோ எண்டதப் பற்றிக் கவலையில்லை. கடவுள் உண்மையா இருந்தாக்கூட அந்தப் 'பரதேசிய' வணங்கமட்டும் எனக்கு விருப்பமில்ல. எங்கயேன் கண்டா நாலு சாத்துச் சாத்திக் கொல்ல வேணுமெண்டது தான் என்ர விருப்பம்.

கடவுளுக்காக வக்காலத்து வாங்கிற ஆக்களுக்கு ஒரு வேண்டுகோள். கடவுள்தான் மனுசனப் படைச்சாரெண்டால் என்ன காரணத்துக்காகப் படைச்சரெண்டு சொல்லுவியளோ. அதுக்குப்பிறகு ஏன் அவனைக் கொல்ல வேணுமெண்டு நான் விளக்கிறன்.
அவனை அடிக்கிறதுக்காகத் தேடியலையிறதிலயும் பாக்க அவன் இல்ல எண்டு இருக்கிறது எனக்கு நல்லதாப் படுது. நீங்கள் என்ன சொல்லிறியள்?
கடவுள்களின் கோட்பாடுகளையும் மதங்களின் கொள்கைகளையும் கூற்றுக்களையும் வச்சே கடவுளைக் கடுமையாக விமர்சிக்கலாம். கடவுள் ஓர் அயோக்கியன்இ சாடிஸ்ட்இ மனநோயாளி எண்டு நிறுவலாம்.

கடவுளை பரதேசி என்கிறீர்களா? இது முற்றிலும் உண்மை பரதேசி என்றால் பலதேசங்களிலும் சுற்றுபவர் அதாவது "ரூறிஸ்ட்" அது உண்மதானே, கடவுள் எங்கும் நிறைந்தவர் என்பதுதானே கடவுள் நப்பிக்கை உடையவர்களின் கருத்து. :wink:
.

.
Reply
நன்றே விளங்குது நாரதா. ஆனால் எம்மத்தியில் பலதரப்பட்டவர்களும் இருப்பார்கள் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். விவாதத்திற்கு உதவ ஓரளவு தரப்படுத்த முயன்றேன் (http://www.yarl.com/forum/viewtopic.php?t=6393&start=45). ஆனால் முழுமையானது என கூறவில்லை.

சமுதாயத்தில் பெரும்பான்மையானவர்கள் 1 உம் 2 ஆம் தரப்பினரும் என நினைக்கிறேன். அவர்களிற்கு உதவ முயலும் 4 ஆம் 5 தரப்பு அதி சிறுபான்மையினருக்கு 3ஆம் வர்க்க சிறுபான்மையினர் தடையாக இருக்கிறார்கள். இதில் ஏமாற்றப்படுவது பெரும்பான்மையினரே.

தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் ஆட்ச்சிக்காலத்தில் கறுப்பினத்தவரின் சனத்தொகையை கட்டுப்படுத்த பல வழிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தினார்கள். அதனால் கறுப்பினத்தவர் மத்தியில் காப்புறை ஒரு இன அழிப்புக்கருவியாக பிரச்சாரிக்கப்பட்டது. இன்று இன அடக்குமுறை முடிவிற்கு வந்துவிட்டது. கறுப்பினத்தவிரின் உயிர்கொல்லியாக இருப்பது ஏயிட்ஸ். ஆனால் பெரும்பான்மையான கிராமத்து மக்கள் இன்றும் காப்புறைகளை வெள்ளையினத்தவரின் இன அழிப்புக்கருவியாக பார்க்கும் பரிதாப நிலை தெடர்கிறது. ஒரு குறுகிய காலத்தில் (1-2 சந்ததியில் அல்லது எமது வாழ்நாளில்) சந்தர்ப சூழ்நிலை காரணமாக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்திலிருந்து அந்த இனம் -சமுதாயம் விடுதலை பெறமுடியாமல் அவதியுறுகிறது. அந்தளவிற்கு அவை புரையோடி விட்டன பாமரமக்கள் மத்தியில்.

