1 week 6 days ago
ஈரான் இன்று காலை இஸ்ரேலுக்கு நல்ல தாக்குதல் கொடுத்து , போர் நிறுத்தத்துக்கு ஓம் என சொல்லி இருக்கினம் இஸ்ரேல் வாழ் நாளில் மறக்க முடியாத அடிய ஈரானிடம் இருந்து வேண்டி கட்டி இருக்கினம் , வான்பாதுகாப்பு கருவி இல்லாம இருந்து இருக்கனும் பாதி இஸ்ரேல ஈரான் அழித்து இருக்கும்..................ஈரான் இந்த தாக்குதல ஆரம்பிக்க வில்லை , கொடிய மிருகம் நெத்தனியாகு ஆரம்பிச்சார் ஈரான் முடிச்சு வைத்து விட்டது🙏👍................................
1 week 6 days ago
உலகத்தை அழித்துக் கொண்டிருந்தவர்களும், கலகத்தை விளைவித்துக் கொண்டு இருந்தவர்களும், காலம் மாறிவிட்டது என்பதை... காலதாமதமாகவே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். தயாளன் கனியன்
1 week 6 days ago
ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்! ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (24) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “பாதுகாப்பில் அளித்த ஆதரவிற்கும், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை ஒழிப்பதில் பங்கேற்றதற்கும் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கு இஸ்ரேல் நன்றி தெரிவிக்கிறது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், எந்தவொரு போர்நிறுத்த மீறலுக்கும் இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுக்கும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பதாகவும், ஈரான் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பின்னர், இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மீற வேண்டாம் என்றும் ட்ரம்ப் கூறினார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் உலகிற்கு அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இஸ்ரேலிய பிரதமரின் அறிக்கை வந்தது. ஈரான் அதை முதலில் நிராகரித்தது, பின்னர் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவின் போர் நிறுத்தக் கூற்றினை ஆரம்பத்தில் நிராகரித்தார். அத்தகைய ஒப்பந்தம் எதுவும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று கூறினார். இருப்பினும், அந்த அறிவிப்புக்கு பின்னர், ஈரானிய அரசு தொலைக்காட்சி போர் நிறுத்தம் தொடங்கியதை உறுதிப்படுத்தியது. Athavan Newsட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல்!ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (24) ஒரு அறிக்கையில் தெரிவித்துள...
1 week 6 days ago
https://www.politico.eu/article/iran-foreign-minister-abbas-araghchi-russia-vladimir-putin-us-strikes-nuclear-sites/ அமெரிக்க தாக்குதலை அடுத்து ஈரான் வெளியுறவு அமைச்சர் இரஸ்சியாவிற்கு பயணம் செய்திருந்தார்.
1 week 6 days ago
உண்மையாவா... 😂 இதையும், அமெரிக்காதான் சொல்லியிருக்கும். 🤣 அப்ப ... நோபல் பரிசு, நிச்சயம் கிடைக்கும். 😂 🤣
1 week 6 days ago
டிரம்ப் நிர்வாகம் தந்திரோபாய அணுஆயுத தாக்குதலையும் கவனத்தில் எடுத்து இருந்தது. பலர் கவனிக்காகாது, ருசியா அதுக்கு எச்சரிக்கை விடுத்தும் இருந்தது. இதில் தெரிவது அமெரிக்காவின் கேந்திர பலத்தின் ஒப்பிட்டளவிலான வீழ்ச்சி. இரான் கேட்டது சண்டை நின்றால் பேசலாம். அமெரிக்கா சொன்னது சண்டை தொடந்தாலும் பேச வேண்டும், இல்லாவிட்டால் .... . இதில் முக்கியமாக, எந்த நிபந்தனையும் இல்லாத சண்டை நிறுத்தம். பின்னுக்கு வேறு சக்திகளும் இருந்து இருக்கலாம். குறிப்பாக சீனா (வாயால் வலியுறுத்துவதால் அல்ல. )
1 week 6 days ago
இஸ்ரேல் ஒரே நேரத்தில் பல முஸ்லிம் நாடுகளுடன் போர் செய்து வென்றார்கள் என்ர கதை , இன்றுடன் முடிந்து விட்டது ஈரானை பார்த்தாவது அமெரிக்கன் போடும் விஸ்கேட்டை திண்டு அவனுக்கு அடிமையாக இருப்பதும் பார்க்க , ஈரான் போல் தன்மானத்தோடு வாழ ஈரானிடம் இருந்து பாடம் கற்றுக்கனும் மற்ற அரபி நாடுகள்............................. 🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🙏🙏🙏💪💪💪...................
