உலக நடப்பு

ஹோர்முஸ் நீரிணை : அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் ; ஈரான் புதிய சட்டமூலம் தயாரிப்பு

2 weeks 4 days ago

ஹோர்முஸ் நீரிணை : அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் ; ஈரான் புதிய சட்டமூலம் தயாரிப்பு  

26 Mar, 2026 | 12:43 PM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் அறவிடுவதற்கான புதிய சட்டமூலத்தை ஈரான் அரசு தயாரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நீர்வழிப்பாதையை கடந்து செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கும் விதமாக இந்த வரைவுச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தத் தகவலை ஈரான் நாடாளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஈரான் கட்டணம் வசூலிக்கவேண்டும்” என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த அதிகாரி, “ஒரு நாட்டின் ஊடாக பொருட்கள் செல்லும்போது சுங்க வரி செலுத்தப்படுவது இயல்பானதே. ஹோர்முஸ் நீரிணையும் ஒரு வழித்தடம்தான். நாங்கள் அதன் பாதுகாப்பை உறுதி செய்கிறோம். இந்த நீர்வழிப் பாதையினூடாக செல்லும் கப்பல்களும் அதற்கான சுங்க வரியினைச் செலுத்தும் நடைமுறை இயல்பான ஒன்றே” என கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/241961

எதிரிகள் கார்க் தீவைக் கைப்பற்றத் திட்டம் – ஈரான் சபாநாயகர் தெரிவிப்பு

2 weeks 4 days ago

எதிரிகள் கார்க் தீவைக் கைப்பற்றத் திட்டம் – ஈரான் சபாநாயகர் தெரிவிப்பு

Published By: Digital Desk 3

26 Mar, 2026 | 10:29 AM

image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பெயரிடப்படாத ஒரு நாட்டின் ஆதரவுடன் எதிரி நாடுகள் ஈரானுக்குச் சொந்தமான தீவுகளை கைப்பற்ற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மொஹமட் பாகர் காலிபாப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிக பங்கு வகிக்கும் கார்க் தீவை ஆக்கிரமிக்க எதிரிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், “எதிரிகளின் ஒவ்வொரு நகர்வையும் நாங்கள் கவனித்து வருகிறோம். அவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால்கூட, அவர்களுக்கு ஆதரவளிக்கும் பிராந்திய நாடுகளின் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அனைத்து முக்கிய உட்கட்டமைப்புகளும் இடைவிடாத தாக்குதல்களுக்கு உள்ளாகும்” என அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/241944

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு!

2 weeks 4 days ago

Abbas-Araqchi.jpg?resize=750%2C375&ssl=1

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரானிய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

ஆனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) தெரிவித்துள்ளார்.

அதன்படி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும், மூன்றாம் தரப்பினர் மூலம் அமெரிக்காவுடன் தொடர்பு கொள்வது என்பது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று அர்த்தமல்ல என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான எந்தவொரு போர்நிறுத்த ஒப்பந்தத்திலும் லெபனான் சேர்க்கப்பட வேண்டும் என்று ஈரான் இடைத்தரகர்களிடம் கூறியுள்ளது என, ஈரானின் நிலைப்பாட்டை அறிந்த ஆறு பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

இ‍தேவேளை, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானியத் தலைவர்கள் அமெரிக்காவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அதை வெளிப்படையாகக் கூற விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வொஷிங்டனில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

அதேநேரம், பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்ட ட்ரம்பின் 15 அம்சத் திட்டம், ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அகற்றுதல், செறிவூட்டலை நிறுத்துதல், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிராந்திய நட்பு நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என, இத்திட்டம் குறித்து அறிந்த மூன்று இஸ்ரேலிய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் வெள்ளை மாளிகை தனது 15 திட்டத்தின் குறிப்பிட்ட விவரங்களை வெளியிட மறுத்ததுடன், தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் அச்சுறுத்தியது.

ஈரான் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளும் என்பதில் இஸ்ரேலுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் சலுகைகளை வழங்கக்கூடும் என்று இஸ்ரேல் கவலைப்படுவதாகவும் ஒரு மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி கூறினார். 

மேலும், எந்தவொரு ஒப்பந்தமும் முன்னெச்சரிக்கை தாக்குதல்களை நடத்துவதற்கான தனது வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் விரும்புவதாக இரண்டாவது வட்டாரம் தெரிவித்தது.

ஈரானின் 10,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை வழிநடத்தும் மத்திய கட்டளைத் தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர் ஒரு காணொளிக் கூட்டத்தில், அமெரிக்கா ஈரானுக்குள் 10,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாகவும், அதன் எல்லைகளுக்கு வெளியே ஈரான் தனது சக்தியை வெளிப்படுத்தும் திறனைக் கட்டுப்படுத்தும் பாதையில் முன்னேறி வருவதாகவும் கூறினார்.

ஈரானின் மிகப்பெரிய கடற்படைக் கப்பல்களில் 92% அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை ஏவுதல் விகிதங்கள் 90%-க்கும் மேல் குறைந்துவிட்டதாகவும் கூப்பர் கூறினார். 

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் கடற்படை உற்பத்தி வசதிகள் மற்றும் கப்பல் கட்டும் தளங்களில் மூன்றில் இரண்டு பங்கை சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளன என்றும் கூப்பர் கூறினார்.

இருப்பினும், ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு எதிரான ஈரானிய ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களும் சற்றும் குறையாமல் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஈரானின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டுமானத்தின் மீதான தாக்குதல் உட்பட, அன்றைய தினம் ஈரான் மீது பல புதிய அலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை விவரித்தது. 