எமது சமுதாயத்திலுள்ள மூடநம்பிக்கைகள் கடவுளின் பெயரால் முன்னெடுக்கப்படும் சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் எத்தனை சந்ததியாக தொடரப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை நிர்வாக மயப்படுத்தப்பட்டவையும் கூட. ஏடு தொடக்கியதிலிருந்து பாடசாலையில் ஒவ்வெருவருடமும் இந்து சமயப்பாடம் என்று கா.பொ சாதாரண நிலை வரை எத்தனை கற்பனைக்கதைகளை புனித வரலாறாக எமது கலாச்சாரத்தின் அங்கமாக உள்வாங்கிறோம். இவற்றுக்கு மெருகூட்டி உளவியல்ரீதியில் உறுதிசேர்க்கும் வகையில்தான் சிறுவயதிலிருந்து எமது அன்றாடவாழ்வும் திருவிழாக்கள் புூசைகள் அருச்சனைகள் மேடையேற்றப்படுகிறது. இப்படியாக சந்ததி சந்ததியாக பாதிக்கப்பட்டவர்கள் விடுதலை பெறுவது என்பது இலகுவான காரியமா?
Reply
<b>ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களே சிந்தியுங்கள். தமிழ்நாட்டின் ஆலயங்கள் எல்லாம் வெறும் சமய வழிபாட்டுத் தலங்களல்ல, பண்டைத் தமிழரின் கலை, கட்டிட, விஞ்ஞான், தொழில்நுட்பத் திறன்களை உலகுக்கு எடுத்துக் காட்டும் உலகத் தமிழரின் சொத்துக்கள். </b>

அவையெல்லாம் தமிழை எதிர்க்கும் பிராமணரின் கைகளில் இன்று. அவர்கள் தமிழைக் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது விட்டாலும் கூட, இதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு சில இந்தியத் தமிழ்ச் சகோதரர்களுக்கு எம் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். ஈழத்தில் அவர்களுக்கு முன்னோடியாக தமிழுக்கு ஆலயங்களில் முதலிடம் கொடுக்க வேண்டும், உண்மையாக, ஏன் தமிழைப் பாவிக்கக் கூடாது, இன்னும் பிராமணர்களால், சமஸ்கிருதத்தில் தான் பூசை பண்ண வேண்டுமென்பதற்கு சைவ சித்தாந்தத்தில் ஒரு காரணமுமில்லை. சமஸ்கிருதத்தை மட்டும் பாவிக்க வேண்டுமென்பது பிராமணர்களின் சதி. இதன்மூலம் இந்தத் தொழிலில் தங்களுடைய monopolyயை வைத்திருப்பதற்காக.

<b>நானும் உங்களைப் போல் பிராமணரின் தமிழ் எதிர்ப்பை அறியாமல் தானிருந்தேன்.திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஓரு தமிழ்நாட்டுக் கோயிலில் தமிழ்த் தேவாரத்தைக் கோயிலுக்குள் பாட பிராமணர்கள் எதிர்த்ததை நேரில் பார்த்த அன்று தான் பிராமணர்களை அவதானிக்கத் தொடங்கினேன். நான் ஒரு சைவப்பழமல்ல. இன்னும் முப்பது வயதைத் தாண்டவில்லை. </b>

<b>என்னுடைய அனுபவத்தில் ஈழத்துப் பிராமணரும் தமிழை எதிர்ப்பதில் சளைத்தவர்களல்ல ஆனால் அதை வெளிக் காட்டுவதில்லை. நீங்கள் நான் சொல்வதை நம்பாது விட்டால், நீங்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள கோயில்களில் போய்த் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள். அவர்கள் முகம் சுழிப்பதைப் பார்க்கலாம்.</b>

எங்கள் தமிழ் முன்னோர்கள் எங்களுக்காக விட்டுச் சென்ற தமிழ்நாட்டுக் கோயில்களை ANTI TAMIL பார்ப்பான்களின் பிடியிலிருந்து விடுவிக்க முயற்சிக்கும் இந்தியத் தமிழ்ச்சகோதரர்களுக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும், குறைந்தது இணையத்தளங்களிலாவது உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள். தமிழ் மன்னர்களால், தமிழர்களால் இரத்தமும், வியர்வையும் சிந்தப்பட்டுக் கட்டப்பட்ட தமிழரின் ஆலயங்களில் தமிழுக்கு உரிய இடமளிக்கப் பட்டு தமிழ் மீண்டும் கோலோச்ச வேண்டும்

எங்களின் கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களல்ல,தமிழரின் கலாச்சாரச் சின்னங்கள், தொன்று தொட்டு எங்களுடைய கோயில்களில் தான் தமிழ் வளர்க்கப் பட்டுள்ளது
[/b].
Reply
<span style='font-size:30pt;line-height:100%'>எனக்கு மதம் பிடிக்கவில்லை. </span>

தருமி என்பவர் எழுதிய வலைப்பதிவில் இது சம்பந்தமாக கனக்க எழுதியுள்ளார்,எந்தவித கண்ணாடிகளும் இன்றி ஆளமாக சிந்திப்பவர்கள் வாசிக்கலாம், நல்ல பதிவு.ஒரு சில வரிகள் கீழே,


7.) நம் உலகம் சூரியக் குடும்பத்தில் ஒரு சிறிய பகுதி; இந்தச் சூரிய குடும்பமோ 'பால் வீதி'யின் மிக மிகச் சிறிய பகுதி; இந்த பால் வீதியோ ஒரே ஒரு காலக்ஸி; இதுபோல் எண்ணிக்கையிலடங்கா காலக்ஸிகள். அப்படியென்றால், பரந்துபட்ட இந்த பிரபஞ்சத்தில் நம் உலகம் எவ்வளவு இத்தனூண்டு (insignificant)! ஆனால், பாருங்கள் எல்லா சமயங்களுமே anthropocentric-ஆக, மனித குலத்தை மட்டுமே கடவுள்கள் சுற்றி சுற்றி வந்ததாகப் பேசுவது,...அவர்களை மட்டுமே உய்விக்க அவதரித்தார்கள் என்பது...யோசித்துப் பாருங்களேன்..எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.




9.) இந்தக் கடைசிக் கேள்வியை எனக்காக கொஞ்சம் நின்று நிதானமாக யோசிச்சு, அசை போட்டு, மெல்ல ஒரு முடிவுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முக்கியமான கேள்வி; நடுநிலையோடு யோசித்தால் என் முடிவை நீங்கள் எதிர்க்க முடியாதென்ற நம்பிக்கை எனக்கு. மூட நம்பிக்கையோ, என்னவோ!!
NO RELIGION IS UNIVERSAL. எந்த சமயமுமே உலகம் தழுவிய சமயமாக இல்லவே இல்லை.
நம் இந்திய இந்துக் கடவுளர்கள் எங்கெல்லாம் 'சஞ்சரித்தார்கள்'? வடக்கே இமயம் - கைலாயம். தெற்கே குமரி முனை. இந்த இந்திய துணக் கண்டத்தைவிட்டு வெளியே செல்லாத கடவுளர்கள். கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால் 'அடுத்த நாடு' இலங்கை சொல்லலாம். காரணம் என்ன? கிரேக்க நாட்டு கடவுளர்கள் நம்ம முருகன் மாதிரி அங்கே உள்ள மலைகளில் வாசம் செய்வதான கதை. ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் வரும் அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும் அரேபிய நாட்டு எல்லைகளுக்குள்ளேயே நடந்ததாகத்தான் சொல்லப் படுகிறது. அத்தனை தீர்க்க தரிசிகளில் யாருமே மற்ற கண்டங்களிலோ, ஏனைய நாடுகளிலோ பிறந்ததாகவோ, அதிசயங்கள் (திமிங்கிலத்தின் உள்ளே மூன்று நாட்கள் இருந்தது போன்று...)நடத்தியதாகவோ இல்லை.
இதற்குக் காரணம் என்ன?




மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த நிலப்பரப்பில் தாங்களே உருவாக்கிக்கொண்டதே சமயங்கள்; தங்கள் சாயலில் உருவாக்கியவைகளே கடவுளர்கள்.(Ludwig Feuerbach in the nineteenth century and Sigmund Freud in the twentieth century hold that “our view of God is merely a psychological projection of our own image of ourselves - perhaps our actual selves, perhaps our ideal selves - on the universe as a whole....... The image of God as a divine father has strong Freudian overtones”.)Reason and religion" An introduction to the Philosophy of Religion by Rem B. Edwards pp 285. இதை ஒட்டியே இன்னொரு அறிஞர், If triangles have gods, their gods would be triangles. என்றார். மனிதன் தன்னை வைத்தே தனது கடவுள்களைப் படைத்தான் என்பதே என் எண்ணம்.




வாசிக்கும் நம்பிக்கயாளர்களுக்கு - அவர்கள் எந்த சமயத்தினைச் சார்ந்தவராக இருப்பினும் - கோபம் வரலாம்; நம்பிக்கையின்மையால் சிரிப்பும் வரலாம். அவர்களுக்கு ஒரு சொல்: இந்த 'முடிவு'க்கு வர எனக்கு ஏறத்தாழ 15 நீண்ட ஆண்டுகள் ஆயிற்று. ஒரு நாளில் வந்த, எடுத்த முடிவல்ல. எந்த மதத்தின் மேலுள்ள வெறுப்பாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ எடுத்த அவசர முடிவல்ல. நீங்களும் நன்றாக நேரம் எடுத்துக்கொண்டு, மெல்ல யோசித்து,..........




அப்படியே நீ சொல்வதுபோல மனிதன்தான் கடவுளைப்படைத்தான் என்றால், அப்படித் தோன்றிய மதங்களின் நோக்கம் என்ன? அப்படிப் படைத்த நம் முன்னோருக்கு அதற்குரிய நோக்கம் என்ன? - என்பது உங்கள் கேள்வி.




பதில்: எனக்கும் தெரியாது. ஆயினும், இப்படி இருக்குமா?

1. Policing the society? ஒழுங்கா நல்லவனா இருன்னு சொன்னால் யார் கேட்பார்கள். பொய்சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காது என்றால்தான் ஒரு பயம் வரும். அந்த பயம் வரத்தான் புத்திசாலி முன்னோர்கள் சமயங்களை ஆரம்பித்திருப்பார்களோ? அதனால்தானோ எல்லா மதங்களும் கடவுளையும், தண்டனைகளையும் சேர்த்தே சொல்லி நம்மை மிரட்டி வைத்திருக்கின்றன?




2. Psychotherapy? இது என் வாழ்க்கையில் நானே அனுபவித்தது. யாரிடமும் முழு நம்பிக்கையை நாம் வைக்க முடியுமா? எல்லாரிடமும் நம் மன அழுத்தங்களை, வெளியில் சொல்ல முடியா சோகங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? எல்லா வேதனைகளையும் எப்போதும் பகிர்ந்து கொள்ள முடியுமா? முடியாது. நம் தனிப்பட்ட ஆற்றல்கள் தோற்கடிக்கப் படும்போதும், தாங்க முடியா சோகத்தில் மனம் அல்லாடும் போதும், இது ஏன், இது ஏன் எனக்கு, இது ஏன் எனக்கு இப்போது என்று அடுக்கடுக்காய் வரும் வேதனைகளை முழுங்க முடியாமல் மனம் திணறி, உடல் தவிக்குக்போது நமக்கென ஒரு துணை வேண்டாமோ?




வேதனைகள், ஏமாற்றங்கள் வரும்போது நம்மைத் தாங்க ஒரு தோள் வேண்டுமென நினைக்காதார் யார்? மேற்சொன்னமாதிரி நேரங்களில், மனிதத் தோள்கள் ஆறுதல் கொடுக்கமுடியாத நேரங்களிலும் நாம் முழுமையாகச் சரணடைய ஒரு 'இடம்' வேண்டும்.(கண்ணதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன! இதோ அந்த வரிகள் - மனத்தின் வேதனையை அனுபவித்துச் சொல்லும் அந்தக் கவிதை வரிகள்:



எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும் - எவ்வளவு சரியான வரிகள். பல துயர நேரங்களில் இந்த மனித குலத்தின் மேல் வெறுப்பு வருவதில்லையா?

