Aggregator

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
1979 இற்கு முன் மேற்கு நாடுகளை போல, இன்றைய துருக்கி, மலேசியா போல சுதந்திரமாக வாழ்ந்த ஈரானிய பெண்களை. ஈராக் ஒரு போதும் முல்லாக்கள் கையில் இருக்கவில்லை. ஷியா முல்லாக்களை ஓட விரட்டிய பாஆத் அரசியலை முன்னெடுத்தவர் சதாம். அமெரிக்கா தலையிட்ட பின் IKR என அழைக்கபடும் குர்தீஷ் பகுதியில் பெண்கள் நல்ல நிலையிலும், இதர அரபு ஸுன்னி மக்கள் வாழும் இடங்களில் சுமாராகவும் முல்லாக்கள் கட்டுப்படுத்தும் ஷியா மக்களின் இடங்களில் மோசமான நிலையிலும் உள்ளார்கள். ஆப்கானிஸ்தான் - நிச்சயமாக பெண்கள், குழந்தைகள் கல்வி, இதர உரிமைகள் 1996-2001, தற்போது உள்ள தலிபான் ஆட்சியை விட, அமெரிக்கா அங்கே நிண்ட போது, மிக, மிக மேம்பட்டே இருந்தது. இங்கே பெண்கள் ஒடுக்கப்பட காரணம் - முல்லாக்களும், தலிபான்களும், ஐ எஸ் சும் - அவர்களை இப்படி நடக்க தூண்டும் குரானின், ஹதீஸ்களின் வழிகாட்டலுமே ஒழிய, அமேரிக்கா அல்ல. நிச்சயமாக ஒரு தேர்தல் ஜனநாயக நாட்டில், எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு, நெதன்யாஹுவை எதிர்த்து பெரும் ஆர்பாட்டம் செய்யும் அளவுக்கு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
இந்த பழமைவாத துருப்பிடித்த சிந்தனைக்கு மாற்றீடான சிந்தனைகளை உக்குவிக்கும் நிலைக்கு சமூகம் வளர வேண்டும் ஆனால் மத அடிப்படைவாதிகள் அதனை கேள்விக்கெ இடமளிப்பதில்லை, கேள்வி கேட்டால் அதற்Kஉ ஏதாவது காராம் என கூறி கொல்லுகின்ற நிலை காணப்படுகிறது, மத அடிப்படைவாத ஆட்சியினை இதனாலேயே பலர் வெறுக்கின்றனர், இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் பி ஜே பி க்கு பெரியளவில் எதிர்ப்பு உள்ளது, தமிழ் சமூகம் மாற்றம் வேண்டி நிற்கும் சமூகம், மாற்றம் தான் ஒரு நிரந்தரமான வலிமையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும், மாற்றங்களை அங்கீகரிக்காமல் அனைத்தையும் மதத்தின் பெயரால் பழமைவாத சிந்தனையுடன் இருந்தால் மதம் வேணுமென்றால் நிலைத்திருக்கும் ஆனால் அதனை பின்பற்றத்தான் மக்கள் இருக்கமாட்டார்கள்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
தட்…தொப்பியை மறைக்க மறந்த தருணம்🤣 இங்கே பலர் மேற்கு புலிகளுக்கு ஆப்பு அடித்த கடுப்பில் முல்லாக்களுக்கு குல்லா போடுவார்கள். இன்னும் சிலரோ குல்லா போடுவதால் முல்லாக்களை நியாயபடுத்துவார்கள். யார் எவர் என்பதை சற்று விலகி நிண்டு அவதானித்தால் கண்டு கொள்ளலாம்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
ஆறாம் நூற்றாண்டுக்கு எந்த பெண்களையும், மக்களையும் முல்லாக்கள் கொண்டு சென்றார்கள்? தமிழ் பெண்களையா? தமிழ் மக்களையா? ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் அமெரிக்கா சாதித்தது என்ன என்று கூறுங்கள்? அங்கே உள்ள பெண்கள், மக்கள் அமெரிக்க அரசின் போர் தொடுப்பின் பின் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக முல்லாக்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் இப்போது வாழ்கின்றார்களா? இஸ்ரேலில் உள்ள மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா? ஆயுத பலம் உள்ள இடத்தில் மகிழ்ச்சி, சுதந்திரம் உள்ளதா? இங்கு உள்ள வெவ்வேறு கருத்துக்கள் ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புக்களை காட்டுகின்றன. இவை 2009 போரின் முடிவுகளை மாற்றியமைக்குமா தெரியவில்லை. அண்மையில் வவுனியாவில் மனைவி தலையை கொய்த தமிழ்மகனின் செயலுக்கு வந்து குவிந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்களை பார்த்தால் தமிழ் சமுதாயம் ஆறாம் நூற்றாண்டையும் தாண்டி பின்னால் ஓடும்போல் உள்ளதே.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
