Aggregator

அமெரிக்க புயலில் பலர் பலி.

3 months 2 weeks ago

f_webp

f_webp

அமெரிக்க புயலில் பலர் பலி.

அமெரிக்காவின் தெற்குக்கரையால் மிசுசிப்பி அலபாமா ஊடாக உள்வரும் கனமான புயல் பல அழிவுகளை ஏற்படுத்தலாம் என்று வானிலை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.cnn.com/2025/03/15/us/tornado-outbreak-missouri/index.html

‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை

3 months 2 weeks ago
பாத்திமா பாபுவின் பேஸ்புக்கில் அவரே நேரடியாக பேஸ்புக் லைவில் இதை மறுத்தது 👇. https://www.facebook.com/fathima.babu/videos/1683119401737808/ பிகு இங்கே நான் இதை எழுதுவது ஸ்டாலினுக்கு முட்டு கொடுக்க அல்ல. மாறாக யாழ் போன்ற ஒரு தளத்தில், குறிப்பிட்ட பெண் ஒன்றுக்கு மூன்று தடவை பொதுவெளியில் இதை மறுத்த பின்னும், இந்த அவதூறை பரப்ப கூடாது என்பதால் மட்டுமே.

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago
எனக்குத் தெரிந்த பல நாட்டவர்கள், இளவயதில் சிகரெட் புகைத்து… ஒரு கட்டத்தில் அதனை நிறுத்திய பின் 60 வயதுகளில் சுவாசம் சம்பந்தப் பட்ட பெரும் பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள். முக்கியமாக அயலவர் ஒருவர் அதனால் படும் சிரமத்தை நேரில் கண்டேன். நேர காலம் இல்லாமல் நள்ளிரவில் அம்புலன்ஸ் வந்து அவர் வீட்டு வாசலில் நிற்கும். இறுதிக் காலங்களில் அவர் ஒட்சிசன் சிலிண்டருடன் தான் நடமாடினார். அவரின் நோயால்… அவரின் குடும்பத்தவர்களும் மிகவும் சிரமப் பட்டு விட்டார்கள். சிகரட் புகைப்பவர்கள் யாராவது இருந்தால்… தயவு செய்து அதனை நிறுத்தி விடுங்கள்.

‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை

3 months 2 weeks ago
ஸ்டாலினை அடிக்க வேண்டும் என்பதற்காக அநாவசியமாக பாத்திமா பாவுவை அவதூறு செய்வது ஏற்புடையதல்ல. பாத்திமா பாபு பொது வெளியில் இதை மூன்று தரம் மறுத்துள்ளார். அதன் பின் ஜெ ஆட்சியில் ஜெ க்கு நெருக்கமாக இருந்த போதும் கூட பாத்திமா இதை உண்மை என சொன்னதே இல்லை. அவரே இல்லை எனும் போது இதை நாம் காவி திரிவது அவர் மீதான அவதூறுதான். அதேபோல், தமிழின் முன்னணி வார இதழான குமுதம், 1989ம் ஆண்டு பாத்திமா பாபுவிடம் ஒரு பேட்டியை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் தொடர்பாக பரவும் செய்தி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்ததே கிடையாது. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இந்த வதந்தி சமாசாரம் முழுவதும் யாரோ ஒருவரின் கற்பனையில் பிறந்துள்ளது. என்னென்னமோ நடந்ததாக எழுதி, மேலும் மேலும் மற்றப் பத்திரிகைகளில் அதை விரிவுபடுத்தி, அரசியல்வாதிகள் அதை மேடையில் பேசி, மேடையில் பேசியதை திரும்பப் பத்திரிகையில் போட்டு… இப்படியே வளர்த்துக்கொண்டே போய்விட்டார்கள். மக்கள் மத்தியில் டி.வி மூலம் நன்கு அறிமுகமாகி, மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தி வரும் என்னைப் போல ஒரு பெண்ணையா அனாவசியமாகச் செய்திகளில் பெயர் அடிபடும்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். குமுதம் இதழில் வெளியான கட்டுரையின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதன்படி, மேற்கண்ட வதந்திக்கு, 1989ம் ஆண்டிலேயே இருவர் தரப்பிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. எனினும், சோஷியல் மீடியா வருகைக்குப் பிறகு இந்த வதந்தி புதுப் புது அவதாரம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. இது குறித்து கடந்த 2018ம் ஆண்டு கூட பாத்திமா பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் , “எத்தனை ஆண்டுகள்தான் விளக்கம் அளிப்பது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிவிட்டேன். என்னைப் பற்றி நான் சொல்வதுதான் உண்மை. அதைத்தான் நீங்கள் நம்ப வேண்டும். அதை விட்டுவிட்டு வெளியில் பலரும் கதைகட்டுவதைப் போல, மசாலா தடவிய கற்பனைப் பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது உங்கள் இஷ்டம். இதற்கு மேல் இதைப் பற்றி கேள்வி வந்தால் நான் பதில் சொல்வதாக இல்லை” என்று கூறினார். இது தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். மேலும், பாத்திமா பாபு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தன்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மத்தியில் பேசியுள்ளார். அதன் ஆடியோ விவரம் கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள். Archived link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பாத்திமா பாபு என இருவர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் தி.மு.க எதிர்ப்பாளர்கள் ஸ்டாலினை பற்றி தொடர்ந்து வதந்தி பரப்பி வருவது தொடர்ந்து கொண்டே இருப்பதாக, நமது ஆய்வில் தெரியவந்தது. 1) 30 ஆண்டுகளுக்கு முன்பு நக்கீரனில் வெளியான ஸ்டாலின் பேட்டி 2) 30 ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் வெளியான பாத்திமா பாபுவின் பேட்டி 3) கடந்த ஆண்டு ஃபேஸ்புக்கில், பாத்திமா பாபு அளித்த நேரலை ஒலிபரப்பு மேற்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் இந்த தகவல் போலிதான் என்பது தெளிவாகிறது. பாலியல் அத்துமீறல் சம்பவம் நிகழவே இல்லை என்று, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாத்திமா பாபுவே விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவரது விளக்கமே இறுதியானது. முழு கட்டுரையின் லிங்க்👇 Fact Crescendo Tamil | The leadi...பாத்திமா பாபுவை கடத்தினாரா ஸ்டாலின்? 30 ஆண்டுகளாகத் துரத்...30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேச ஸ்டாலினுக...தினமணியில் பாத்திமா பாபுவின் விளக்கம்👇. Dinamaniஸ்டாலின், பாத்திமாபாபு தொடர்பாக பல்லாண்டுகளாகப் புகைந்து...திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இளமையில் அப்போது தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக ஒரு வதந்த

