Aggregator

ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..

3 months 2 weeks ago
வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்... அர்சுனாவின் இந்த செயல் கண்டிக்கப்படவேண்டியதுதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த பக்கம் ஒரு அர்சுனா என்றால் இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் அர்ச்சுனாவினை விட மோசமானவர்கள். அதற்காக அவர்கள் அப்படியானவர்கள் என கூறி அர்சுனா செய்யும் அருவருக்கதக்க செயலை நீங்கள் மட்டுமல்ல ஒருவரும் ஆதரிக்க போவதில்லை.

‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை

3 months 2 weeks ago
‘மாரியம்மன மேரியம்மனா கும்பிட்டுட்டு இருக்கோம்’ - சர்ச்சையை கிளப்பிய ‘பரமசிவன் பாத்திமா’ இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், சாயாதேவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரமசிவன் பாத்திமா'. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் ஆகியோரால் அவர்களின் எக்ஸ் வலைதளப்பக்கங்களில் வெளியிடப்பட்டது. டிரெய்லரை பார்க்கையில், சுப்ரமணியபுரம் என்கிற இந்து கிராமத்தில் இருக்கும் விமலும் யோக்கோபுரம் என்கிற கிறிஸ்துவ கிராமத்தில் இருக்கும் சாயாதேவியும் காதலிக்கின்றனர். இவர்களின் காதலுக்கு இரண்டு கிராமமும் எதிர்ப்பு தெரிவிக்க இதனால் காதலர்கள் ஊரைவிட்டு ஓடிப்போகின்றனர். இருவரையும் காவல் துறையினர் தேடும் போது அவர்கள் ஊரைப் பற்றி விசாரிக்கையில் இரு கிராமத்திற்கும் இருக்கும் மோதல் போக்கு, மதம் மாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் தெரியவருகிறது. இறுதியில் காதலர்களைக் கண்டுபிடித்தார்களா, காதலர்கள் என்ன ஆனார்கள் என்பதை விரிவாகச் சொல்லியிருக்கும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. சர்ச்சைக்குறிய விஷயத்தை இந்தப் படம் பேசுவதால் டிரெய்லரில் வரும் காட்சிகளும் வசனங்களும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி பாதிரியாராக வரும் எம்.எஸ்.பாஸ்கரிடம், சுப்ரமணியபுரம் ஆளுங்க எப்படி எனக் கேட்க, ‘முரட்டுத்தனமான ஆளுங்க, ஆனா ஊனா வெட்டுக்குத்துன்னு இறங்குறாங்க’ என்கிறார். பின்பு யோக்கோபுரம் ஆளுங்க எப்படி என்ற கேள்விக்கு, ‘படிச்ச பிள்ளைங்க. எதிராளியக்கூட மன்னிக்ககூடியவங்க’ என்கிறார். பின்பு மற்றொரு இடத்தில் இரண்டு கிராமத்திற்கும் கலவரம் நடந்த போது ஒரு முஸ்லீம் நபர் காரணம் என்ற ரீதியில் ஒரு காட்சி இடம் பெறுகிறது. மேலும் விமல் ஒரு காட்சியில், ‘பெளிக்ஸ் மாதிரி ஆளுங்க கிட்ட பணத்த கொடுத்து மதம் மாத்த சொல்றீங்க. மாறுனவனும் மாறாதவனும் சண்டை போட்டுக்கிட்டா அதுக்கு பேரு மதக்கலவரம்னு சொல்றீங்க’ என்கிறார். அதே போல் இன்னொரு இடத்தில் விமலிடம் எம்.எஸ்.பாஸ்கர், ‘வெள்ளைக்காரங்க இங்க வரலைன்னா நீங்க பிச்சதான் எடுத்துட்டு இருக்கனும்’ என சொல்ல அதற்கு விமல், ‘அந்த வெள்ளைக்காரனே இங்க பிச்ச எடுக்கத்தான் வந்தான். என்னையெல்லாம் மாத்த முயற்சி பண்ணாத’ என பதிலளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. டிரெய்லரின் இறுதி காட்சியில், காவல் அதிகாரி எம்.எஸ்.பாஸ்கரிடம், ‘எல்லாத்தையும் மன்னிக்கிற யோக்கோபுரம் ஏன் சுப்புரமணியபுரத்த மன்னிக்கக்கூடாது’ எனக் கேட்க, அதற்கு எம்.எஸ்.பாஸ்கர், ‘அவனுங்க சரியாந்திர காட்டு மிராண்டிங்க சார். முன்னொரு காலத்துல வெள்ளக்காரவன் வந்து சர்ச் கட்டுனப்ப உள்ளுக்குள்ள வந்து மாரியம்மன் சிலையை வச்சிட்டு போய்ட்டாங்க. அதுக்கப்புறம் மாரியம்மன மேரியம்மனா கும்பிட்டுட்டு இருக்கோம்’ என பதிலளிக்கிறார். இந்த டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் விவாதங்களும் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் முன்பு எடுத்த தமிழ்க்குடிமகன் படத்தில் குலத்தொழில், சாதி உள்ளிட்ட விஷயங்களை பேசியிருந்த நிலையில் அந்தபடமும் சர்ச்சையை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. https://www.nakkheeran.in/cinema/cinema-news/paramasivan-fathima-trailer-released

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாமல் ராஜபக்ஷ

3 months 2 weeks ago
உங்களின் இராணுவம் தந்த சாட்சிகளை தானே chanel 4 வெளியிட்டது. அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்??

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
சும்மா ஏதாவதை தெரிவு செய்யுங்கள், அது அவ்வளவு கடினம் இல்லை 15 - 30 நிமிடத்தில் முடிக்கலாம், ஆனால் இந்த கேள்விகளை தயாரிக்க குறைந்த படசம் 5 - 8 மணித்தியாலங்கள் கிருபன் செலவழித்திருப்பார் (குறைந்த பட்சம்) என கருதுகிறேன். இலகுவான ஒரு ஆலோசனை எனது பதில்களுக்கு எதிரானதை தெரிவு செய்யுங்கள் உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும்.