தெஹ்ரானில் ஒரு குடியிருப்புப் பகுதி தாக்கப்பட்டதாகவும், மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் தேடி வருவதாகவும் ஈரானின் அரை அதிகாரப்பூர்வ SNN செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

புதிய ஆளில்லா விமானத் தாக்குதல்களை முறியடித்ததாக குவைத்தும் சவுதி அரேபியாவும் தெரிவித்தன.

பங்குச் சந்தைகள் ஓரளவு மீண்டன, எண்ணெய் விலைகள் சரிந்தன

வொஷிங்டன் ஈரானுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று உலகளாவிய பங்குச் சந்தைகள் ஓரளவு மீண்டன, அதே நேரத்தில் எண்ணெய் விலைகள் சரிந்தன. 

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்து, பணவீக்கத்தைத் தூண்டும் அபாயம் உள்ள ஒரு போருக்கு முடிவு வரும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.

இதற்கிடையில், தரைவழித் தாக்குதலுக்கு உத்தரவிட ட்ரம்பிற்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதற்காக, ஆயிரக்கணக்கான வான்வழிப் படைகளை வளைகுடாவிற்கு அனுப்ப பென்டகன் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இது, ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் இரண்டு கடற்படைப் பிரிவுகளுடன் கூடுதலாக அமையும். 

தன் நாட்டுப் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், செங்கடல் முகத்துவாரத்தில் ஈரான் ஒரு புதிய போர்முனையைத் திறக்கக்கூடும் என்று, பெயர் குறிப்பிடப்படாத ஒரு இராணுவ வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஈரானின் அரை-அரசு தஸ்னிம் செய்தி நிறுவனம் புதன்கிழமை கூறியது. 

https://athavannews.com/2026/1470018

மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்

2 weeks 4 days ago

மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்

Published By: Vishnu

26 Mar, 2026 | 05:06 AM

image

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே "கட்டுப்பாட்டை மீறிவிட்டது" என்றும், உலகம் தற்போது "ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில்" உள்ளது என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்தும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே "சரியான நேரம்" என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த மோதலில் சம்பந்தப்படாத அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

"இராணுவ மோதல்களைத் தீவிரப்படுத்துவதற்கான நேரம் வரவில்லை, மாறாக இராஜதந்திரத் தீர்வுகளை நோக்கி நகர்வதற்கான நேரம் வந்துவிட்டது. அனைத்துத் தரப்பினரும் சர்வதேச சட்டத்தை முழுமையாக மதித்து, அமைதியைக் கொண்டுவரப் பாடுபட வேண்டும்," என்று பொதுச்செயலாளர் கூறினார்.

https://www.virakesari.lk/article/241931

USS ஆபிரகாம் லிங்கன் மீது ஈரான் ஏவுகணையை வீசியது

2 weeks 4 days ago

USS ஆபிரகாம் லிங்கன் மீது ஈரான் ஏவுகணையை வீசியது

Published By: Vishnu

26 Mar, 2026 | 04:21 AM

image

அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கனை குறிவைத்து ஈரானிய இராணுவம் ஒரு குரூஸ் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தக் கப்பல் தனது ஏவுகணை வரம்பிற்குள் நுழைந்தால் தாக்கப்படும் என்று ஈரானிய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஷாராம் இரானி எச்சரித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை.

https://www.virakesari.lk/article/241929

உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!

2 weeks 4 days ago

உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தரைப்படை வீரர்களை அங்கு நிலைநிறுத்துவதை அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஊடகத்திற்கு அமெரிக்க செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், அமெரிக்காவின் புகழ்பெற்ற 82-வது வான்வழிப் பிரிவின் (82nd Airborne Division) தலைமையகக் குழுக்கள் மற்றும் 1-வது பிரிகேட் காம்பாட் டீம் (1st BCT) ஆகியவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, எத்தனை வீரர்கள் அல்லது எந்த இடத்திற்கு அவர்கள் செல்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிட பென்டகன் மறுத்துள்ளது.

அதிதீவிர படை

வட கரோலினாவைத் தளமாகக் கொண்ட இந்த 82ஆவது வான்வழிப் பிரிவு, உலகின் மிகச்சிறந்த போர் அலகுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை! | Us Confirms Paratroops On Way To Middle East

இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு, உலகின் எந்தப் பகுதிக்கும் வெறும் 18 மணிநேரத்திற்குள் சென்று தாக்குதல் நடத்தும் தயார் நிலையில் இருப்பார்கள்.

இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளுக்குள் பாராசூட் அல்லது ஹெலிகாப்டர் மூலம் ஊடுருவி, அந்த இடத்தைக் கைப்பற்றுவதில் இவர்கள் வல்லவர்கள்.

குறிப்பாக, ஈரானுடனான மோதல் வலுக்கும் பட்சத்தில், ஈரானின் முக்கியப் பகுதியான கார்க் தீவு (Kharg Island) போன்ற இடங்களைக் கைப்பற்ற இந்த வீரர்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

கார்க் தீவு (Kharg Island) 

நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட 10ஆவது மலைப் பிரிவின் (10th Mountain Division) கீழ் வரும் 1st BCT படையினர், நீண்ட காலப் போரை எதிர்கொள்ளும் வகையில் முழுமையான ஆயுத தளவாடங்களுடன் அனுப்பப்படுகின்றனர்.

உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை! | Us Confirms Paratroops On Way To Middle East

வழக்கமான வான்வழிப் படைகள் குறுகிய காலத் தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், இந்த 1st BCT பிரிவினர் "Full Spectrum" எனப்படும் அனைத்து வகையான தீவிர போர்களையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://tamilwin.com/article/us-confirms-paratroops-on-way-to-middle-east-1774452003

வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில், திரவ இயற்கை எரிவாயுவுக்கான 'சாதகமான' அணுகலை இழக்க நேரிடும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 weeks 4 days ago

https://www.ft.com/content/6bf153e4-11af-44d5-9d1c-48b5c7ad26ef?syn-25a6b1a6=1

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுடனான தனது வர்த்தக ஒப்பந்தத்தை எந்தத் திருத்தங்களும் இன்றி செயல்படுத்த வேண்டும், இல்லையெனில் அமெரிக்க ஏற்றுமதியாளர்களிடமிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கான 'சாதகமான' அணுகலை இழக்க நேரிடும் என்று அந்த அமைப்புக்கான டொனால்ட் டிரம்பின் தூதர் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபருக்கும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பது, கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதாக டிரம்ப் விடுத்த அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் தாமதமாகியுள்ளது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG), எண்ணெய் மற்றும் சிவில் அணுசக்தி தொழில்நுட்பங்கள் உட்பட, 2028-ஆம் ஆண்டுக்குள் 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க எரிசக்தியை ஐரோப்பிய ஒன்றியம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை உள்ளடக்கிய இந்த உடன்படிக்கை மீது, ஐரோப்பிய நாடாளுமன்றம் வியாழக்கிழமை வாக்களிக்க உள்ளது . ஸ்காட்லாந்தில் உள்ள டிரம்பின் டர்ன்பெர்ரி கோல்ஃப் ரிசார்ட்டில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் மற்ற விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை அந்த அமைப்பு மாற்ற முயன்றால், அதன் எரிசக்தி அம்சம் ஆபத்தில் சிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அமெரிக்கத் தூதர் ஆண்ட்ரூ புஸ்டர் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார். "அவர்கள் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லவில்லை என்றால், எரிசக்தி விஷயத்தில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை," என்று புஸ்டர் கூறினார். "டர்ன்பெர்ரி ஒப்பந்தம் செயல்படுத்தப்படாவிட்டால், நாம் மீண்டும் முதல் நிலைக்கே வந்துவிடுவோம். நாம் எங்கே செல்வோம் என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அமெரிக்கா தொடர்ந்து ஐரோப்பாவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் நிபந்தனைகள் மட்டும் அவ்வளவு சாதகமாக இல்லாமல் போகலாம். சூழல் நிச்சயமாக அவ்வளவு சாதகமாக இருக்காது. மேலும்... வேறு வாங்குபவர்களும் இருக்கிறார்கள்." வளைகுடாப் பகுதிக்கு வெளியே உள்ள விநியோகஸ்தர்களிடமிருந்து வரும் திரவ இயற்கை எரிவாயு (LNG) சரக்குகளுக்கான உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வரும் வேளையில், அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி ஒப்பந்தத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்படும். உலகின் ஐந்தில் ஒரு பங்கு திரவ இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் கத்தார் , ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழியை முற்றுகையிட்ட பிறகு தனது ஏற்றுமதியை நிறுத்த வேண்டியிருந்தது. கடந்த வாரம் கத்தாரின் பரந்த ராஸ் லஃபான் திரவ இயற்கை எரிவாயு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், உலகளாவிய விநியோகம் இன்னும் சில காலத்திற்குப் பற்றாக்குறையாகவே இருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. போருக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாய்ந்த திரவ இயற்கை எரிவாயுவில் சுமார் 10 சதவீதம் மட்டுமே ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டாலும், எரிவாயு இறக்குமதியைச் சார்ந்திருப்பதால், விநியோகத்திற்கான உலகளாவிய போட்டிக்கு அந்த கண்டம் ஆளாகக்கூடிய நிலையில் உள்ளது. இத்தாலி போன்ற சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், தங்களுக்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயுவில் மூன்றில் ஒரு பங்கை கத்தாரிலிருந்து பெற்றன. "தனிப்பட்ட முறையில்... ஐரோப்பியர்கள் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்திக்கு உறுதியளித்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால், அது அவர்கள் இந்த எரிசக்தியை வாங்குவார்கள் என்ற வெறும் வாக்குறுதி மட்டுமல்ல, நாங்கள் அவர்களுக்கு அந்த எரிசக்தியை விற்போம் என்ற உறுதிமொழியும் ஆகும்," என்று புஸ்டர் மேலும் கூறினார். "ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க வேண்டுமானால், அவற்றுக்கு ஆற்றல் தேவை, அதை நம்மால் வழங்க முடியும்," என்று அவர் கூறினார். "அவ்வாறு செய்ய நாங்கள் ஊக்குவிக்கப்படும் வகையிலான ஒரு உறவை நாங்கள் விரும்புகிறோம்." ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்பவர்கள் 2027 ஜனவரி 1-ஆம் தேதிக்குள் மீத்தேன் வெளியேற்றத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றிய விதி திருத்தப்பட வேண்டும், ஏனெனில் பெரும்பாலான அமெரிக்க உற்பத்தியாளர்களால் அதற்குக் கட்டுப்படுவது சாத்தியமற்றது என்று புஸ்டர் மேலும் கூறினார். மீத்தேன் ஒழுங்குமுறை இறக்குமதிகளைப் பாதிக்காது என்பதை உறுதி செய்வதாக ஆணையம் உறுதியளித்துள்ளது. இந்த விதி மாற்றப்படும் எனத் தாம் “நம்பிக்கையுடன்” இருப்பதாக புஸ்டர் கூறினார், ஏனெனில் “இது எரிபொருள் செலவுகளை உயர்த்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், இந்த வர்த்தகத் தடைகளில் சிலவற்றைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பா உணரும்”. கடந்த ஆண்டு டர்ன்பெர்ரியில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகளுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், அமெரிக்கத் தொழில்துறைப் பொருட்கள் மற்றும் சில விவசாயப் பொருட்கள் மீதான தனது சொந்த வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்க அந்த அமைப்பு ஒப்புக்கொண்டது. ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் வரிகளை ரத்து செய்த பிறகு, அவர் அவசரமாக வேறு ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி உலகளாவிய சுங்க வரியை அறிமுகப்படுத்தினார் . இது ஜூலை 24 வரை நீடிக்கக்கூடும், இதன் விளைவாக சராசரியாக 15.8 சதவீத ஒட்டுமொத்தக் கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த வாரம் வாக்கெடுப்புக்கு வரவிருக்கும் சட்டத்தில், டிரம்ப் ஏதேனும் புதிய வரி அச்சுறுத்தல்களைச் செயல்படுத்தி, ஸ்காட்லாந்தில் முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட வைரங்கள் மற்றும் கார்க் உள்ளிட்ட விலக்குகளை மீட்டெடுக்கத் தவறினால், டர்ன்பெர்ரி ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்யும் பாதுகாப்பு அம்சங்களை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்த்துள்ளனர்.

