வாழும் புலம்

கனடாவில் கார் களவு.

2 months 3 weeks ago

                                                        கனடாவில் கார் களவு.-_
                                                        
         அண்மையில் இரண்டு நாள் கனடா என்று புறப்பட ஆயத்தமானோம்.அயலில் உள்ள நண்பருக்கு பயணம் பற்றி சொல்லி ஏதாவது வாங்கிவரவா என்றேன்.

          நாங்களும் அடுத்த கிழமை போக இருக்கிறோம்.ஆனபடியால் எதுவும் தேவையில்லை.காரில போறீங்கள் கவனமா போட்டு வாங்கோ.

         எதுக்கும் திரும்பி வரும்போது பஸ்சிலதான் வாறீங்களோ தெரியாது.கார் கொள்ளை தலைரித்தாடுது.எனது தம்பியின் றைவேயில் நின்ற புதுக்காரை சொந்த கார் எடுக்குமாப் போல கொண்டு போட்டாங்கள்.கமராவில் எல்லாம் தெளிவாக விழுகுது.முக மூடிகளை போட்டிருக்கிறார்கள்.இனி யாரைப் பிடிக்கிறது.களவு போய் 3 மாதமாச்சு எந்த தகவலும் இல்லை என்கிறார்களாம்.

           சரி என்று கனடா(மிசிசாக்குவா) போனால் ஸ்ரேறிங் லொக் வைத்திருக்கிறீங்களோ?இஞ்சை கார் களவு சரியான மோசம்.

            பொலிஸ்காரனே சொல்லுறான் வீட்டை உடைத்து கார் திறப்பு கேக்கிறாங்கள்.கார் திறப்புகளை முன்னுக்கே வையுங்கோ என்று.

             இது எப்படியான பாதுகாப்பென்றே விழங்கவில்லை.

             இதைவிட காருக்குள்ளேயே திறப்பை வைத்துவிட்டே வரலாமே?வீணாக உடைத்த கதவுகளை யன்னல்களையும் திருத்தத் தேவையில்லை.

              கனடா உறவுகளுக்கும் இதுபோல ஏதாவது நடந்ததோ?
  
               நடந்தா வெட்கப்படாம சொல்லுங்க.

தமிழரசுக் கட்சியின் கிளை லண்டனில்…! நிலைமையைத் தெளிவுபடுத்தும் பதில் செயலாளர்

3 months ago
தமிழரசுக் கட்சியின் கிளை லண்டனில்…! நிலைமையைத் தெளிவுபடுத்தும் பதில் செயலாளர் 4-18.jpg

இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்றன.

தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமை

அதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை பெற்றவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாகத் தனியாகவும் தம்மை நிறுவனமயப்படுத்தியும் அந்நாட்டு சட்ட வரம்புகளைக் கடைப்பிடித்துச் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்களின் தாயக மக்கள் மீதான அக்கறையை எமது கட்சி என்றும் மதித்து செயற்பட்டு வந்துள்ளது.

அவர்கள் பல மக்கள் நலத்திட்டங்களை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இயற்கைப் பேரிடர்களின் போதும், பெருந்தொற்றுக்கு எமது மக்கள் முகம் கொடுத்தபோதும் மற்றும் கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு போன்ற செயற்றிட்டங்களிலும் நேரடியாகவும், எமது கட்சி உறுப்பினர்களூடாகவும் பல வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றார்கள். அதற்கு எமது மக்கள் சார்பாக நன்றியுடையவர்களாக உள்ளோம்.

எமது கட்சியின் கொள்கைகளை ஏற்று இணைந்து செயற்பட விரும்பும் புலம்பெயர் உறவுகளுடன் செயற்படக் கட்சி ஆயத்தமாக உள்ளது.

இலண்டன் நகரில் கட்சியின் கிளை

கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டன் நகரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளை அமைக்கப்பட்டது என்று சில பத்திரிகை மற்றும் இணையத்தளங்களிலும், வேறு சிலவற்றில் ‘இலங்கை தமிழ் அரசுக் கட்சி போரம்’ (ITAK FORUM) அமைக்கப்பட்டது என்றும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு.

இலங்கைக்கு வெளியே எமது கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

 

https://akkinikkunchu.com/?p=271070

 

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 months 1 week ago

ஒட்டாவாவில் 4 சிறுவர் உட்பட 6 சிங்களவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களின் படி, நிலக்கீழ் அறையில் வாடகைக்கு இருந்த சிங்கள இளைஞனால் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அறிய முடிகின்றது. சுட்டவரை காவல்துறை கைது செய்துள்ளதாம்.

----

By Alex Black, Kaitlin Lee

Posted March 7, 2024 4:11 am.

 

Last Updated March 7, 2024 12:27 pm.

The homicide unit is investigating after six people were found dead in Barrhaven, a suburb of Ottawa.

The Ottawa Police Service (OPS) responded to a home in the 300 block of Berrigan Drive around 11 p.m. on Wednesday, March 6 where the bodies of two adults and four children were located.

A seventh person was taken to hospital with serious, non-life-threatening injuries.

The identities of the victims have not been released, but Sri Lanka’s high commission in Ottawa confirms the family were Sri Lankan nationals.

The commission says a man survived, but his wife and children were killed in the tragedy, and it is in touch with family members in the country’s capital of Colombo.

Police chief Eric Stubbs referred to the case as a “mass shooting” earlier today, but OPS tells CityNews Ottawa he misspoke.

One person has been taken into custody and police say there is no further threat to the public.

Police are still working to identify the relationship between the suspects and victims, but said this does not appear to be a case of domestic or intimate partner violence.    

The OPS homicide unit is taking over the investigation and you can expect an increased police presence in the area today.

“This is a tragic and complex investigation, and investigative teams remain on Berrigan Drive,” said the OPS in a social media post.

Ottawa Mayor Mark Sutcliffe has issued the following statement:

“I was devastated to learn of the multiple homicide in Barrhaven, one of the most shocking incidents of violence in our city’s history. We are proud to live in a safe community but this news is distressing to all Ottawa residents. Ginny and I are thinking of the family members and neighbours of the victims. Thank you to our emergency responders who are investigating and supporting those who are affected by this terrible event.”

Ontario Premier Doug Ford is also expressing condolences.

Prime Minister Justin Trudeau also commented on the tragedy, during a news conference Thursday.

“Obviously our first reactions are all ones of shock and horror at this terrible violence. We are expecting that the community reaches out to support family and friends as Canadians always do, and we expect the police of jurisdiction to be doing the work and keeping us all informed of this terrible tragedy.”

Ottawa Catholic District School Board is encouraging anyone in need of support to reach out.

Ottawa Public Health says anyone who needs support can access resources for help on its website.

Anyone with information on the tragedy is asked to contact the Ottawa Police Service Homicide Unit at 613-236-1222 ext. 5493. Anonymous tips can be submitted by calling Crime Stoppers toll-free at 1-800-222-8477 or crimestoppers.ca.

Ottawa police are expected to provide an update on the investigation at 1:30 p.m. Thursday. You will be able to watch it here live.

https://toronto.citynews.ca/2024/03/07/multiple-victims-found-dead-in-barrhaven-homicide-unit-investigating/

Checked
Mon, 06/17/2024 - 07:18
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed