Aggregator

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை!

3 months 2 weeks ago

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்படுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வணக்கஸ்தலங்கள் பொது நிகழ்வுகள் மற்றும் வீடுகளில் அதிக ஒலி எழுப்பப்படுவதால் கல்வி கற்கும் மாணவர்கள் வயோதிபர்கள் மற்றும் கற்பிணித் தாய்மார்கள் உட்பட பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

வணக்கஸ்தலங்கள் மற்றும் ஒலி வழங்குநர்கள் குறித்த பிரதேசத்திற்குள் ஒலி எழுப்புவதற்கு இனி மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த அறிவிப்பு வடமராட்சிகிழக்கு  பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தியால் விடுக்கப்பட்டு அனைத்து பிரதேசங்களிலும் சுவரொட்டி மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை! | Virakesari.lk

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

3 months 2 weeks ago
நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதியாக, முப்படைகளின் தளபதியாக, தொழில்முறை வழக்கறிஞராக இருந்தவருக்கு அரசியலமைப்பு சட்டமோ அல்லது அடிப்படை உரிமை தொடர்பான சட்டமோ தெரியாமல் இருந்திருக்கு. நீதிமன்றம் அடிப்படை உரிமை மீறல் இல்லை என்று அளித்த தீர்ப்பையாவது புரிந்து கொள்ளும் அறிவு இருக்கின்றதோ தெரியவில்லை.

இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி!

3 months 2 weeks ago
ஆதவன் பூநகரியைத்தான் இப்படி பூனேரி, பூனாரி என்று குறிப்பிடுகின்றதா, அல்லது பூனாரி என்ற ஊர் மன்னாரில் உள்ளதா?

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
என்னது…. இவர் வீட்டில் துப்பாக்கி இருந்ததா?

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

3 months 2 weeks ago
பலத்த பாதுகாப்புடன் மக்கள் மத்தியில் வாழ்க்கை நடத்துவதை பெரிய சமூக அந்தஸ்தாக கருதுகின்றார்கள் போலுள்ளது. அதற்கும்… மக்களின் வரிப்பணம் தான் தேவைப்படுகின்றது.

கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி

3 months 2 weeks ago
ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்? சாத்தான் அந்த தம்பி இலங்கையில் நின்று கூட எவ்வளவு அக்கறையாக கதைக்குது. நீங்கள் என்னடா என்றால் வெட்டாமல் ஓயமாட்டீர்கள் போல. நன்றி நீர்வேலியான்.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
என்ன தம்பீ உங்களை விளையாடக் கூப்பிட்ட மாதிரி கதை போகுதே? இதை எழுதிய நேரத்துக்கு படிவத்தை நிரப்பி அனுப்பியிருக்கலாம். உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கள்மிறங்க போன மாதிரி இருக்கே? எந்த தொகுதியில் இறங்குகிறீர்கள்? இப்படி சொல்லி சொல்லியே ரசோதரனின் கையை உடைத்து புட்டீங்களே. சாப்பாடு கூட தீத்தித் தான் விடுறதாம் என்றா பாருங்கோவன்.

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தலைமறைவானால் சொத்துக்கள் முடக்கப்படும்!

3 months 2 weeks ago
பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தலைமறைவானால் சொத்துக்கள் முடக்கப்படும்! பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்தால் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தடை செய்யும் உத்தரவை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட சுற்றுநிரூபம் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின் பிரகாரம் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் பதில் பொலிஸ் மாஅதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரது சொத்துக்கள், தடை செய்யப்பட்ட நாள் முதல் ஒரு வருட காலப்பகுதிக்குள் நீதிமன்றத்தில் குறித்த நபர் ஆஜராகும் பட்சத்தில், சொத்துக்களை விற்பனை செய்ய அல்லது சொத்துக்களை விற்பனை செய்து பெறப்பட்ட வருமானத்தை அவருக்கே மீள வழங்குவதற்கான விதிமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் செயற்பட வேண்டுமென்பதுடன் இந்த நடவடிக்கைகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமெனவும் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1425999

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தலைமறைவானால் சொத்துக்கள் முடக்கப்படும்!

3 months 2 weeks ago

Court-023.jpg?resize=750%2C375&ssl=1

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தலைமறைவானால் சொத்துக்கள் முடக்கப்படும்!

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்தால் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தடை செய்யும் உத்தரவை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை
முன்வைக்கப்பட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட சுற்றுநிரூபம் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின் பிரகாரம் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் பதில் பொலிஸ் மாஅதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரது சொத்துக்கள், தடை செய்யப்பட்ட நாள் முதல் ஒரு வருட காலப்பகுதிக்குள் நீதிமன்றத்தில் குறித்த நபர் ஆஜராகும் பட்சத்தில், சொத்துக்களை விற்பனை செய்ய அல்லது சொத்துக்களை விற்பனை செய்து பெறப்பட்ட வருமானத்தை அவருக்கே மீள வழங்குவதற்கான விதிமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் செயற்பட வேண்டுமென்பதுடன் இந்த நடவடிக்கைகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமெனவும் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 https://athavannews.com/2025/1425999

யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!

3 months 2 weeks ago
இராமநாதபுரம் கடல் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்பான அப்‍டேட்! இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிகள் தூரத்தில் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்துச் வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று படகின் எஞ்சின் பழுது காரணமாக கடலில் தத்தளித்த ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மீனவர்கள் தத்தளித்த கடற்பகுதியில் ஒரு மூட்டையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் கஞ்சா பொட்டலங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது என்ற கோணத்தில் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றன. https://athavannews.com/2025/1426006

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

3 months 2 weeks ago
யோவ் யாருயா நீயி? உள்ள இருந்து வர்ற? என் பேரு Butch Wilmore. நானும் சுனிதா கூட 9 மாதம் விண்வெளில தான்யா இருந்தேன். அப்படியா சரி போ... போ... Dinesh Kumar 😂 🤣 ஆம்பளை எல்லாம் எவன்யா ராக்கெட் லே ஏத்துனது.. 🤣 Sun Shun

எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!

3 months 2 weeks ago
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஜெர்மனி, பெர்லினின் பிளான்டர்வால்ட் மற்றும் ஸ்டெக்லிட்ஸ் சுற்றுப்புறங்களில் நான்கு டெஸ்லா வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. உலகம் பூராகவும் எலான் மஸ்குக்கு வலுக்கும் எதிர்ப்பு! Vaanam.lk