1 week 6 days ago
கனடா புறப்பட்டார் பிரதமர் ஹரிணி! கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) அதிகாலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபையில் பங்கேற்பதற்காக இன்று (24) அதிகாலை கனடாவுக்குப் புறப்பட்டார். பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபைக் கூட்டம் ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவரில் நடைபெறும். இந்த உச்சிமாநாடு முதன்மையாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி, உயர்கல்வி, ஆசிரியர் கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தொழில்முறைக் கற்றலை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு ஆகிய முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும். புதுமை மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்தல், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரித்தல், பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகளை செயல்படுத்துதல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் ஆகிய தலைப்புகளிலும் விவாதங்கள் கவனம் செலுத்தும். https://athavannews.com/2025/1436851
1 week 6 days ago

கனடா புறப்பட்டார் பிரதமர் ஹரிணி!
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) அதிகாலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியாக பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபையில் பங்கேற்பதற்காக இன்று (24) அதிகாலை கனடாவுக்குப் புறப்பட்டார்.
பொதுநலவாய கற்றல் (COL) ஆளுநர்கள் சபைக் கூட்டம் ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவரில் நடைபெறும்.
இந்த உச்சிமாநாடு முதன்மையாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி, உயர்கல்வி, ஆசிரியர் கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் தொழில்முறைக் கற்றலை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு ஆகிய முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும்.
புதுமை மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்தல், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரித்தல், பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகளை செயல்படுத்துதல் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் ஆகிய தலைப்புகளிலும் விவாதங்கள் கவனம் செலுத்தும்.
https://athavannews.com/2025/1436851
1 week 6 days ago
இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச் செல்லவில்லை – அரசாங்கம் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கையிலிருந்து தப்பிச் செல்லவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது பேசிய அமைச்சர் விஜேபால, இதுவரை சேகரிக்கப்பட்ட தகவல்கள் அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாகக் சுட்டிக்காட்டப்படவில்லை என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் போது, கொலை தொடர்பான தகவல்கள் மற்ற சந்தேக நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தக் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) முறையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். இந்த ஆண்டு பெப்ரவரியில் கணேமுல்ல சஞ்சீவா சுட்டுக் கொல்லப்பட்ட கொழும்பு நீதிமன்றத்திற்குள் ஆயுதத்தை கொண்டு சென்று துப்பாக்கிதாரியிடம் ஒப்படைத்ததற்காக இஷாரா செவ்வந்தி தேடப்படும் குற்றவாளி ஆவார். https://athavannews.com/2025/1436843
