Aggregator
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
களைத்த மனசு களிப்புற ......!
இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி!
மனம்பேரி, இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பில் சபையில் கொதித்தெழுந்த சிறீதரன் எம்.பி.
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
“சுய இன்பத்தில் பெண்கள் ஈடுபடுவது குற்றம் அல்ல”
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான பொதுத் திட்டங்களை வகுக்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இரசித்த.... புகைப்படங்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
பெஞ்சமின் நெட்டன்யாகு அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காசா மீது மீண்டும் தாக்குதல்களில் ஈடுபட்டார் - இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
பெஞ்சமின் நெட்டன்யாகு அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காசா மீது மீண்டும் தாக்குதல்களில் ஈடுபட்டார் - இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காசா மீது மீண்டும் விமானதாக்குதல்களில் ஈடுபட்டார் - இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு
Published By: RAJEEBAN 19 MAR, 2025 | 10:15 AM
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காசா மீது மீண்டும் விமானதாக்குதல்களில் ஈடுபட்டார் என இஸ்ரேலை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காராகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் ஜனநாயக முறைமையை செயல் இழக்கச் செய்து அதிகாரத்தின் மீதான தனது பிடியை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே யுத்தநிறுத்தத்தை சிதறடித்த விமானதாக்குதல்களிற்கு பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டார் என இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பொறுப்பான புலனாய்வு அமைப்பான சின்பெட்டின் தலைவரை பதவி நீக்கம் செய்யப்போவதாக இஸ்ரேலிய பிரதமர் அறிவித்திருந்த நிலையிலேயே காசா மீது விமானதாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது.
'இந்த வான்தாக்குதல் அரசியல் நலனிற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது என்பதே யதார்த்தம், வெளிநாட்டு அச்சுறுத்தல்களை உருவாக்கி, உள்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புபவர்களை ஜனநாயக விரோதிகள் என சித்தரிப்பதே அவர்கள் வழமையாக செயற்படும் விதம்" என இந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவரும், இஸ்ரேலிய கடற்படையின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியுமான ஒரா பெலெட் நகாஸ் தெரிவித்துள்ளார்.
ஹமாசின் பிடியில் பணயக்கைதிகளாக உள்ளவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புகள் இந்த வாரம் இஸ்ரேலில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. மேலும் உடனடி யுத்த நிறுத்தத்தினை கோரும் அறிக்கைகளை வெளியிடவுள்ளன.
ஹமாசிடம் தனது சகோதரன் நடாவ் பொப்லேவெலை இழந்த அய்லெட் ஸ்வாடிஸ்ட்கி ஹமாசிடம் பணயக்கைதிகளாக உள்ளவர்களை இன்னமும் காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
'அவர்களை மீட்கலாம், உயிர் பிழைக்காதவர்களை, அவர்களின் உடலை நாட்டிற்கு கொண்டுவந்து கௌரவமான முறையில் புதைக்கவேண்டும், நாங்கள் மீண்டும் யுத்த நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் திரும்பவேண்டும், அனைவரையும் மீள அழைத்து வருவதற்கு உடன்பாடே ஒரே வழி, என அவர் தெரிவித்துள்ளார்.