Aggregator

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு எந்த வகையில் நியாயம் - ஞானமுத்து சிறிநேசன்

3 months 2 weeks ago

20 MAR, 2025 | 04:01 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

முல்லைத்தீவில் இரண்டு மனிதர்களுக்கு ஒரு படை என்ற ரீதியிலும், யாழ்ப்பாணத்தில் 14 மனிதர்களுக்கு ஒரு படை என்ற விகிதத்திலும் படை குவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எந்த வகையில் நியாயமாகும். 

யுத்தம் முடிந்தால் நன்மை கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களுக்கு குண்டு விழாத  நாட்டில் வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை அதிகரித்து செல்வதையே காண முடிகிறதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ளபோதும் நாங்கள் அபிவிருத்தி விடயத்தில் பின்நோக்கியே போகின்றோம். நாட்டில் குண்டு விழாமல் இருந்தாலும் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நாட்டில் அழிவுகளை ஏற்படுத்திய விடயமாக யுத்தம் உள்ளது. இதற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த போதும், படையினரை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் நிதி உச்சயமாக இருந்தது.  

இந்நிலையில் யுத்தம் முடிந்துவிட்டால் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறையும் என்றும் அந்த நிதியின் ஊடாக ஆக்கத்திறன் அபிவிருத்திகளுக்கு அதிகளவான நிதியை ஒதுக்க முடியும் என்றும் கூறினர். ஆனால், யுத்தம் முடிவடைந்துள்ள போதும் கடந்த முறையை விடவும் இம்முறை துண்டுவிழும் தொகை 160 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்தியா மற்றும் பிரிட்டனில் படைகளின் எண்ணிக்கையுடன் அந்நாட்டு மக்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் எமது நாட்டில் காணப்படும் படையின் அளவு அதிகமாகவே உள்ளது. இங்கே முல்லைத்தீவில் இரண்டு மனிதர்களுக்கு ஒரு படை என்ற ரீதியிலும்,  யாழ்ப்பாணத்தில் 14 மனிதர்களுக்கு ஒரு படை என்ற விகிதத்தில் படை குவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எந்த வகையில் நியாயமாகும் என்பதனை கேட்டுக்கொள்கின்றேன். யுத்தம் முடிந்தால் நன்மை கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களுக்கு குண்டு விழாத நாட்டில் வரவு, செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை அதிகரித்து செல்வதையே காண முடியுமாக இருக்கின்றது என்றார்.

https://www.virakesari.lk/article/209758

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
நான் நினைக்கிறேன் கிருஷ்னாவின் மூன்றாவ‌து அக்காவின் திரும‌ண‌த்துக்கு 4வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஒரு ல‌ச்ச‌ம் காசுக்கு ப‌ல‌ வீடு வாச‌ல் போய் கேட்டு வாங்கி தான் திரும‌ண‌த்தை செய்து வைச்ச‌வை இப்ப‌ இவைக்கு எல்லாம் ஒரு ல‌ச்ச‌ம் காசு கால் தூசு மாதிரி நான் சொல்வ‌து பொய் என்றால் கிருஷ்னாவின் மூன்றாவ‌து அக்காவின் திரும‌ண‌த்தை எப்ப‌டி ந‌ட‌த்தின‌வை என்று ப‌ருத்திதுறையில் உங்க‌ளுக்கு தெரிந்த‌ உற‌வுக‌ளிட‌ம் விசாரித்து பாருங்கோ நிலாம‌தி அக்கா.................... நான் இவ‌யை ப‌ற்றி நூற்றுக்கு நூறு வ‌டிவாய் ஆராச்சி ப‌ண்ணி விட்டுத் தான் யாழில் வ‌ந்து எழுதுவ‌து............................

