Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Å¡º¢ôÀ¢ý §¿ºý
#21
அன்பு இக்பால் அவர்களே! தமிழ் தவிர வேற்றுச் சொற்களை பாடல்களில் கலக்கமாட்டேன் என்ற கொள்கையில்.. இன்னல்களை சந்திக்கும் இனதினிய அண்ணன் அறிவுமதி அவர்களா வந்திருக்கிறார்கள்.. அவருக்க எமது அன்பைத் தெரிவித்துவிடுங்கள்.. முடிந்தால் அவரை எம்முடன் அளாவளாவ வழி செய்யுங்கள்.. வரவேற்கக் காத்திருக்கிறோம்.
.
Reply
#22
வருக வருக
தருக தருக
சிறுக சிறுக
உருக உருக

கவியே..... - கவி
தருக தருக - மனம்
உருக உருக
கவி - பெருக பெருக - அனைத்தும்
வளர்க வளர்க்க !

ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்
...
.............
Reply
#23
நாற் சந்தியில் கவிஞர் அறிவுமதியொடு தாராளமாக அளவளாவலாம் என்றே நினைக்கிறேன். குறிப்பிட்ட ஒரு நேரத்தை அறியத்தந்து சகலரும் சந்தித்துக்கொள்ளக் கூடிய வகையில் கவிஞர் இசாக் உதவுவார் என எதிர்பாற்கிறேன்.

sOliyAn Wrote:அன்பு இசாக் அவர்களே! தமிழ் தவிர வேற்றுச் சொற்களை பாடல்களில் கலக்கமாட்டேன் என்ற கொள்கையில்.. இன்னல்களை சந்திக்கும் இனதினிய அண்ணன் அறிவுமதி அவர்களா வந்திருக்கிறார்கள்.. அவருக்க எமது அன்பைத் தெரிவித்துவிடுங்கள்.. முடிந்தால் அவரை எம்முடன் அளாவளாவ வழி செய்யுங்கள்.. வரவேற்கக் காத்திருக்கிறோம்.

நேர்காணல்
கவிஞர் அறிவுமதியுடன் ஒரு பேட்டி......
புதியமாதவி, மும்பை.

கவிஞர் அறிவுமதி மிக மிக எளிமையானவர்.பழகுவதற்கு இனிமையானவர். திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுபவர்தான் என்றாலும் வெள்ளித்திரையின் பகட்டும் விளம்பரமும் தீண்ட முடியாத போராளிக்கவிஞன். "அடிமைகளாய் இருக்கின்றோம் என்பதை உணராத எம் முன்னோர்கள் அடிமைகளாய் வாழச் சம்மதித்ததில்
வியப்பில்லை. ஆனால் அடிமையாய் இருக்கின்றோம் என்பதை உணர்ந்த பின்பும் அடிமையாய் வாழ்வதில் உள்ள வலியை எவ்விதம் சொல்ல ."... என்று கேட்கும் தன்மானக் கவிஞர் அறிவுமதி.

புதியமாதவி: அறிவு, மதி இரண்டு சொற்களுக்கும் ஒரே பொருள்தானே..உங்களின் இயற்பெயரே அறிவுமதி தானா?

அறிவுமதி:என் பெயர் மதியழகன். என் நண்பனின் பெயர் அறிவழகன். இருவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை தமிழ் படிக்கும்போது நட்பு. அவன் தந்தையும் என் தந்தையும் திராவிட இயக்கத்தின் தொண்டர்கள். விடுதியில் ஒரே அறையில் தங்கினோம். விடுமுறைகளில் ஒருவர் வீட்டில் இன்னொருவர் கூடுதல் பிள்ளையாய் வளர்ந்தோம். எங்களைத் தேடி வரும் நண்பர்கள் இருவர் பெயரையும் இணைத்துதான் கேட்பார்கள். "அறிவு-மதி இருக்காங்களா?" என்று.
கபில பரணர் என்பதைப் போல அறிவுமதியும் நட்பின் அடையாளமாய் இருப்பதில் மகிழ்ச்சி ..

புதியமாதவி:இன்று உங்கள் நண்பர் அறிவழகன் என்ன செய்கின்றார்?

அறிவுமதி:அவன் கடலுக்குச் சொந்தமான நெய்தல் நிலத்துக்காரன்.தன் தந்தையின் வணிகத்தை அவனும் தொடர்கின்றான்.

புதியமாதவி: தமிழ்நாட்டில் இன்று தமிழ் வழிக் கல்வி தேவைதானா என்று கேட்கும் ஓர் அவல நிலை ஏன் வந்தது? யார் காரணம்?

