Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிழல் யுத்தம்
#21
அன்புள்ள ஜீவன்
என்னால் இவற்றை பார்க்க முடியவில்லை. இங்கு இன்டாகநெட் போதிய அளவு வேகமாக இல்லை என்று நினைக்கிறேன். 10 அல்லது 12 பிரேம்க்கள் தான் தொடர்ந்து வருகிறது. பின்பு நீண்ட இடைவெளி. என்;ன்செய்;வது என்று தெரியவில்லை. இறக்கம் செய்து பார்க்க வாய்ப்பு உள்ளதா. அறியத்தாருங்கள். நான் ஆவலாக் உள்ளேன்.

உங்கள் ஆக்கங்கள் வெற்றிபெற என் வாழ்த்துகள்.

உங்கள் ஆக்கங்கள் எம் நாட்டுக்கு ஒரு முகவரியாக அமைந்தால் அது நாட்டுக்கே பெருமை தானே.
Reply
#22
aathipan Wrote:அன்புள்ள ஜீவன்
என்னால் இவற்றை பார்க்க முடியவில்லை. இங்கு இன்டாகநெட் போதிய அளவு வேகமாக இல்லை என்று நினைக்கிறேன். 10 அல்லது 12 பிரேம்க்கள் தான் தொடர்ந்து வருகிறது. பின்பு நீண்ட இடைவெளி. என்;ன்செய்;வது என்று தெரியவில்லை. இறக்கம் செய்து பார்க்க வாய்ப்பு உள்ளதா. அறியத்தாருங்கள். நான் ஆவலாக் உள்ளேன்.

உங்கள் ஆக்கங்கள் வெற்றிபெற என் வாழ்த்துகள்.

உங்கள் ஆக்கங்கள் எம் நாட்டுக்கு ஒரு முகவரியாக அமைந்தால் அது நாட்டுக்கே பெருமை தானே.

மிக்க நன்றி ஆதிபன்,
ஆரம்பத்தில் எச்சில்போர்வை குறும்படத்ததை இறக்கும் விதத்தை யாழ் இணையம் காட்டியிருந்தது.
அது கீழே விளக்கப்பட்டுள்ளது.முயன்று பாருங்கள்.

முடியாவிடில் யாழ் இணைய நிர்வாகம் கூடிய விரைவில் பிரச்சனைகளை சரி செய்யுமென நம்புகிறேன்.

Ilango Wrote:அஜீவனின் எச்சில் போர்வையை கீழே உள்ள இணைப்பிலிருந்து உங்கள் கணணிக்கு இறக்கி கொள்ளலாம்.
25 MB அளவுவுள்ள video file ,
divx முறையில் தயாரிக்கபட்ட asf file

இதை Download Accelerator Plus மூலம் வேகமாக இறக்கலாம் அதே போல்
56kb உள்ளவர்கள் ஒரு சிறுது நேரம் தான் ஒன்லைனில் இருப்பது எனில் கூட இந்த மென்பொருள் மூலம் இன்று ஒரு சிறு அளவையும் மிகுதியை நாளையும் கூட இறக்கலாம்
ஆனால் முழுவதையும் இறக்கியபின்பு தான் படத்தை பார்க்கலாம்.

எச்சில் போர்வையை இறக்குவதற்கு முன்
Download Accelerator Plus இறக்கி உங்கள் கணணியில் இயங்கவிடுங்கள்.

பின்
<img src='http://www.speedbit.com/help/IMAGES/Main-Screen.gif' border='0' alt='user posted image'>
அதில் Add url என்பதை சொடுக்கவும்
அப்போது <img src='http://www.speedbit.com/help/images/addurl.gif' border='0' alt='user posted image'>
இப்படி வரும்

எச்சில் போர்வையின் இணைப்பான
http://home.no.net/yarl/alien_viel.asf
என்பதை தெரிவு செய்து copy பண்ணி பின்
இதற்குள் paste செய்யவும்
<img src='http://www.speedbit.com/help/images/addurl.gif' border='0' alt='user posted image'>
பின் ok யை சொடுக்குங்கள்
வேகம் கூடிய இணைய இணைப்பு எனில் சில நிமிடங்கில் உங்கள் கணணியில் video file இறங்கிவிடும்
வேகம் குறைந்தது எனில் கொஞசம் நேரம் பிடிக்கலாம்.
பொறுத்திருக்க நேரமில்லை எனில்


<img src='http://www.speedbit.com/help/IMAGES/Download-Screen.gif' border='0' alt='user posted image'>

Pause சொடுக்கி தற்காலிகமாக நிறுத்திவிடலாம்.
கணணியை நிறுத்திவிட்டு மீண்டும் நாளை மிகுதியை
<img src='http://www.speedbit.com/help/IMAGES/ResumeDLS.gif' border='0' alt='user posted image'>

Resume என்பதை சொடுக்கி தொடரலாம்.
Reply
#23
[size=15]கீதம் இணையத்தில் நிழல்யுத்தம் பற்றிய கருத்துகள்:-

victor Wrote:Hi Mr. AJeevan,

nalam thaane...enna !

ungal http://www.ajeevan.com website-i paarthen.
magilthen.

oru eezhath thamizhar ivvalavu thooram saathithirupathu

arputham. ungalukku enathu manamaarntha paaraattukkal !

can i add your website to the tamil website listing we have at

geetham.net?