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே)



எந்த வித அச்சமும், தயக்கமும், வெட்கமும் இல்லாமல் நாம் சரணடையச் செல்லும் அந்த இடம்தான் கடவுள் என்ற concept. பூட்டி கிடந்த கோவிலின் முன்னால் இரவு நேரத்தில் போய் தனியாக உட்கார்ந்து அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது.



ஆற்றமுடியாத சோகங்களை காலம் ஆற்றும் - மெல்ல;
ஆனால், அதே சோகங்களை கடவுள் நம்பிக்கை போக்கும் - உடனடியாக.

இதைப் புரிந்து, வாழ்ந்து, பட்டுணர்ந்து, தெளிவு பட்ட நம் மனித சமுதாயத்தின் முன்னோர்கள் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த 'சுமைதாங்கித் தூண்கள்' நம் கடவுளர்கள். அவைகள் கற்கள்தான்; வெறும் சுதைகள்தான். ஆனால், மனதிற்கு இதம் அளிக்க மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்.சிறு வயதில் கடவுள் பயம் தேவை - மனத்தை நல்வழிப் படுத்த; வயதும், மனமும் வளர வளர அந்தக் கடவுள் concept தேவையில்லை; செத்த பிறகு மோட்சமாவது, நரகமாவது. இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த 'வெளிச்சத்திற்கு'(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?




மனிதம் போதுமே



http://dharumi.blogspot.com/2005/09/68.html
Reply
கடவுள் எங்கும் நிறைந்தவன்.
சரிதானுங்கோ.
சிலையா இருக்கிறதெல்லாத்தையும் கடவுளெண்டா, உலகம் முழுக்க கல்லாயிருக்கிறார் கடவுள்.
அதுசரி, நான் கேட்டதுக்கு இன்னும் ஒருத்தரும் பதிலளிக்கேலயே?
கடவுள் மனிதனைப் படைத்ததுக்கு என்ன காரணம்? எல்லா மதங்களும் கிட்டத்தட்ட ஒரே காரணத்தைத்தான் சொல்லுதுகள்.
Reply
யாரக் கேக்கிறியள் நல்லவன்,
இங்க வழக்கமாப் பதில் சொல்லுறவை கூகிள் இல தேடுகினம்,இன்னும் அகப் படேல்லப் போல.
என்னக் கேட்டா,கடவுளப் படச்சது மனிசன்(இதை வலு விலாவாரியா மேல எழுதியிருக்கிறார்,பிறகேன் நான் மினக்கடுவான்).ஆகவே உந்தக் கேள்விக்கு கடவுள் படச்ச மனிசர் தான் பதில் சொல்ல வேணும்.(உந்த வலைப் பதிவுகளப் பாத்து எனக்கும் ஒரு மாதிரியாக் கதைக்கிற வியாதி தொத்தீட்டுப் போல......பிறகு நானும் எழுதத் தொடங்கினா வீட்டில சண்ட தான்.....கண்டறியாத கணணியோட எண்டு....பிறகு வேலயிலேயும் தூங்கி வழிய வேணும்... வேண்டாம் ராசா....
Reply
[b]இங்குள்ள பகுத்தறிவு வாதிகளெல்லாம் வெறும் பயந்தாங்கொள்ளிகள் என்று நான் நினைக்கிறேன்,

இங்கு பெரும்பாலான விமர்சனங்கள் எல்லாம் இந்து மதம் பற்றியது தான். எல்லோரும் விளாவாரியாக இந்துசமயத்தையும் அதன் கொள்கைகளையும், புராணககதைகளையும் தான் விமர்சனமும் வியாக்கியானமும் செய்து உரை எழுதுகிறார்களே தவிர மற்ற மதங்களிலுள்ள மூடக் கதைகளைப் பற்றி மூச்சு விடக் காணோம். "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்பது போல் கண்டவன் நின்றவன் எல்லாம் இந்து சமயத்தில் கல்லெறிகிறான். ஆனால் மூடப் பழக்க வழக்கங்களிலும், நம்ப முடியாத கட்டுக்கதைகளிலும் எந்த மதமுமே இந்து மதத்துக்குச் சளைத்தல்ல. காய்த்த மரத்துக்குத் தான் கல்லெறி விழும் என்பார்கள்.அது போலத் தான் இதுவும் போலிருக்கிறது.