அறிவுமதி: தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆண்டார்கள் என்று குறிப்பிருக்கலாம், ஆனால் அதை எல்லாம் "தமிழர் அரசு" என்று சொல்வதே வரலாற்றுப் பிழை என்றே கருதுகின்றேன். "பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே" என்று சங்ககாலத்திலேயே வந்துவிடுகின்றதே. அன்று பார்ப்பனர்களின் எண்ணிக்கை மூன்று விழுக்காடு. தமிழர்களின் எண்ணிக்கை 97 விழுக்காடு.
ஆனால் இன்று.. பார்ப்பானர்களின் எண்ணிக்கை 97 விழுக்காடு. தமிழர்களின் எண்ணிக்கை 3 விழுக்காடு. ஆம்.. தமிழர்களில் பெரும்பகுதியினர் பார்ப்பனச் சிந்தனையாளர்களாய் மாறிவிட்டனர். தம் பிள்ளைகளுக்கு அர்த்தம் புரியாத அயல் மொழியிலிருந்து பெயர் வைப்பதைதான் இன்றைய பெற்றோர்கள் பெருமையாக நினைக்கின்றார்கள். பத்தாயிரம் தமிழன் சேர்ந்து பணம் வசூலித்துக் கோயில் கட்டுவான்.கடைசியில் இரண்டு பார்ப்பானைக் கருவறைக்குள் கொண்டுபோய் நிறுத்தி இந்த பத்தாயிரம் தமிழ் மடையன்களும் திருநீறுக்குக் கையேந்தி வெளியில் நிற்பார்கள்..ஏன் கோவில் கட்டத் தெரிந்த தமிழனுக்கு மணி ஆட்டத் தெரியாதா? திருநீறு கொடுக்கத் தெரியாதா? தமிழ் இனம், தமிழ் மொழி என்று ஆட்சியில் இருப்பவன் சிந்திக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் வடவர்களின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளும் கட்சி உடைப்பு முயற்சிகளும் தொடர்ந்து இடையூறாக
இருந்து வந்துள்ளதைதானே நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
நீண்ட காலமாக மேல்சாதி ஆதிக்கமே கல்வித்துறையில் ஆளுமை செய்ததும் கூட இன்றைய இந்த நிலைமைக்கு சூழலுக்கு ஏது எனலாம்.
எது எப்படியோ.. இன்றைய தமிழர்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும்.. திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம், பகுத்தறிவு இயக்கம்.. என்ற பல்வேறு இயக்கங்களுமே தமிழ் மொழிக்கல்வி பற்றிய உணர்வில் ஒருமித்த குரல் கொடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது.

புதியமாதவி: தமிழன் தன்மானம் தொலைத்து தமிழையும் தொலைத்து நிற்கும் இன்றைய தமிழ் தொலைக்காட்சிகள் பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

அறிவுமதி:அதுதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே.. தமிழன் தன்மானம் தொலைத்து, தமிழையும் தொலைத்து நிற்கும் என்று.. இவர்கள் எல்லாம் தாயை வைத்து வணிகம் செய்யும் தறுதலைப் பிள்ளைகள். பெரும்பான்மையான நிகழ்ச்சி தலைப்புகள் யாவும் ஆங்கிலக் கந்தல்.
நிகழ்ச்சி அறிவிப்பாளர்களின் உடையும் உச்சரிப்பும் கண்ணையும் காதையும் பொத்திக் கொள்ள வைப்பன. மோதிரக்கல், வாஸ்துசாஸ்திரம்.. மதப்பிரச்சாரம் என நமக்குள் நம் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளை அடிக்கும் திருடர்களை நம்மை அறியாமலேயே அனுமதித்துக் கொண்டிருக்கும் அவலம்! புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள்தான் இன்றைக்கு இணையத்திலும் வானொலியிலும் தங்களின் கலை நிகழ்ச்சிகளிலும் தமிழை மிகச் சரியாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள்.

புதியமாதவி: திரைப்படத்துறை பற்றிய கேள்விகள்...?

அறிவுமதி: என்னம்மா தயக்கம். நான் திரைப்படத்துறையில் தானே இருக்கின்றேன்.மும்பை எழுத்தாளர் மன்றத்தின் உங்கள் அழைப்பிதழில் கூட "தமிழக அரசின் விருது பெற்ற திரைப்படப் பாடலாசிரியர்"
என்றுதானே இந்த அறிவுமதியை அடையாளம் காட்டியிருக்கின்றீர்கள்..