இருப்பினும், இறுதி ஒப்பந்தம் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும், அவை இந்த விதிகளை எதிர்க்க வாய்ப்புள்ளது.   இறுதி ஒப்பந்தத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், “அது எங்களுக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஒரு முடிவெடுக்க வேண்டியிருக்கும்” என்று புஸ்டர் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் மரோஸ் ஷெஃப்கோவிச், ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த ஒரு தனிப் பேட்டியில், "ஒப்பந்தம் என்பது ஒப்பந்தம்தான், நாம் டர்ன்பெர்ரி கூட்டறிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்தார். அந்த நேர்வில் 15 சதவீத ஒட்டுமொத்த சுங்க வரியை மதித்து நடப்போம் என அமெரிக்க நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

ஈரான் அணுமின் நிலையத்தின் மீது மீண்டும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

2 weeks 4 days ago

ஈரான் அணுமின் நிலையத்தின் மீது மீண்டும் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் 

25 Mar, 2026 | 03:38 PM

image

ஈரானின் புஷேர் அணுமின் நிலைய வளாகத்தில் அமெரிக்கவும் இஸ்ரேலும் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாலை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 17ஆம் திகதி இதே அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதன் பின்னர், மீண்டும் அந்த அணுமின் நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறுகிற அதேவேளை, இந்தத் தாக்குதலில் தொழில்நுட்ப சேதமோ மனித உயிர்ச்சேதமோ நிதி சேதமோ ஏற்படவில்லை என்றும் நிலையத்தின் எந்தப் பகுதியும் சேதமடையாமல் அப்படியே உள்ளது எனவும் ஈரான் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பு, இவ்விதமாக அமைதியான முறையில் அணுசக்தி நிலையங்களின் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச விதிமுறைகள் மற்றும் உரிமைகளை மீறுவது மட்டுமன்றி, பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தொடர்ச்சியாக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதன் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

https://www.virakesari.lk/article/241904

ஈரான் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது!

2 weeks 4 days ago

ஈரான் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது!

25 Mar, 2026 | 04:26 PM

image

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்தான் நோக்கிப் பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றை ஈரான் இராணுவம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பயணித்த 'செலன்' என்ற சரக்குக் கப்பலே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ஈரானின் கடல் எல்லைக்குள் நுழைவதற்குரிய முறையான அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்க முயன்றதால், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஈரானின் கடல்சார் சட்டங்களுக்கு அமுல்படாமை மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை கடப்பதற்கான அனுமதி இல்லாமை காரணமாக இந்தக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நீர்வழியைப் பயன்படுத்தும் எந்தவொரு கப்பலும் ஈரானின் கடல்சார் அதிகாரசபையுடன் முழுமையான ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என IRGC கடற்படைத் தளபதி அலிரேசா டான்சிரி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிரி நாடுகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி (சில சந்தர்ப்பங்களில் கட்டணம் செலுத்தி) இந்த நீர்வழியைப் பயன்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஈரான் எதிரியாகக் கருதும் தரப்புகளுடன் தொடர்புடைய கப்பல்கள் தமது கடல் எல்லையைத் தாண்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/241908

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!

2 weeks 4 days ago

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!

25 Mar, 2026 | 02:49 PM

image

இஸ்ரேலிய பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திடம் இஸ்ரேல் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சினால் கடந்த 23 ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான இஸ்ரேலிய பிரதிப் பணிப்பாளர் நாயகம் நினா பென்-அமி விடுத்துள்ள இக்கடிதத்தில், ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன:

ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13, 15 மற்றும் 16 வயதுடைய மூன்று சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 18 சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 வயது சிறுமி ஒருவர் கவலைக்கிடமான நிலையிலும், 10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் பலத்த காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதிகள் மீது ஈரான் 'கொத்தணி குண்டுகளை' (Cluster munitions) ஏவித் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/241899

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அவசர விவாதம்

2 weeks 4 days ago

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அவசர விவாதம்

Mar 25, 2026 - 04:03 PM

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அவசர விவாதம்

மத்திய கிழக்கு போர் நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 'அரிய மற்றும் அவசர' விவாதம் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது.

 

ஈரான் தனது பொதுக் கட்டிடங்கள் மற்றும் முக்கிய எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து, பஹ்ரைன் மற்றும் வளைகுடா நாடுகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த விவாதம் நடத்தப்படுகிறது. 

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்து இன்றுடன் (25) 26 நாட்கள் ஆகின்றன.

 

இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேல் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளின் மீதும் தாக்குதல்களை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

 

அத்துடன், அமெரிக்கா சுமார் 2,000 துருப்புக்களை மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களைத் தொடங்கியது.

 

மேலும், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதுடன், பகைமையற்ற கப்பல்களுக்கு மாத்திரம் அதனைத் திறந்துவிட நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

இதற்கமைய, இந்த 'அரிய மற்றும் அவசர' விவாதத்தில், ஈரானினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பொதுக் கட்டிடங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளமை குறித்து விவாதிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. 

https://adaderanatamil.lk/news/cmn5vnwvx000k356pan60wif2

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!