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாமல் ராஜபக்ஷ

3 months 2 weeks ago
அது சரி ...சிங்களவர்களுக்கு நட‌ந்தால் அது சித்திரவதை படு கொலை .... தமிழர்களுக்கு நடந்தால் அது தேசிய பாதுகாப்பு அதை தான் நாங்களும் சொல்கின்றோம்...1958,77,83....நடந்த சம்பவங்களுக்கு உடனடி தீர்வை நீங்கள் வழங்கியிருந்தால் இன்று நீங்களும் உங்கன்ட அப்பாவும் இங்கு அரசியல் பேசும் நிலை வந்திருக்காது

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago
வேதனையுடன் எழுத வேண்டாம் அண்ணா. சந்தோசமாக எழுதுங்கள்.உங்களின் மன உறுதிக்கு ஒரு சபாஸ் சொல்லுங்கள். எனது யூத நண்பர் தொடர்ந்து சிகரட்டை குடித்து கொண்டே இருப்பார். 13 வயதில் புகைக்க தொடங்கி இப்போ 40 ஆகி விட்டது. சில தடவை புகைத்தலை விட்டு மீண்டும் பழைய இடத்துக்கே வந்து விடுவாராம். மனைவி, அம்மா எல்லோரும் சொல்லியும் தன்னால் விட முடியவில்லையாம். இப்போ தனது 8 வயது மகள் அப்பா புகை மணம் தாங்க முடியவில்லை. புகைத்தால் தனக்கு கிட்ட வர வேண்டாம் என கூறினாராம். இப்போ 3 மாதமாகிறது புகைத்தல் விட்டு. உடம்பின் நிறை கூடுகிறது என்றார். உடற்பயிற்சி செய். மீண்டும் புகைக்காதே என்று சொல்லி உள்ளேன். பார்க்கலாம்.

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160 இலட்சம் ரூபா செலவு; வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விசாரணை அவசியமென்கிறார் அமைச்சர் பிமல்

3 months 2 weeks ago
ஓம்…. அணிலின் நடை வித்தியாசமானது. 😂 பொதுவாக… வண்ணத்துப் பூச்சிகளின் நடை அப்படித்தான் இருக்கும். 🤣

ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..

3 months 2 weeks ago
பது தவறானது. அ.அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். நீங்கள் ஒப்பிட்ட விடயங்கள் வேறு ஒரு category என்பது அரசியல் படுகொலைகள் சார்ந்தது. ராஜபக்சக்களின் இனபடுகொலையோ , ரணிலின் படுகொலைகளோ ஜேவிபின் அல்லது ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளோ இந்த திரியின் பேசு பொருள் அல்ல. நான் இங்கு அர்ஜூனாவுக்கு ஆதரவாக பேசவில்லை ..அவரையும் சரி அவரது அடிமை சிங்கள அடியானையும் எங்கும் ஆதரவிக்கவில்லை ஆதரிக்க போவதுமில்லை. அர்ஜூனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடை பெற்ற முறைகேடுகளை வெளிகொண்டு வந்த விதமே பிழை ,அப்பொழுதே சில வைத்திய அதிகாரிகள் இது பற்றி சுட்டி காட்டினார்கள் ஆனால் "ஊழல் ஒழிப்பு "என்ற மாயை சுயமாக சிந்தித்து செயல் படும் எங்களுடைய‌ ஆற்றலை மறைத்து விட்டது... அன்று தொடக்கம் இன்று வரை அவர் செய்யும் செயல்கள் யாவும் முட்டாள் தனமாகவும்,விசமதனமாகவும் வக்கிரமாகவும் இருக்கின்றது. மக்களுக்கான பொது சேவையில் ஈடுபடும் ஒருவருக்கு/ஒருத்திக்கு சுய ஒழுக்கம் முக்கியமானது .இதை பற்றி தெரிந்திருந்தாலும் "தனி மனித சுதந்திரம்"என்ற ஒர் அதிபுத்திசாலிதனத்தை சொல்லி மறைத்து விடுகின்றோம். "இலவச மருத்துவம்,இலவச கல்வி" இவை யாவற்றையும் இல்லாமல் பண்ணி தனியார் துறைக்கு மாற்றுவதற்கு முயற்சி எடுப்பதற்கு "ஊழல்"என்ற மாயை பயன்படுத்தி வேறு சக்திகளுடன் செயல் படுகின்றாரோ என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ...வடமாகாணத்தில் ஊள்ளூராட்சி மன்றங்கள்,வடமாகாணசபை போன்றவற்றை கைப்பற்றி அங்கு தனியார் கல்வி,மருத்துவ துறைபோன்றவற்றை ஊக்கப்படுத்தும் முயற்சியோ தெரியவில்லை. அயல்நாட்டில் கல்வி,மருத்துவம் போன்ற்வை பெரிய மாபியா வியாபாரம் ..அந்த நிலையை இங்கு கொண்டுவர முயற்சிகள் நடை பெகின்றதோ தெரியவில்லை... இவர் பாராளுமன்றம் சென்று இதுவரை செய்த நல்ல காரியம் எது?ஒன்றுமில்லை ஆயிரம் தடவை பிரபாகரனின் பெயரை சொல்லி அவருக்கும் அவர் சார்ந்த அமைப்புக்கும் இனம்,அமைப்புக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விடயத்தை தவிர.. யூ டியுப்பர்கள்,வாகன விபத்துகள்,விபச்சாரம் போன்றவற்றை பாராளுமன்றம் சென்று பேசும் ஒர் ...தியம் தான் ... அவருக்கு முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை...அவரின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்தவர்கள்,அவரின் "ஊழல் ஒழிப்பு"நாடகத்தை உண்மை என நம்பியவர்கள் முட்டு கொடுக்கலாம் ...இவனுக்கு முட்டு கொடுத்து எனக்கு ஒர் லாபமும் கிடைக்க போவதில்லை .. அமிர்தலிங்கத்துடன் இவரை ஒப்பிடவே முடியாது .அவருடைய கால் தூசிக்கு கூட ஏன் அவரின் செருப்பு தூசுக்கு கிட்ட வரமுடியாது ..அந்த விளக்கம் எனக்கு இருக்கு ... இவர் பேசுவதும் அரசியல் ,நான் கூறியதும் அரசியல் வ்...விவாதம் என்ற பெயரில் சில கருத்துக்களை மட்டும் மெய் என நிருபிக்க முயல்வதும் அரசியல்...சில இனங்களுக்கு முட்டு கொடுப்பதற்கு சில இனக்களின் அழிவுகளை மறைத்து ,விவாதம் திசை திரும்புகின்றது என்பதும் அரசியல் ...

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago
உங்களுடைய மன உறுதிக்கு பாராட்டுக்கள் ஈழப்பிரியன். இங்கு பல தமிழர்கள் வந்த ஆரம்பத்தில் குடிக்க ஆரம்பித்து, அதனை நிறுத்த முடியாமல் மொடா குடிகாரர்களாகி செய்த வேலையையும் இழந்து நோயாளிகளாகி, குடும்பத்தையும் பிரிந்தவர்கள், இறந்தவர்கள் என்று நிறைய உதாரணம் சொல்லலாம். ஒரு நல்ல விடயம்… இப்போ அப்படியான செய்திகளை கேள்விப் படுவதில்லை. அடுத்த தலைமுறை இந்த விடயத்தில் முன் எச்சரிக்கையாக இருக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன்.

ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…

3 months 2 weeks ago
எம்பி அர்ச்சுனா தலைமையில் தமிழ் தலிபான்களாக மாறியுள்ள வம்பன்கள்… ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா.உ.அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், நியூ ஜப்னா,வம்பன் டொட்கொம் போன்ற பக்கங்கள், ஈழப் பெண்களை இலக்காகக் கொண்டு, அவர்களை ஒடுக்கும் வகையில் செயல்படுகின்றன… வட கிழக்கில் வாழும் பெண்கள் எப்படிச் செயல்பட வேண்டும், எதைச் சொல்ல வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும், என்ன படிக்க வேண்டும், அவர்கள் பொதுவெளியில் என்ன பேச வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வெளியில் வர வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் , யாரை திருமணம் செய்ய வேண்டும், ஏன் யாருடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் மற்றும் யாருக்கு பிள்ளை பெற வேண்டும் என்றெல்லாம் இந்த இணைய பக்கங்களை நடத்தும் காவாலிகள் தீர்மானிக்கிறார்கள்... இது சமூக ஒழுங்கை சீரழிக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது... இது தலிபான்கள் செயல்களைப் போல் ஆபத்தானதாக மாறி வருகிறது…. எல்லாவற்றிலும் காலம்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டதைப்போல எல்லா மோதல்களிலும் பெண்கள் தான் இறுதியில் இலக்கு வைக்கப்படுகிறார்கள்... அதேபோன்று தான் சமூக வலைத்தளங்களிலும் நடக்கின்றது... தமிழ் தலிபான்களாக மாறியுள்ள வம்பன்கள், டாக்டர் அர்ச்சுனா, வன்னி ஊழல் தடுப்பு அணி, அதை இயக்கும் அர்ச்சுனா அடிப்பொடி லண்டன் தமிழ் அடியான் குழுவினர் ஈழப் பெண்களை இலக்குவைத்து பிளக்மெயில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.... பொட்டம்மான் போன்ற மிகச்சிறந்த புலநாய்வுப் போராளிகள் வாழ்ந்து மடிந்த மண்ணில் அடுத்தவன் வீட்டு கழிவறையையும் படுக்கை அறையையும் எட்டிப்பார்க்கும் இந்தப் பரதேசிகள்தான் புலனாய்வுப் புண்ணாக்குகளாம்.. ஈழப் பெண்களின் ஒழுக்க காவல்துறையாம்.. ஊழல் ஒழிப்பு அணி வன்னி, பா உ அர்ச்சனா, லண்டன் தமிழ் அடியான், நியூ ஜப்னா, வம்பன் டொட்கொம், போன்றோர் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அடாவடித் தனங்கள், தலிபான்களிலும் பார்க்க மோசமானதாக மாறி வருகின்றது….

கிழவனை கண்டா வரச்சொல்லுங்க

3 months 2 weeks ago
ஓம் இந்த அம்மா ஹிந்திக்காரர்களின் தமிழ் அமைச்சராம். இவா கொண்டு பெரியாரை தாக்கி இணையத் தளங்களில் அடித்து விடப்படும் ஒற்றை வரிகளை பாராளுமன்றத்திலேயே பேச வைத்து, தங்களது சீமானை கொண்டு சாட்டை துரை முருகன் & தம்பிகளை அவாவை வீர தமிழிச்சி மற தமிழிச்சி என்று பாராட்டி புகழ்ந்து விசில் அடிக்கும் படியும் செய்துள்ளார்கள் 🤣

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160 இலட்சம் ரூபா செலவு; வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விசாரணை அவசியமென்கிறார் அமைச்சர் பிமல்

3 months 2 weeks ago
அவரிட நடையிலை தெரியவில்லையே ஆள் எப்படியான அமசடக்கி என்று

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்!