முழிக்கும் மொழி

3 months 2 weeks ago
ரசோதரன் எனது நீண்டகால கேள்வி. அந்தக் காலத்தில் கணிசமான சிங்களவர் காட்லிக் கல்லூரியில் படித்ததாக சொல்கிறார்கள். வடக்கில் எத்தனையோ பெயர்போன பாடசாலைகள் ஆங்கிலப் பாடசாலைகள் இருந்தும் எப்படி ஏன் காட்லிக் கல்லூரியைத் தெரிவு செய்தார்கள்? அவர்களது குடும்பங்களும் அங்கேயே இருந்தார்களா? ஆகா தலைவா நீங்க எங்கேயோ போயிட்டீங்க. திருமணம் ஆனவர்கள் என்ன செய்யலாம் தலைவா? நான் சாப்பாட்டுக் கடைகளில் வேலை செய்யவில்லையெ என்று இப்போதும் ஒரு குறையாகவே எண்ணுகிறேன்.

‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை

3 months 2 weeks ago
பரமசிவன் (ஸ்ராலின்), பாத்திமா (பாத்திமா பாபு) கதையைத்தான் உல்டா பண்ணுகின்றார்கள் என நினைக்கின்றேன். வெளியிட்ட இருவரையும் பார்க்க… அப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது.

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago
அருமையான எழுத்தாளர் . ......... பல இடங்களில் தனது வாழ்க்கையையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்திருக்கிறார் . ........ யோகி ராம்சுரத்குமாரின் பக்தனுமாவார் . ........!

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
உண்மை தான் பாட்டிக்கு ஒரு ல‌ச்ச‌ம் கொடுத்த‌ காணொளியை காசு அனுப்பின‌வ‌ர்க‌ளுக்கு காட்டி விட்டு பொது வெளியில் போடாம‌ விட்டு இருந்தால் அந்த‌ காசை பாட்டி த‌ன‌து தேவைக்கு ப‌ய‌ன் ப‌டுத்தி இருக்கும் 92வ‌ய‌திலும் த‌ன்ட‌ கையால் உழைச்சு சாப்பிட்டு வாழ‌னும் என்ர‌ ம‌ன‌சை ஆண்ட‌வ‌ர் பாட்டிக்கு கொடுத்த‌ ப‌டியால் 92வ‌ய‌திலும் நோய் நொடி இல்லாம‌ பாட்டி வாழுது.............................

‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை

3 months 2 weeks ago
இது முஸ்லிம் (f)பாத்திமா அல்ல கிறிஸ்தவ (f)பட்டிமா. டீசரை பார்த்தால்… மதமாற்றத்தை எதிர்கிறோம் என்ற வகையில் கிறீஸ்தவர்களை போட்டு தாக்கி இருப்பதாகவே படுகிறது. வெளியிட்ட இருவரையும் பார்த்தால் இந்த சந்தேகம் வலுக்கிறது. கதாநாயகன் விமல் தெலுங்கு வம்சாவளி என தம்பிகள் இவரின் ஆதாரவாளருடன் முன்பு சண்டை பிடிப்பார்கள். விமலும் கொஞ்சம் அரசியல் கலந்துதான் பேசுவார். மறைமுக சாதிய கதைகளும் உண்டு என நினைக்கிறேன்.

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160 இலட்சம் ரூபா செலவு; வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விசாரணை அவசியமென்கிறார் அமைச்சர் பிமல்

3 months 2 weeks ago
அணிலார்…. நசுக்கிடாமல் பல அலுவல் பார்த்திருக்கின்றார்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) No Result Tie CSK KKR MI SRH 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - KKR #2 - CSK #3 - SRH #4 - MI 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! DC 74) "செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team" CSK 75) "புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team" MI 76) "வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator" KKR 77) "ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2" CSK 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) DC 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rachin Ravindra 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakravarthy 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Rachin Ravindra 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakravarthy 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Punjab Kings 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakravarthy 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Sunrisers Hyderabad

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
ஊரில் கூலி வேலைக்கு போனால் கூட‌ 1500ரூயாயில் இருந்து 2000ரூபாய் வ‌ரை ஒரு நாளுக்கு உழைக்க‌லாம் யாழ்பாண‌த்தில் 92வ‌ய‌து பாட்டி க‌ச்சான் வித்து த‌ன‌து வாழ்க்கைய‌ கொண்டு ந‌ட‌த்தின‌து , அந்த‌ பாட்டிய‌ யாரோ ஒரு யூடுப்ப‌ர் வீடியோ பிடிச்சு போட‌ அந்த‌ப் பாட்டிக்கு நிறைய‌ உத‌வி கிடைச்ச‌து இந்த‌ வ‌ருட‌ம் பாட்டிக்கு புது க‌ட்டில் புது பான் அதோட‌ உடுப்புக‌ள் , கை செல‌வுக்கு 1ல‌ச்ச‌ம் ரூபாய் கொடுக்க‌ , அடுத்த‌ நாளே பாட்டிக்கு கொடுத்த‌ ஒரு ல‌ச்ச‌ம் ரூபாய‌ யாரோ க‌ள‌வெடுத்து போட்டின‌ம்...................அடுத்த‌வேட்ட‌ கை ஏந்தாம‌ தானும் த‌ன்ட‌ தொழிலும் என்று வாழ்ந்த‌ பாட்டிக்கு , புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கும் ஒரு குடும்ப‌ம் அம்ம‌ட்டு உத‌வியை செய்ய‌ , பாட்டி வேலையில் நிக்கும் போது பாட்டியின் வீடு புகுந்து அந்த‌ ஒரு ல‌ச்ச‌ம் காசையும் ஆட்டைய‌ போட்ட‌ கூட்ட‌ங்க‌ள் ஊரில் இருப்ப‌தை நினைத்து வேத‌னை ப‌டுகிறேன்..................... ஈழ‌ ம‌ண்ணில் காசுக்காக‌ கொலையும் செய்ய‌ த‌ய‌ங்காதுக‌ள்😞................................

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
இது எங்கு போய் முடியுமோ...