thanks
=-Victor
sofiadorathy Wrote:jeevan i can understand what the short film is??? can u please explain about it....thank u
arumugam57 Wrote:short film = film in which only short tamil heroins acts.
For example all actress in that film will be of 138 cm height.
Any any one can become heroin in that film with some security payment.

sofiaa? enna ethukku moraikiree.. I just explained what is a short movie is.
kananipitthan Wrote:பெண்கள் பார்க்கவேண்டிய குறும்படம்

arumugam57 Wrote:Yes. In that movie one girl is cooking........

jayasri Wrote:What is this video trying to explain???????? ........
silican Wrote:AJeevan,
Movie was really good. I liked the acting and though had some problem understanding the Dialogues, I was able to get the message. Oru chinna suggestion. Throughout the movie, the Film had BG music from various other hit songs and some BG music (from Roja) Tht distracts the viewer usually and unwantedly reminds of those movies, viz titanic,Uyire,Roja etc..Hope U get my point..
IT was a great movie Overall.
Silican

Thanks: www.geetham.net
[size=14]
இது யாழ் இணையத்தின் இமயமலை சாதனையல்ல, இது ஒரு துளி ஆரம்பம் மட்டுமே...................

புலம்பெயர் படைப்பாளிகளே உங்கள் படைப்புகளை யாழ் இணையத்துக்கு அனுப்புங்கள்................
இதுவும் ஒரு ஊடகம்தான்.சில ஊடகங்கள் ஒரு வரையறைக்குள் மட்டுமே நிற்கும். இணையம் உலகெங்கும் பரந்து விரியும்....................
எனவே தயங்காதீர்கள்.செயல்படுங்கள்.....................
வெல்வோம்..................

அன்புடன்
அஜீவன்
Reply
#24
அயீவன் அவர்கள் ஆக்கிய 'நிழல் யுத்தம்' மிக அருமையாய் இருந்து. காட்சிகள் தொடுத்த விதம் நன்கே அமைந்திருந்தது. திறம்பட பின்னிய பின்னணி இசையும், அழகிய தகுந்த காட்சி உவமைகளும் (எ.க கடல் அலை) பாத்திரங்களின் உள்ள நிலைகளைப் பார்ப்போர்க்கு உயிர்ப்புடன் உணர்த்தியது. இதை நீங்கள் பிற, புலம்பெயர்ந்த நாட்டு ஊடகங்களுக்கும் குறிப்பாக இலங்கை ஒளிபரப்பு ஊடகங்களுக்கும் அனுப்பலாமே. அவர்கள் தரும் (ஏமாற்றாவிடில் ) காசு உங்கள் அடுத்த குறும்படத்துக்கோ நெடும் படத்துக்கோ உதவது மட்டுமன்றி, ஈழத்தமிழ் மக்கள் பரவி வாழும் இடங்களெல்லாம் (இலங்கை உட்பட) புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்கள் புகழ் பரவ வாய்ப்புண்டல்லவோ?
'நிழல் யுத்தம்' படம் பார்க்க இடம் தந்த யாழுக்கும், இணைப்பளித்த இளங்கோ அவர்கட்கும், படம் செய்து வழங்கிய அயீவன் அவர்கட்கும் என் உளமார்ந்த நன்றி. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இளங்கோ அறிக, நான் நீங்கள் தந்த இணைப்பை சொடுக்கி பார்த்த பொழுது படம் விக்கி விக்கியே ஓடியது :mrgreen: (என்னிடம் Broad band தொடுப்பு உள்ளது). ஆதலால் தரவிறக்கம் செய்து பார்த்து மகிழ்ந்தேன். மீண்டும் மிக்க நன்றி.

-
Reply
#25
நிழல் யுத்தம் மிக அருமையாக இருந்தது.
எடுத்துக்கொள்ளப்பட்ட கரு நடைமுறைவாழ்க்ககையின் ஓர் அங்கம். பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Reply
#26
Kanakkayanaar Wrote:இதை நீங்கள் பிற, புலம்பெயர்ந்த நாட்டு ஊடகங்களுக்கும் குறிப்பாக இலங்கை ஒளிபரப்பு ஊடகங்களுக்கும் அனுப்பலாமே. அவர்கள் தரும் (ஏமாற்றாவிடில் ) காசு உங்கள் அடுத்த குறும்படத்துக்கோ நெடும் படத்துக்கோ உதவது மட்டுமன்றி, ஈழத்தமிழ் மக்கள் பரவி வாழும் இடங்களெல்லாம் (இலங்கை உட்பட) புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்கள் புகழ் பரவ வாய்ப்புண்டல்லவோ?

எமது குறும்படங்கள் ஆரம்பத்தில் TRT தமிழ் ஒளி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதன் பின்னர் TRT தொலைக்காட்சியின் சுவிஸ் கலையக பொறுப்பாளராக சுவிஸ் முழுவதும் வீட்டுக்கு வீடு சென்று உங்கள் நேரம் என்ற கலையகத்துக்கு வெளியே செய்யும் நிகழ்ச்சியை செய்து வந்தேன். அத்தோடு மாலை நேரங்களில் TRT தமிழ் ஒலி வானோலிக்காக சுவிஸ் செய்திகளை தொகுத்து வாசித்து வந்தேன்.இவை பொழுது போக்கு போலவே எனக்கு இருந்தது.பின்னர் நானாகவே சொல்லி விட்டு நின்று விட்டேன். சிறிது காலத்துக்கு பின்னர் TRTயில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

கனடாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளிலும் என் குறும்படங்கள் ,என் நண்பர்களிடமிருந்து பெறப்பட்டு ஒளிபரப்பப் பட்டதாக அறிந்தேன். அதுபற்றி எதுவுமே, குறைந்தது நன்றியென்று கூட ஒரு மெயில் போடவில்லை. குறும்படத்தில் நடித்தவர்கள் கனடா போன போதுதான் அவர்கள் தொலைக்காட்சியில் வந்தவர்களாக அறியப்பட்டிருந்தார்கள்.