ந‌ன்றி குரு உங்க‌ளுக்கு தனிப்ப‌ட்ட‌ முறையில் இப்போது நான் என்ன‌ நிலையில் இருக்கிறேன் என்று உங்க‌ளுக்கும் தெரியும் , இதே நிலையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் இருந்தால் யாழையே எட்டியும் பார்க்க‌ மாட்டின‌ம்😉.................. நான் ந‌ல்ல‌துக‌ளை நினைவில் வைத்து இருப்பேன் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டு விடுவேன் 👍 யாழில் கிட்ட‌ த‌ட்ட‌ 4வ‌ருட‌ம் எழுதாம‌ இருந்த‌ நான் , 2019ம் ஆண்டு இங்லாந்தில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கிண்ண‌ கிரிக்கேட் போட்டியின் போது மீண்டும் யாழில் எழுத‌ தொட‌ங்கி நான் , அர‌சிய‌ல் திரிக்குள் பெரிசா எழுதின‌து கிடையாது , கூட‌ விளையாட்டு திரிக்குள்ள‌ தான் அதிக‌ம் எழுதி இருக்கிறேன்.....................சில‌ர் விளையாட்டு திரிக்குள் பிழையான‌ த‌க‌வ‌லை சொல்ல‌ , நான் ம‌றுத்து ந‌க்க‌ல் நையாண்டி செய்யாம‌ ச‌ரியான‌ த‌க‌வ‌லை சொல்லி இருக்கிறேன் அவைக்கு............................உங்க‌ளுக்கு பொறுமையா ப‌தில் அளிப்ப‌துக்கு என் ம‌ன‌ம் இட‌ம் கொடுக்குது , சில‌ருக்கு ப‌தில் அளிக்காம‌ க‌ட‌ந்து செல்ல‌வே விரும்புகிறேன்..........................ம‌ன‌ம் விட்டு ப‌ழ‌கின‌ உற‌வுக‌ள் என்னை ந‌க்க‌ல் செய்தால் வாசித்து சிரித்து விட்டு போவேன் , சும்மா ம‌ற்ற‌வைக்கு இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுகிறோம் என‌ ந‌க்க‌ல் ப‌ண்ணுபர்க‌ளை க‌ட‌ந்து விட்டு போக‌ முடியாது , என‌து பாணியில் அவைக்கு ப‌தில் எழுதி விட்டு தான் அந்த‌ திரிய‌ விட்டு வில‌குவேன்...................... யாழில் எவ‌ள‌வோ அவ‌தூறுக‌ள் பொய்க‌ளை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பார்த்து இருக்கிறேன் , அதுக்கு த‌க்க‌ ப‌திலும் எழுதி இருக்கிறேன்........................ இதுக்கை நாம‌ என்ன‌ தான் எழுதினாலும் ஒரு மாற்ற‌மும் நிக‌ழ‌ போவ‌து கிடையாது அண்ணா...................அமெரிக்காவில் வ‌சிக்கும் இன்னொரு வ‌ய‌தான‌வ‌ர் என‌க்கு சொன்ன‌து தான் யாழ்க‌ள‌த்தை சும்மா பொழுது போக்குக்கு ப‌ய‌ன் ப‌டுத்துகிறேன் என‌ , அவ‌ரும் உங்க‌ளை மாதிரி ந‌ல்ல‌ எழுத்தாள‌ர் , இப்ப‌ அவ‌ர் எழுதாம‌ விட்டு ப‌ல‌ வ‌ருட‌ம்☹️..................... யாழில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் விளையாட்டு திரிக‌ளில் எழுதி மிம்ஸ் செய்து ப‌ம்ப‌ல் அடிச்ச‌ கால‌ங்க‌ள் என் வாழ் நாளில் ம‌ற‌க்க‌ முடியாத‌ கால‌ங்க‌ள் அவை🥰👍........................ ச‌த்திய‌மாய் அண்ணா என‌க்கு சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌லை பிடிக்காது , ஈரானுக்கு இழைக்க‌ப் ப‌ட்ட‌ அநீதிக்காக‌ சில‌ முக‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ளுட‌ன் விவாதிச்சேன் , ம‌ற்ற‌ம் ப‌டி சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌லை விட்டு நீண்ட‌ தூர‌ம் வ‌ந்து விட்டேன்..........................விளையாட்டு திரியில் மீண்டும் ச‌ந்திப்போம் குரு..................இந்த‌ திரியில் எழுதுதை இத்தோடு நிறுத்தி கொள்ளுகிறேன்👍........................