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
புரித‌ல் இல்லாத‌ எம் ஈழ‌த்து உற‌வுக‌ள் இந்த‌ ர‌வுடிய‌ போய் க‌ட‌வுள் என்று சொல்லுகின‌ம் பையன் சொல்வது தான் சரி . கள்வன் என்று தெரிந்த பின்தான் சொல்லமுடியும். அது வரை விளையாடுவார். இவற்ற வாய் ...சரியில்லை பகிடி என்றபெயரில் ... டபுள் மீனிங். ஒருவன் படிப்படியாய் உயரலாம் அசுர வளர்ச்சி என்றால் ...திடீர் பணக்காரனானால் ...சந்தேகம் வரத்தான் செய்யும்.தானும் வளர்ந்து தன் உறவுகளையும் அக்கா தங்கை மாம ன் மச்சான் ....வளர்த்து விட்டிருக்கிறார்.

பார்த்தீனியம்

3 months 2 weeks ago
இந்த பார்த்தீனியம் இந்திய படையால் அல்லவா யாழ்ப்பாணம் மற்றும் தமிழ் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டது? ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி 'பார்த்தீனியம்' என்ற நாவலை, இந்திய படையின் வருகையையும், அவர்களின் அட்டூழியங்களையும் பின்புலத்தில் வைத்து படைத்துள்ளார். ஈழத்தமில் இலக்கியத்தில் பார்த்தீனியம் நாவலும் ஒரு சிறு வரலாற்று ஆவணம். தமிழ்நதி மிகச் சிறந்த ஈழத்து படைப்பாளிகளில் ஒருவர். அண்மையிலும் தங்க மயில்வாகனம் எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
என்ன‌து கிரிக்கேட் விம‌ச‌க‌ர் குமார‌சாமி தாத்தாவின் ப‌திவை கொப்பி ப‌ண்ணி சிறு மாற்ற‌ம் செய்து இருக்கிறீங்க‌ளா அப்ப‌ ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசுக்கு உங்க‌ளுக்கும் தாத்தாவுக்கும் தான் செம‌ போட்டியா இருக்க‌ போகுது லொள்........................................

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

3 months 2 weeks ago
நான் நினைக்கிறேன் இவ‌ரின் வாக‌ன‌த்தில் வைத்து இருந்து இருக்கிறார்................யாழ்ப்பாண‌த்தில் இருக்கும் வால் வெட்டு கும்ப‌லுட‌ன் இவ‌ருக்கு தொட‌ர்வு இருக்கு................. புரித‌ல் இல்லாத‌ எம் ஈழ‌த்து உற‌வுக‌ள் இந்த‌ ர‌வுடிய‌ போய் க‌ட‌வுள் என்று சொல்லுகின‌ம் ஒரு கேடு கெட்ட‌ ஊத்தையை போய் க‌ட‌வுள் என்று சொல்வ‌து அசிங்க‌த்தின் விட‌ அசிங்க‌மா பார்க்கிறேன் த‌மிழ் சிறி அண்ணா..............இவ‌ன் ஏப்பிர‌ல் 2ம்திக‌தியும் வெளியில் வ‌ர‌ போவ‌து கிடையாது இவ‌ன் முறைகேடு செய்த‌ ப‌ண‌த்தை இவ‌ன் காணொளி பிடிச்சு போட்ட‌ ம‌க்க‌ளிட‌ம் ப‌கிர்ந்து கொடுக்க‌னும் ச‌மூக‌ சேர்வை செய்ய‌ இவ‌ர் த‌குதியான‌ ந‌ப‌ர் கிடையாது ந‌ல்ல‌ புரித‌ல் ந‌ல்ல‌ நேர்மை உள்ள‌ பெண் பிள்ளைக‌ள் இப்ப‌டியான‌ சேவ்வையை முன் வ‌ந்து செய்ய‌னும்..................இவ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் அடுத்த‌வ‌ர்க‌ளின் கானிய‌ த‌ன் பெய‌ரில் எழுதி வைச்சு இருக்கிறான் சொல்ல‌ நிறைய‌ இருக்கு இவ‌னுக்கு சொம்பு தூக்க‌ சில‌ த‌றுத‌லைக‌ள் இருக்கு................கால‌ப் போக்கில் அவ‌ர்க‌ளும் காணாம‌ போவின‌ம் த‌மிழ் சிறி அண்ணா...................................

எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!

3 months 2 weeks ago
அமெரிக்காவில் என்னவும் செய்யலாம் அது அவர்களின் பிரச்சனை ஜேர்மனியில் ஏன் எரிக்க வேண்டும்?? தேர்தலில் வாக்களிக்கும் போது யோசித்து புள்ளடி போடுவதிலலை நமக்கு என்ன செலவாகிவிடும் என்ற மனநிலையில் கண்ணை மூடிக்கொண்டு போடுவது இவர் வந்தால் இது எல்லாம் நடக்கும் என்பது முன்பே தெரியும் ஏன் பொது சொத்துக்களை எரிக்க வேண்டும் மனிதன் சுவாசிக்க. O2 இல்லை காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்??? இதனாலெல்லாம் எந்தவொரு பிரயோஜனம் இல்லை போசாமால். ட்ரம்ப் வீட்டிலே இருப்பது நல்லது அக்கா கமலா நல்ல ஆட்சி தருவார்கள் 🙏

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
எல்லாம் தமிழ் கடவுள் குமாரசாமி கையிலத்தான் இருக்கு 🤣. உஷ்….🤫🤫🤫 அவரின் பதிவத்தான் கொப்பி அடிச்சு, சில புதிய அப்கிரேட்டுடன் இறக்கி விட்டுள்ளேன்🤣.

“சுய இன்பத்தில் பெண்கள் ஈடுபடுவது குற்றம் அல்ல”

3 months 2 weeks ago
மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்றவை கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கரூரை சேர்ந்த நபர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி அந்த நபர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்: மனுதாரருக்கும் அவர் மனைவிக்கும் 2018-ல் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். இருவரும் முதல் திருமணத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். தற்போது 2-வது திருமணத்தில் இருந்தும் வெளியேறும் வகையில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 2020 டிசம்பர் மாதத்திலிருந்து கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், தனது மனைவிக்கு பாலியல் நோய் உள்ளது. அவர் ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார். மாமனார், மாமியாரும் தன்னை மதிக்கவில்லை, அதிமாக செலவு செய்கிறார். அதிக நேரம் போனிலேயே செலவிடுகிறார். வீட்டு வேலைகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளை கூறி விவாகரத்து கோரி மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவில்லை. உண்மையில் மனைவிக்கு பாலியல் நோய் இருந்திருந்தால் இருவரும் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளதால் மனுதாரருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அவ்வாறு எதுவும் இல்லை. மேலும் மனைவிக்கு பெண்கள் தொடர்பான நோய் இருப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அந்த நோய் எளிதில் குணப்படுத்தக்கூடியதே. மனைவி ஆபாசப் படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். தடை செய்யப்பட்ட வகையைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமாகாது. ஆபாச படங்களுக்கு அடிமையாவது தவறு. மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்பது மனுதாரரின் மற்றொரு குற்றச்சாட்டு. ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதை குற்றமாக கருத முடியாது. ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு தரவுகள் எதுவும் இல்லை. சுய இன்பம் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. இதனால் மனைவி ஆபாச படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது ஆகிய கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது. தனியுரிமை அடிப்படை உரிமையாக உள்ளது. இது திருமண உறவுகளில் இருப்பவர்களுக்கு பொருந்தும். திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் மனைவியாக மாறுகிறார். அப்போது அவரது தனியுரிமையை கைகொள்கிறார். மனைவியின் தனியுரிமைக்கான வரையறையில் அவரது பாலியல் சுதந்திரத்தின் பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளது. ஒரு பெண் மனைவியாகிவிட்டார் என்பதற்காக அவரது அடிப்படை உரிமையை மறுக்க முடியாது. மனைவி மீது மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவைகள் உண்மையாக இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டுகள் சட்டப்படி விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளனர். Tamilmirror Online || “சுய இன்பத்தில் பெண்கள் ஈடுபடுவது குற்றம் அல்ல”

இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி!