புதியமாதவி: எனக்குத் தெரியும்.. இந்த மாதிரியான ஒர் அடையாளத்தை நீங்கள் விரும்புவதில்லை. ஏன் கவிஞர் அறிவுமதி என்று கூட போடவேண்டாம். "அறிவுமதி" என்று போட்டால் மட்டும்
போதும் என்று பலமுறைச் சொல்லியிருக்கின்றீர்கள். ஆனால் என்ன செய்வது அண்ணா.. காலையில் வணக்கம் தமிழகம் பார்த்து தான் நம்மவர்களுக்கு பொழுது விடிகின்றது. காவிரி நதிப் பிரச்சனையைக் கூட தஞ்சையின் விவசாயி பேசினால் யார் கேட்பார்கள்? எத்தனை விவசாயக் குடும்பங்கள் தற்கொலையின் பிடியில்......ஆனால் இதை எல்லாம்கூட ஒரு சூப்பர் ஸ்டார் காலையிலிருந்து மாலை வரை உண்ணாவிரதம் இருந்து காட்டினால்தானே தமிழகத்தின் பிரச்சனையாக நம்மவர்கள் உணர்கின்றார்கள்..

நம் திரைப்படங்களில் பாடல் காட்சிகளில், குறிப்பாக காதல்பாடல் காட்சிகளில்..கதாநாயகனும் நாயகியும் மலை அடிவாரத்தில் ஓடிப்பிடிப்பதும், மலை அருவிகளில் குளிப்பதும் அப்போது அவர்களைச் சுற்றி குறைந்தது பத்து ஆண்களும் பெண்களும் குரூப் டான்ஸ் ஆடுவதும், நம் பாரதிராஜாவின் பாடல்களில் வெள்ளை உடை அணிந்த தேவதைகள் வந்து ஊஞ்சல் ஆடுவதும்... இதெல்லாம் ரொம்பவே செயற்கையாக இல்லையா?

அறிவுமதி: இல்லை. இந்த இடத்தில் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நம் வாழ்க்கைத்துவங்கிய இடம் எது? குறிஞ்சி.. மலையும் மலை சார்ந்த இடமும். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சிக்குரியதாக தொல்காப்பியம் சொல்லும். ஒரு காதல் காட்சி என்றவுடனேயே ஊட்டி, கொடைக்கானல், காஷ்மீர் என்ற மலை அடிவாரங்களை தேர்ந்தெடுப்பதுகூட நம்மிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் பழைய பண்பாட்டின் அந்த எச்ச உணர்வுகள்தான். நம் சங்க இலக்கியங்களில் தோழனும் தோழியும் வருவதில்லையா.. தோழன் தோழி இல்லாத சங்க இலக்கிய காதல் காட்சிகளே கிடையாதே. நம் வாழ்க்கை முறை அதுதான். குழுவாக உட்கார்ந்து கிடைத்ததை பகிர்ந்து உண்டு அதன் பின் எல்லோரும் சேர்ந்து நடனம் ஆடி தலைவனையும் தலைவியையும் அனுப்பி வைக்கும் நம் பண்டைய மரபின் எச்சங்கள் தான் இதெல்லாமே. அது சரி இடையில் எப்படி இத்தனை வண்ண வண்ண உடைகள்,,ஆயிரம் வயலின்..கிதார், புல்லாங்குழல் இதெல்லாமா அவர்கள் பாடும் போது வந்தது என்று.. காட்சியை கலை மயமாக்க இதெல்லாம் தேவைதான். ஆனால் இதற்காகவே இன்று காதல் காட்சிகள் என்ற பெயரில் காட்டப்படும் வக்கிர உணர்வுகளைத் தூண்டும் அங்க அசைவுகளைக் காட்டும் காட்சிகளை ஏற்றுக்கொள்வதற்கில்லை.

புதியமாதவி:பிறமொழி சொற்களைக் கையாளாமல் கூடியவரை தனித்தமிழில்தான் திரை உலகிலும் என் பாடல்கள் ஒலிக்கும் என்பதால் நீங்கள் இழந்து கொண்டிருக்கும் திரைப்படப் பாடலின்
வாய்ப்புகள் ... வசதிகள்.. ஏன் இதெல்லாம்..? கொஞ்சம் உங்களை நீங்க மாற்றிக் கொள்ளக் கூடாதா?