சாரதி இல்லாத டக்ஸி சேவையை ஆரம்பித்துள்ள டெஸ்லா!

1 week 5 days ago
இன்றைய கால தொழில் நுட்பங்களை நம்பி எதிலும் எங்கும் பயணிக்கவே பயமாக உள்ளது. அது சரி மனித வலுவிற்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதா? அல்லது மனித வலுவிற்கான ஊதியம் கட்ட முடியவில்லையா? எனது பார்வையில் விஞ்ஞான வளர்ச்சி தேவைதான். ஆனால் அது மனிதனை மழுங்கடிப்பதாக இருக்கக்கூடாது.

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

1 week 5 days ago
20ஓவ‌ர் ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையில் கூடுத‌ல் அணிக‌ள் குறைந்த‌து 10 , 12 பேர் க‌ல‌ந்து கொள்ள‌னும் , அப்ப‌டி க‌ல‌ந்துக் காட்டி போட்டிய‌ ந‌ட‌த்தாம‌ விடுவ‌து ந‌ல்ல‌ம்...........................

அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?

1 week 5 days ago
இந்திய சினிமா வட்டாரங்களில் போதைப்பொருள் பாவனை என்பது சர்வசாதாரணம். பல திமிங்கிலங்கள் இருக்க ஸ்ரீகாந்த் மட்டும் ஏன் மாட்டுப்பட்டார்?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
பையன் சார், நீங்கள் சொன்னது போலவே நடந்தது. இது போலவே உங்களுக்கு வேறு பல உலக விளையாட்டுகளில் இருக்கும் பரிச்சயமும், தெரிந்திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை..........👍. அரசியல் மற்றும் வரலாறு என்று வரும் போது பலரும் ஏற்கனவே ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருப்பார்கள், நான் உட்பட. பார்வைகளும் அவரவர் நிலைப்பாட்டின் வழியே தான் பெரும்பாலும் செல்லும். சிலருக்கு பரந்த வாசிப்பு இருக்கும். சிலரிடம் மிக அதிக ஞாபகசக்தி இருக்கும். இன்னொரு பார்வையில் ஒரு உறுதியான கருத்து சரியான தரவுகளுடன் வரும் போது அதையிட்டு அமைதியில்லாமல் தவிக்க வேண்டிய அளவிற்கு நாங்கள் ஒருவரும் தொழில்முறை அரசியல்வாதிகள் இல்லைத்தானே..................... மாற்றுக் கருத்துகளையும் இலேசாகக் கடந்து போவது தான் சிறப்பு. இதற்காக எங்களின் உடல், மன ஆரோக்கியத்தை இழப்பது தேவையற்றது. சரியான தரவுகளின் பின்புலம் இல்லாமல் வரும் கருத்துகள்/காணொளிகள் அம்புலிமாமா கதைகள் போல, வாசித்தவுடன்/பார்த்தவுடன் மறந்துவிடவேண்டும்................🤣.