1 week 6 days ago
😁😁😁😁😁😁😁😁
1 week 6 days ago
அமெரிக்கா & உலக மக்களிடம் ட்ரம்பின் செல்வாக்கு அதிகரிக்கின்றதாம். இவர் புட்டினின் காலில் விழுந்து அமைதியை நிலை நாட்ட வேண்டும், வரவேற்க வேண்டிய இன்னுமொரு போர் நிறுத்தம்
1 week 6 days ago
1 week 6 days ago
போர் நிறுத்தம் அமுலில் – தயவுசெய்து அதை மீறாதீர்கள் – ட்ரம்ப் வலியுறுத்தல்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் “இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். கடந்த சில மணிநேரங்களில் ஈரான் இஸ்ரேலிய பிரதேசங்கள் மீது பல ஏவுகணைகளை ஏவியதை அடுத்து, மத்திய கிழக்கில் உள்ள இரண்டு பரம எதிரிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்று அமெரிக்கத் தலைவர் எச்சரித்தார். இது குறித்து ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் டரம்ப், போர் நிறுத்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள் – என்று பதிவிட்டார். செவ்வாய்க்கிழமை காலை 0400 மணிக்கு தொடங்கும் இந்த போர் நிறுத்தம் 24 மணி நேர கட்டமாக இருக்கும் என்றும், ஈரான் ஒருதலைப்பட்சமாக முதலில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தும் என்றும் அமெரிக்கத் தலைவர் முன்னதாகக் கூறியிருந்தார். 12 மணி நேரத்திற்குப் பின்னர் இஸ்ரேல் இதைப் பின்பற்றும் என்றும் அவர் கூறினார். இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இஸ்ரேல் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வந்தன. ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்திற்குப் பின்னர் தொடங்கப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் டெல் அவிவ் கூறியது. https://athavannews.com/2025/1436832
1 week 6 days ago
1 week 6 days ago
1 week 6 days ago
ராஜதந்திர உறவுகளை வளர்ப்பது என்ன உங்களின் வாசிப்பு போன்றதா? இப்படித்தான் கட்டி எழுப்புவது. ரஷ்யாவின் நடத்தையும் அறியக் கூடியதாக இருப்பது. சிரியாவில் இரான் விமான எதிர்ப்பு விடயத்தில் ருசியா உடன் பெட்ரா அனுபவத்தை வைத்து. ரஷ்யாவுக்கு உழைப்பு அதுவாக அவ்வளவு இலகுவில் விட்டு கொடுக்காது, ஈரானுக்கு (அது தனியே நிற்கும் போது), மேற்கு சும்மாவே தடுக்க முனைகிறது, உரசல்கள் வராது. (அமெரிக்காவே அடிபட்ட இராக்கின் எண்ணெய் வருவாயை தடைகள் மூலம் மறைமுகமாக தடுத்து, இரானில் இருந்து வர்த்தகம் , மின்சக்தி போன்றவற்றை இரானிடம் இருந்து ஈராக் வாங்குவதை தடுப்பது போல, ரஷ்யாவுக்கும் இது ஒரு பிடி இரானிடம் இருந்து வேறு பொருளாதார நமைகளை பெறுவதற்கு.) முறித்தால் தேவை இல்லாத பிரச்சனைகள் வரும். ஈரானின் கணிப்பில் வேறு அம்சங்களும் இருக்கலாம். (உ.ம். ருசியா இடம் இருந்து போர்விமானங்களை பெறுவது, விமான எதிர்ப்பு அமைப்பை பெறுவது போன்றவை. இரான் 90 நடுப்பகுதியில் முனைய சோவியத் இல் இருந்த சில நாடுகளிடம் போர்விமானங்களை வாங்க தெண்டித்தது. அதை அமெரிக்கா தடுத்து விட்டது. பகிரங்கமாக இணைய தளத்தில் இருக்கிறது. https://www.armscontrol.org/act/1997-10/press-releases/us-buys-moldovan-aircraft-prevent-acquisition-iran#:~:text=Moldova%20informed%20the%20United%20States,agreement%20authorizing%20future%20cooperative%20activities.) (இது பல மேற்கு / us குறுக்கீடு. தடுப்புக்கு உட்பட்டே கட்டப்பட்டது. இறுதியில் ருசிய பாவிக்கப்பட்ட