3 months 2 weeks ago
தெய்வமே நீங்களும் விலகினால் என்னால் எப்படி இதற்க்குள் குப்பை கொட்ட முடியும் , சும்மா அடிச்சு விடுங்கோ , ஜபிஎல்ல யாராலும் நூற்றுக்கு நூறு சரியாக கணிக்க முடியாது கடசி ஓவருக்கு 30 ரன்ஸ் அடிச்சால் தான் வெற்றி போல் இருக்கும் தொடர்ந்து 5பந்துக்கு 5சிக்ஸ் அடிச்சு போட்டிய வெல்ல வைச்ச வீரரும் விளையாடுகிறார் அவரை போல் பல அதிரடி ஆட்டக் காரரும் விளையாடுகினம்.....................எனக்கும் ஜபிஎல் பிடிக்காது யாழ்கத்தில் போட்டி வைப்பதால் கலந்து கொள்ளுகிறேன் மற்றம் படி 2015களில் இருந்து இதுவரை பல ஜபிஎல் தொடரை நான் பார்க்க வில்லை அதற்க்கு முதல் எல்லா தொடரும் பார்த்து இருப்பேன் ஜபிஎல் தொடங்கப் பட்ட போது சென்னை அணியின் விளையாட்டை அதிகம் விரும்பி பார்ப்பேன்.............. எனக்கு ஜபிஎல்ல விட சர்வதேச 20ஓவர் உலக கோப்பை விளையாட்டுத்தான் அதிகம் பிடிக்கும்.............................
3 months 2 weeks ago
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே ...........! 😁
3 months 2 weeks ago
ஒரு மொழியை பரிட்சயமாக்கிக் கொள்ள சில காரணிகள் உள .......... அவையாவன ........! 1) நீங்கள் அரச உத்தியோகத்தர் எனில் இன்ன மொழி எழுத வாசிக்கத் தெரிந்தால் உங்களுக்கு மேலதிக கொடுப்பனவும் பதவி உயர்வும் உண்டு என அறிவிக்க வேண்டும் . ........... ( யாவரும் விழுந்தடித்துப் படிப்பார்கள் ) . 2) கடன் பட்டு வெளிநாட்டுக்கு வரவேண்டும் . .......... (கடனைக் கட்ட தினத்துக்கு 3 / 4 வேலை செய்தலும் அதற்காக அந்தந்த நாட்டு மொழிகளில் பேசுவதற்கு (எழுத வாசிக்க அல்ல ) தேர்ச்சி தானாக வந்துவிடும் ). ........ வேற வழி .........! 3) நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்நாட்டு பெண்ணை சிநேகிதியாக்கிக் கொள்ள வேண்டும் (வயது வித்தியாசத்தை கணக்கில் எடுக்கக் கூடாது .........நீங்கள் என்ன கலியாணமா செய்யப் போறீங்கள் ......இல்லைதானே ) அவளுடன் உணவகங்கள் , சினிமாக்கள், பூங்காக்கள் என்று ஊர் சுற்ற வேண்டும் . ........ இது கொஞ்சம் செலவு கூடியதுதான் ......... ஆயினும் சில நாட்களில் அந்தந்த நாட்டு ஸ்டைலில் அந்த ஊரவனே மெச்சும் அளவு உங்களுக்கு அந்த மொழி கைவசமாகி விடும் . .........! எச்சரிக்கை : பெட்டையோடு சுத்துற ஜோர்ல ஊர் கடனை மறந்திடக் கூடாது . ......... அது வட்டி குட்டி என்று போட்டுக்கொண்டிருக்கும் . ........! 😂
3 months 2 weeks ago
இதுக்கை நான் நேரத்தை ஒதுக்க காரனம் எம் உறவுகள் இப்படியான கள்ளக் கூட்டத்திடம் இனி வரும் காலங்களில் ஏமாறக் கூடாது என்ர படியால்.................நான் டென்மார்க்கு வந்து 26வருடம் ஆக போகுது , இதுவரை சிறு துளி பொறாமை கூட பட்டது கிடையாது மற்றவர்கள் மேல் இது தான் நிதர்சன உண்மையும் கூட👍..........................
3 months 2 weeks ago
பார்த்தீனியம் அழிக்கமுடியாததொன்றல்ல ஆனால் சிலருக்கு அது இருப்பது அவசியமாய் இருக்கிறது , அதனால் அதுவும் தன்பாட்டுக்கு வளர்ந்து கொண்டிருக்கு .......... ! 😁
3 months 2 weeks ago
இன்று.. குரங்கு, யானை, மர அணில் போன்றவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
உங்களது ஒப்பீடே தவறானது. நாம் இங்கு பேசுவது அர்சசுனா என்ற நபர் தமிழரின் உள்ளூர் அரசியல் மற்றும் சமூக விடயங்களில் தனது அடியாட்கள் மூலம் செய்துவரும் அழிசாட்டியங்களை பற்றி மட்டுமே. தனக்கு பிடிக்காதவர்கள் மூலம் பழி சுமத்துவதும் பெண்கள் என்றால் அவர்களின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக தனது அடியாட்கள் மூலம் அவதூறு பொழிவதும் தமிழர் சமூக வாழ்வில் சாதாரண மக்கள் வாய் திறக்க அஞ்சும் நிலமையை உருவாக்கி வருகிறார். இது தமிழரின் சமூக வாழ்வில் ஏற்படுத்த போகும் தாக்கம் பாரதூரமாக இருக்கும். அவரை கிராமத்தில் இருந்து வந்த அப்பாவி என்று மறைமுக முட்டு கொடுப்பது தவறானது. அ.அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். நீங்கள் ஒப்பிட்ட விடயங்கள் வேறு ஒரு category என்பது அரசியல் படுகொலைகள் சார்ந்தது. ராஜபக்சக்களின் இனபடுகொலையோ , ரணிலின் படுகொலைகளோ ஜேவிபின் அல்லது ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளோ இந்த திரியின் பேசு பொருள் அல்ல.