3 months 2 weeks ago
Courtesy: I.V. Mahasenan கடந்தவாரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிஏறத்தாழ ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றை பகிரும் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலே, இலங்கை அரசியலில் கொதிநிலை விவாதத்தை உருவாக்கி உள்ளது. குறிப்பாக ரணிலின் சலனம், இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரத்தை பொது வெளியில் தோலுரிப்பதாக அமைந்திருந்தது. மறுதலையாக ரணில் தனது இராஜதந்திர உரையாடலால் இலங்கையை சர்வதேச அரங்கில் பாதுகாத்துள்ளார் என்ற வாதங்களும் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது. எனினும் நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து, ரணிலின் அவசரமான ஊடக சந்திப்பில் புலி, பூச்சாண்டி மற்றும் பௌத்த சங்கங்களிடம் சரணாகதி உரையாடல்கள், தனது சலனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் நேர்காணலில் ஊடகவியலாளரால் முன்வைத்த பட்டலந்த வதைமுகாம் விவாகரம் தென்னிலங்கை அரசியலில் முதன்மையை பெற்றுள்ளது. ரணிலின் நேர்காணல் மாறாக ஈழத்தமிழர்கள் ரணிலின் சலனமான நிலைமைகளை இரசித்ததுடன் கடந்து சென்றுள்ளார்கள். இக்கட்டுரை பட்டலந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுமளவிற்கு, ரணில் விக்ரமசிங்கவின் உரையாடலில் காணப்பட்ட இனப்படுகொலை சாட்சியங்கள் போதிய கவனத்தை பெறாமைக்கான அரசியல் பலவீனங்களை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச்-06அன்று அல் ஜசீரா (Al Jazeera) எனும் சர்வதேச ஊடகத்தில் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நேர்காணல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. குறித்த நிகழ்ச்சியில் ரணிலிற்கு வழங்கப்பட்ட அறிமுகத்தை பதிவு செய்வதே, இலங்கை அரசியலில் அவரின் முக்கியத்துவத்தையும், ஈழத்தமிழர் மீதான இலங்கை அரசாங்கங்களின் ஒடுக்குமுறையில் அவரின் சாட்சியத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள இலகுவானதாக அமையும். ‘ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரச நிறுவன ஆதரவாளராகவே பார்க்கப்பட்டுள்ளார். ஒருமுறை ஜனாதிபதியாகவும் ஆறு முறை பிரதமராகவும் நிதி, தொழில் அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சராகவும் 1977ஆம் ஆண்டு முதல் இலங்கை அரச நிறுவனத்தின் அனைத்து பதவிகளையும் வகித்துள்ளார். இத்தகையதொரு இலங்கை அரச நிறுவன ஆதரவாளர், இலங்கை அரச நிறுவனத்தின் பலவீனங்களை ஏற்றுக்கொள்வது, அதனூடாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை ஏற்றுக் கொள்வதும் உயர்வான வாக்குமூலமாகும். குறித்த நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் ரணில் பதிலளிக்க முடியாத நிலையில் சலனப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் இலங்கையை வன்முறையற்ற நாடாக குறிப்பிட்டிருந்தார். உள்நாட்டுப் போர் ‘ஹிமாலய குன்றிலிருந்து நாம் வன்முறையற்ற ஒரு நாடாகும்’ என்றவாறு குறிப்பிட்டிருந்தார். அதற்கு குறுக்கிட்ட நேர்காணல் செய்பவர், ‘நீங்கள் 26 வருடங்கள் நீடித்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை பற்றி கூறுங்கள்’ என்றவாறு வினா எனுப்பினார். ‘பதில் சொல்லப் போவதில்லை’ என ரணில் மறுதலித்திருந்தார். இவ்வாறே உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், பதில் வழங்க மறுத்திருந்தார். இது வெளிப்படையாக இலங்கை அரசாங்கங்களின் பொறுப்புக்கூறலற்ற தன்மையையே வெளிப்படுத்தியிருந்தது. மேலும் பார்வையாளர் தரப்பிலிருந்து 2009ஆம் இறுதிக்கட்ட போரில் இலங்கை அரச இயந்திரம் வைத்தியசாலைகள் மீது குண்டு வீசியது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. ஆரம்பத்தில் நிராகரித்த போதிலும், பார்வையாளர்களிடம் ஏற்பட்ட கூச்சலை தொடர்ந்து வைத்தியசாலைகள் மீதான தாக்குதலை ரணில் ஏற்றுக்கொண்டார். ‘முள்ளிவாய்க்காலில் மருத்துவமனைகள் குறித்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. மற்ற சில சம்பவங்களை விசாரணை செய்தோம். கொலைகள் நடந்த சில சந்தர்ப்பங்களில் விமானப்படையின் நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனைகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று கூற முடியாது. போரின் இறுதிக்கட்டத்தில் சில பிரச்சினைகள் இருந்தன, அதனை மறுக்க மாட்டேன்’ என முன்பின் முரணாக கருத்துரைத்தார். ரணிலின் அல் ஜசீரா நேர்காணல், ஒருவகையில் ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிவிசாரணைகளை நியாயப்படுத்துவதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணிலை இனப்படுகொலையின் சாட்சியமாக்கியுள்ளது. எனினும் இத்தகையதொரு விளைவுசார் அரசியலை ஈழத்தமிழரசியலில் அவதானிக்க முடியவில்லை. சமுக வலைத்தளங்களில் மீம்ஸ்களாவும் (Memes - போன்மி), பதிவுகளாகவும் (Status) தமிழ் இளையோர்களின் ஆதங்கமே உயர்ந்தபட்ச விளைவுகளாக அமைகின்றன. அப்பதிவுகள் கடலலையில் இழுத்தடிக்கப்படும் பொருட்கள் போல் புதிய அலையில் இன்னொரு பொருளை காவிச்சென்று விடுகிறன. அரசியல் விளைவுகளை அறுவடை செய்ய வேண்டிய தமிழ் அரசியல் தரப்பின் உரைகளில் ரணிலின் நேர்காணலும் ஈழத்தமிழர்களின் நலன்களும் போதிய உள்ளடக்கத்தை பெறவில்லை. தமிழ் அரசியல்வாதிகளிடையே ரணில் தொடர்பிலான கடந்த கால விசுவாசம் நிலை பெற்றுள்ளதையே உணர முடிகின்றது. தமிழ் அரசியல் தரப்பிடமிருந்து காத்திரமான எதிர்வினைகள் ரணில் நேர்காணலில் வழங்கிய வாக்குமூலத்துக்கு கிடைக்கப்பெறவில்லை. குறைந்தபட்சம் நேர்காணலில் ரணில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கூறிய கருத்திற்கு கூட அவர்கள் எதிர்வினையாற்றியிருக்கவில்லை. இதுவொரு வகையில் ரணிலின் கருத்தை ஏற்பதாகவே அமைகிறது. 2022ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியை தெரிவு செய்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவையே ஆதரித்திருந்தது. இரகசிய வாக்கெடுப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பலரும் தமக்கே வாக்களித்ததாக அன்றைய காலப்பகுதியில் ரணில் குறிப்பிட்டிருந்தார். அதே கருத்தை அல் ஜசீரா நேர்காணலிலும் குறிப்பிட்டிருந்தார். ‘முக்கியமான தமிழ் உறுப்பினர்களில் சிலரும் எனக்கு வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களித்தனர். மற்றவர்கள் எனக்கு வாக்களித்தனர்’ எனத் தெரிவித்திருந்தார். ரணிலின் கருத்து பிழையெனில் உறுப்பினர்கள் நிராகரித்திருக்க வேண்டும். நிராகரிப்பற்ற நிலை ஏற்பதாவே அமைகின்றது. இத்தகைய உறவின் பின்னணியிலேயே ரணிலின் வாக்குமூலங்களை முன்னிறுத்தி உரையாடி, அவரை நெருக்குவாரத்துக்கு தள்ள தமிழ் கட்சிகள் விரும்பவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இயங்கிய கட்சிகளும் உறுப்பினர்களும், தமிழ்த்தேசியத்துக்கு விசுவாசமாக செயற்படுபவர்களாயின், ரணிலின் நேர்காணல் கருத்துக்கு எதிர்வினையாற்றிருக்க வேண்டியது அவசியமாகும். ரணில்-மைத்திரி 2015-2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தோடு இதயத்தால் ஒப்பந்தம் மேற்கொண்டு காதல் கொண்டிருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கௌரவ பதவியாகவே காணப்பட்டது. செயற்பாட்டில் அரசாங்க விசுவாசத்தையே வெளிப்படுத்தினார்கள். ரணிலுடன் இணைந்து ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கான கால அவகாசத்துக்கான ஆதரவை வழங்கினார்கள். சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். அவ்வாறே 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் இன்றைய தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர், ‘2005 ஆண்டில் ரணிலின் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை அவர்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள்’ என ஆதங்கப்பட்டிருந்தார். இத்தகைய செயற்பாடுகளும் உரைகளும் ரணில் மீதான தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நம்பிக்கையையே எடுத்துக்காட்டுகிறது. எனினும் ரணில், நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் உள்நாட்டு போரின் அழிவுகளுக்காக தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை நிராகரித்திருந்தார். இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் ரணிலின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி, கூட்டாக செயற்பட்டமையின் ஏமாற்றத்தையே குறிக்கிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏமாற்றம் என்பது அவர்களின் பின்னால் திரட்டப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும். ஒற்றையாட்சி தமிழ் மக்களை ரணிலின் பின்னால் அழைத்து சென்ற தமிழரசு கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் ரணிலின் பொறுப்புக்கூறலற்ற செயலை கண்டிப்பது தார்மீக கடமையாகும். எனினும் அக்கட்சிகளிடமிருந்து அத்தகைய எந்தவொரு எதிர்வினையும் வரவில்லை. இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகளும் ரணிலுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது. மேலும், தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் தேர்தல் மைய கட்சிகளாகவே உள்ளன. இலங்கையின் ஒற்றையாட்சி அரச நிர்வாக கட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு, அவ்வொற்றையாட்சி நிர்வாக கட்டமைப்பில் கதிரைகளை நிரப்புவதை இலக்காக கொண்டே செயற்படுகின்றார்கள். மாறாக தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடும் தேசிய இனமாக, ஓர் இயக்கமாக செயற்படும் மனநிலையில் இல்லை. சமகாலத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை தென்னிலங்கை அரசாங்கம் விடுத்துள்ள நிலையில், அதற்கு இழுபட்டு இயங்கும் நிலையிலேயே உள்ளனர். அதற்கான கூட்டுக்களை உருவாக்குவதிலேயே முனைப்பாக உள்ளார்கள். மாறாக ரணிலின் நேரலையில் இனப்படுகொலையின் சாட்சியமாக அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடிய சிந்தனை இல்லை. சமுகவலைத்தளங்களில் இளையோர்களிடம் உருவாகிய ஆதங்கத்திற்கு கூட தமிழ் அரசியல் கட்சிகள் வினையாற்ற தயாராக இல்லை. இது தமிழ் மக்களிடமிருந்து கட்சிகள் விலகியுள்ளமையை உணர்த்துகின்றது. இவ்விலகிலே பொதுத்தேர்தலின் வீழ்ச்சிக்கு காரணமாகியது. வீழ்ச்சியிலிருந்து படிப்பினையை கற்காதவர்களாய், அதேநிலையில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை எதிர்கொள்வதும் தமிழ் கட்சிகளின் தோல்வியையே எதிர்வு கூறுகிறது. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் தேர்தல் அரசியல் பிழையான உத்தியாக கருத முடியாது. எனினும் விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் அரசியல் போராட்டத்தில் தேர்தல் அரசியல் மாத்திரமே உத்தியாக கருத முடியாது. தேர்தல் அரசியல் ஒரு பகுதியே ஆகும். தமிழ் அரசியல் கட்சிகள் அவ்வாறானதொரு போக்குடன் இயங்குவதில்லை. சர்வதேச விசாரணையை கோரும் ஈழத்தமிழர்களிற்கு, சர்வதேச ஊடகமொன்றில் முன்னாள் ஜனாதிபதிக்கான நெருக்கீடு என்பது சாதகமானதாகும். சர்வதேச அரங்கில் வாக்குமூலமாக முன்னிறுத்தக்கூடிய பொறியாக காணப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழரசியலுடன் சர்வதேச தொடர்பு காணப்படுகின்றதா என்பதை சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தேசிய இனங்கள் சர்வதேச உறவை பேண முடியாதென விலகிட முடியாது. மேற்காசியாவில் குர்துகள் அமெரிக்காவின் ஆதரவை பெற்றுள்ளார்கள். பலஸ்தீனிய ஹமாஸ் அணியினர் ஈரான் மற்றும் அதுசார் அணியின் ஆதரவை பெற்றுள்ளார்கள். சர்வதேச உறவு என்பது அணிசேர்க்கையும் அதுசார்ந்த கூட்டு செயற்பாடுகளுமேயாகும். ஈழத்தமிழர்களிற்கு அவ்வாறான, நிலையான சர்வதேச ஆதரவு தளம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டால், தமது வாக்கு பலத்தால் அரசாங்கங்களில் தலையிட்டு, ஈழத்தமிழருக்கு சாதகமான சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ள போதிலும், அவை நிலையான வெளியுறவுக் கொள்கையாக அரச நிகழ்ச்சி நிரலுக்குள் இணைக்க முடியவில்லை. பட்டலந்த வதைமுகாம் சர்வதேச அரசியலில் எந்த ஒரு நிலையான ஆதரவையும் உருவாக்காமலேயே, வாய் வீச்சளவில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர், சர்வதேச விசாரணையையும் சர்வதேச நம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இது வெறுமனவே அவர்களின் கட்சி அரசியல் நலன் சார்ந்த விடயமாகவே அமைகின்றது. மாறாக தமிழ் மக்களுக்கான தேசிய விடுதலைக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதாக இல்லை. கிடைக்கும் வாய்ப்புக்களையே தமிழ் கட்சிகள் தொடருவதில்லை. எனினும் தென்னிலங்கை அரசாங்கம் நேர்காணலில் தமக்கு சாதகமானவற்றை தூக்கி, நேர்காணலின் இலக்கை பட்டலந்த விவகாரத்துக்குள் சுருக்கியுள்ளது. தொடர்ந்து 25 வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட பட்டலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை தூசி தட்டப்பட்டுள்ளது. தென்னிலங்கை அரசியலில் பூதாகரமான விவாதத்தை உருவாக்கிருந்தது. குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதுவொருவகையில் நேர்காணலில் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட நெருக்கடியை தளர்த்து போகச் செய்யும் தென்னிலங்கை செயற்பாடாகவே அமைகின்றது. நேர்காணலில் இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் பேசுபொருளாகிய ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் உள்நாட்டு போரின் விளைவுகளுக்கான பொறுப்புக்கூறல் என்பனவே பிரதானமாகியது. அவற்றிற்கு இலங்கை அரசே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. அதனடிப்படையில் இவ்விடயங்கள் மையப் பேசுபொருளாகுவது சமகால அரசாங்கத்திற்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகும். ஆதலாலேயே தென்னிலங்கை அரசாங்கம் தம்மை பாதுகாத்து கொள்ள, நேர்காணலை ரணில் மீது குற்றச்சாட்டை முன்னிறுத்தி பட்டலந்த விவகாரத்துக்குள் மாத்திரம் சுருக்கியுள்ளனர். எனினும் இதுவும் நிலையான முடிவை நோக்கி நகரப்போவதில்லை. பட்டலந்த விவகாரத்துக்கான முடிவு, ஈழத்தமிழர்களின் நீதிக்கோரிக்கையை வலுப்படுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கும். ஆதலால் தென்னிலங்கை அரசாங்கம் அதனை தீர்க்கமான முடிவுக்குள் நகர்த்தப் போவதில்லை என்பதே நிதர்சனம். தமிழ் அரசியல் கட்சிகள் ரணிலுக்கான விசுவாசத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் மக்களுக்கான விசுவாசத்துடன் பட்டலந்த விவகாரத்திற்கான தீர்வை பெற உந்துவது அவசியமானதாகும். எனவே, ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவிற்கு வழங்கிய நேர்காணல் சமுக வலைத்தளங்களில் இளையோர்களால் கொண்டாடப்பட்ட அளவிற்கு, தமிழ் அரசியல் கட்சிகளால் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. சர்வதேச விசாரணை எனும் கோரிக்கையை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், சர்வதேச ஊடகமொன்றில் தமிழ் மக்களுக்கு சார்பாக கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தை பலப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை. இது ஈழத்தமிழர் நலன் சார்ந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது. தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியலை செய்யாது, தென்னிலங்கை எஜமான்களை குளிர்விப்பதாகவும் - தமது அதிகார நலன்களுக்காவும் - குடும்ப கௌரவத்திற்காகவும் அரசியல் செய்யின், ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் சூனியமாகவே அமையக்கூடியதாகும். https://tamilwin.com/