3 months 2 weeks ago
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியைத் தான் வெளிநாட்டு ஊடகங்களில் இருந்து அப்படியே கொப்பி செய்து போடும் போது பூனெரின் (Pooneryn) எனப் போட்டிருக்கிறது. செய்தி கூட முழுவதும் கூகிள் மொழி பெயர்ப்பி மூலம் செய்யப் பட்டிருக்கிறது என ஊகிக்கிறேன். 👇இது தான் ஆதவன் கொப்பி செய்த செய்தியின் மூல வடிவம்! The Times of India'Misleading': Adani Group denies report on Sri Lanka revo...India Business News: Adani Group has debunked rumors about the cancellation of their 484 MW wind power projects in Sri Lanka, asserting the deal is still on. The Sri Lankaகொப்பி பேஸ்ற் ஊடகங்களின் நிலை இது தான்😂!

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ; மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே - விமலசேன லவக்குமார்

3 months 2 weeks ago
20 Mar, 2025 | 08:58 AM விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான், கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபோவார்கள் அல்ல மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கா நேற்று புதன்கிழமை (19) பழைய கச்சேரியில் வேட்புமனுதாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கோறளைப்பற்று பிரதேச சபையில் 14 வட்டாரத்திலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை எனது தலைமையில் களமிறக்கியுள்ளேன். கிராமங்களின் அபிவிருத்தியை மேற்கொள்ளும் ஒரு தேர்தல் இதில் வெற்றிபெறும் வேட்பாளர் 900 மீற்றருக்குள் இருக்கின்ற ஒரு வீதியை புனரமைக்க முடியும் குறிப்பாக பிரதேச சபை எல்லைக்குள் உள்ள அடிப்படை தேவைகளை செய்து முடிக்கமுடியும். அப்படிச் செய்வோம் இப்படிச் செய்வோம் என பிரச்சாரங்களை செய்வார்கள் இந்த காலங்களில் துரஸ்டவசமாக ஒட்டுக்குழுக்களாகவும் பயங்கரவாத கழுக்களாகவும் செயற்பட்டு பல கொலைகளை செய்த குழுக்கள் இந்த தேர்தல் காலத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர். பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தொடர்பாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தொடர்பாகவும் பல விமர்சனங்கள் உண்டு இவர்கள் எல்லாம் மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இந்தமுறை போட்டியிடுகின்றனர். எனவே மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் இவர்கள் மக்களின் இருப்புக்களை சுரண்டி எத்தனையோ உயிர்கள் பறித்தவர்கள் கடந்தகாலத்தில் புலிகள் இருந்தகாலத்தில் பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளில் இருந்து பிள்ளையான் கருணா பிரிந்தபோதுதான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் மாவட்டத்திலுள்ள அநேகமானவர்கள் பறிகொடுத்து உறவுகளாக, தாய் தந்தைகளாக, சகோதர்களாக இருக்கின்றோம் எனவே மக்கள் விழிப்போடு இந்த தேர்தலில் செயற்படவேண்டும் என்றார். வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ; மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே - விமலசேன லவக்குமார் | Virakesari.lk

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ; மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே - விமலசேன லவக்குமார்

3 months 2 weeks ago

20 Mar, 2025 | 08:58 AM

image

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான், கருணா பிரிந்த பின்னர் தான்  அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபோவார்கள் அல்ல மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கா நேற்று புதன்கிழமை (19) பழைய கச்சேரியில் வேட்புமனுதாக்கல்  செய்தபின்னர் ஊடகங்களுக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச சபையில் 14 வட்டாரத்திலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை எனது தலைமையில்  களமிறக்கியுள்ளேன். கிராமங்களின் அபிவிருத்தியை மேற்கொள்ளும் ஒரு தேர்தல் இதில் வெற்றிபெறும் வேட்பாளர் 900 மீற்றருக்குள் இருக்கின்ற ஒரு வீதியை புனரமைக்க முடியும் குறிப்பாக பிரதேச சபை எல்லைக்குள் உள்ள அடிப்படை தேவைகளை செய்து முடிக்கமுடியும்.