3 months 2 weeks ago
ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு. வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்பளம் வழங்குவதற்கான வழக்கமான திகதிக்கு முன்னதாக ஏப்ரல் 10 ஆம் திகதி அவற்றை வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு வார காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஊக்கத்தொகைகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரச ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளத்தை 24250 ரூபாயிலிருந்து 40000 ரூபாவாக 15750 ரூபாயால் அதிகரிக்கவும் தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்தில் இணைக்கவும் வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1425244
3 months 2 weeks ago

ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.
வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்பளம் வழங்குவதற்கான வழக்கமான திகதிக்கு முன்னதாக ஏப்ரல் 10 ஆம் திகதி அவற்றை வழங்கவும் அரசாங்கம் தயாராகி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், ஒரு வார காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஊக்கத்தொகைகள் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த அடிப்படை சம்பளத்தை 24250 ரூபாயிலிருந்து 40000 ரூபாவாக 15750 ரூபாயால் அதிகரிக்கவும் தற்காலிக இடைக்கால கொடுப்பனவு மற்றும் சிறப்பு கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்தில் இணைக்கவும் வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
https://athavannews.com/2025/1425244
3 months 2 weeks ago
ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு! முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாம் பக்தர்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினர். செயிட் அப்துல்லா செஹீத் மௌலவி “ரமழான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் இந்நிகழ்வில்சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23 மணிக்கு நோன்பு திறக்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்து நடைபெற்றது. அதனையடுத்து இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இதில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வெளிநாட்டலுவல்கள், மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1425225
3 months 2 weeks ago
வேட்பாளர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை. 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதிகளில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும் என்பதால், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு வேட்பாளரும் இதுபோன்ற இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பிறகு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் நிறைவடையும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் குறித்த திகதிக்குப் பின்னர் எந்தவொரு அணிவகுப்பு, வாகனப் பேரணி அல்லது ஒன்றுகூடல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1425247
3 months 2 weeks ago
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாளை முதல் பொது மக்களின் பார்வைக்கு. பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார் இந்த விடயம் தொடர்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கருத்துரைத்த பின்னரே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல் ஜஷீராவுக்கு வழங்கிய நேர்காணலின் போது பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என அறிவித்திருந்தார் 1980ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மீது நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவல்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கம், பட்டலந்த சித்திரவதைக் கூடத்தை விசாரிக்க ஒரு முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், அதனுடன் தொடர்புடைய அறிக்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 1998ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி வழங்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கம் அந்த அறிக்கை தொடர்பாக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார். https://athavannews.com/2025/1425250
3 months 2 weeks ago
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவு. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் காலை திருப்பலியுடன் நிறைவடைந்தது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமாகி, தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனை மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றது. இன்றைய தினம் சனிக்கிழமை, காலை 6 மணிக்கு திருச்செபமாலை ஆரம்பமாகி, யாழ் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருநாள் திருப்பலி இடம்பெற்று, திருவிழா இனிதே நிறைவடைந்தது. https://athavannews.com/2025/1425253
3 months 2 weeks ago
ஹோலி பண்டிகையின் போது 7 பள்ளி மாணவர்கள் மீது இரசாயண பொடி வீச்சு – 4 பேரின் நிலை கவலைக்கிடம். நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது. அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது. இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கடக் GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏனைய மூவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் அவ்வூர் மக்கள் இடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். https://athavannews.com/2025/1425241
3 months 2 weeks ago
‘பரமசிவன் பாத்திமா’... ஆஹா வேறை லெவல் தலைப்பு. நிச்சயம் இந்தப் படம்... இந்துக்களையும், முஸ்லீம்களையும் மற்றும் திராவிடியன்களையும் கவர்ந்து இழுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
3 months 2 weeks ago
ஜல சமாதி,ஜோதியில் சமாதி ...தாங்க முடியல்லடா சாமி ... அவருக்கு (சத்குருவின் மகளுக்கு) தொண்டு செய்கின்ற பிளான் ஏதாவது...😅
3 months 2 weeks ago
எல்லோரும் கிளி ஜோய்ஸம்தான் பார்க்கின்றவர்கள்! T20 இல் ஒன்றிரண்டு பந்துகளே மட்சை மாற்றிவிடும்! எல்லா ரீமும் கப்படிக்கவே விளையாடுகின்றார்கள்! எனவே யானையைக் கீற முயற்சிப்பதில் பிரச்சினை வராது! நிறைய statistics எல்லாம் பாவித்து இந்தப் போட்டியில் வெல்லமுடியாது. பின்வாங்காமல் கலந்துகொள்ளுங்கள்!