2 weeks 5 days ago

Donald-trump-1.jpg?resize=750%2C375&ssl=

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாகவும், தெஹ்ரானிடமிருந்து ஒரு முக்கிய சலுகையைப் பெற்றதும் இதில் அடங்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

ஈரானில் பகைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக, அமெரிக்கா அங்குள்ள சரியான நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஈரானியர்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு மிகவும் விரும்புவதாகவும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் செவ்வாயன்று (24) கூறினார்.

அணுசக்தி அல்லாத எரிசக்தி மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் ஒரு மதிப்புமிக்க சலுகையை வழங்கியுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார்,

எனினும், அவர் அது குறித்து விரிவாகக் கூறவில்லை.

அதேவேளையில், வொஷிங்டன் தெஹ்ரானுக்கு 15 அம்ச தீர்வுத் திட்டத்தை அனுப்பியுள்ளதாக ஓர் வட்டாரமும் உறுதிப்படுத்தியது.

அதன்படி, மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வொஷிங்டன் ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை அனுப்பியதாக நியூயேர்க் டைம்ஸ் செவ்வாயன்று செய்தி வெளியிட்டது.

மூன்று வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அந்த 15 அம்சத் திட்டம் குறித்து விவாதிக்க ஒரு மாத கால போர்நிறுத்தத்தை அமெரிக்கா நாடுவதாக இஸ்ரேலின் Channel 12 செய்திச் சேவை குறிப்பிட்டது.

இந்த விவகாரம் குறித்து அறிந்த ஓர் வட்டாரம், அமெரிக்கா ஈரானுக்கு ஒரு திட்டத்தை அனுப்பியதை உறுதிப்படுத்தியது, ஆனால் மேலதிக விவரங்களை வழங்கவில்லை.

ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கலைத்தல், சார்பு குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துதல் மற்றும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் ஆகியவை அந்தத் திட்டத்தில் அடங்கும் என்று இஸ்ரேலிய ஊடகம் கூறியது.

இருப்பினும், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இது தொடர்பான கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

அதேநேரம், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை தெஹ்ரான் மறுத்துள்ளது.

ஈரானின் சக்திவாய்ந்த நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப், திங்களன்று அத்தகைய செய்திகளை “போலிச் செய்திகள்” என்று நிராகரித்தார்.

நான்கு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, உலகின் 20% எண்ணெய் பொதுவாகக் கடந்து செல்லும் நீர்வழியை ஈரான் திறம்பட மூடியுள்ளது.

இது வரலாற்றிலேயே மிக மோசமான எரிசக்தி விநியோக அதிர்ச்சியை ஏற்படுத்தி, எரிபொருள் விலைகளை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.

 

மேலதிக படைகளை அனுப்ப வொஷிங்டன் நடவடிக்கை

இந்த தகவல்களுக்கு மத்தியில் அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் ஈரானியத் தாக்குதல்கள் செவ்வாயன்றும் தொடர்ந்தன.

மேலும் மத்திய கிழக்கிற்கு கூடுதல் படைகளை அனுப்ப வொஷிங்டன் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து அறிந்த இருவர் செவ்வாயன்று சர்வதேச ஊடகங்களிடம், அமெரிக்க இராணுவத்தின் உயரடுக்கு 82வது வான்வழிப் பிரிவிலிருந்து ஆயிரக்கணக்கான வீரர்களை மத்திய கிழக்குக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

இந்தப் படைகள், அப்பகுதியில் ஏற்கனவே உள்ள 50,000 அமெரிக்கத் வீரர்களுடன் இணைந்து, அங்கு வொஷிங்டனின் பிரம்மாண்டமான இராணுவக் குவிப்பைத் துரிதப்படுத்தும்.

இது ஒரு நீண்டகால மோதல் குறித்த அச்சங்களை தற்சமயம் எழுப்பியுள்ளது.

 

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் தயார் நிலையில்

ஈரானிய மின் நிலையங்கள் மீது குண்டு வீசப்படும் என்ற தனது அச்சுறுத்தலை, தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறி ட்ரம்ப் ஒத்திவைத்த ஒரு நாள் கழித்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் செவ்வாயன்று தெரிவித்தார்.

இது குறித்த எக்ஸ் பதிவில் பாகிஸ்தான் பிரதமர், ஷெபாஸ் ஷெரீஃப், பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கான தற்போதைய முயற்சிகளை பாகிஸ்தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், ஒரு விரிவான தீர்வுக்கான அர்த்தமுள்ள மற்றும் உறுதியான பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

பாகிஸ்தான், அண்டை நாடான ஈரானின் இஸ்லாமியக் குடியரசுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளதுடன், ட்ரம்புடன் ஒரு உறவையும் வளர்த்து வருகிறது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறிய பின்னர், அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின.

எனினும், குறிப்பிடத்தக்க அந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மத்தியஸ்தரான ஓமன் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1469911

$100 டொலர்களுக்கும் கீழ் சரிந்த எண்ணெய் விலை!

2 weeks 5 days ago

OIL-3.jpg?resize=750%2C375&ssl=1

$100 டொலர்களுக்கும் கீழ் சரிந்த எண்ணெய் விலை!

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் கூறியதை அடுத்து, ஆசியாவில் செவ்வாய்க்கிழமை (25) காலை நேர வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன.

அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 6.6% சரிந்து $97.56 (£72.65) ஆகக் குறைந்தது.

அதேநேரத்தில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை மசகு எண்ணெய் 5.5% க்கும் அதிகமாகச் சரிந்து $87.20 ஆகக் குறைந்தது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், வொஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தரப்பினர் தெஹ்ரானுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்றும் ட்ரம்ப் செவ்வாயன்று கூறினார்.