தீபம்,TTN போன்ற தொலைக் காட்சிகளில் என் சந்திப்புகளின் போது என் குறும்படங்களின் சில பகுதிகள் காட்டப்பட்டன.இவர்கள் வசம் என் குறும்படங்கள் இருக்கின்றன.

சுவிஸின் சில மாநில தொலைக் காட்சிகளிலும்,ஜேர்மனியில், நாச்சிமார் கோயிலடி ராஜன் மற்றும் முருகவேல் ராஜன் ஆகியோர் பங்கு கொள்ளும் ஒரு ஜேர்மன் தொலைக்காட்சி நிகழ்விலும் ஒளிபரப்பியுள்ளார்கள்.

தவிர,கனடா,ஜேர்மனி,பிரான்ஸ்,லண்டன்,இந்தியா,இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற குறும்பட விழாக்களில் எனது குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

அனைத்து தமிழ் வானோலி ஊடகங்கள் அதாவது TRT தமிழ் ஒலி,IBC,TBC,UTBC,ETBC,நடாமோகன் நடத்தும் வானோலி.......................இப்படி..........பேட்டிகளும்,விமர்சனங்களும் இடம் பெற்றன.

ஈழநாடு,ஈழமுரசு,நிழல்,இந்தியா டுடே, தினக்குரல்,வீரகேசரி,தேசம்,உதயன்,அஞ்சல்,புதினம்...........................இப்படி பல பத்திரகைகள் எழுதின.

யாழ்,திண்ணை,பதிவுகள்...........இப்படி சில இணையதளங்களும்..................எழுதின.

தவிர எனது படைப்புகளை ஒரு ஒளிநாடாவாக கொண்டு வந்த போது,அதை விநியோகிக்க என்னிடம் பணம் கேட்டது எங்கள் தமிழர் நிறுவனமொன்று. பின்னர் நானாகவே வெளியிட்டேன் Video Cassetteகள் கடைகளில் அழகாக சில காலம் காட்சிப் பொருளாக இருந்தது.விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே வாங்கினார்கள்.விற்பயைான கசெட் காசு வாங்குவதற்கு கசெட் போட்ட கடைகளுக்கு செல்ல என் காசுதான் மேலும் செலவாகும் என்பதால் நான் விற்ற காசை வாங்கவே போகவேயில்லை........................(இதை என் குழுவினர் கேலியாக சொல்வார்கள்,அஜீவன், ஒரு கட்டு கருவேப்பில வித்த கணக்கு பார்க்க பென்சில (BENZ CAR) போற மாதிரி வேலை பார்க்காதேங்கோ........என்று.) இப்போதும் என் செலவில்தான் சிலருக்கு குறும்படங்களை அனுப்புகிறேன்.நான் பணம் கேட்பதேயில்லை. எனக்கு பழகிவிட்டது.கேட்பதே வெட்கமாக இருக்கிறது.எனது படங்களுக்கு copy rights கிடையாது.போட்ட பணத்தில் ஒரு சதம் கூட என் கைக்கு வந்ததில்லை. இது கோயில் சொத்து போன்றது.....................இது தவிர கூத்தாடிகள் என்று வேறு, சிலர் சொல்ல விழைகிறார்கள்..................... கொடுமை.

ஒரு படைப்பை செய்வதை விட அதை வெளியில் கொண்டு வருவதற்கு அதிக பணம் எமக்குத் தேவை என்பதும்,அதை பார்வையாளர்களுக்கு ரசிக்க வைப்பதற்கு அதைவிட அதிக பிரயத்தனம் தேவை என்பதையுமே நான் நம்மவரிடம் காண்கிறேன்.

என் சொந்த பணத்தில் லண்டன் சென்று தமிழர்களுக்கு குறும்பட பயிற்ச்சி பட்டறையொன்றை நடத்தினேன்.அத்தோடு சரி,பின்னர் அவர்கள் எதையுமே செய்யவில்லை.................

சுவிஸ் சில மாநில தொலைக் காட்சியொன்றில் ,ஜேர்மன் மொழி படைப்புகளில் (TV Programme & films)பணிபுரிகிறேன்.அவர்களிடமிருந்து உழைப்புக்கான ஊதியமும் , நல்லதை பாராட்டும் குணமும் இருக்கிறது,

பாராட்டு மட்டுமே ஒரு கலைஞனை வாழ வைக்காது.அவனது வீட்டு பானை எரிய பணமும் தேவை.என் வாழ்வில் அதிக இழப்புகள் கலைக்காகவே நடந்துள்ளது.இது என் கலை வாழ்வில் ஒரு சிறு துளி மட்டுமே................... இந்நிலை ஏனைய கலைஞர்களுக்கு வராமல் தடுக்க வேண்டும்.இல்லையானால்.........................உம்.............