அறிவுமதி: முடியவில்லையே. நான் ஒரு சிறந்த திரைப்படப் பாடலாசியர் என்பத்ற்காகவோ இல்லை.. சிறந்த இலக்கியவாதி என்பதற்காகவோ என்னை அழைத்தீர்களா.? என்னை விட மிகச் சிறந்த பெயரும் புகழும் பெற்ற திரைப்படப் பாடலாசிரியர்கள் இருக்கின்றார்களே. என்னை விட சிறப்பாக இலக்கியத்தொண்டு ஆற்றுபவர்கள், இலக்கியம் படைப்பவர்கள் இருக்கின்றார்களே..இந்த அறிவுமதி தான் வந்து உங்கள் நூலை வெளியிட வேண்டும் என்று ஏன் விரும்பினீர்கள்?. மராத்திய மண்ணில் வாழும் நீங்கள் எல்லோரும் என்னை ஏன் இரண்டாவது தடவையாக அழைத்தீர்கள்..? என் கொள்கைக்காக தானே அழைத்தீர்கள்.

புதியமாதவி:ஆமாம். இடையில் முருகன் பற்றி நீங்கள் ஒரு பாடல் எழுதியதாகக் கேள்விப்பட்டேனே. அந்தப் பாடல் என்ன ஆயிற்று?

அறிவுமதி: முருகன் பற்றிய உங்கள் பாடல் மிகச் சிறப்பாக இருக்கின்றது. ஆனால் ஒரு வரியிலாவது முருகனின் ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளும் சொல்லப் பட வேண்டும் என்று விரும்பினார்கள். அப்படிச் சொன்னால்தான் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் சொன்னார்கள். முடியாது என்று சொல்லி விட்டேன். முருகன் நம் தலைவன். நம் குறிஞ்சி நிலத்தின் தலைவன். குறிஞ்சி மகள் வள்ளியை மணந்த அரசன்.. இந்த தமிழ் வரவாற்றை எல்லாம் மறைத்துவிட்டு இடையில் வந்த ஆறுமுக வேலனின் பன்னிரண்டு கைகளை என்னால் எழுத முடியாது..

புதியமாதவி: எதை எழுதுவீர்கள் என்பதை விட எதை எதை எழுத மாட்டேன் என்பதில் உங்கள் பட்டியல் நீண்டுக் கொண்டே போனால் வீட்டில் பற்றாக்குறை பட்ஜெட் தான்..எப்படிச் சாமாளிக்கின்றீர்கள்..?

அறிவுமதி: பற்றாக்குறை கணக்கிலேயே சுதந்திரம் வாங்கி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஒரு மிகப்பெரிய நாட்டையே வெற்றிகரமான ஐந்தாண்டு திட்டங்களுடன் நடத்திக் காட்டும்போது வீட்டை சமாளிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல. ஆனால்..அப்பப்போ வீட்டில் வாங்கிக் கட்டிக்கணும்... !!!!

புதியமாதவி: இதே நிலைமையில் நீஙகள் இருந்தால் நாளுக்கு நாள் வீட்டின் நிலைமைதான் மோசமைடையும். கொஞ்சம் அதைப்பற்றியும் சிந்திக்க கூடாதா? உங்களுக்காக, உங்கள் கொள்கைகளுக்காக உங்களைச் சார்ந்து உங்களை நம்பி வாழ்பவர்கள் கடைசி வரை சிலுவையைச் சுமக்க வேண்டுமா என்ன?

அறிவுமதி: நீ என்னம்மா.. சிலுவை அது இதுனு பேசி என்னைப் பயமுறுத்துகின்றாய்? நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகின்றது என்பதை நானும் உணர்கின்றேன். நீ மும்பையில் இருந்து கொண்டு "என்ன, உங்கள் அணுத்திமிர் அடக்கு கவிதை நூல் தயாராகிவிட்டதா" என்று அலைபேசியில் (செல் போன்) கேட்டுக்கொண்டே இருக்கின்றாய். பணம் கொடுக்காமல் எப்படி அச்சடிப்பது... என்ற நிலைமையில் நான். மும்பையில் நூல் வெளியிடுவதை நீங்களும் அறிவித்துவிட்டீர்களே.. என்ன செய்யப்போகின்றோம் என்ற நிலைமையில்தான் துபாயிலிருக்கும் அமீரக நண்பர்கள் உதவி செய்தார்கள். ஏதோ மும்பை கிளம்புவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அச்சகத்திலிருந்து நூல் வந்தது. "அப்பாடா " என்று நிம்மதியாக மும்பை வந்தேன். நூல் அச்சடிக்காமல் வந்திருந்தால் உன்னிடமெல்லாம் தப்பிக்க முடியாதே என்ற அச்சம் வேறு.