எனினும், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்படும் கூற்றுக்கள் “போலிச் செய்திகள்” என தெஹ்ரானில் உள்ள அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் ஈடுபட்டிருந்ததாக ட்ரம்ப் கூறினார்.

தெஹ்ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, ஈரானியத் தலைவர்கள் தங்களிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்காது என்று ஒப்புக்கொண்டுள்ளனர் என்ற தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.

எனினும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதை ஈரான் மறுத்துள்ளது. 

இது குறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் எக்ஸ் தளத்தில், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளைக் கையாள போலிச் செய்திகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சந்தைகளைக் கையாளும் முயற்சி என்று கூறி தெஹ்ரான் முன்னர் நிராகரித்துள்ளது.

எவ்வாறெனினும், இந்த மோதலானது ஒரு உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது. 

இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தங்கள் பொருளாதாரங்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் அண்மைய வாரங்களில் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

போர் தொடங்கியதிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. 

ஏனெனில், உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% தினமும் கடந்துசெல்லும் ஒரு குறுகிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறம்படத் தடுத்துள்ளது.

இந்த மோதல் உலகளாவிய நிதிச் சந்தைகளிலும் பெரும் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் சிலவற்றின் தலைவர்கள், போரின் சாத்தியமான விளைவுகள் குறித்து அண்மைய நாட்களில் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.

https://athavannews.com/2026/1469904

ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்!

2 weeks 5 days ago

ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்!

25 March 2026

1774382915_7229719_hirunews.jpg

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவிற்குப் பெரும் பணமதிப்புடைய ஒரு 'விலைமதிப்பற்ற பரிசை' ஈரான் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லமான ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க முன்னேற்றம் குறித்து விபரித்தார்.

"ஈரான் பேச்சுவார்த்தையாளர்கள் நேற்று (24) ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்கள்.

அவர்கள் எங்களுக்கு ஒரு பெரிய பரிசை (Present) வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு மிகப்பரிசுத்தமானது," என்று டிரம்ப் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

ட்ரம்பின் கருத்துப்படி, இந்தப் பரிசு நேரடியாக எண்ணெய் மற்றும் எரிவாயு (Oil and Gas) வர்த்தகம் தொடர்பானது.

குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் நிலவும் பதற்றங்களைக் குறைக்கும் அல்லது அங்குள்ள வளங்களைக் கையாளும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இருப்பினும், அந்தப் பரிசு என்ன என்பது குறித்த துல்லியமான விபரங்களை டிரம்ப் தற்போது வெளியிடவில்லை.

"நாங்கள் சரியான நபர்களுடன் தான் டீல் (Deal) செய்கிறோம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

ஈரான் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள மிகத் தீவிரமான ஆர்வத்துடன் இருக்கிறது," என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், டிரம்பின் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய சமாதானத் தூதாக அல்லது மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தின் அறிகுறியாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

https://hirunews.lk/tm/455553/trump-is-surprised-by-the-mysterious-gift-from-iran

அமெரிக்கா - இரான் இடையே மத்தியஸ்தராக பாகிஸ்தான் உருவெடுக்கிறதா? புதிய தகவல்

2 weeks 5 days ago

அமெரிக்கா - இரான் இடையே மத்தியஸ்தராக பாகிஸ்தான் உருவெடுக்கிறதா? புதிய தகவல்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,திங்கட்கிழமை அன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன" என்று கூறினார்.

24 மார்ச் 2026, 06:12 GMT

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பாகிஸ்தான் ஒரு சாத்தியமான மத்தியஸ்தராக உருவெடுக்கக்கூடும் என்று பிபிசியின் வெள்ளை மாளிகை செய்தியாளர் பெர்ன்ட் டிப்ஷ்மேன் ஜூனியர், ஃபைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஆக்ஸியோஸ் ஆகிய இதழ்களின் செய்திகளை மேற்கோள் காட்டி கூறுகிறார்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா மற்றும் இரானின் மூத்த தலைவர்களின் சந்திப்பை இஸ்லாமாபாத்தில் நடத்தலாம் என்று பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அமெரிக்காவோ அல்லது இரானோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக உருவெடுத்திருப்பது ஆச்சர்யமளிக்கவில்லை என்று பல அமெரிக்க உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் இரானுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது, ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க நிர்வாகத்துடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் டிரம்பைச் சந்தித்தார்.

செப்டம்பர் மாதப் பயணத்தின் போது, ஜெனரல் முனீருடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் சென்றிருந்தார்.

இந்தியாவுடனான மோதல்களின் போது டிரம்ப் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளுக்காக, பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

ஷெரீப்பின் இந்த நடவடிக்கை டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பலருக்கும் பிடித்திருந்தது.

பெசெஷ்கியனிடம் பேசிய ஷெரீஃப்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Iranian Presidency / Handout/Anadolu via Getty Images

படக்குறிப்பு,பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் டிசம்பர் 12, 2025 அன்று நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை மன்றத்தில் கலந்துகொண்டனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் திங்களன்று தொலைபேசியில் பேசினார்.

ஷாபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் தளப் பதிவில், "எனது சகோதரர் அதிபர் முனைவர் மசூத் பெசெஷ்கியானுடன் பேசி அவருக்கு ஈத்-உல்-பித்ர் மற்றும் நவ்ரூஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"ஓர் அண்டை நாடாகவும் சகோதர தேசமாகவும், துணிச்சலான இரானிய மக்களுக்கு பாகிஸ்தானின் ஒற்றுமையை வெளிப்படுத்தினேன். விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்காக பிரார்த்தித்தேன்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

"நாங்கள் வளைகுடா பிராந்தியத்தின் தீவிரமான சூழல் குறித்து விவாதித்தோம். பதற்றங்களைக் குறைக்கவும், பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் மற்றும் ஒரு விவேகமான தீர்வைக் காணவும் அவசரத் தேவை உள்ளது என்பதில் இருவரும் உடன்பட்டோம்."