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

1 week 5 days ago
நீங்களாகவே தெரிவு செய்தபடி, அந்தப் பலரில் நானில்லை என்பதைச் சொல்லிக் கொண்டு. உலகக் கோப்பைக்கு அணிகள் தெரிவாக வேண்டும். எல்லா உலகக் கோப்பையிலும் நடக்கிறதுதான். எட்டு அணிகள்தான் இம்முறையும்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 week 5 days ago
நான் நாத்த‌த்தை விரும்ப‌ல‌ , க‌ற்பூர‌ வாச‌னைய‌ விரும்புப‌வ‌ன்🙏🥰👍 , சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் நாத்தாம்😉 , க‌ற்பூர‌ வாச‌னை நான் நேசிக்கும் ப‌ல‌ விளையாட்டுக்க‌ள்🥰..................காலையில் எழுந்த‌தும் விளையாட்டு செய்திக‌ள் விளையாட்டு highlights பார்த்து விட்டு தான் செய்ய‌ வேண்டிய‌தை செய்வேன் , ஏதும் சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் பூதாக‌ர‌மாய் வெடித்தால் என்ன‌ ந‌ட‌க்குது என்று ப‌ல‌ த‌ள‌ங்க‌ள் போய் பார்ப்ப‌தோடு ச‌ரி , ம‌ற்ற‌ம் ப‌டி சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் என‌க்கு ச‌ரி வ‌ராது😁😛................................... இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ர‌ம்ப் த‌ங்க‌ளின் த‌ள‌ங்க‌ளை தொட்டால் ஈரான் பெருத்த‌ அழிவை ச‌ந்திக்கும் என்று சொன்னார் , இன்று அவ‌ரே போரை நிறுத்துங்க‌ள் என்று சொல்லி விட்டார் , ஊட‌க‌ங்க‌ள் கேட்க்க‌ தூச‌ன‌த்தில் ப‌தில் அளித்து போட்டு போகிறார்😁😛..............இது தான் நாத்த‌ம் பிடித்த‌ சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌ல் 😁😛, இதை பின் தொட‌ர்ந்தால் ம‌னித‌ர்க‌ளுக்கு இருக்கும் நின்ம‌தியே போய் விடும் , இங்க‌த்தை வெள்ளைய‌ல் சாக்க‌டை அடைப்பு அர‌சிய‌லை எட்டியும் பார்க்க‌ மாட்டின‌ம் , கேட்டால் அர‌சிய‌ல் பிடிக்காது என்ர‌ ஒரு வார்த்தையோட‌ முடிப்பின‌ம்👍.....................அதுக‌ளும் என்னை போல் விளையாட்டின் மீது பெரிய‌ ஆர்வ‌ம் , சின்ன‌ நாடு , 58ல‌ச்ச‌ ம‌க்க‌ள் இருந்தாலும் ஒலிம்பிக்கில் 9 , 10 ப‌த‌க்க‌ம் வெல்லுவின‌ம்👍...........................

இலங்கையின் விமானங்கள் வழமைக்குத் திரும்பின

1 week 5 days ago
இலங்கையின் விமானங்கள் வழமைக்குத் திரும்பின General24 June 2025 மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, நேற்றைய தினம் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்ட அனைத்து ஸ்ரீலங்கன் விமான சேவை விமானங்களும் தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளன. இந்தநிலையில், இன்று மாலை முதல் இந்த விமானங்கள் மீண்டும் தமது சேவைகளை வழமை போன்று முன்னெடுத்துள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார். இதனிடையே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 80 சதவீத விமான சேவை நடவடிக்கைகள் தற்போது வழக்கம் போல இடம்பெறுவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்பாட்டுக் குழுவின் தலைவர் ரோஷனி மாசகோரல தெரிவித்துள்ளார். எனினும், கட்டார் ஏர்வேஸ் விமானங்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டோஹா விமான நிலையத்தில் சில கட்டார் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் தரை செயல்பாட்டு அதிகாரிகள் பணிக்கு திரும்பாதமையால் இந்த தாமதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார் https://hirunews.lk/tm/408244/sri-lankan-flights-return-to-normal

இலங்கையின் விமானங்கள் வழமைக்குத் திரும்பின

1 week 5 days ago

இலங்கையின் விமானங்கள் வழமைக்குத் திரும்பின

General24 June 2025

1750786186_2582569_hirunews.jpg

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக, நேற்றைய தினம் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்ட அனைத்து ஸ்ரீலங்கன் விமான சேவை விமானங்களும் தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளன. 

இந்தநிலையில், இன்று மாலை முதல் இந்த விமானங்கள் மீண்டும் தமது சேவைகளை வழமை போன்று முன்னெடுத்துள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார். 

இதனிடையே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 80 சதவீத விமான சேவை நடவடிக்கைகள் தற்போது வழக்கம் போல இடம்பெறுவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்பாட்டுக் குழுவின் தலைவர் ரோஷனி மாசகோரல தெரிவித்துள்ளார். 

எனினும், கட்டார் ஏர்வேஸ் விமானங்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

டோஹா விமான நிலையத்தில் சில கட்டார் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் தரை செயல்பாட்டு அதிகாரிகள் பணிக்கு திரும்பாதமையால் இந்த தாமதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்

https://hirunews.lk/tm/408244/sri-lankan-flights-return-to-normal