Aggregator

வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!

3 months 2 weeks ago
ஓம் ஒம் சிலவேளை அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த பாதளக்குழு உறுப்பினர்கள் கிரிமினல்களை பிடித்து இலங்கைகு அனும்பும்போது ...உங்களையெல்லாம் சேர்த்து அனுப்பி விடுவார்கள் 🤣🤣🤣🤣 கவனம் இது கண்டிக்க வேண்டியது தான்

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் .........! ஆண் : ஆஆஆ ஆஆஆ ஹ்ம்ம் ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம் கானல் நீரால் தாகம் தீராது பெண் : இணைந்திடாது போவதோ வானம் பூமி ஆவதோ காலம் சிறிது காதல் மனது தேவன் நீதான் போனால் விடாது ஆண் : தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி பெண் : அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ ஆண் : ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ பெண் : எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும் ஆண் : எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ பெண் : கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா பெண் : காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள் பருவமோகம் தந்தது பாவம் அல்லவே ஆண் : ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது பெண் : இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே ஆண் : அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே பெண் : விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய் பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே இளங்கன்னி உன்னுடன் கூட வா வா ஆண் : ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி பெண் : நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட பெண் : காதல் கீர்த்தனம் காணும் மங்களம் பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும் ........! --- ஓ பிரியா பிரியா ---

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
அதிவிவேக பூரணகுருவின் சீடர்கள் மாதிரி பையா மூலவர் கிருபனை விட்டுட்டு கணக்கெடுக்கிறீங்கள் .......... அவரும் இதுதான் சாட்டு என்று நழுவப் போகிறார் ........விடாதையுங்கோ .......! 😂

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
@Eppothum Thamizhan ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் @நீர்வேலியான் அண்ணா @புலவர் அண்ணா ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் க‌ல‌ந்த‌ உற‌வுக‌ள் போல் 24 அல்ல‌து 25 பேர் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம்.......................................

யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் கௌசல்யா!

3 months 2 weeks ago
அர்ச்சுனா வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து அந்த இடத்திற்கு கௌசல்யாவை நியமிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். இப்போ கௌசல்யா யாழ். மேயர் வேட்பாளர் என்றால்… அப்போ சொன்னது பொய்யா கோபால். 😂

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.