அப்படிச் செய்வோம் இப்படிச் செய்வோம் என பிரச்சாரங்களை செய்வார்கள் இந்த காலங்களில் துரஸ்டவசமாக  ஒட்டுக்குழுக்களாகவும் பயங்கரவாத கழுக்களாகவும் செயற்பட்டு பல கொலைகளை  செய்த குழுக்கள் இந்த தேர்தல் காலத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர்.

பிள்ளையான் என்றழைக்கப்படும்  முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தொடர்பாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தொடர்பாகவும் பல விமர்சனங்கள் உண்டு இவர்கள் எல்லாம் மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இந்தமுறை போட்டியிடுகின்றனர்.

எனவே மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் இவர்கள் மக்களின் இருப்புக்களை சுரண்டி எத்தனையோ உயிர்கள் பறித்தவர்கள் கடந்தகாலத்தில் புலிகள் இருந்தகாலத்தில் பிள்ளையானும் கருணாவும் பிரிந்தபோது தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளில் இருந்து பிள்ளையான் கருணா பிரிந்தபோதுதான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் மாவட்டத்திலுள்ள அநேகமானவர்கள் பறிகொடுத்து உறவுகளாக, தாய் தந்தைகளாக, சகோதர்களாக இருக்கின்றோம்  எனவே மக்கள் விழிப்போடு இந்த தேர்தலில்  செயற்படவேண்டும் என்றார்.

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ; மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே - விமலசேன லவக்குமார் | Virakesari.lk

தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு

3 months 2 weeks ago
தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை - எட்டு வீடுகள் ஆனால் அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை- நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம். 20 Mar, 2025 | 12:06 PM முன்னாள் பொலிஸ்மா அதிபர்தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்வதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கை போன்ற ஒன்றில் பொலிஸார் ஈடுபட்டனர் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தின் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனெரல் திலீபா பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- கைதுசெய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் இவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.பிரபாகரனை தேடுவது போல . இவர் நேற்றுவரை தனது சமூக மத செல்வாக்கை பாவித்து கைதுசெய்யப்படுவதை தவிர்;த்து வந்தார். இவர் தனது முகவரியாக வழங்கியுள்ள வீட்டில் உண்மையில் பௌத்தமதகுரு ஒருவர் வசிக்கின்றார். கடந்த சில நாட்களாக பொலிஸார் அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,மற்றும் ஏனையவர்களிடம் இவர் எங்கிருக்கின்றார் என விசாரணை செய்தனர். செல்வாக்குள்ளவர்களுடன் இவர் உடன்பாடுகளை செய்துகொண்டுள்ளார்,இவரது வீட்டை சோதனையிட்டவேளை 795 மதுபான போத்தல்கள் அங்கு காணப்பட்டன.100க்கும் மேற்பட்ட ஆடம்பர பரிசு கூடைகள் காணப்பட்டன. அரசாங்க ஊழியர்களால் சிறிய பரிசுப்பொதியை கூட பெறமுடியாது, இவரால் எப்படி இதனை பெற முடிந்தது. அவரது வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை ,அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை,ஆனால் அவருக்கு எட்டு வீடுகள் உள்ளன.இதன் காரணமாகவே இவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை விட ஆபத்தானவர் என தெரிவிக்கின்றேன் இவர் ஒரு பிசாசு. தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய தொழிற்சாலை - எட்டு வீடுகள் ஆனால் அவரது பெயரின் கீழ் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை- நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் | Virakesari.lk

பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் - மகப்பேற்று வைத்திய நிபுணர் ரகுராம் !