என்ன செய்வது? :wink:

பலருக்குக் கணணிக்கு பின்னால் மறைந்திருக்கும் போது கூட மற்ற மதங்களை விமர்சிக்கப் பயம். ஆகமங்களை ஆராய்ச்சி செய்யும் எவரும் இங்கு பைபிளையோ, குரானையோ ஆராய்ந்து விவாதிக்க மாட்டார்கள், ஏனென்றால் இந்து மதம் ஒன்று தான் கேட்பாரற்ற மதம், எதையும் பொறுத்துக் கொள்ளும் மதம், யாரும் வரலாம், யாரும் போகலாம், கட்டுப்பாடு கிடையாத சுதந்திரமான மதம்.

இங்குள்ள பலர் கடவுள் நம்பிக்கை என்ற விடயத்தை 'இந்து மதக்கடவுள் நம்பிக்கை என்று புரிந்து கொண்டு விட்டார்களோ என்று இருக்கிறது அவர்களின் பதில்கள். என்ன செய்வது. பகுத்தறிவு வாதிகளே எல்லா மதங்களையும் சாடுங்கள் துணிவிருந்தால், ஏனென்றால் எல்லா மதங்களிலும் அழுக்குண்டு. சிலவற்றில் இந்து சமயத்தை விடவும் மிக அதிகமான அழுக்குண்டு
Reply
இந்து மதத்தவரக்கு தானே அதன் அழுக்குகள் பற்றி விமர்சிக்க அதிக உரிமை இருக்கு. வேற்று மதங்களைப்பற்றி குறை கூறமுதல் எமது முதுகில் உள்ள அழுக்கை கொஞ்சம் தெரிவது நல்லது தானே? சுயவிமர்சனத்தால் நன்மையடையப்பேவது யார்?

நான் இந்துவாக பிறந்து வழர்ந்த உரிமையில் தான் கருத்துக்களை எழுதுகிறேன். இந்து மதம் சைவ சமயம் பற்றி நடைமுறை அனுபவத்தின் ஊடாக கொஞ்சமாவது தெரிந்தவன் என்றரீதியில் விமர்சிக்கிறேன. ஒரு மதத்தை (ஒருவரின் நம்பிக்கையை) விமர்சிக்கவேண்டும் என்பதற்கா ஆதாரங்களை தேடவில்லை.
Reply
பிரீத்தி நீர் தானே இங்கே மதம்,மதம் எண்டு எழுதித் திரியிறீர் ,கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுமென்.ஏன் தனிப்பட்ட தாக்குதல்களிலேயே காலத்தைச் செலவழிக்கிறீர்.அப்படி உயரிய இந்துமதத்தைப் பற்றித்தானே நீர் பிராமணிகளின் மதம் எண்டு இவ்வளவு நாளும் வாதுட்டனீர்,இப்ப என்ன உயரிய இந்து மதம் எண்டு எழுதுறீர், நான் நினச்சன் நீர் எழுதினதுகளில இருந்து இந்து மதமும், நீர் எழுதுற சைவ மதமும் வேற எண்டு.எதோ மாயோன் ,சேயொன் எண்டு கடவுள் பேரெல்லாம் எழுதிணீர்,இப்ப பார்ப்பனீரின் மதம் தான் சிறந்து எண்டுறீர்.உமக்குள்ளயே தெளிவில்லை , நீர் முதலில ஒரு மூலயில இருந்து நீர் என்ன சொல்ல வாறீர் எண்டத் யோசிச்சுப் போட்டு எழுதும்.மேலும் நான் இந்துமதமோ,சைவ மத்மோ பற்றி மட்டும் எழுதேல்ல,மற்றதப் பற்றியும் எழுதி உள்ளேன்.இங்கே இசுலாமியச் சகோதரர்கள் எவரும் எழுதுவதாகத் தெரியவில்லை,ஆகவே பதில் அளிக்க ஒருவரும் இல்லாத இடத்து அது பற்றி எழுதுவது வெறும் பிரச்சாரமாகவே இருக்கும்.ஆரோக்கியமான கருத்தாடலுக்கு இரண்டு பக்கமும் வேணும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)