<span style='color:red'>அதற்காக,உண்மையான ஓர் கலைஞன்,தன் சுயநலத்துக்காக அரசியல்வாதிகளின் கைகளுக்குள் சிறைப்பட்டு விடக் கூடாது.

சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட,
உப்பாகி,நீரோடு சுதந்திரமாய் கரைவதே மேல்............

யாழ் நல்ல நேரத்தில் நல்லது செய்திருக்கிறது.நன்றிகள்...........

இன்னும் நம்பிக்கை, எனக்குள் அற்றுப் போகவில்லை என்று எனக்குள்ளேயே ஓர் அசாத்திய நம்பிக்கை.

லட்சங்களுக்காக வாழும் மக்கள் மத்தியில் லட்சியங்களுக்காக வாழும் ஒரு சிலராவது இல்லாமலில்லை.........-அஜீவன்</span>
Reply
#27
நம்பிக்கை தான் வாழ்க்ககை அஜீவன்.
வாழ்த்துக்கள்...
Reply
#28
shanmuhi Wrote:நம்பிக்கை தான் வாழ்க்ககை அஜீவன்.
வாழ்த்துக்கள்...

நன்றி சண்முகி.அதுவும் இல்லாவிட்டால் பிணம்தான்...............
Reply
#29
kuruvikal Wrote:[size=15]1.புலம்பெயர் குறும்படங்கள் தொட்டில் குழந்தைகள்...அவற்றை இப்பவே விமர்சனத்தால் சாடுவதோ அல்லது அபரிமிதமாகக் காட்டுவதோ குழந்தையே வேண்டாம் கருக்கலைப்பே போதும் என்ற நிலையைத்தான் தோற்றுவிக்கும்...!

2.புலம்பெயர் குறும்படங்கள் இன்னும் சமூகத்தின் பரந்த வீச்சை எட்டவில்லை...குறிப்பாக இந்திய சினிமாவைப் பார்த்தால் இந்தியாவிலிருந்து கனடா மாணவர்களின் இசை நிகழ்ச்சி மேடை வரை செல்வாக்குச் செய்கிறது...ஆனால் குறும்படங்கள் அந்த அளவில் இல்லை அவை வளரும் மொட்டுக்கள்.....முளையிலேயே கிள்ள வேண்டுமா...மலர்ந்து நான்கு திக்கும் மணம் பரப்ப அனுமதிக்க வேண்டாமோ...?!

3.குறும்படங்கள் ஆபாசம் சமூகச் சீரழிவுக்காட்சிகள் என்று தாங்கி வர அதற்குள் இடமளிக்க எமது புலம்பெயர் கலைஞர்கள் தயாராக இல்லை...அப்படி தாங்கி வந்தாலும் அது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே போய்ச்சேரும்...அதாவது குறும்படங்களால் சமூகச் சீரழிவு என்றவகையிலான விழிப்பூட்டல் அவசியமற்றதாக உள்ளது....!காரணம் குறும்பட வரம்புக்குள் நிதானமாக நின்று கருத்துணரும் பக்குவத்தில் பலரசிகர்கள் இன்னும் இல்லை....என்பது உண்மையே....!

4.புலம் பெயர் குறும்படங்கள் கண்களில் செல்வாக்குச் செலுத்தவல்ல அழகிகளை அல்லது அழகர்களை நம்பி வருவதில்லை சமூகத்தின் நலனில் செல்வாக்குச் செலுத்திடும் உண்மையான கதை,கலைஞனை நம்பியே வருகின்றன.

5.குறும்படங்கள் பற்றிய அதிக விளம்பரமின்மையால் அவற்றைப்பற்றி அறியமுடியாதிருக்கின்றது...அது மட்டுமல்லாமல் அவற்றிற்கென்று தனியான இணையப்பக்கங்கள் இயக்குவதே எமக்குத் தெரியவில்லை.....!பிறகெப்படி குறும்படங்கள் பற்றி அறிவது....! விமர்சிப்பது....!குறும்படங்கள் பற்றி கொழும்பில் வீரகேசரியில் தினக்குரலில் காணலாம் ஆனால் அது ஒரு மூலைகுள் சின்னதாக இருக்க நடுப்பக்கத்தில் சினிமா உட்கார்ந்து கண்ணைக்கவரும் வண்ணம் காட்டும்...இதற்கிடையில் அவற்றைப்பற்றி வாசிப்பது எப்படி....?!

6.குறும்படக்கள் பற்றிய விமர்சனங்களுக்கு சமூகத்தில் முன்னுரிமை இன்மை.....உதாரணம் யாழ்களம்....பாய்ஸ் எத்தனை பக்க விமர்சனத்தைத் தாங்கியுள்ளது...ஆனால் அஜீவனின் எச்சில் போர்வை....?! பிறகெப்படி விமர்சனம் எழுத மனம் வரும்....நாமெழுதி யார் பாக்கிறது...இப்படியான சிந்தனைக்கே வழிசமைக்கிறது...!

இப்படியும் இப்படிப்பலவும்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

இப்படியான கருத்துகள் வந்ததில் அகமகிழ்ந்து நிற்கிறேன். எழுத்து வல்லமை உள்ளவர்கள் எழுதும் போது அதன் அழகே தனி, குருவிகள்.