எரிபொருளை அகற்றும் (ககிஸ்ஸிங்யர் ஷாவுக்கு சொன்னது போலவே) என்ற உடன்பாட்டுக்கு கீழே அனுமதிக்கப்பட்டது. அப்போது இரான் மீது தடைகளும் கொண்டு வரப்பட்டு விட்டது.) அந்த நேரத்தில்,, இதில் ரஷ்யா (பிரான்ஸ் உம் எப்போதும் ) தடைகளுக்கு ஆமோதிப்பதன் ஒரு பகுதி காரணம், அதன் அணு உலை / சிறப்புத்தேர்ச்சி வர்த்தகத்துக்காக. (ஆனால், இப்படித்தான் எந்த மிகஉயர் தொழில் நுட்பம் விற்கப்படுவது - அது எப்போதுமே rentier transaction.) இதனாலேயே இரான் சொந்த செறிவூட்டல் வேண்டும் என்று நிற்பது, வெளியாரிடம் தங்காமல் இருக்க. அது மேற்கு / இஸ்ரேல் க்கு பொறுக்கமல், வெப்பியாரத்தில் எரிகிறது. ஏனெனில், எவர் கொடுத்தாலும் மேற்கு / us தடுக்கும். இப்போது வெளிப்படையாகவே ஈரானை அன்ஹா உரிமையை விடும்படி கேட்கிறது மேற்கு / us. மேற்கின் பிரகாரத்தை ஒப்புவிக்கும் கதை உங்களுடையது; ஒன்றில் அந்த நிலைக்கு ஆதரவால் அல்லது சிந்தனை இல்லாததால். இதில் கூட சொல்வது அவளையும் செய்து இருப்பது நீங்கள் நானல்ல. அதுக்கு முதல் பரந்த சிந்திப்பு இருக்க வேண்டும். எந்த நாடாவது சொந்தமாக மின் அணு ஆலையை இயக்குவதை வேறு எந்த நாட்டிடமும் பொறுப்பு கொடுக்க விரும்புமா, வேறு எந்த நன்மைகளும் இல்லாமல், அதில் அச்சுறுத்தல் பிரச்சனைகளும் வெளியாரால் (மேற்கு) இல்லாது இருந்தால். அதுவும் இரான் போன்ற துறை சார் அனுபவம் உள்ளவர்களை கொண்டு இருக்கும் போது? மற்றவை , உங்களின் விடயம், சிந்தனை இல்லாத அரைகுறை வெற்றுக் கதை.
1 week 6 days ago
ayatollah ali khameneiயின் துணிவு உண்மையில் பாராட்ட தக்கது🙏👍....................மனுஷன் சொன்ன எல்லாத்தையும் செய்து விட்டார் , போர் நிறுத்த நாடகத்தில் ஈரான் விழிப்புடன் இருக்கனும்...........................
1 week 6 days ago
இந்த போர் ஒரு தேவையற்ற போர் இதனால் ஏற்பட்ட அரசியல் இராணுவ ஆதாயங்கள் பற்றிய கருத்துக்கள் இப்போதே தெரிவிக்க முடியாவிட்டாலும், இது ஒரு தேவையில்லாத ஆணி என சம்பந்தப்பட்ட தரப்புக்களே உணர்ந்துள்ளதாக தெரிகிறது, அனைவருக்கும் இந்த போரில் இருந்து வெளியேற வேண்டிய தேவை , ஆனால் இது இஸ்ரேலிற்கு ஒரு தோல்வி என கருத இடம் உண்டு, அமெரிக்கா இதில் வேண்டா வெறுப்பாகவே ஈடுபட்டுள்ளதாக என கருதுகிறேன், இஸ்ரேலால் தொடர்ந்து இந்த வான் தாக்குதலை தொடர முடியாது, ஆனால் இந்த தாக்குதலிலால் பெரியளவில் ஈரானில் அணுக்கசிவு ஏற்பட்டு மக்கள் பெருமளவில் பாதிக்காமல் அனைத்து தரப்பும் தங்களுக்கே வெற்றி என கூறிகொண்டு இதற்கு ஒரு முடிவு கட்டியுள்ளார்கள், அதுவே போதும்.
1 week 6 days ago
மட்டக்களப்பில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தீப்பந்தம் ஏந்திய போராட்டம் Published By: VISHNU 24 JUN, 2025 | 02:48 AM செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் திங்கட்கிழமை (23) மாலை தீப்பந்தம் ஏந்திய போராட்டம் நடைபெற்றது. இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவ்வார்ப்பாட்டத்தின் போது பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக நடந்து சென்று பின்னர் பாலத்தின் நடுப்பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ஆணையாளர் இலங்கைக்கு வருகின்ற போது இடையில் இடம்பெற்ற இவ்வாறான மனித புதைகுழிகள், இனப்படுபவர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியினை பெற்று தர வேண்டும் என இதன் போது வலியுறுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/218274