3 months 2 weeks ago
20 Mar, 2025 | 02:37 PM கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று அதிகரித்துள்ளது. பதின்ம வயது கர்ப்பம் என்பது நிகழும்போது தாய்க்கும், சேய்க்கும், சமூகத்துக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு பதின்ம வயதுப் பெண் சரியாக முதிர்ச்சி அடையாமல், தனது தேவைகளை சரியா அறிந்துகொள்ளாமல், கல்வியறிவு போதியளவு இல்லாமலும் இருக்கலாம். இவ்வாறான சூழ்நிலையில் கர்ப்பத்தை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஆயத்தப்படுத்தும் தன்மை போதாமல் இருக்கிறது. இது குறித்த பெண்ணுக்கு உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். பதின்ம வயதுடைய தாய்க்கு குருதிச்சோகை, உயர் குருதி அழுத்தம், நீரிழிவு போன்றன ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. குழந்தையை சரியான விதத்தில் கவனிக்காத பட்சத்தில் அந்த குழந்தை நிறை குறைவாக பிறக்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளதுடன் அந்த குழந்தைக்கு பின்னாளில் சில சில பிரச்சினைகளும் ஏற்படலாம். சமூகத்திலே 16,17,18 வயதுகளை கொண்ட பெண்கள் கர்ப்பமடையும்போது வித்தியாசமாவும், வரவேற்கப்படாத விடயமாகவும்தான் பார்க்கப்படுகிறது. ஆகையால் அவர்கள் சரியான பராமரிப்புகளையோ, சேவைகளையே குடும்பத்திடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ, சமூகத்திடமிருந்தோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறாக காணப்படும் போது அவர்களுக்கு ஒரு உளவியல் தாக்கம் ஏற்படும். இன்னும் ஒரு விடயம் என்னவென்றால் பதின்ம வயதுப் பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்னர் கர்ப்பமடைகின்றனர். திருமணம் ஆவதற்கு முன்பு கர்ப்பமடையும்போது அந்த கர்ப்பத்தை அழித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள். இலங்கையை பொறுத்தவரை கர்ப்பம் அழித்தல் என்பது சட்டவிரோதமானது. இவ்வாறான சட்டவிரோத செயல்களகல் ஈடுபடும்போது அதுவும் அவர்களிடத்தில் உடல், உள் தாக்கத்தை ஏற்படுத்தும். பதின்ம வயது பெண்கள் திருமணமாகியோ அல்லது திருமணம் ஆகாமலோ இருக்கும்போது குழந்தைக்காக அவர்கள் முயற்சிப்பதை தடுக்க முடியாது. ஆனால் அவர்கள் அதற்கான குடும்ப கட்டுப்பாட்டை பயன்படுத்த முடியும். இப்போது இலங்கையை பொறுத்தவரையில் குடும்ப சுகாதார நல மாது என்பவர் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றார். அவர்களை அணுகுவது மிகவும் இலகுவானது. இப்போது ஒவ்வொரு இடங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர்களும் தாராளமாக உள்ளனர். அவர்களிடம் ஆலோசனைகளை பெற முடியும். தங்களுக்கு ஏற்றவாறான கர்ப்பத்தடை முறைகளை பாவிக்க முடியும். கர்ப்பத்தடை முறைகளை பாவிப்பது குறித்து நிறைய பிரச்சனைகளும், சந்தேகங்களும் மக்களிடையே காணப்படுகின்றன. கர்ப்பத்தடை முறைகள் மிகவும் பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதுமான விடயமும் ஆகும். கர்ப்பத்தடை முறைகளை பயன்படுத்தி நிறுத்திய பின்னர் அவர்கள் கர்ப்பமடைவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் கர்ப்பமடைவார்கள். பதின்ம வயது பெண்ணொருவர் கர்ப்பமடைந்தால் அதனை அழிக்கவோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடவோ கூடாது. இலங்கையை பொறுத்தவரையில் தாய் - சேயுடன் இருக்கின்றபோது கருக்கலைப்பு செய்கின்ற நிலைகள் இருக்கின்றது. இது சட்டவிரோதமானது. இதனால் கிருமிகள் பாதிப்பு ஏற்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடும்பேது அங்கு சகலவிதமான சேவைகளும் வழங்கப்படும். அந்தரங்கத்தன்மை பேணப்பட்டு, காத்திரமான சேவை வழங்கப்படும். சரியான முறையில் அவர்கள் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே இந்த பதின்ம வயது கர்ப்பம் என்பது தாய்மார்களிடத்தும், பெண்களிடத்தும், சமூகத்திலும் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நாங்கள் இதுகுறித்து சரியான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் - மகப்பேற்று வைத்திய நிபுணர் ரகுராம் ! | Virakesari.lk

பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் - மகப்பேற்று வைத்திய நிபுணர் ரகுராம் !

3 months 2 weeks ago

20 Mar, 2025 | 02:37 PM

image

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று அதிகரித்துள்ளது. பதின்ம வயது கர்ப்பம் என்பது நிகழும்போது தாய்க்கும், சேய்க்கும், சமூகத்துக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என  யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு பதின்ம வயதுப் பெண் சரியாக முதிர்ச்சி அடையாமல், தனது தேவைகளை சரியா அறிந்துகொள்ளாமல்,  கல்வியறிவு போதியளவு இல்லாமலும் இருக்கலாம். இவ்வாறான சூழ்நிலையில் கர்ப்பத்தை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஆயத்தப்படுத்தும் தன்மை போதாமல் இருக்கிறது. இது குறித்த பெண்ணுக்கு உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பதின்ம வயதுடைய தாய்க்கு குருதிச்சோகை, உயர் குருதி அழுத்தம், நீரிழிவு போன்றன ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. குழந்தையை சரியான விதத்தில் கவனிக்காத பட்சத்தில் அந்த குழந்தை நிறை குறைவாக பிறக்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளதுடன் அந்த குழந்தைக்கு பின்னாளில் சில சில பிரச்சினைகளும் ஏற்படலாம்.

சமூகத்திலே 16,17,18 வயதுகளை கொண்ட பெண்கள் கர்ப்பமடையும்போது வித்தியாசமாவும், வரவேற்கப்படாத விடயமாகவும்தான் பார்க்கப்படுகிறது. ஆகையால் அவர்கள் சரியான பராமரிப்புகளையோ, சேவைகளையே குடும்பத்திடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ, சமூகத்திடமிருந்தோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறாக காணப்படும் போது அவர்களுக்கு ஒரு உளவியல் தாக்கம் ஏற்படும்.

இன்னும் ஒரு விடயம் என்னவென்றால் பதின்ம வயதுப் பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்னர் கர்ப்பமடைகின்றனர். திருமணம் ஆவதற்கு முன்பு கர்ப்பமடையும்போது அந்த கர்ப்பத்தை அழித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள். இலங்கையை பொறுத்தவரை கர்ப்பம் அழித்தல் என்பது சட்டவிரோதமானது. இவ்வாறான சட்டவிரோத செயல்களகல் ஈடுபடும்போது அதுவும் அவர்களிடத்தில் உடல், உள் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பதின்ம வயது பெண்கள் திருமணமாகியோ அல்லது திருமணம் ஆகாமலோ இருக்கும்போது குழந்தைக்காக அவர்கள் முயற்சிப்பதை தடுக்க முடியாது. ஆனால் அவர்கள் அதற்கான குடும்ப கட்டுப்பாட்டை பயன்படுத்த முடியும்.