குறும்படங்களையும் சாடுங்கள்,அதேபோல் தேவையானதை பாராட்டுங்கள்,குற்றங்களை கூறுங்கள்.
அதுவே ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

சிறுதுளி பெரு வெள்ளம். நான்கு பேரால் தொடங்கப்பட்ட போராட்டம் , முழு உலகையே கவர்ந்து நிற்கிறதே.......................

எங்கும் ஆரம்பிப்பதுதான் சிரமம்.உங்களைப் போன்றவர்கள் நாமெழுதி யார் பார்ப்பது என்று எழுதுவதற்கே சிரமப்படும் போது எமக்கும் நாம் செய்து யார் பார்ப்பது என்ற நிலை ஏற்படுகிறதே?

நாங்கள் ஒரு சினிமாவை உருவாக்குவதில் பிரச்சனையில்லை.அதைப் பார்க்க வைப்பதில்தான் பிரச்சனை வருகிறது என்று தோன்றுகிறது................

"குறும்பட வரம்புக்குள் நிதானமாக நின்று கருத்துணரும் பக்குவத்தில் பலரசிகர்கள் இன்னும் இல்லை....என்பது உண்மையே...."
என்ற கருத்தை தகர்க்க எழுத்தாளர்களால் முடியும்.

பேனாவால் பேச முடியாதை யாராலும் பேச முடியாது.சில பேனாக்கள் எழுதவே மறுக்கின்றனவே.................. இவை தம்மை மேன்மைப்படுத்திக் கொள்ள மட்டுமே எழுதுகின்றனவா?.....................

நட்புடன்,
அஜீவன்
Reply
#30
<b>புலம்பெயர் அகதி வாழ்க்கையின் அவதி... அவசர வாழ்க்கை குறும்படத்தில் தெரிகிறது.

இது நிழலின் யுத்தம். நிஜம் இல்லை. குடும்பத்தில் யுத்தம் தொடங்குவதற்கான நிழல்களாக....உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
குடும்பத்தில் பிரச்சனை பஞ்சாபி மூலம் உருவெடுக்கப்படுகிறது.
அந்தப் பெண்ணுக்கு தன் கணவன் தனக்கு மட்டுந்தான் என்ற மன உந்தல்தான்..... அந்த மனயுத்தத்திற்கு காரணமாக இருந்திருக்கும்.
மனதின் கொந்தளிப்பு.... கடலின் கொந்தளிப்போடு ஒப்பிட்ட கமராவின் தனித்தன்மை புலப்படுகிறது.
அதற்கு ஆதாரமாக கறியை தீப்பிடிக்க காட்டியிருப்பது... .அங்கே தீப்பிடித்தது கறி இல்லை. பெண்ணின் எதிர்பார்ப்புக்கள்தான் ! நிழலின் யுத்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
கோயிலுக்கு வெளிக்கிடும்போது பெண்ணின் மனதில்.... மகிழ்ச்சியின் பிரவாகமாக புன்னகையை சிந்த விட்டிருக்கலாம் போல் தெரிகிறது.
கோயிலுக்கு போக முடியாமல் போனதற்காக அதை வெளிப்படுத்த ..... அந்த அலங்காரத்துடன் படுத்திருப்பது. ஓர் ஏமாற்றத்தின் வெளிப்பாடு.
டெலிபோன் உரையாடல்களை மட்டும் நம்பி வருகின்ற பெண்களின் நிலை.... இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு இக்குறும்படம் நல்ல உதாரணமாக விளங்குகின்றது.
உற்றார் உறவினரை விட்டு இங்கு வரும் பெண்களின் எதிர்பார்ப்புகள்.. இங்கே நிர்மூலமாக மாறும் போது இதுபோன்ற நிழல் யுத்தங்கள் ஆரம்பமாவதற்கு வழி அமைக்கின்றன.

இயந்திரமாக வாழ்கின்ற அவனது நிலைப்பாடு....
குடும்பத்துக்காக உழைத்து தனக்கேன ஓர் வாழ்க்கையை அமைக்க முற்படும் போதும்....ஏற்படும் பிரச்சனைகள் சாதாரணமானவையானலும் அதைக் கையாளும் முறை .... தீர்க்கவேண்டிய முறை ஆணின் கையிலும் இருக்கின்றது.
பஞ்சாபி சிறு பிரச்சனை என்றாலும்... அதை நினைத்து பியர் அருந்தி யோசிப்பது.... ஏதைப்பற்றியதாக இருக்கும் ஒருவேளை ஆணின் மனதில் சஞ்சலங்கள் இருக்கின்றதோ... என்ற நினைப்பைத் தான் என்னுள் தோற்றுவிக்கின்றது.
சிதறிக்கிடக்கும் அழைப்பதழை அடுக்கிவைப்பதில் அவனது பொறுமை நிதானம் தெரிகிறது.
புலம்பெயர் நாட்டில் ஒருவருக்கு உதவிசெய்தால் தான் அவர் எமக்கு உதவி செய்வார் என்ற யதார்த்தம் தெரிகிறது.
தன் குடும்பத்தை பார்ப்பது, பெண்ணை இங்கு அழைத்தது என்பதையெல்லாம் ஒப்புவிக்கும்போது.... தான் உழைப்பது தன் குடும்பத்தை கவனிக்கத்தான் என்று நினைக்கத்தோன்றுகிறது. மனைவியின் பெற்றோரை மனைவி உழைத்துத்தான் பணம் அனுப்பவேண்டுமா ? இங்கே .... ஆணின் ஆளுமை அதிகரித்திருப்பது போன்ற ஓர் நெருடல் ஏற்படுகிறது.