சக மாணவிக்கு ஐ லவ் யூ தெரிவித்த மாணவனை பிரம்பால் கண்டித்த அதிபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

3 months 2 weeks ago
கனகராசா சரவணன் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு (ஐ லவ் யூ) தெரிவித்த அதே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக அந்த பிரதேச பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது; ஆண், பெண் பிள்ளைகள் கற்றுவரும் கலவன் பாடசாலையில் சம்பவதினமான நேற்று குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் (ஐ லவ் யூ) என தெரிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த மாணவி பாடசாலை அதிபரிடம் சென்று குறித்த மாணவன் ஐ லவ் யு என தெரிவித்ததாக முறைப்பாடு செய்ததையடுத்து அதிபர் குறித்த மாணவனை தனது காரியாலயத்துக்கு வரவழைத்து பிரம்பால் மாணவன் மீது இரண்டு அடி கொடுத்து ஒழுக்கமாக நடக்குமாறு தெரிவித்து எச்சரித்து அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவன் அதிபர் தனக்கு அடித்துள்ளார் என தெரிவித்ததையடுத்து மாணவனை பெற்றோர் மட்டு.போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/316063

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஹா ஹா பொதுவாய் சில‌ருக்கு ஜ‌பிஎல்ல‌ பிடிக்காது ஜ‌பிஎல் போட்டிய‌ க‌ணிப்ப‌து சிர‌ம‌ம் லொத்த‌ர் மாதிரி தான் ஜ‌பிஎல் விளையாட்டும்😁...........................

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
ச‌மூக‌ சேவ்வை செய்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் வால் வெட்டு ர‌வுடிக‌ள் போல் தெரியுது..................ஆர‌ம்ப‌த்தில் நான் இவ‌ரை ந‌ல்ல‌வ‌ர் என‌ நினைத்தேன்................இவ‌ரும் கோடி காசை ஆட்டைய‌ போட்ட‌வ‌ர் என்று காணொளி வெளியிடுகின‌ம்................... ஏழை ம‌க்க‌ளை காட்டி ஏன் இப்ப‌டி ஊத்தை வேலை செய்கின‌ம் இப்ப‌டியான‌ ஆட்க‌ள் ச‌முக‌ சேவ்வை செய்ய‌ த‌குதியான‌வ‌ர்க‌ள் கிடையாது.................... இவ‌கிரின் குள‌று ப‌டிக‌ளை சொல்ல‌த் தான் இவ‌ர் ர‌வுடிக‌ளை அனுப்பி வெட்டி இருக்கிறார்😡.........................

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160 இலட்சம் ரூபா செலவு; வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விசாரணை அவசியமென்கிறார் அமைச்சர் பிமல்

3 months 2 weeks ago
15 MAR, 2025 | 05:06 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது. அதற்காக அவர்கள் இவர்கள் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் இந்த நிதி குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டுமென சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க வெளிவிவகாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளுக்காக நாட்டு மக்களின் வரிப்பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏனைய அமைச்சுக்களில் காணப்படும் ஊழல் மோசடி மற்றும் நிதி வீண்விரயம் வெளிவிவகாரத்துறை அமைச்சினையும் விட்டுவைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் லண்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் தொடர்பிலான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த தனிப்பட்ட விஜயத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு செலவழித்துள்ளது. இந்த தனிப்பட்ட விஜயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார், சேனாநாயக்க திசாநாயக்க, சந்திரா பெரேரா உட்பட 10 பேர் கலந்துக் கொண்டுள்ளனர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட லண்டன் பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது. ஆரம்பத்தில் தனிப்பட்ட பயணம் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் பயணத்தின் பின்னர் அரசமுறை பயணம் என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பயணத்துக்கான செலவுகள் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வங்குரோத்து நிலைக்கு மத்தியில் மக்களின் நிதியை இவ்வாறு வீண்விரயமாக்கியுள்ளார்கள். உண்மையில் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்றார். வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளுக்காக நாட்டு மக்களின் வரிப்பணம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏனைய அமைச்சுக்களில் காணப்படும் ஊழல் மோசடி மற்றும் நிதி வீண்விரயம் வெளிவிவகாரத்துறை அமைச்சினையும் விட்டுவைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் லன்டனுக்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் தொடர்பிலான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த தனிப்பட்ட விஜயத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு செலவழித்துள்ளது. இந்த தனிப்பட்ட விஜயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாரியார், சேனாநாயக்க திசாநாயக்க, சந்ரா பெரேரா உட்பட 10 பேர் கலந்துக் கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது மனைவியின் தனிப்பட்ட லன்டன் பயணத்துக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு 160 இலட்சம் ரூபாவை செலவழித்துள்ளது. ஆரம்பத்தில் தனிப்பட்ட பயணம் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் பயணத்தின் பின்னர் அரசமுறை பயணம் என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பயணத்துக்கான செலவுகள் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வங்குரோத்து நிலைக்கு மத்தியில் மக்களின் நிதியை இவ்வாறு வீண்விரயமாக்கியுள்ளார்கள். உண்மையில் வெட்கப்பட வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சு இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சபைக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/209308