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்!

3 months 2 weeks ago

Courtesy: I.V. Mahasenan

கடந்தவாரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிஏறத்தாழ ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றை பகிரும் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலே, இலங்கை அரசியலில் கொதிநிலை விவாதத்தை உருவாக்கி உள்ளது.

குறிப்பாக ரணிலின் சலனம், இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரத்தை பொது வெளியில் தோலுரிப்பதாக அமைந்திருந்தது. மறுதலையாக ரணில் தனது இராஜதந்திர உரையாடலால் இலங்கையை சர்வதேச அரங்கில் பாதுகாத்துள்ளார் என்ற வாதங்களும் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது.

எனினும் நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து, ரணிலின் அவசரமான ஊடக சந்திப்பில் புலி, பூச்சாண்டி மற்றும் பௌத்த சங்கங்களிடம் சரணாகதி உரையாடல்கள், தனது சலனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் நேர்காணலில் ஊடகவியலாளரால் முன்வைத்த பட்டலந்த வதைமுகாம் விவாகரம் தென்னிலங்கை அரசியலில் முதன்மையை பெற்றுள்ளது.

ரணிலின் நேர்காணல் 

மாறாக ஈழத்தமிழர்கள் ரணிலின் சலனமான நிலைமைகளை இரசித்ததுடன் கடந்து சென்றுள்ளார்கள். இக்கட்டுரை பட்டலந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுமளவிற்கு, ரணில் விக்ரமசிங்கவின் உரையாடலில் காணப்பட்ட இனப்படுகொலை சாட்சியங்கள் போதிய கவனத்தை பெறாமைக்கான அரசியல் பலவீனங்களை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

கடந்த மார்ச்-06அன்று அல் ஜசீரா (Al Jazeera) எனும் சர்வதேச ஊடகத்தில் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நேர்காணல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

குறித்த நிகழ்ச்சியில் ரணிலிற்கு வழங்கப்பட்ட அறிமுகத்தை பதிவு செய்வதே, இலங்கை அரசியலில் அவரின் முக்கியத்துவத்தையும், ஈழத்தமிழர் மீதான இலங்கை அரசாங்கங்களின் ஒடுக்குமுறையில் அவரின் சாட்சியத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள இலகுவானதாக அமையும். ‘ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரச நிறுவன ஆதரவாளராகவே பார்க்கப்பட்டுள்ளார்.

ஒருமுறை ஜனாதிபதியாகவும் ஆறு முறை பிரதமராகவும் நிதி, தொழில் அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சராகவும் 1977ஆம் ஆண்டு முதல் இலங்கை அரச நிறுவனத்தின் அனைத்து பதவிகளையும் வகித்துள்ளார்.

இத்தகையதொரு இலங்கை அரச நிறுவன ஆதரவாளர், இலங்கை அரச நிறுவனத்தின் பலவீனங்களை ஏற்றுக்கொள்வது, அதனூடாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை ஏற்றுக் கொள்வதும் உயர்வான வாக்குமூலமாகும். குறித்த நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் ரணில் பதிலளிக்க முடியாத நிலையில் சலனப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் இலங்கையை வன்முறையற்ற நாடாக குறிப்பிட்டிருந்தார்.

உள்நாட்டுப் போர் 

‘ஹிமாலய குன்றிலிருந்து நாம் வன்முறையற்ற ஒரு நாடாகும்’ என்றவாறு குறிப்பிட்டிருந்தார். அதற்கு குறுக்கிட்ட நேர்காணல் செய்பவர், ‘நீங்கள் 26 வருடங்கள் நீடித்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை பற்றி கூறுங்கள்’ என்றவாறு வினா எனுப்பினார். ‘பதில் சொல்லப் போவதில்லை’ என ரணில் மறுதலித்திருந்தார்.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

இவ்வாறே உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், பதில் வழங்க மறுத்திருந்தார். இது வெளிப்படையாக இலங்கை அரசாங்கங்களின் பொறுப்புக்கூறலற்ற தன்மையையே வெளிப்படுத்தியிருந்தது. மேலும் பார்வையாளர் தரப்பிலிருந்து 2009ஆம் இறுதிக்கட்ட போரில் இலங்கை அரச இயந்திரம் வைத்தியசாலைகள் மீது குண்டு வீசியது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆரம்பத்தில் நிராகரித்த போதிலும், பார்வையாளர்களிடம் ஏற்பட்ட கூச்சலை தொடர்ந்து வைத்தியசாலைகள் மீதான தாக்குதலை ரணில் ஏற்றுக்கொண்டார். ‘முள்ளிவாய்க்காலில் மருத்துவமனைகள் குறித்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. மற்ற சில சம்பவங்களை விசாரணை செய்தோம். கொலைகள் நடந்த சில சந்தர்ப்பங்களில் விமானப்படையின் நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், மருத்துவமனைகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று கூற முடியாது. போரின் இறுதிக்கட்டத்தில் சில பிரச்சினைகள் இருந்தன, அதனை மறுக்க மாட்டேன்’ என முன்பின் முரணாக கருத்துரைத்தார். ரணிலின் அல் ஜசீரா நேர்காணல், ஒருவகையில் ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிவிசாரணைகளை நியாயப்படுத்துவதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணிலை இனப்படுகொலையின் சாட்சியமாக்கியுள்ளது.

எனினும் இத்தகையதொரு விளைவுசார் அரசியலை ஈழத்தமிழரசியலில் அவதானிக்க முடியவில்லை. சமுக வலைத்தளங்களில் மீம்ஸ்களாவும் (Memes - போன்மி), பதிவுகளாகவும் (Status) தமிழ் இளையோர்களின் ஆதங்கமே உயர்ந்தபட்ச விளைவுகளாக அமைகின்றன. அப்பதிவுகள் கடலலையில் இழுத்தடிக்கப்படும் பொருட்கள் போல் புதிய அலையில் இன்னொரு பொருளை காவிச்சென்று விடுகிறன.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

அரசியல் விளைவுகளை அறுவடை செய்ய வேண்டிய தமிழ் அரசியல் தரப்பின் உரைகளில் ரணிலின் நேர்காணலும் ஈழத்தமிழர்களின் நலன்களும் போதிய உள்ளடக்கத்தை பெறவில்லை. தமிழ் அரசியல்வாதிகளிடையே ரணில் தொடர்பிலான கடந்த கால விசுவாசம் நிலை பெற்றுள்ளதையே உணர முடிகின்றது. தமிழ் அரசியல் தரப்பிடமிருந்து காத்திரமான எதிர்வினைகள் ரணில் நேர்காணலில் வழங்கிய வாக்குமூலத்துக்கு கிடைக்கப்பெறவில்லை.

குறைந்தபட்சம் நேர்காணலில் ரணில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கூறிய கருத்திற்கு கூட அவர்கள் எதிர்வினையாற்றியிருக்கவில்லை.

இதுவொரு வகையில் ரணிலின் கருத்தை ஏற்பதாகவே அமைகிறது. 2022ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியை தெரிவு செய்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவையே ஆதரித்திருந்தது. இரகசிய வாக்கெடுப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பலரும் தமக்கே வாக்களித்ததாக அன்றைய காலப்பகுதியில் ரணில் குறிப்பிட்டிருந்தார். அதே கருத்தை அல் ஜசீரா நேர்காணலிலும் குறிப்பிட்டிருந்தார்.

‘முக்கியமான தமிழ் உறுப்பினர்களில் சிலரும் எனக்கு வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களித்தனர். மற்றவர்கள் எனக்கு வாக்களித்தனர்’ எனத் தெரிவித்திருந்தார். ரணிலின் கருத்து பிழையெனில் உறுப்பினர்கள் நிராகரித்திருக்க வேண்டும். நிராகரிப்பற்ற நிலை ஏற்பதாவே அமைகின்றது.

இத்தகைய உறவின் பின்னணியிலேயே ரணிலின் வாக்குமூலங்களை முன்னிறுத்தி உரையாடி, அவரை நெருக்குவாரத்துக்கு தள்ள தமிழ் கட்சிகள் விரும்பவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இயங்கிய கட்சிகளும் உறுப்பினர்களும், தமிழ்த்தேசியத்துக்கு விசுவாசமாக செயற்படுபவர்களாயின், ரணிலின் நேர்காணல் கருத்துக்கு எதிர்வினையாற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

 ரணில்-மைத்திரி

2015-2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தோடு இதயத்தால் ஒப்பந்தம் மேற்கொண்டு காதல் கொண்டிருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கௌரவ பதவியாகவே காணப்பட்டது. செயற்பாட்டில் அரசாங்க விசுவாசத்தையே வெளிப்படுத்தினார்கள்.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

ரணிலுடன் இணைந்து ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கான கால அவகாசத்துக்கான ஆதரவை வழங்கினார்கள். சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். அவ்வாறே 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் இன்றைய தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர், ‘2005 ஆண்டில் ரணிலின் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை அவர்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள்’ என ஆதங்கப்பட்டிருந்தார்.

இத்தகைய செயற்பாடுகளும் உரைகளும் ரணில் மீதான தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நம்பிக்கையையே எடுத்துக்காட்டுகிறது. எனினும் ரணில், நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் உள்நாட்டு போரின் அழிவுகளுக்காக தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை நிராகரித்திருந்தார்.

இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் ரணிலின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி, கூட்டாக செயற்பட்டமையின் ஏமாற்றத்தையே குறிக்கிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏமாற்றம் என்பது அவர்களின் பின்னால் திரட்டப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும்.

ஒற்றையாட்சி 

தமிழ் மக்களை ரணிலின் பின்னால் அழைத்து சென்ற தமிழரசு கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் ரணிலின் பொறுப்புக்கூறலற்ற செயலை கண்டிப்பது தார்மீக கடமையாகும். எனினும் அக்கட்சிகளிடமிருந்து அத்தகைய எந்தவொரு எதிர்வினையும் வரவில்லை. இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகளும் ரணிலுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

மேலும், தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் தேர்தல் மைய கட்சிகளாகவே உள்ளன. இலங்கையின் ஒற்றையாட்சி அரச நிர்வாக கட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு, அவ்வொற்றையாட்சி நிர்வாக கட்டமைப்பில் கதிரைகளை நிரப்புவதை இலக்காக கொண்டே செயற்படுகின்றார்கள். மாறாக தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடும் தேசிய இனமாக, ஓர் இயக்கமாக செயற்படும் மனநிலையில் இல்லை.

சமகாலத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை தென்னிலங்கை அரசாங்கம் விடுத்துள்ள நிலையில், அதற்கு இழுபட்டு இயங்கும் நிலையிலேயே உள்ளனர். அதற்கான கூட்டுக்களை உருவாக்குவதிலேயே முனைப்பாக உள்ளார்கள். மாறாக ரணிலின் நேரலையில் இனப்படுகொலையின் சாட்சியமாக அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடிய சிந்தனை இல்லை.

சமுகவலைத்தளங்களில் இளையோர்களிடம் உருவாகிய ஆதங்கத்திற்கு கூட தமிழ் அரசியல் கட்சிகள் வினையாற்ற தயாராக இல்லை. இது தமிழ் மக்களிடமிருந்து கட்சிகள் விலகியுள்ளமையை உணர்த்துகின்றது. இவ்விலகிலே பொதுத்தேர்தலின் வீழ்ச்சிக்கு காரணமாகியது.

வீழ்ச்சியிலிருந்து படிப்பினையை கற்காதவர்களாய், அதேநிலையில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை எதிர்கொள்வதும் தமிழ் கட்சிகளின் தோல்வியையே எதிர்வு கூறுகிறது. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் தேர்தல் அரசியல் பிழையான உத்தியாக கருத முடியாது. எனினும் விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் அரசியல் போராட்டத்தில் தேர்தல் அரசியல் மாத்திரமே உத்தியாக கருத முடியாது. தேர்தல் அரசியல் ஒரு பகுதியே ஆகும். தமிழ் அரசியல் கட்சிகள் அவ்வாறானதொரு போக்குடன் இயங்குவதில்லை.

சர்வதேச விசாரணையை கோரும் ஈழத்தமிழர்களிற்கு, சர்வதேச ஊடகமொன்றில் முன்னாள் ஜனாதிபதிக்கான நெருக்கீடு என்பது சாதகமானதாகும். சர்வதேச அரங்கில் வாக்குமூலமாக முன்னிறுத்தக்கூடிய பொறியாக காணப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழரசியலுடன் சர்வதேச தொடர்பு காணப்படுகின்றதா என்பதை சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தேசிய இனங்கள் சர்வதேச உறவை பேண முடியாதென விலகிட முடியாது. மேற்காசியாவில் குர்துகள் அமெரிக்காவின் ஆதரவை பெற்றுள்ளார்கள்.

பலஸ்தீனிய ஹமாஸ் அணியினர் ஈரான் மற்றும் அதுசார் அணியின் ஆதரவை பெற்றுள்ளார்கள். சர்வதேச உறவு என்பது அணிசேர்க்கையும் அதுசார்ந்த கூட்டு செயற்பாடுகளுமேயாகும். ஈழத்தமிழர்களிற்கு அவ்வாறான, நிலையான சர்வதேச ஆதரவு தளம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டால், தமது வாக்கு பலத்தால் அரசாங்கங்களில் தலையிட்டு, ஈழத்தமிழருக்கு சாதகமான சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ள போதிலும், அவை நிலையான வெளியுறவுக் கொள்கையாக அரச நிகழ்ச்சி நிரலுக்குள் இணைக்க முடியவில்லை.

பட்டலந்த வதைமுகாம்

சர்வதேச அரசியலில் எந்த ஒரு நிலையான ஆதரவையும் உருவாக்காமலேயே, வாய் வீச்சளவில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர், சர்வதேச விசாரணையையும் சர்வதேச நம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இது வெறுமனவே அவர்களின் கட்சி அரசியல் நலன் சார்ந்த விடயமாகவே அமைகின்றது. மாறாக தமிழ் மக்களுக்கான தேசிய விடுதலைக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதாக இல்லை.

கிடைக்கும் வாய்ப்புக்களையே தமிழ் கட்சிகள் தொடருவதில்லை. எனினும் தென்னிலங்கை அரசாங்கம் நேர்காணலில் தமக்கு சாதகமானவற்றை தூக்கி, நேர்காணலின் இலக்கை பட்டலந்த விவகாரத்துக்குள் சுருக்கியுள்ளது. தொடர்ந்து 25 வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட பட்டலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை தூசி தட்டப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

தென்னிலங்கை அரசியலில் பூதாகரமான விவாதத்தை உருவாக்கிருந்தது. குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதுவொருவகையில் நேர்காணலில் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட நெருக்கடியை தளர்த்து போகச் செய்யும் தென்னிலங்கை செயற்பாடாகவே அமைகின்றது.

நேர்காணலில் இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் பேசுபொருளாகிய ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் உள்நாட்டு போரின் விளைவுகளுக்கான பொறுப்புக்கூறல் என்பனவே பிரதானமாகியது. அவற்றிற்கு இலங்கை அரசே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. அதனடிப்படையில் இவ்விடயங்கள் மையப் பேசுபொருளாகுவது சமகால அரசாங்கத்திற்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகும். ஆதலாலேயே தென்னிலங்கை அரசாங்கம் தம்மை பாதுகாத்து கொள்ள, நேர்காணலை ரணில் மீது குற்றச்சாட்டை முன்னிறுத்தி பட்டலந்த விவகாரத்துக்குள் மாத்திரம் சுருக்கியுள்ளனர்.

எனினும் இதுவும் நிலையான முடிவை நோக்கி நகரப்போவதில்லை. பட்டலந்த விவகாரத்துக்கான முடிவு, ஈழத்தமிழர்களின் நீதிக்கோரிக்கையை வலுப்படுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கும். ஆதலால் தென்னிலங்கை அரசாங்கம் அதனை தீர்க்கமான முடிவுக்குள் நகர்த்தப் போவதில்லை என்பதே நிதர்சனம். தமிழ் அரசியல் கட்சிகள் ரணிலுக்கான விசுவாசத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் மக்களுக்கான விசுவாசத்துடன் பட்டலந்த விவகாரத்திற்கான தீர்வை பெற உந்துவது அவசியமானதாகும்.

எனவே, ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவிற்கு வழங்கிய நேர்காணல் சமுக வலைத்தளங்களில் இளையோர்களால் கொண்டாடப்பட்ட அளவிற்கு, தமிழ் அரசியல் கட்சிகளால் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. சர்வதேச விசாரணை எனும் கோரிக்கையை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், சர்வதேச ஊடகமொன்றில் தமிழ் மக்களுக்கு சார்பாக கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தை பலப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

இது ஈழத்தமிழர் நலன் சார்ந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது. தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியலை செய்யாது, தென்னிலங்கை எஜமான்களை குளிர்விப்பதாகவும் - தமது அதிகார நலன்களுக்காவும் - குடும்ப கௌரவத்திற்காகவும் அரசியல் செய்யின், ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் சூனியமாகவே அமையக்கூடியதாகும்.  

https://tamilwin.com/

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது

3 months 2 weeks ago
சிறி நான் 14 வயதில் புகைக்க பழகி அதற்கு அடிமையாகி 97ம் ஆண்டு இருதயநோய் வரும்வரை புகைத்துக் கொண்டே இருந்தேன். எனக்கு புகையால்த் தான் நெஞ்சுவலியே வந்திருக்கிறது. இதை ஒரு சவாலாக எடுத்து புகைக்கவே மாட்டேன் என்று எண்ணி இன்றுவரை புகைப்பதில்லை. அதேபோல அந்த வயதிலேயே ஆனைக்கோட்டை பனம் கள்ளு என்று தொடங்கி காலப்போக்கில் ஒரு குடிகாரனாகவே மாறிவிட்டேன்.குடிக்காக நாளே இல்லை என்றே சொல்லலாம். 1987இல் காய்ச்சல் வந்து மாறவே மாட்டேன் என்றது.ஆனைப்பந்தியில் இருந்த தனியார் வைத்தியசாலையில் பலநாட்கள் இருந்தேன். இரத்த சோதனையில் குடியினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதாக சொன்னார்கள். அதோடு விட்ட குடி இப்போதும் தொடுவதில்லை. இத்தனைக்கும் எனது நண்பர்கள் அங்கும் சரி இங்கும் சரி எல்லோருமே குடிப்பார்கள்.அவர்களுக்கு மத்தியில் இருப்பேன். இதை மிகவும் வேதனையுடனே எழுதுகிறேன்.

அமெரிக்க புயலில் பலர் பலி.

3 months 2 weeks ago
அமெரிக்க புயலில் பலர் பலி. அமெரிக்காவின் தெற்குக்கரையால் மிசுசிப்பி அலபாமா ஊடாக உள்வரும் கனமான புயல் பல அழிவுகளை ஏற்படுத்தலாம் என்று வானிலை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.cnn.com/2025/03/15/us/tornado-outbreak-missouri/index.html