இறுதியில் நிழல் யுத்தம் ஓர் மௌன யுத்தம்.

பங்குபற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.</b>
எம்மவரது படைப்புக்களை மிக ஆர்வமாக பார்வையிடுவேன். விமர்சனம் எழுதவேண்டும் என்பதற்காக பலதடவைகள் போட்டு பார்த்தேன். ஓவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்துக்கள் இருக்கும். எனது பார்வையில்....எனது கோணத்தில் ஏற்பட்ட சில கருத்துக்களைத்தான் முன்வைத்துள்ளேன். இதைப்பற்றி எழுத இன்னும் நிறைய யோசித்தேன். அதிகமாகி விடுமோ என்று நினைத்து நிறுத்திவிட்டேன்.
தவறாக எழுதி இருப்பின் தெரிவிக்கவும்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#31
[quote=tamilchellam]<b>புலம்பெயர் அகதி வாழ்க்கையின் அவதி... அவசர வாழ்க்கை குறும்படத்தில் தெரிகிறது.

இது நிழலின் யுத்தம். நிஜம் இல்லை. குடும்பத்தில் யுத்தம் தொடங்குவதற்கான நிழல்களாக....உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எம்மவரது படைப்புக்களை மிக ஆர்வமாக பார்வையிடுவேன். விமர்சனம் எழுதவேண்டும் என்பதற்காக பலதடவைகள் போட்டு பார்த்தேன். ஓவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்துக்கள் இருக்கும். எனது பார்வையில்....எனது கோணத்தில் ஏற்பட்ட சில கருத்துக்களைத்தான் முன்வைத்துள்ளேன். இதைப்பற்றி எழுத இன்னும் நிறைய யோசித்தேன். அதிகமாகி விடுமோ என்று நினைத்து நிறுத்திவிட்டேன்.
தவறாக எழுதி இருப்பின் தெரிவிக்கவும்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.</b>[/quote]

நன்றி தமிழ்செல்லம்,
அதிகமாக எதையும் நீங்கள் எழுதவில்லை.இன்னும் எழுதியிருக்கலாம்................ஒரு குறும்படத்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்களுக்கு உங்களைப் போன்றோரது விமர்சனங்கள் பதிலாக இருக்கும்.

[quote=tamilchellam]கோயிலுக்கு வெளிக்கிடும்போது பெண்ணின் மனதில்.... மகிழ்ச்சியின் பிரவாகமாக புன்னகையை சிந்த விட்டிருக்கலாம் போல் தெரிகிறது.

இது மட்டுமல்ல,இதைவிட ஒரு பெரிய தவறு இங்கே என்னால் விடப்பட்டிருக்கிறது.
கதாநாயகியை கோயிலுக்கு போவதற்கான ஒரு உடையை அணியும்படி ராதிகாவுக்கு(கதாநாயகி) சொன்னேன்.

இக்காட்சியை எடுப்பதற்கு முன் ராதிகா Birthday பரிசை உடைத்துப் பார்ப்பது போன்ற ஒரு காட்சியை எடுப்பதற்கு தயாரான போது அவர் ஏற்கனவே பார்சலை உடைத்து அதனுள்ளிருந்த உடையை அணிந்து கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரமுற்ற பாலா(கதாநாயகன்) கொஞ்சம் கடுமையாக ராதிகாவை ஏசினார்.
(இருவரும் கணவன்-மனைவி என்பதும் எனது நெருங்கிய நண்பர்களும் என்பதும் குறிப்பிட வேண்டியது.) நான் அவரை சமாதானப்படுத்தினாலும் அவரது முக வாட்டம் தணியவேயில்லை.அதுவே உங்களுக்கு சிரிக்காத முகமாக தெரிகிறது.

இக்காட்சி அதிகாலை 1.00 மணியளவில் எடுக்கப்பட்டது.

எனவே அவர் பார்சலை உடைத்து பரிசாக இருக்கும் உடையைப் பார்ப்பது போன்று எடுப்பதற்கு திட்டமிட்டிருந்த காட்சியை மாற்றி, பார்சலைச் சுற்றிய பேப்பரை உடலோடு இறுக அவர் நினைவாக அன்பாக அணைத்துக் கொண்டிருப்பது போலவும் கனவொன்று கண்டு எழுந்திருப்பது போலவும்,புதியதொரு காட்சியை உருவாக்கினேன்.

இவ்விபத்தில் உருவான காட்சி படத்துக்கு உரம் போட்டது என்பது மிகையல்ல,
எப்படியான கனவைக் காட்டுவது?...............என்று யோசித்த போதுதான்,
<b>கார் விபத்தை படத்துக்குள் கொண்டு வருவதற்கான எண்ணம் உருவானது.</b> ஆரம்பத்தில் கார் விபத்து என்பது கதையில் சிந்திக்கப்படவேயில்லை.
சில தவறுகள் கூட வெற்றிக்கு உறுதுணையாகி விடுவதுண்டு.இது ராதிகாவினால் எனக்குக் கிடைத்த வெற்றி என்பதை யுனிட்டில் அனைவருக்கும் சொன்னேன்.எனவேதான் சினிமா என்பது ஒரு தனிமனித வெற்றியாக முடியாது என்கிறேன்.