3 months 2 weeks ago
அன்பார்ந்த போராளிகளுக்கு..! -மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம். March 17, 2025 அன்பார்ந்த போராளிகளே.! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பல வரலாற்றுச் சாதனைகளை படைத்த காலத்தில் தேசியத் தலைவரின் நேரடி வழிநடத்தலில் களமாடியவர்கள் நீங்கள். தமிழர் போராட்ட வரலாற்றில் புதிய புறநானூற்று வரலாறு படைத்த எம் ஒப்பற்ற பெருந்தலைவரின் உள்ளுணர்வாக, தேசியத் தலைவரின் வரலாற்றுப்படிமங்கள் பலவற்றை தாங்கிவரும் ஆக்கங்களை தொகுத்து நூலாக்கி,வரலாற்று ஆவணப்படுத்தல் ஒன்றினை செய்துவிட முயற்சிக்கின்றோம். தேசியத் தலைவரின் தன்னுணர்வுகளை, தூரநோக்கான சிந்தனையை, பட்டறிவின் பண்பினை, பல விடயங்கள் பற்றி அவாவி நிற்கும் அவரது ஆவல்களை, ஒரு பெரும் போரை நடாத்தி அதேசமயம் தமிழ் மக்களின் பல்துறை சார் வளர்ச்சிக்காக தமிழ்த்தேசத்தின் கட்டுக்கோப்பான எதிர்கால விருத்திக்கான அவரது எண்ணப்பாங்குகளை, தமிழ் மக்கள் அனைவருமே மிக்க விருப்புடன் அறியமுற்படும் அறிய விரும்பும் தேசியத் தலைவரின் ஆளுமை, அவரது தனித்த எண்ணங்கள் பற்றிய பூரண வடிவத்தையும், வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகளாக தங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது எம் இளைய தலைமுறையினருக்கு ஒரு அதிசய நூலாக அமையப்பெறவேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு. ஆக்கங்கள் உண்மையானதும், ஆதாரபூர்வமானதாகவும் அமைவது மிகவும் அவசியமானது. இணைய ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ ஏற்கனவே வெளியான ஆக்கங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வடிவமைப்பு,தெளிவுபடுத்தல் நோக்கங்களுக்காக கருத்தில் மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களை நூலாக்க குழுவினர் மேற்கொள்வார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறோம். தங்கள் ஆக்கங்கள் கணனிப்படுத்தப்பட்டு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுவதோடு, 200 சொற்களுக்கு மேற்படாதவாறு இருப்பதனை வரவேற்கிறோம். ஆக்கங்கள் 05 மே 2025க்கு முன்னர் அனுப்பிவைப்பது காலச்சிறந்தது. அன்பானவர்களே! தங்களின் ஆக்கங்களுடன் தங்களைப் பற்றியதான சிறிய அறிமுக குறிப்பு ஒன்றினை எழுதி அனுப்புமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தங்களால் அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்களில் தெரிவு செய்யப்பட்டவை, எதிர்வரும் 08 மாதம் அளவில் நடக்கவிருக்கும் எமது தேசியத் தலைவரின் “வீரவணக்க நிகழ்வில்” வெளியிடப்படவுள்ள நூல் மூலம் உலகத் தமிழ் மக்களின் கைகளில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து உள்ளோம். தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான ஒரு படைப்பாக்கம் வெளிவர அனைவரும் இணைந்து பயணிப்போம். மின்னஞ்சல் :- methaguvarikal@gmail.com புலனம் :- +61 494 387 427 “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” நிலவன் தொகுப்பாளர் நூலாக்க குழு மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம். https://www.uyirpu.com/?p=19552 அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே…! – மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம். March 17, 2025 அன்பார்ந்த கவிப் பெருந்தகைகளே! ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இறுதிமூச்சுவரை களமாடி, தாய்மண்ணிலே விதையாகிய மாவீரர்கள் வரிசையில் எங்கள் ஒப்பற்ற தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களும் வீரவரலாறாகினார். தேசியத்தலைவர் படைத்துச்சென்ற வீரமிகு போராட்ட வரலாற்றை பெரும் ஆவணப் பொக்கிசமாக உருவாக்கி அதனை எம் எதிர்காலச் சந்ததிக்கும் உலகமெல்லாம் பரந்துவாழும் தமிழர் தலைமுறைக்கும் கையளிக்கும் உன்னத நோக்கோடு.. “கவிதைத்தொகுப்பு” ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே இந்த மண்ணை, மரபை, மக்களை நேசித்த அந்த மகத்தான மாபெரும் வீரத் தலைவனுக்கு… உங்கள் கவிதைகளால் உயரிய காவியம் படைக்க தங்களிடமிருந்து…உணர்வுபூர்வமான கவிதைகளை வேண்டி நிற்கின்றோம். “இது உங்கள் தலைவனுக்கு நீங்கள் அர்ச்சிக்கும் கவிதைப் பூக்கள் ஆகட்டும்” அந்தக் கவிதைகள் எங்கள் தலைவன் மகிமைதனைக் கூறட்டும். சமர்ப்பிக்கும் கவிதை உங்களுடைய சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும் இணைய ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ ஏற்கனவே வெளியான ஆக்கங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். உங்கள் ஆக்கங்கள் கணனிமயப்படுத்தப்பட்டு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படுவதோடு, குறைந்தபட்ச கவிதை வரிகள் : நான்கு வரிகள் அதிகபட்ச கவிதை வரிகள் : நாற்பது வரிகள் மேற்படாதவாறு இருப்பதனை வரவேற்கின்றோம். தங்கள் ஆக்கங்கள் 05 மே 2025க்கு முன்னர் அனுப்பிவைப்பது காலச்சிறந்தது. வடிவமைப்பு,தெளிவுபடுத்தல் நோக்கங்களுக்காக கருத்தில் மாற்றம் செய்யாமல் சில மாற்றங்களை நூலாக்க குழுவினர் மேற் கொள்வார்கள் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிக்கிறோம். தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வாறான ஒரு படைப்பாக்கம் வெளிவர அனைவரும் இணைந்து பயணிப்போம். மின்னஞ்சல் :- methagukavitai@gmail.com புலனம் :- +61 494 387 427 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நன்றி நிலவன். தொகுப்பாளர், நூலாக்கக் குழு, மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம். https://www.uyirpu.com/?p=19560