"இஸ்லாமிய சமூகத்தினரிடையே ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்றும், அமைதியை மேம்படுத்துவதில் உதவிகரமான பங்கை ஆற்ற பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என்றும் நான் கூறினேன்" என ஷாபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் இரானுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது.

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரானின் உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி காலமான பிறகு, முதன்முதலில் இரங்கல் தெரிவித்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.

போரின் முடிவு குறித்த முரண்பட்ட தகவல்கள்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Olmo Blanco/Getty Images

படக்குறிப்பு,ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட்டில் இரான் போருக்கு எதிரான போராட்டம்

பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னரின் கூற்றுப்படி, இரான் போர் முடிவுக்கு வருவது குறித்து திங்கள் கிழமையும் முரண்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது.

அமெரிக்காவிலிருந்து வெளிவந்த ஒரு செய்தியின்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் டொனால்ட் டிரம்பின் நெருக்கமான தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தர்களாக செயல்பட்டதாக மற்ற நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன என்று கார்ட்னர் கூறுகிறார்.

கடந்த வாரம், சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் அரபு மற்றும் இஸ்லாம் பெரும்பான்மை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடினர்.

அங்கு அவர்கள் போரில் இரானின் நடவடிக்கைகளைக் கண்டித்ததோடு, இஸ்ரேலின் தாக்குதல்களையும் விமர்சித்தனர். குறிப்பாக, 'சௌத் பார்ஸ்' எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.

போரின் இந்த போக்கு தான் இப்பகுதியை அதிகம் சீர்குலைத்து வருகிறது. முன்னதாக ராணுவத் தளங்கள் தாக்கப்பட்ட நிலையில், இப்போது பொருளாதார தளங்கள் தாக்குதல் இலக்குகளாகி வருகின்றன.

முன்னதாக, போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக திங்கள்கிழமை டிரம்ப் கூறியிருந்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுகுறித்து டிரம்புடன் பேசியதாகவும், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் இரான் போர் குறித்த அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நோக்கங்கள் 'நிறைவேற்றப்படும்' என்றும் கூறினார்.

ஆனால் இரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் இதனை மறுத்துள்ளார். இது 'போலிச் செய்தி' என்றும், எண்ணெய் சந்தையில் 'தாக்கத்தை ஏற்படுத்த' இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

தொடரும் தாக்குதல்கள்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Fatemeh Bahrami/Anadolu via Getty Images

படக்குறிப்பு,தெஹ்ரானில் உள்ள 8 மாடிக் கட்டிடம் ஒன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் அழிக்கப்பட்டது (புகைப்படம்: மார்ச் 23, 2026)

பேச்சுவார்த்தைகள் குறித்த டிரம்பின் அறிக்கை ஒருபுறம் இருக்க, லெபனான், இரான் மற்றும் வளைகுடா நாடுகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பிறகு லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் பல இடங்களிலிருந்து புகை மூட்டம் எழுவதைக் காண முடிந்தது.

இதற்கிடையில், சௌதி அரேபியா தனது கிழக்கு மாகாணத்தில் நான்கு டிரோன்களை பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது.

அதேவேளையில், இரானுடனான பேச்சுவார்த்தை குறித்த டிரம்பின் அறிக்கையைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததாக பிபிசி செய்தியாளர் அந்தோணி ஜூர்ச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பது இப்போதைக்கு மிக முன்கூட்டிய ஒன்றாகிவிடும் என்று பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c80mlny213go

மின்சார உட்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிப்பு

2 weeks 5 days ago

மின்சார உட்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிப்பு

Published By: Digital Desk 3

24 Mar, 2026 | 04:32 PM

image

ஈரானின் மின்சார உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் தனது எச்சரிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக மீளப்பெற்ற சில மணிநேரங்களிலேயே, அந்நாட்டின் இரு முக்கிய எரிவாயு நிலையங்கள் மற்றும் குழாய்த்தொடர் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஈரானின் 'பார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் விபரங்கள் வருமாறு:

மத்திய ஈரானின் இஸ்ஃபஹான் மாகாணத்திலுள்ள காவே வீதியில் அமைந்துள்ள எரிவாயு விநியோகத்தை நிர்வகிக்கும் பிரதான கட்டடம் மற்றும் எரிவாயு விநியோகச் சீர்மையை உறுதிப்படுத்தும் நிலையம் ஆகிய இரு முக்கிய இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல்களால் குறித்த நிலையங்கள் "பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக" ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஈரானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொரம்ஷாஹர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிவாயுவை விநியோகிக்கும் பிரதான குழாய்த்தொடர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/241831

ஈராக்கில் ஈரான் ஆதரவுப் படைகளின் தலைமையகம் மீது வான்வழித் தாக்குதல்: தளபதி உட்பட 15 பேர் பலி

2 weeks 6 days ago

ஈராக்கில் ஈரான் ஆதரவுப் படைகளின் தலைமையகம் மீது வான்வழித் தாக்குதல்: தளபதி உட்பட 15 பேர் பலி 

Published By: Digital Desk 3

24 Mar, 2026 | 03:54 PM

image

மேற்கு ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் அமைந்துள்ள ஈரான் ஆதரவுப் படைகளின் தலைமையகத்தை இலக்கு வைத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், அதன் பிராந்தியத் தளபதி உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக்கின் 'ஹாஷத் அல்-ஷாபி' என அழைக்கப்படும் மக்கள் அணிதிரட்டல் படைகளின் அன்பார் மாகாண நடவடிக்கைகளுக்கான தளபதி சாத் அல்-பைஜி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அவருடன் மேலும் 14 போராளிகளும் உயிரிழந்துள்ளனர்.