இப்போது இலங்கையை பொறுத்தவரையில் குடும்ப சுகாதார நல மாது என்பவர் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றார். அவர்களை அணுகுவது மிகவும் இலகுவானது. இப்போது ஒவ்வொரு இடங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர்களும் தாராளமாக உள்ளனர். அவர்களிடம் ஆலோசனைகளை பெற முடியும். தங்களுக்கு ஏற்றவாறான கர்ப்பத்தடை முறைகளை பாவிக்க முடியும்.

கர்ப்பத்தடை முறைகளை பாவிப்பது குறித்து நிறைய பிரச்சனைகளும், சந்தேகங்களும் மக்களிடையே காணப்படுகின்றன. கர்ப்பத்தடை முறைகள் மிகவும் பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதுமான விடயமும் ஆகும். கர்ப்பத்தடை முறைகளை பயன்படுத்தி நிறுத்திய பின்னர் அவர்கள் கர்ப்பமடைவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் கர்ப்பமடைவார்கள்.

பதின்ம வயது பெண்ணொருவர் கர்ப்பமடைந்தால் அதனை அழிக்கவோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடவோ கூடாது. இலங்கையை பொறுத்தவரையில் தாய் - சேயுடன் இருக்கின்றபோது கருக்கலைப்பு செய்கின்ற நிலைகள் இருக்கின்றது. இது சட்டவிரோதமானது. இதனால் கிருமிகள் பாதிப்பு ஏற்படலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடும்பேது அங்கு சகலவிதமான சேவைகளும் வழங்கப்படும். அந்தரங்கத்தன்மை பேணப்பட்டு, காத்திரமான சேவை வழங்கப்படும். சரியான முறையில் அவர்கள் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆகவே இந்த பதின்ம வயது கர்ப்பம் என்பது தாய்மார்களிடத்தும், பெண்களிடத்தும், சமூகத்திலும் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நாங்கள் இதுகுறித்து சரியான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் - மகப்பேற்று வைத்திய நிபுணர் ரகுராம் ! | Virakesari.lk

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவிற்கு பயணத்தடை

3 months 2 weeks ago
20 Mar, 2025 | 05:27 PM யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் இன்று வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது. மார்ச் 2020 இல் சுனில்ரத்நாயக்கவிற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். மிருசுவிலில் இருந்து இடம்பெயர்ந்த 9 பேர் 2000ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி தங்கள் வீடுகளை பார்ப்பதற்காக மீண்டும் மிருசுவில் பகுதிக்கு சென்றனர்.இவர்களில் பதின்மவயதினரும்,ஐந்து வயது சிறுவனும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிவந்தவேளை இரண்டு இராணுவத்தினர் அவர்களின் கண்களை கட்டி மோசமாக தாக்கியுள்ளனர். ஒரு இளைஞன் அவர்களின் பிடியிலிருந்து தப்பினான்.எனினும் ஏனைய 8 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் அருகில் உள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பகுதியில் மீட்கப்பட்டன. மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவிற்கு பயணத்தடை | Virakesari.lk

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவிற்கு பயணத்தடை

3 months 2 weeks ago

20 Mar, 2025 | 05:27 PM

image

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட  குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் இன்று வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது.

மார்ச் 2020 இல்  சுனில்ரத்நாயக்கவிற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச வழங்கிய  பொதுமன்னிப்பிற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மிருசுவிலில் இருந்து இடம்பெயர்ந்த 9 பேர் 2000ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி தங்கள் வீடுகளை பார்ப்பதற்காக மீண்டும் மிருசுவில் பகுதிக்கு சென்றனர்.இவர்களில் பதின்மவயதினரும்,ஐந்து வயது சிறுவனும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிவந்தவேளை இரண்டு இராணுவத்தினர் அவர்களின் கண்களை கட்டி மோசமாக தாக்கியுள்ளனர்.

ஒரு இளைஞன் அவர்களின் பிடியிலிருந்து தப்பினான்.எனினும் ஏனைய 8 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் அருகில் உள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பகுதியில் மீட்கப்பட்டன.

மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்கவிற்கு பயணத்தடை | Virakesari.lk