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற “அமில வதைகளை அம்பலப்படுத்துக” - ஞானமுத்து ஸ்ரீநேசன்

3 months 2 weeks ago
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற “அமில வதைகளை அம்பலப்படுத்துக” கனகராசா சரவணன் பட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், தமிழ் மக்கள் என்பதற்காக அதை மூடிமறைத்துவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மட்டு. ஊடக மையத்தில் திங்கட்கிழமை(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 1988 ஆம் ஆண்டு இயங்கிய இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காக சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கிறது. 1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்த முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றது உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன. 37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி யினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது. தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கிறது. எனவே, இது போன்ற வடக்கு, கிழக்கில் பல சட்டவிரோத முகாங்கள் காணப்பட்டன. 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படை முகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் தறடறுதட பெண்கள் உட்பட 186 பொதுமக்களை சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள். அதில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளை தெரிவித்தார் இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கான முக்கியமான முகாமாக இயங்கியது. அவ்வாறே பல முகாங்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டை வெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டன சித்திரவதை என்பது சாதாரண விடயமல்ல: அமிலத் தொட்டிகளில் இளைஞர்களை போட்டு கொலை செய்துள்ளனர். எங்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் சார்பாக செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையாக இருக்கின்றதால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. எனவே, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டு வர முடியாது. ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்த சித்திரவதை முகாமை கொண்டு வந்திருப்பதாக மற்றவர்களுக்கு கூறாமல் வடக்கு, கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விஷயங்களை நீங்கள் வெளிக் கொண்டு வாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வடக்கு-கிழக்கில்-இடம்பெற்ற-அமில-வதைகளை-அம்பலப்படுத்துக/150-353941

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற “அமில வதைகளை அம்பலப்படுத்துக” - ஞானமுத்து ஸ்ரீநேசன்

3 months 2 weeks ago

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற “அமில வதைகளை அம்பலப்படுத்துக”

image_3d64ab9f36.jpg

கனகராசா சரவணன்

பட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்,  தமிழ் மக்கள் என்பதற்காக அதை மூடிமறைத்துவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மட்டு. ஊடக மையத்தில் திங்கட்கிழமை(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  1988 ஆம் ஆண்டு இயங்கிய இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காக சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கிறது.

1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்த முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றது உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன.


37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி யினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது. தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை  முகாம் வெளியில் வந்திருக்காது


ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கிறது. எனவே,  இது போன்ற  வடக்கு, கிழக்கில் பல சட்டவிரோத முகாங்கள் காணப்பட்டன. 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு  சத்துருக்கொண்டான் படை முகாமில்  4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் தறடறுதட பெண்கள் உட்பட 186 பொதுமக்களை சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில்  படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள். அதில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளை தெரிவித்தார்

இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கான முக்கியமான முகாமாக இயங்கியது. அவ்வாறே பல முகாங்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு  கல்லடி, கரடியனாறு, கொண்டை வெட்டுவான், உட்பட பல  முகாம்கள் காணப்பட்டன

சித்திரவதை என்பது சாதாரண விடயமல்ல: அமிலத் தொட்டிகளில் இளைஞர்களை போட்டு கொலை செய்துள்ளனர். எங்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் சார்பாக செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையாக இருக்கின்றதால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

எனவே, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டு வர முடியாது. ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது  

உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்த சித்திரவதை முகாமை கொண்டு வந்திருப்பதாக மற்றவர்களுக்கு கூறாமல் வடக்கு, கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விஷயங்களை நீங்கள் வெளிக் கொண்டு வாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வடக்கு-கிழக்கில்-இடம்பெற்ற-அமில-வதைகளை-அம்பலப்படுத்துக/150-353941

மீனவர்களால் நிராகரிக்கப்பட்ட கடற்றொழில் சட்டம்!

3 months 2 weeks ago
மீனவர்களால் நிராகரிக்கப்பட்ட கடற்றொழில் சட்டம்! தற்போதைய கடற்றொழில் அமைச்சால் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் மீன்பிடி சட்டம் மீனவர் சமூகத்தால் எப்போதோ நிராகரிக்கப்பட்டதாகும். அதனையே மீண்டும் மீன்பிடி அமைச்சு கொண்டுவர முயற்சிப்பதாகவும் வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர்; தடை செய்யப்பட்டதாக அறிவக்கப்பட்டுள்ள 16 மீன்பிடி தொழில்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் மக்களுக்கே வாக்களிக்க வேண்டும். ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தது போன்று எதனையும் செய்யவில்லை. இதனாலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிராகரிக்க வேண்டும். அட்டைப் பண்ணை பிரச்சினை உட்பட மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகள் குறித்தும் தற்போதைய ஆளுநருடன் கதைத்தோம். இதன்போது கடற்றொழில் அமைச்சருடன் கதைத்து விட்டு ஒரு மாதத்திற்குள் தீர்வு தருவதாக ஆளுநர் கூறினார். இன்றுவரை அதற்கு எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை. எல்லோரும் எங்களை அழைத்து கதைக்கின்றார்கள் ஆனால் பதில் எதுவும் வழங்காமல் கலைப்பதுடனேயே நிறுத்தி விடுகின்றார்கள். பின்னர் மீண்டும் ஆளுநர் உட்பட அதிகாரிகள் இணைந்து கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு கதைத்துள்ளார்கள். மீனவ அமைப்புக்களுடன் கதைக்காமல் இந்த செயற்பாட்டை செய்கின்றனர். கடல் அட்டை பண்ணையை கொடுப்பதற்கு நீங்கள் யார்? குறித்த கடற்பகுதி அமைந்துள்ள கடற்தொழில் சங்கம் முதலில் அனுமதிக்க வேண்டும். பின்னர் அந்தப் பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். அந்த இடத்தில் அட்டைப் பண்ணை அமைக்க முடியுமா முடியாதா என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் சிறு தொழிலாளி ஒருவனை அழைத்துச் சென்று அறைக்குள் வைத்து மிரட்டி, அடித்து, காசு தருவதாக கூறி நீங்கள் இலஞ்சங்களை வேண்டி உங்களது பொக்கட்களை நிரப்பி நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை. ஒரு அதிகாரி கூறினார் நாங்கள் அனுமதி கொடுத்தால் நீங்களும் அனுமதி கொடுக்கத் தான் வேண்டுமென்று. ஏனென்றால் அவர் இலஞ்சம் வேண்டும் புலி. அவர் இலஞ்சத்திலேயே பிறந்து, இலஞ்சத்திலேயே வளர்ந்து, இலஞ்சத்திலேயே மூழ்கியுள்ளார். அப்படியாயின் நீங்கள் அதை சொல்வீர்கள் தானே. தேவையில்லாத வேலைகள் பார்க்காதீர்கள். கடற்தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர் முடிவுகளை எடுங்கள்-என்றார். https://newuthayan.com/article/மீன்பிடி_அமைச்சால்_கொண்டுவரவிருக்கும்_கடற்றொழில்_சட்டம்_மீனவர்களால்_நிராகரிக்கப்பட்டது_-_நா.வர்ணகுலசிங்கம்!

மீனவர்களால் நிராகரிக்கப்பட்ட கடற்றொழில் சட்டம்!

3 months 2 weeks ago

மீனவர்களால் நிராகரிக்கப்பட்ட கடற்றொழில் சட்டம்!

2061858827.jpg

தற்போதைய கடற்றொழில் அமைச்சால் கொண்டுவரப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் மீன்பிடி சட்டம் மீனவர் சமூகத்தால் எப்போதோ நிராகரிக்கப்பட்டதாகும். அதனையே மீண்டும் மீன்பிடி அமைச்சு கொண்டுவர முயற்சிப்பதாகவும் வடக்கு மாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்;
தடை செய்யப்பட்டதாக அறிவக்கப்பட்டுள்ள 16 மீன்பிடி தொழில்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் மக்களுக்கே வாக்களிக்க வேண்டும். ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தது போன்று எதனையும் செய்யவில்லை. இதனாலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நிராகரிக்க வேண்டும்.

அட்டைப் பண்ணை பிரச்சினை உட்பட மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகள் குறித்தும் தற்போதைய ஆளுநருடன் கதைத்தோம். இதன்போது கடற்றொழில் அமைச்சருடன் கதைத்து விட்டு ஒரு மாதத்திற்குள் தீர்வு தருவதாக ஆளுநர் கூறினார். இன்றுவரை அதற்கு எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை. எல்லோரும் எங்களை அழைத்து கதைக்கின்றார்கள் ஆனால் பதில் எதுவும் வழங்காமல் கலைப்பதுடனேயே நிறுத்தி விடுகின்றார்கள்.
பின்னர் மீண்டும் ஆளுநர் உட்பட அதிகாரிகள் இணைந்து கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு கதைத்துள்ளார்கள். மீனவ அமைப்புக்களுடன் கதைக்காமல் இந்த செயற்பாட்டை செய்கின்றனர். கடல் அட்டை பண்ணையை கொடுப்பதற்கு நீங்கள் யார்?

குறித்த கடற்பகுதி அமைந்துள்ள கடற்தொழில் சங்கம் முதலில் அனுமதிக்க வேண்டும். பின்னர் அந்தப் பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். அந்த இடத்தில் அட்டைப் பண்ணை அமைக்க முடியுமா முடியாதா என்று பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீங்கள் சிறு தொழிலாளி ஒருவனை அழைத்துச் சென்று அறைக்குள் வைத்து மிரட்டி, அடித்து, காசு தருவதாக கூறி நீங்கள் இலஞ்சங்களை வேண்டி உங்களது பொக்கட்களை நிரப்பி நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை.

ஒரு அதிகாரி கூறினார் நாங்கள் அனுமதி கொடுத்தால் நீங்களும் அனுமதி கொடுக்கத் தான் வேண்டுமென்று. ஏனென்றால் அவர் இலஞ்சம் வேண்டும் புலி. அவர் இலஞ்சத்திலேயே பிறந்து, இலஞ்சத்திலேயே வளர்ந்து, இலஞ்சத்திலேயே மூழ்கியுள்ளார். அப்படியாயின் நீங்கள் அதை சொல்வீர்கள் தானே. தேவையில்லாத வேலைகள் பார்க்காதீர்கள். கடற்தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர் முடிவுகளை எடுங்கள்-என்றார்.

https://newuthayan.com/article/மீன்பிடி_அமைச்சால்_கொண்டுவரவிருக்கும்_கடற்றொழில்_சட்டம்_மீனவர்களால்_நிராகரிக்கப்பட்டது_-_நா.வர்ணகுலசிங்கம்!

யாழ். பல்கலையின் பட்டமளிப்பு விழா நாளை!

3 months 2 weeks ago
யாழ். பல்கலையின் பட்டமளிப்பு விழா நாளை! 4 நாள்கள்: 13 அமர்வுகள் 3,920 பேருக்குப் பட்டங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை புதன்கிழமை முதல் 22ஆம் திகதி சனிக்கிழமை வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நேற்றுத் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: 39ஆவது பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார். பட்டமளிப்பு விழாவில், உயர்பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்படிப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன – என்றார். https://newuthayan.com/article/யாழ்._பல்கலையின்_பட்டமளிப்பு_விழா_நாளை!

யாழ். பல்கலையின் பட்டமளிப்பு விழா நாளை!

3 months 2 weeks ago

யாழ். பல்கலையின் பட்டமளிப்பு விழா நாளை!

1046272139.jpeg

4 நாள்கள்: 13 அமர்வுகள் 3,920 பேருக்குப் பட்டங்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை புதன்கிழமை முதல் 22ஆம் திகதி சனிக்கிழமை வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நேற்றுத் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
39ஆவது பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.
பட்டமளிப்பு விழாவில், உயர்பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்)  சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்படிப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன – என்றார்.

https://newuthayan.com/article/யாழ்._பல்கலையின்_பட்டமளிப்பு_விழா_நாளை!

அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!

3 months 2 weeks ago
சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை – அர்ச்சுனா எம்.பி! சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். மேலும், சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒருபெண்ணின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் நாடாளுமன்ற உரையின் போது பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. இந்த விடயம் சம்பந்தமாக அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஒரு இளம் சமுதாயம் அழியும் வகையிலான ஓர் ஆதரன் என்னிடம் வந்த காரணத்தினால் ஒரு சமூகப் பொறுப்புடனேயே இதனை நாடாளுமன்றில் பேசினேன் எனத் தெரிவித்தார். மேலும் சட்டத்தரணி சுவஸ்திகாவை விமர்சித்தமை தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, நான் சுவஸ்திகா குறித்து இதுவரை எந்தக் கருத்தும் நாடாளுமன்றில் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, குறித்த விடயத்தை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு பேசியுள்ளார். நான் குறித்த நபர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசவில்லை. எனவே நான் இல்லாத சந்தர்ப்பத்தில் வேறு யாரேனும் நாடாளுமன்றில் அவர் குறித்து பேசியிருக்கலாம் என நினைக்கிறேன். தவிர சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை எனத் தெரிவித்தார். https://newuthayan.com/article/சட்டத்தரணி_சுவஸ்திகா_மீது_தனிப்பட்ட_கோபம்_எதுவும்_இல்லை_–_அர்ச்சுனா_எம்.பி!

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்

3 months 2 weeks ago
த.மு.கூ தனித்தும் கூட்டாகவும் போட்டி! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி அதன் ஒற்றுமையை சிதற விடாமல் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளன. 2015 இல் உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக அசைக்க முடியாத கூட்டணியாக இருந்து வருவதோடு இதுவரை, மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள், மூன்று பாராளுமன்றத் தேர்தல்கள், ஒரு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சந்தித்து வந்துள்ளதோடு, இரண்டாவது முறையாகவும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாரக உள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் தேசியக் கட்சிகள் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்தன. அதில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்சிகளுக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பாராளுமன்றத்தில் அவர்கள் குரல்கொடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பு, நுவரெலியா, பதுளை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் சில இடங்களில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னதிலும், சில இடங்களில் ஜனநாயக மக்கள் முன்னணியின் “ஏணி” சின்னத்திலும், சில இடங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் “அரிவாள்” சின்னதிலும், தனித்துப் போட்டியிடவுள்ளதோடு, சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் “டெலிபோன்” சின்னத்தில் இணைந்தும் போட்டியிடவுள்ளன. அதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், தேர்தலுக்குப் பிறகு, ஏனைய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பான புரிந்துணர்வு பேச்சுவார்தைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்து முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு வட்டாரத்திலும் மக்களோடு மக்களாக இருந்து, சமூகம் சார்ந்த விடயங்களில் முன்வந்து உதவிகள் வழங்கியும், ஒத்தாசை புரிந்தும் மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளவர்களை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை தம்மோடு சுக துக்கங்களிலும், அரசியல் ரீதிலும், அரசியலுக்கு அப்பாலும் பங்கு கொண்டவர்களையும் எதிர்காலத்தில் மக்களுக்காக செயற்படப் போகின்றவர்களையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்களித்து தெரிவு செய்ய வேண்டிய கடமை மக்களைச் சேர்ந்ததாகும். தேர்தல்களில் அரசியல் கட்சிகளோடு, சுயேச்சைக் குழுக்களும் வேட்பாளர்களை நிறுத்துவதற்குத் தயாராக உள்ளன. எனினும், தனி மனித செல்வாக்கே பெரும்பாலும் வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். எது எப்படியோ தமக்கு சேவை செய்யக் கூடியவர்களைத் தெரிவு செய்ய மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார். https://www.samakalam.com/த-மு-கூ-தனித்தும்-கூட்டாக/

யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் கௌசல்யா!

3 months 2 weeks ago
யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் கௌசல்யா! உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் நேற்று கட்டுபணம் செலுத்தினார். இதன் போது அர்ச்சுனா எம்பி கருத்து தெரிவிக்கையில்.. வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்கபைய யாழிலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கு முதற்கட்டமாக கட்டுப்பணத்தை செலுத்தி இருக்கிறோம். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு எம்மிடம் போதிய நிதி இல்லாததால் போட்டியிடும் வேட்பாளர்களிடமே அதற்கான நிதியை வழங்குமாறு கேட்டிருக்கிறோம். அவ்வாறு அவர்கள் வழங்குமிடத்தே அந்த நிதியை நாம் மீண்டும் அவர்களிடம் கிடைக்கும் என்பதையும் அவர்களுக்கு தெரிவித்தும் இருக்கிறோம். எமக்காண பணம் வந்த பின்னர் அந்த நிதியை நிச்சயம் அவர்களிடமே வழங்குவோம். இதனடிப்படையில் வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள சபைகளுக்கு தொடர்ந்தும் நாம் கட்டுப் பணத்தை செலுத்த உள்ளோம். இவ்வாறு அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தி சகல இடங்களிலும் தேர்தலில் போட்டியிடுவோம். இதேவேளை யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக எனது செயலாளர் சட்டத்தரணி கௌசல்யாவை நிறுத்த உள்ளோம். எங்களிடம் ஒழித்து மறைக்கும் எண்ணங்களோ சிந்தனையோ இல்லை. ஆகவே வடகிழக்கில் சகல சபைகளிஙும் நாம் போட்டியிடுகிற போது தமது முழுமையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும். அவ்வாறாக மக்கள் தமது ஆதரவை எமக்கு வழங்குவார்கள் எனவும் எதிர்பார்ப்க்கிறோம் என்றார். https://www.samakalam.com/யாழ்-மேயர்-வேட்பாளராக-கள/

யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் கௌசல்யா!

3 months 2 weeks ago

யாழ். மேயர் வேட்பாளராக களமிறங்கும் கௌசல்யா!

archuna.jpg

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் நேற்று கட்டுபணம் செலுத்தினார்.

இதன் போது அர்ச்சுனா எம்பி கருத்து தெரிவிக்கையில்..

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் சுயேட்சை குழுவாக இத் தேர்தலில் போட்டியிட உள்ளோம். இதற்கபைய யாழிலுள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கு முதற்கட்டமாக கட்டுப்பணத்தை செலுத்தி இருக்கிறோம்.

ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு எம்மிடம் போதிய நிதி இல்லாததால் போட்டியிடும் வேட்பாளர்களிடமே அதற்கான நிதியை வழங்குமாறு கேட்டிருக்கிறோம்.

அவ்வாறு அவர்கள் வழங்குமிடத்தே அந்த நிதியை நாம் மீண்டும் அவர்களிடம் கிடைக்கும் என்பதையும் அவர்களுக்கு தெரிவித்தும் இருக்கிறோம். எமக்காண பணம் வந்த பின்னர் அந்த நிதியை நிச்சயம் அவர்களிடமே வழங்குவோம்.

இதனடிப்படையில் வடக்கு கிழக்கு முழுவதும் உள்ள சபைகளுக்கு தொடர்ந்தும் நாம் கட்டுப் பணத்தை செலுத்த உள்ளோம். இவ்வாறு அனைத்து சபைகளுக்கும் கட்டுப்பணத்தை செலுத்தி சகல இடங்களிலும் தேர்தலில் போட்டியிடுவோம்.

இதேவேளை யாழ் மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக எனது செயலாளர் சட்டத்தரணி கௌசல்யாவை நிறுத்த உள்ளோம். எங்களிடம் ஒழித்து மறைக்கும் எண்ணங்களோ சிந்தனையோ இல்லை.

ஆகவே வடகிழக்கில் சகல சபைகளிஙும் நாம் போட்டியிடுகிற போது தமது முழுமையான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும். அவ்வாறாக மக்கள் தமது ஆதரவை எமக்கு வழங்குவார்கள் எனவும் எதிர்பார்ப்க்கிறோம் என்றார்.

https://www.samakalam.com/யாழ்-மேயர்-வேட்பாளராக-கள/