இங்கே நீங்கள் பாராட்டுவதோ,ஏசுவதோ அனைவரையும் சாரும்.இருப்பினும் தலை போவது என்னவோ இயக்குனரதுதான்.....................

இதற்கு பிறகு அவர் கோயிலுக்கு போவதற்காக உடுத்திய உடை, அவரது திருமண உடையாகும்.........
கோயிலுக்கு போக இப்படியாக அலங்கரிப்பதில்லை. ராதிகாவை சுமுக நிலைக்கு கொண்டு வர அந்த இடத்தில் நான் மெளனமாக வேண்டியிருந்தது.

இங்கே தவறு இயக்குனரான என்னுடயது என்பதை முதன் முறையாக இங்கே சொல்கிறேன்.அதை எவரும் கண்டு கொள்ளவில்லை.

ஒரு படைப்பின் தவறுக்கு அதன் தலைவனாக செயல்படும் இயக்குனர் பொறுப்பேற்க வேண்டும்.இது ஒரு சிறிய தவறாக இருக்கலாம்.இருப்பினும் தவறு தவறுதான்.

தவறுகளை சுட்டிக் காட்டுங்கள்,நாங்கள் திருந்தவும் , கற்றுக் கொள்ளவும் எவ்வளவோ இருக்கிறது..........................

நட்புடன்,
அஜீவன்
Reply
#32
தங்கள் விளக்கங்களுக்கு நன்றிகள்.....

புலம் பெயர்ந்த நாட்டில்.... மேலும் இது போன்ற சிறந்த நாடகங்களை தரவேண்டும் என வாழ்த்திக் கொண்டு விடைபெற்றுக் கொள்கிறேன்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#33
சிந்திக்கவைக்கும் சின்னத்திரை! எச்சில் போர்வை, நிழல் யுத்தம். தரங்கெட்ட இரண்டாந்தர தென்னிந்திய சினிமாக்களை பார்த்து புளித்துபோன நமக்கு இனிப்பாக இரண்டு குறும்படங்களை இலவசமாக தந்த அஜீவனுக்கு அன்பு வணக்கங்கள். குறும்படங்கள் நமது சமூகத்திற்கு மிகவும் புதியது. நாம் பழக்கப்பட்ட தென்னிந்திய சினிமா அரைத்தமாiயே திருப்பி திருப்பி அரைக்கும் கதைகளையும், கதாநாயகனை மிகவும் நல்லவராகவும் பின் ஒரு காதல் பிறகு அதற்கொரு சண்டை கடைசியில் கிளைமாக்ஸ். இதைவிட தென்னிந்திய சினிமாவில் வேறு எதையும் காண முடியாது. வியாபரமே அங்கு முன்னிலைப்படுவதால் அவர்கள் கதையில் மட்டும் நின்று விடுவார்கள். சினிமா என்பது கதை மட்டுல்ல, கமரா அது பேசும் வசனங்கள், எடிட்டிங் அது தரும் பரிமாணங்கள், இசை அது எல்லாவற்றையும் மெரு கூட்டும் பாணி. இது சினிமாவுக்கு பொவாக பலர் கூறும் விமர்சனம். ஒரு சில தென்னிந்திய சினிமாவில் இவற்றை பாரக்க முடியும். குறிப்பாக மணிரத்தினத்தின் படங்களில். அனால் அவரின் படங்களில் ஒரு ஓறிஜினாலிற்றி இருக்கிறாதா என்றால் அது கேள்விக்குறியே? மணிரத்தினம் அப்பட்டமாக எங்கு சுட்டார் என்பதை நான் பட்டியலிட்டு இங்கே போட முடியும். இங்கு அதுவல்ல நான் சொல்ல வந்தது. ஒரு சினிமாவுக்கான அந்தனை வரைவிலக்கணங்களையும் சுமந்தபடி நமது ஒறிஜினாலிட்டியுடன் இந்த குறும்படங்கள் அஜீவன் தந்தது அஜீவனதும் அவர் ரீமினதும் ஒரு சிறந்த முயற்சி. சபாஸ் அஜீவன்! ஒளித் தொகுப்பில் மிகுந்த கவனம் செலுத்தியிருப்பதுடன் ஒரு குறும்படத்திற்கான அனைத்து அம்சங்களையும் இந்த இரு படத்திலும் பார்க்க கூடியதாக இருந்தாலும் அது முழுமையடைய ஒரு நல்ல அனுபத்தை இந்த இரு படங்களும் நிச்சயமாக அஜீவனுக்கு கொடுத்திருக்கும். குறும்படங்கள் கதை சொல்ல வருபவை அல்ல, மாறாக படம் பாரக்கும் ஒவ்வருவருக்கும் அது பல கதைகளை சொல்லி நிற்கும். அதை இந்த களத்தில் உள்ள விமர்சனங்கள் மூலம் பாரக்க முடிகிறது. இந்த படத்தை பாரக்கும் ஒரு பெண்ணிலைவாதி ஆணாதிக்கம் இந்த படத்தில் (நிழல் யுத்தம்) உள்ளது என்று குற்றம் சாட்ட முடியும், அனால் அதையே மாற்றி கடுமையாக உழைக்கும் ஒரு ஆணின் மனதை ஏன் இந்த பெண் புரிந்து கொள்ள மறுக்கிறாள் என்று விவாதிக்கவும் முடியும். பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூற முனைகிறார் என்று ஒரு பெண்ணிலைவாதி வாதாடினல், இல்லை இல்லை நமது சமுதாயத்தில் பெண்கள் வளர்க்கபடும் விதமே இந்த தவறுக்கு காரணம் என்று மறுதலிக்க முடியும். இது தான் இயக்குனருக்கு கிடைத்த பெரிய வெற்றி. பொதுவாக சினிமாவே அல்லது நாடகங்களோ ஒரு பிரச்சனைக்கு தீர்வை வைக்க கூடாது. மாறாக பல கேள்விகளை கேட்க வைத்து அதை பல விதமான பரிமாணங்களில் சிந்திக்கவைத்து வித்தியாசமான கருத்துக்களை கொண்டு வரவைப்பதன் மூலம் ரசிகர்களே ஒரு முடிவை எடுக்கவைப்பதாக இருக்கவேண்டும். அதை இந்த இரு குறுந்திரைகளிலும் காண முடிகிறது. எச்சில் பேர்வை எடுத்த விடயம் நமது புலம்பெயர்வாழ்வின் யதார்த்தம், ஒரே வசனங்கள் அடிக்கடி வருவது ஒரு சலிப்பதை;தருவது பேல் ஒரு உணர்வு ஏற்பட்டால் நமது வாழ்வின் யதார்தமும் அது தானே! இந்த இரு குறுந்திரைகளிலும் இசை இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டிருக்கலாம் என்பது ஒரு ஆதங்கம். இந்த குறும்படங்களில் எனக்கு மிகப்பிடித்த விடயம் இந்த இரண்டு படங்களும் ஒரு வெகுஜன சினாவுக்கு எடுக்கப்பட்டதே. ஆட் பிலிம் (கலைப்படம்) என்ற பெயரில் ஒரு நான்கு முற்போக்குவாதிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்பவர்களை சந்தோசப்படுத்த எடுக்கும் படங்கள் பல பார்த்திருக்கிறேன். அவற்றின் தேவையை கூற நான் கேள்விக்குள்ளகியிருக்கிறேன். நால்வர் மட்டும் பார்பதற்கு தான் அந்த படங்கள் என்றால் அவை நமக்கு தேவையில்லை. குறும்படங்கள் நமது சமூகத்தின் யதார்த்ததை வெளிப்படுத்தி அதன் பிற்போக்கு தன்மையை கேள்pவிக்குள்ளாக்கி அதன் நல்ல அம்சங்களை புடம் போட்டு காட்ட முனைந்தால் அது அனைவரையும் சற்று நேரம் சிந்திக்க வைக்கும். இதை நான் இந்த இரண்டு படங்களிலும் பாரக்க முடிந்தது. இது அஜீவனுக்கும் அவர் குழுவுக்கும் கிடைத்த முதல் வெற்றி. புலம்பெயர்ந்த நமது சமூக அவலங்களை இன்னமும் கொண்டுவாருங்கள். நமக்கு தென்னிந்திய தரங்கெட்ட சினிமா தேவையில்லை என்று நம் மக்கள் து}க்கியெறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆனால் இந்த படைப்புகளை நாம் வெற்றிபெற வைக்க நாம் புலம் பெயர் மண்ணில் நமது சினிமா சந்தையை ஆக்கிரமித்து நிக்கும் தென்னிந்திய தரங்கெட்ட படைப்புகளை நிராகரிப்பதற்கு நாம் நமக்கென ஒரு சந்தையை உருவாக்க வேண்டும். அதற்கு தரமான படைப்புகளை நாம் தரவேண்டும். தற்போது கனடா, சுவிஸ், ஜேர்மன், பாரீஸ், லண்டன் ஆகிய நாடுகளில் இதற்கான முயற்சிகள் நடைபெறுவதை நன்கே காண முடிகிறது. அனைவரும் இந்த விடயத்தில் ஒன்று பட்டு படைப்புகளை கொண்டு வருவதிலும் சரி அதை சந்தைப்படுத்துவதிலும் சரி ஒன்று படடு நிற்கவேண்டும். விமர்சனம் என்று வரும்போது முகஸ்துதி பாடி நமது படைப்புகளை உற்சாகப்படுத்துவதை விடுத்து தரமான விமர்சனங்களை வைப்பதன் மூலம் அவர்கள் தொரந்தும் முன்னேற வழி செய்வோம். தரமான படைப்போ இல்லையோ அவர்கள் அதை முயற்சி எடுத்து எடுத்திருக்கிறார்கள் என்பதை மனதில் நிறுத்தி அவரகள் படைப்பக்கு ஆதரவு தருவோம். அதேவேளை உண்மையான விமர்சனத்தை வைப்போம். ஈழவர் சினிமா வெற்றியடைய ரசிகர்கள் ஆகிய நாமும் தொடர்ந்து பங்களிப்போம்.
Reply
#34
அன்புடயீர்,
உங்கள் பாராட்டுகள்.உண்மையில் எமது குழுவுக்கு ஓர் தெம்பைத் தந்திருக்கிறது. உயிருக்குள் உறைந்து விட்ட உணர்வு.....................

ஏனைய கலைஞர்களும் வளர உங்களைப் போன்றோரின் ஆசிகள் என்றென்றும் தொடரட்டும்...............

முறையான பின்னணி இசையை பெறுவதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன.இச் சிக்கல் காரணமாக அழியாத கவிதை தாமதமாகி வருகிறது.

அன்புடன்,
அஜீவன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)