(ஒரு திரைப்படப் பாடலாசிரியருக்கு இப்படிப் பட்ட ஒரு நிலைமை இருக்கும் என்று என் கதைகளில் கூட என்னால் கற்பனை செய்ய முடியாது. ஆனால் அண்ணன் அறிவுமதி அவர்களே இதைச் சொன்னபோது...கண்கள் கலங்கியது. ..இருவருக்குமேதான்) (அப்போது நிலவிய மன அழுத்தமான நிலைமையிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க நம் தொலைக்காட்சி நேர்க்காணல் மாதிரியில் ஒர் கேள்வி கேட்டு வைத்தேன்..)

புதியமாதவி: இன்றைக்கு உங்கள் மீடியாவில் நல்ல வாய்ஸ் யாருக்கு ?

அறிவுமதி: நம்ம பரவை முனியம்மாவுக்குத்தான் (குங்குமம் சின்னத்திரை தொடரில் தலைப்பு பாடல் பாடும் பரவைமுனியம்மாவைத்தான் அப்படி சொன்னார்.)

புதியமாதவி: பதிவுகள் இணையதளத்திற்கு என்று சிறப்பாக ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?

அறிவுமதி: மும்பை வந்தப்பின் தான் பதிவுகளின் ஒவ்வொரு பக்கங்களையும் பார்க்கின்ற வாய்ப்பும் நேரமும் கிடைத்தது. ஆசிரியர் கிரிதரன் அவர்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். கடைசியாக நான் பதிவுகள் மூலம் சொல்ல விரும்புவது... " அகதி வாழ்க்கை.. என்கிற அந்தச் சொல்வழியே கசிகிற குருதியை .. கண்ணீரை ஒரு தமிழனாய்.. கவிஞனாய் உள்வாங்குகின்றபோது உள்ளுக்குள் விளையும் உணர்வுகள் தான் இந்த நூற்றாண்டு தமிழினித்தின் மிகப் பெரிய சோகம். மரணம் மிரட்டும் நிலையாமைச் சிந்தனைகளை... போராட்டம் மலர்த்தும் நம்பிக்கைச் சிந்தனைகளால் வெற்றிகொள்வோம் என்கிற உறுதியில் வாழும் எம் உறவுகளின் இடப்பெயர்வின் வாழ்விடம் தோறும் சென்று என் உயிர்கிழித்துக் கூரை செய்து நிழல் தர விரும்புகின்றேன். என்ன செய்ய... தாய்த் தமிழர்களிடம் குழுச்சிந்தனை குறைந்து குறுமுதலாளிச் சிந்தனை அதிகமாகிவிட்டது, தான், தன் மனைவி, தன் குழந்தைகள் என்கிற உட்சுருங்கிய குழிப்பூச்சி வாழ்க்கையாகி விட்டது இவர்களின் வாழ்க்கை. இந்த நிலைமை மாறவேண்டும்.. இந்த நிலைமை மாறிவிடும் என்றே நம்புவோம்...

(பேட்டி எடுக்கும் எண்ணத்தில் கேட்கப்பட்ட கேள்வி-பதில்கள் அல்ல.
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் இலக்கிய விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கவிஞர் அறிவுமதி அவர்கள் வந்திருந்த போது அவருடன் கலந்துரையாடியசெய்திகளின் துணுக்குகள்தான்.. )

கலந்துரையாடலில் கவிஞருடன் கலந்து கொண்டு அதையே பதிவு செய்து பதிவுகளில் பேட்டியாக பதிவு செய்திருப்பவர்...உங்களன்பு, புதியமாதவி,மும்பை.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#24
பதிவுகளுக்கு நன்றி நளா! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#25
வணக்கம்

எப்படித் தமிழில் எழுதுவது?
Reply
#26
¿ñÀ÷¸§Ç
ÅÕ¸¢È 14.10.2003 «ýÚ þÃ× «ñ½ý «È¢×Á¾¢ «Å÷¸û ÐÀ¡ö ÅÕ¸¢È¡÷.
24.10.2003 Ũà ¿¢¸ú¸û ¯ûÇÉ.
ÁýÈ ¿ñÀ÷¸§Ç¡Î ¸ÄóШáÎÅÐ ÌÈ¢òÐ «ñ½ý Åó¾Ðõ, §Àº¢Å¢ðÎ ¦º¡ø¸¢§Èý.
Reply
#27
நன்றி இசாக் அவர்களே!
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)