உயர்மட்டத் தளபதிகள் கலந்துகொண்ட பாதுகாப்பு மீளாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தக் கொடூரமான தாக்குதலை அமெரிக்காவே நடத்தியுள்ளதாக ஈரான் ஆதரவுப் படைகளின் அமைப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. "எமது வீரர்கள் கடமையில் இருந்தபோது அமெரிக்க வான்படை திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது" என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போரைத் தொடர்ந்து, ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில் நடத்தப்பட்டுள்ள இந்த வான்வழித் தாக்குதல், மத்திய கிழக்கில் மோதல்கள் மேலும் விரிவடைவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் எல்லைகளைக் கடந்து, தற்போது லெபனான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளையும் ஆட்கொண்டுள்ளமை சர்வதேச ரீதியாக பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/241821

அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

2 weeks 6 days ago

அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

Published By: Digital Desk 3

24 Mar, 2026 | 03:26 PM

image

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணம், பிளாய்ட் கவுண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை (23) பிற்பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

1892-ல் கட்டப்பட்ட நீதிமன்றக் கட்டிடத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றக் கட்டிடத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஃப்ளாய்ட் மாவட்ட மேலாளர் ஜேமி மெக்கார்ட் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து நடந்த நேரத்தில் நீதிமன்றக் கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததாக ஃப்ளாய்ட் மாவட்ட அரசு தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

நீதிமன்றக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள ஆபத்துகளைக் கருத்திற்கொண்டும், எஞ்சியுள்ள பகுதிகளை ஆய்வு செய்யவும் ஏதுவாக, இன்று செவ்வாய்க்கிழமை (24) பிளாய்ட் கவுண்டி நீதிமன்றம் மூடப்படும். மீண்டும் நாளை புதன்கிழமை (25) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/241818

கடந்த பல தசாப்தங்களில் உலகம் கண்டிராத மிக மோசமான நெருக்கடி..! தீவிரமடைந்தால் எந்த நாடும் தப்ப முடியாதென எச்சரிக்கை

2 weeks 6 days ago

கடந்த பல தசாப்தங்களில் உலகம் கண்டிராத மிக மோசமான நெருக்கடி..! தீவிரமடைந்தால் எந்த நாடும் தப்ப முடியாதென எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையானது கடந்த பல தசாப்தங்களில் உலகம் கண்டிராத மிக மோசமான எரிசக்தி நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் என சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஃபாத்தி பிரோல் எச்சரித்துள்ளார்.

தற்போதைய நிலையை அவர் மிகவும் பாரதூரமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நெருக்கடியானது 1970களில் ஏற்பட்ட இரண்டு பாரிய எண்ணெய் அதிர்ச்சிகளின் அளவையும் தாண்டிவிட்டது.

ஒவ்வொரு நெருக்கடியின் போதும் உலகம் ஒரு நாளைக்கு சுமார் 5 மில்லியன் பரல் எண்ணெயை இழந்தது. இரண்டும் சேர்த்து மொத்தம் 10 மில்லியன் பரல்கள். ஆனால் இன்று நாம் ஒரு நாளைக்கு 11 மில்லியன் பரல்களை இழந்துள்ளோம்.

இது அந்த இரண்டு பெரிய எண்ணெய் அதிர்ச்சிகளையும் விட அதிகம். உலகப் பொருளாதாரம் இப்போது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.

இந்த நெருக்கடி தீவிரமடைந்தால் எந்த நாடும் இதிலிருந்து தப்ப முடியாது. நிலைமையை விரைவில் சுமூகமாக முடிக்க உலகளாவிய முயற்சிகள் தேவை என குறிப்பிட்டுள்ளார். 

முதலாம் இணைப்பு

ஆசிய பிராந்தியத்தில் எதிர்வரும் மாதங்களில் பெட்ரோல், டீசல் என்பவற்றின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பல தசாப்தங்களில் உலகம் கண்டிராத மிக மோசமான நெருக்கடி..! தீவிரமடைந்தால் எந்த நாடும் தப்ப முடியாதென எச்சரிக்கை | Fuel Prices Likely To Increase Significantly

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அரம்கோ, ஏப்ரல் மாதத்திற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை ஆசிய நாடுகளுக்குக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்களால் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது மாதமாக சவூதி அரம்கோ இந்த விநியோகக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த முடிவினால் ஆசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கிடைக்கும் கச்சா எண்ணெயின் அளவு குறையும்.

இதன் விளைவாக, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் (பெட்ரோல், டீசல் போன்றவை) அளவும் குறையக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விநியோகக் குறைப்பு, எதிர்வரும் மாதங்களில் ஆசிய பிராந்தியத்தில் எரிபொருள் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

https://tamilwin.com/article/fuel-prices-likely-to-increase-significantly-1774238934?itm_source=article

அமெரிக்கா பின்வாங்கினாலும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

2 weeks 6 days ago

அமெரிக்கா பின்வாங்கினாலும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கூடாது - இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர்

Published By: Vishnu

24 Mar, 2026 | 03:36 AM

image

மத்திய கிழக்கில் போர்ச் சூழலைத் தணிப்பதற்காக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருந்தாலும், ஈரானிய ஆட்சி முழுமையாகக் கவிழ்க்கப்படும் வரை போரை நிறுத்தக்கூடாது என்று இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன் வலியுறுத்துகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவும் நேரத்தில், அரசாங்கம் உள்நாட்டுச் சட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறி, அவர் இஸ்ரேலிய அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ள ஜோர்டான், ஈராக் போன்ற நாடுகள் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்கள், உலகளாவிய சந்தைகளையும் விமானப் பயணத்தையும் ஏற்கனவே கடுமையாகப் பாதித்துள்ளன.

https://www.virakesari.lk/article/241781

Checked
Mon, 04/13/2026 - 13:50
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe