Aggregator

காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
டிரம்பென்ற ஒரு கசமாரிக்கு வாக்களித்த முசல்மான்கள்தான் இதற்கு காரணம். அல்லது பென்சில்வேனியா, மிச்சிக்கன் டிரம்பிற்கு போயிருக்கமாட்டிது.

அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!

3 months 2 weeks ago
முகநூலில் இருந்து.. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கிறேன் என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். சக பா.உ சந்திரசேகரன் அவர்களை சீண்டி மலையக மக்களை இழிவுபடுத்தினார் டாக்குத்தர் அர்ச்சுனா. படிச்சவன் எல்லாம் அறிவுஜீவி என்ற கணக்கில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நீ என்ன படிச்சனி? பல்கலைக்கழகம் போனனியா? உன்ரை கல்வித் தகைமை என்ன? என அசல் யாழ்ப்பாண கல்விப் பவுசு மனநிலையின் கைதியாக உழல்கிறார் அவர். இப்போ பெண் அரசியல் செயற்பாட்டாளரை "விபச்சாரி" என விளித்து ஒரு ஆணாதிக்க ஒழுக்கவாதியாகி தாக்குதல் தொடுக்கிறார். அந்த பெண் செயற்பாட்டாளரின் அரசியல் அறிவுக்கும் தத்துவார்த்த அறிவுக்கும் ஈடுகொடுக்க அவரது டாக்குத்தர் சான்றிதழினதும் மும்மொழி அறிவினதும் போதாமையானது மனித இழிவுபடுத்தலை அவரிடமிருந்து முன்தள்ளுகிறது. நமது இயக்கங்கள் ஒழுக்கவாதங்களை கேள்விக்கு உட்படுத்தி முன்னேறாமல் அதற்குள் சுழன்று திரிந்தவர்கள். வறுமை துரத்தி பால்வினைத் தொழிலுக்குள் தள்ளிய பெண்களை 'சமூக விரோதி' என மின்கம்ப தண்டனை வழங்கியவர்கள். அந்த நிலைக்கு தள்ளிய அரசியல் பொருளாதார சமூக காரணிகளை கட்டவிழ்த்து செயற்பட வக்கில்லாமல் தேங்கிய அறிவுடன் இருந்தது மட்டுமன்றி, பால்வினை செயற்பாட்டை நுகரும் ஆண் பட்டாளமின்றி பால்வினைத் தொழில் எவ்வாறு இயங்குநிலையில் இருக்கும் என்ற தர்க்க அறிவுகூட இல்லாமல் இருந்தனர். அதிகாரத்தாலும் ஆயுதத்தாலும் சட்டத்தாலும் பெண்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்தியதற்கு அப்பால் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்தியல் போராட்டம் புலிகளின் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் காத்திரமாக இருந்ததில்லை. வளர்ச்சி அடையவுமில்லை. அதனாலேயே தப்பிப் பிழைத்த புலிப் பெண் போராளிகளை இயக்கத்தவர் மட்டுமல்ல சமூகமும் கீழ்நிலைக்கு தள்ளி வாழ்வாதாரத்துக்கு வழியற்றவர்களாக ஆக்கியது. ஆணாதிக்க கற்பிதங்களை நொருக்கிக் காட்டிய அவர்களை பெருமையாக கொண்டாட வேண்டிய சமூகம், போரின் பின் அதே போர்க்குணத்தை 'பெண்மை'க்கு எதிரானதாக நிறுத்திய அவலம் நடந்தது. அவர்களை திருமணம் செய்ய சமூக ஆண்கள் உட்பட ஆண் போராளிகள்கூட பின்னின்றனர். இதன்வழி வந்த இன்றைய கலாச்சார காவலர்கள் யூரியூப் தொடக்கம் பாராளுமன்றம் வரை பேசுகிற பேச்சுகளில் அறிவு கிழிந்து தொங்குகிறது. 'பாலியல் வல்லுறவு' என்ற வார்த்தையை பாலியல் வன்புணர்வு, பாலியல் வல்லுறவு எனவும் 'விபச்சாரம்' என்பதை பாலியல் தொழில், பால்வினைத் தொழில் எனவும் இலங்கையின் தமிழ் செய்திப் பத்திரிகைகள்கூட எழுதத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. புகலிட மாக்சியர்கள் ஒருசிலர் கூட இப்போதும் 'பாலியல் வல்லுறவு', 'விபச்சாரம்' (அரசியல் விபச்சாரம்) என எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க மொழி, ஆணாதிக்க ஒழுக்கவாதம் என்பவற்றை தாண்ட முடியாமல் அவதிப்படுகிற நிலை அவர்களது. சக மனிதரை உடல் அவமதிப்பு அல்லது அறிவு அவமதிப்பு செய்கிற நிலை இன்னொருபுறம் பெரும்பாலானவர்களிடமும் இருக்கிறது. மிருகங்களை உருவகப்படுத்தி பேசுகிற நிலை காணப்படுகிறது. ஒருவேளை நாயோ குரங்கோ பேசும் வல்லமை கொண்டிருந்தால் மனிதர்களுக்கு அவை -தமது தனித்துவம் குறித்து- வகுப்பெடுக்க வேண்டி வந்திருக்கும். இந்த எல்லா கசடுகளையும் மூளைக்குள் வைத்துக்கொண்டு மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் போய்வருவதற்கு டாக்குத்தருக்கும் வேறு பலருக்கும் கோட்டும் சூட்டும் வெள்ளை வேட்டியும் பவுசும் வேறு தேவைப்படுகிறது. Ravindran Pa நன்றி https://www.facebook.com/share/p/15vnSeGRsx/?

காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
Israel - Gaza : மீண்டும் போரை தொடங்கியிருக்கும் இஸ்ரேல்... காஸா மீது தாக்குதல்; 300 பேர் பலி VM மன்சூர் கைரி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்குப் பிறகு இஸ்ரேல் நடத்தியிருக்கும் மிகக் கொடூரமான தாக்குதல் இது. குறிப்பாக அகதிகள் தங்ககியிருந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. Isreal - Gaza ஜனவரி மாதம் தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று அதிகாலை முதல் காஸா முழுவதும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். காஸா நகரம், டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ், ரஃபா உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததற்குப் பிறகு இஸ்ரேல் நடத்தியிருக்கும் மிகக் கொடூரமான தாக்குதல் இது. குறிப்பாக அகதிகள் தங்ககியிருந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. Isreal - Gaza இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு இஸ்ரேல், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக காஸா சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதேபோன்று சிரியா, லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போரைத் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. https://www.vikatan.com/government-and-politics/more-strikes-hit-gaza-death-toll-rises-to-more-than-300

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

3 months 2 weeks ago
சுனிதா வில்லியம்ஸ்... 9 மாதங்களின் பின், விண்வெளியில் இருந்து.. நாளை பூமி திரும்புகின்றார். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு பூமியில் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள். இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 2024 ஜூன் 5 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 286 நாட்களுக்கு மேல் தங்கியுள்ளார். மொத்தம் 600 நாட்களுக்கு மேல் விண்வெளியில் செலவிட்டு, பெண் விண்வெளி வீரர்களில் சாதனை படைத்தவர். 2025 மார்ச் 26 அன்று ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9 விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார். ஆனால், விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கிய பிறகு, பூமியில் அவரது அன்றாட வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? 1. உடல் ரீதியான மாற்றங்கள்: தசை மற்றும் எலும்பு பலவீனம்: புவியீர்ப்பு இல்லாத சூழலில், தசைகள் 20-30% பலவீனமாகி, எலும்பு அடர்த்தி 1-2% குறையும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும், முதல் சில வாரங்கள் நடப்பது, படிக்கட்டு ஏறுவது சிரமமாக இருக்கும். 2007 இல் திரும்பியபோது, "நடப்பது மறந்துவிட்டது போல உணர்ந்தேன்" என்று கூறினார். இருதயம்: இரத்தம் மேல்நோக்கி செல்வதால், இதயம் சிறிது சுருங்கி, தலைச்சுற்றல் ஏற்படலாம். திடீரென எழும்போது மயக்கம் வரலாம். பார்வை: கண்களுக்கு பின்னால் அழுத்தம் (SANS) ஏற்பட்டு, பார்வை மங்கலாகலாம். 2. மன ரீதியான விளைவுகள்: தனிமை: சில மாதங்களுக்கு மேல் குடும்பத்தை பிரிந்து, சிறிய இடத்தில் வாழ்ந்தது மன அழுத்தத்தை தரலாம். 2012 இல், "என் நாயை மிஸ் செய்தேன்" என்று பகிர்ந்தார். புவியீர்ப்பு மனதுக்கு சோர்வை ஏற்படுத்தலாம். கூட்டமும் சத்தமும் முதலில் அந்நியமாக தோன்றலாம். 3. அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்: உணவு: விண்வெளியில் உலர்ந்த உணவுக்கு பிறகு, புதிய பழங்கள், பீட்சா சுவையாக இருக்கும். செரிமானத்தில் சிறு சிரமம் ஏற்படலாம். தூக்கம்: ஒரு நாளில் 16 முறை சூரிய உதயம் பார்த்த பிறகு, 24 மணிநேர சுழற்சிக்கு பழக, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் வரலாம். சமூகம்: பெரிய கூட்டத்தில் பழக சிறிது நேரம் தேவைப்படும். மீட்பு: நாசாவின் மறுவாழ்வு திட்டத்தில், மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் உதவுவர். 1-3 வாரங்களில் நடப்பது சரியாகும், 3-6 மாதங்களில் முழு உடல் வலிமை திரும்பும். சுனிதாவின் மன உறுதியும், குடும்ப ஆதரவும் (கணவர் மைக்கேல், செல்ல நாய்கள்) அவரை விரைவாக மீட்க உதவும். Zen Murugesh

ஒளரங்கசீப் கல்லறை விவகாரம்: நாக்பூரில் வெடித்த வன்முறை!

3 months 2 weeks ago
ஒளரங்கசீப் கல்லறை விவகாரம்: நாக்பூரில் வெடித்த வன்முறை! மகாராஷ்ராவின் , ஔரங்கபாத் நகரில் உள்ளமுகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றுமாறு இந்துத்துவா அமைப்பினர் கோரிக்கை விடுத்த விவகாரம் பாரிய பூதாகாரமாக வெடித்துள்ளது நிலையில் நேற்றைய தினம் நாக்பூரில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிர முதல்வரும் பா.ஜ.க தலைவருமான தேவேந்திர பட்னவீஸ், “ஒளரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தமை” பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் இந்திய ரூபாய் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பொன்றும் அறிவித்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருறந்து. இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் என்ற அமைப்பினர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வேளை நாக்பூரில் பாரிய வன்முறை வெடித்துள்ளதாகவும், இதன் காரணமாக பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதை அடுத்து வன்முறை தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது அமைதி நிலவுகிறது. இந்நிலையில் ஔரங்கசீப் கல்லறையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, அதைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பொலிஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‘முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் கொடூரமானவர்தான், மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனை படுகொலை செய்தவர்தான். ஆனால் மராத்தியர்களின் பேரரசை ஒளரங்கசீப்பால் கைப்பற்ற முடியாமல் போனது. ஒளரங்கசீப்பின் கல்லறை நூற்றாண்டுகளாக இருக்கிறது. அவருடைய தவறான நடவடிக்கைகளை நினைவூட்டக் கூடியதாகவும் இந்த கல்லறையைப் பார்க்கலாம். ஒளரங்கசீப்பை புகழ்ந்து பேசுவது எல்லாம் தேவையற்றது. அதை அகற்றுவது எந்த நோக்கத்திற்கும் உதவாது. இப்பிரச்னையை மீண்டும் கிளப்ப வேண்டிய அவசியமில்லை’ என தெரிவித்துள்ளார். இதேவேளை மத்திய அமைச்சரும் நாக்பூர் எம்பியும் நிதின் கட்கரி, ‘தவறு செய்தவர்கள் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நான் உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். இந்த நிலைமை குறித்து முதலமைச்சருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1425589

2 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை!

3 months 2 weeks ago
2 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை! ஹங்கேரியில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன்(Viktor Orbán) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு 30 வயது வரை வருமான வரியிலிருந்து விலக்கும், அதே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு, 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் தாய்மார்களுக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் விலக்கு என்று அறிவிக்கப்பட்ட திட்டம்தான், தற்போது விரிவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில்,அதற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளம்பெற்றோருக்கு உதவுவதற்காக ஹங்கேரி அரசு ஏற்கெனவே, வட்டி இல்லா கடன், 3 குழந்தைகள் பிறந்த பின்னர் கடன் இரத்து போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425581

காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்திய சமாதான கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், ஹமாஸ் இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருந்தது ஆனால், காசாவில் பெரும்பாலான உயிரிழப்புகள் பொதுமக்களே என காசா சுகாதார அமைச்சு தெரிவிக்கிறதுடன் இந்த தாக்குதல்கள் காசாவில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன. மேலும் மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர், மேலும் உணவு, தண்ணீர் மற்றும் வைத்திய வசதிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது https://athavannews.com/2025/1425578

காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago

Israel-hamas-gaza-war-GettyImages-171497

காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை வான்தாக்குதல்-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சமீபத்திய சமாதான கலந்துரையாடல்கள் தோல்வியடைந்ததை அடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஹமாஸ் இலக்குகளை மட்டுமே தாக்குவதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியிருந்தது

ஆனால், காசாவில் பெரும்பாலான உயிரிழப்புகள் பொதுமக்களே என காசா சுகாதார அமைச்சு தெரிவிக்கிறதுடன் இந்த தாக்குதல்கள் காசாவில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன.

மேலும் மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர், மேலும் உணவு, தண்ணீர் மற்றும் வைத்திய வசதிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

https://athavannews.com/2025/1425578

ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..

3 months 2 weeks ago
உங்கள் அர்சனாவும் அவரது அடி பொடிகளான வன்னி அணியும் தமிழ் பெண்கள் மீது மேற்கொண்ட அவதூறுகளுக்கு ஆதாரம் உண்டா வாத்தியாரே. பெண் யூருப்பர் சங்கவி மீது அபாண்டமான அவதூறுகளை தனது வன்னி அணி மூலம் பரப்பி அதை தானே share செய்து அர்சசனாவிடம் நீங்கள் அதற்கு ஆதாரம் நீங்கள் கேட்கவில்லையே! அந்த பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நேர்மையாக காணொளி மூலம் அர்சனாவிடம் நீதி கோரிய போது, அதற்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு அர்சனா சைக்கோ ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில் அந்த பெண்மீது மீது தானே நேரடியாகவே அவதூறுகளும் இழிவு படுத்தும் விதாமாகவும் ஒரு சைக்கோவை போல் பேசியிருந்த அரச்சனாவிடம் ஆதாரம் கேட்டீர்களா? அர்சனாவின் அந்த அவதூறு காணொளியை பார்தத பின்னும் அவரை ஆதரிப்பவர்களும் மன நிலை பாதிக்கப்பட்ட சைக்கோக்களே.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
உண்மையா அப்பிடி நடந்திருக்கும் போல. அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே பேச்சுவார்த்தை தகர்ந்தது. இனி நேரடித்தாக்குதல் தான். போட்டியில வென்று பொட்டிய தூக்குவம்.

மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?

3 months 2 weeks ago
இது மிகவும் பொத்தாம் பொதுவாக மாயவலைக்குள் சிக்கிக்கொள்ளும் மனிதர்களைப் பற்றித் தான். நாங்களே சில கருதுகோள்கள், உறவுகள், நம்பிக்கைகளில் வலை பின்னி பின் அதற்குள் அகப்பட்டு விடுகிறோம், உண்மைகள் தெரிய வரும் போதும் அந்த வலைகளை அறுக்க முடிவதில்லை. உண்மைதான், ஏஐ நாங்கள் நினைப்பதை வரைய உதவியாய் இருக்கிறது, சரியான வகையில் கட்டளைகளைக் கொடுத்தால். அதற்கு முதல் நம் கற்பனையில் நமக்கு என்ன வேண்டும் என்பது உதிக்க வேண்டும். பொதுவாகவே நமக்கு ஓவியத்தின் / ஓவியனின் அருமை தெரிவதில்லை, இனிமேல் ஏஐ க்கு பிறகு இன்னும் மோசமாகும் என்று தான் நினைக்கிறேன் 😆.

வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!

3 months 2 weeks ago
கிரிமினல்களை மட்டும் அனுப்பினால் நல்லது. இவர் எல்லோரையுமே பிடித்து அனுப்புகிறாரே?