3 months 2 weeks ago
இப்பாடலில், கொற்கையிலிருந்து (குறுநில மன்னனாக) ஆண்டு வந்த வெற்றி வேற்செழியன் நெடுஞ்செழியனுக்குப் பின் மதுரை வந்து பாண்டி நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறான் என்று சொல்லுமிடத்தில் எத்தகைய சிறப்பு மிக்க பாண்டிய நாடு என்று குறிக்க, "பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர் ஒருமுலை குறைந்த திருமா பத்தினிக்கு ஒருபகல் எல்லை உயிர்ப்பலி யூட்டி உரைசெல வெறுத்த மதுரை மூதூர்" என்று சேரன் செங்குட்டுவனுக்கு எடுத்தியம்புகிறான் மாடலன் மறையோன். அஃதாவது "ஆயிரம் (ஈரைஞ்ஞாற்று) பொற்கொல்லர் (கண்ணகிக்குப் பொற்கொல்லன் மூலமாக இழைக்கப்பட்ட அநீதிக்குத் தண்டனையாயகவும், பாண்டிய நாட்டிற்கு ஏற்பட்ட பழி போக்கவும்) உயிர்ப்பலியாகத் தம் உயிர் ஈந்தனர்; அத்தகைய மதுரை மூதூர்" என்றுதான் நான் வாசித்த இரண்டு உரையாசிரியர்கள் உரை சொல்கின்றனர். அவ்வாறாயின், தண்டனை என்பது நாம் கட்டுரையில் சொல்லும் பலியாகாது என்பது என் கருத்து. கூடுதலாக சான்றாண்மை மிக்க உரையாசிரியர்கள் ஓரிருவரை வாசித்து விட்டு மாறுபாடு இருப்பின் மீண்டும் உங்களிடம் வருகிறேன். இது தொடர்பாக மேலும் ஒன்று கூற விழைவு. நான் வாசித்த, கேட்ட வரையில் சங்கப் பாடல்களில் நரபலி காணவில்லை என்று எழுதினேனே தவிர, தமிழ் நாகரிகம் ஏனைய பண்டைய நாகரிகங்களில் இருந்து வேறுபட்டு நிவந்து நிற்பதாக்கும் என்று நான் நம்பவில்லை. சமூக உளவியல் என்பது அனைத்துக் குழுக்களிலும் இயற்கையாய் ஒரே மாதிரிதான் தோன்றி வரும் என்பதில் எனக்கு மாறுபாடில்லை (ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியிற் தெளிந்தனம்). புலிகளில் சைவப் புலி என்று எதுவுமில்லை (There is no vegetarian tiger). உதாரணமாக, "கங்கை கொண்டான், கடாரம் வென்றான்" என்றெல்லாம் புலவர்கள் பாடினார்களே தவிர, அப்போது பெண்களைக் கவர்ந்து வந்து அந்தப்புறங்களை நிரப்பிய அயோக்கியத்தனங்களைப் பாடுவதில்லை. புரவலர்களைச் சார்ந்து வாழ்ந்த புலவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ? Now in a lighter vein : நான் சிலம்பில் வாசிக்காத பகுதியை வாசிக்க வைத்த வில்லவன் அவர்கள் பாடல் பெறத் தகுதியானவர். இப்போதைக்கு முழுப் பாடலாக இல்லாவிடினும் ஒரு வரியாவது பாடுகிறேனே ! அவர் தற்போது குறிப்பிட்ட நீர்ப்படைக் காதை, வரி 238 ல் சேரன் செங்குட்டுவன் "வில்லவன் வந்தான் வியன் பேரிமயத்து" என்று பாடப் பெறுகிறான். அவ்வரியினை இளங்கோவடிகளிடம் இரவல் பெற்று, "வில்லவன் வந்தான் சிலம்புச் செல்வத்து" என்று நமது வில்லவன் அவர்களைப் பாடலாமே !
3 months 2 weeks ago
Published By: VISHNU 23 MAR, 2025 | 07:46 PM (எம்.மனோசித்ரா) நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிவிருந்து நீக்குவது குறித்து பாராளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அது தவறான தகவலாகும். அவ்வாறு தேசபந்து தென்னகோனை தற்போது பொலிஸ்மா அதிபர் பதிவியிலிருந்து நீக்க முடியாது. தற்போது நாட்டில் நீதிமன்ற தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபருடன், பதில் பொலிஸ்மா அதிபரொருவரும் இருக்கின்றார். வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபருக்குரிய பணிகளை செய்வதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் தற்போதும் தேசபந்துவே பொலிஸ்மா அதிபராவார். நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அது குறித்து பாராளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நேரடியாக நீதித்துறையில் பாராளுமன்றம் ஆதிக்கம் செலுத்துவதாகவே அமையும். எனவே நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தேசபந்து குறித்த எந்தவொரு தீர்மானத்தையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ முடியாது. இவ்விவகாரத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொய் கூறி பாராளுமன்றத்தை ஏமாற்றியிருக்கின்றார். தேசிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. பெப்ரவரி 27ஆம் திகதி தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மார்ச் 17ஆம் திகதி தான் அவரது வீடு பரிசோதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பஸ்நாயக்க நிலமே ஆகியோரது இல்லங்களே சோதனைக்குட்படுத்தப்பட்டன. நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்று 20 நாட்களின் பின்னர் தேசபந்துவின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னணியில் அரசாங்கம் அரங்கேற்றும் நாடகமே காணப்படுகிறது. தேசபந்துவின் மனைவி சட்டத்தரணியாவார். பொலிஸார் தமது இல்லத்தை சோதனைக்குட்படுத்தப் போவதில்லை என்பதை அறிந்ததால் தான் அவர் மதுபான போத்தல்களை அப்புறப்படுத்துவதற்கு கூட நடவடிக்கை எடுக்கவில்லை. தேசபந்துவின் நியமனம் சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார். எனவே தான் அவரை கைது செய்வதில் பொலிஸார் பின்வாங்கினர் என்றார். https://www.virakesari.lk/article/210020
3 months 2 weeks ago
Published By: VISHNU 23 MAR, 2025 | 07:46 PM

(எம்.மனோசித்ரா)
நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிவிருந்து நீக்குவது குறித்து பாராளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அது தவறான தகவலாகும். அவ்வாறு தேசபந்து தென்னகோனை தற்போது பொலிஸ்மா அதிபர் பதிவியிலிருந்து நீக்க முடியாது. தற்போது நாட்டில் நீதிமன்ற தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபருடன், பதில் பொலிஸ்மா அதிபரொருவரும் இருக்கின்றார்.
வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபருக்குரிய பணிகளை செய்வதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் தற்போதும் தேசபந்துவே பொலிஸ்மா அதிபராவார். நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அது குறித்து பாராளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது.
அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நேரடியாக நீதித்துறையில் பாராளுமன்றம் ஆதிக்கம் செலுத்துவதாகவே அமையும். எனவே நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தேசபந்து குறித்த எந்தவொரு தீர்மானத்தையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ முடியாது. இவ்விவகாரத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொய் கூறி பாராளுமன்றத்தை ஏமாற்றியிருக்கின்றார்.
தேசிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. பெப்ரவரி 27ஆம் திகதி தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மார்ச் 17ஆம் திகதி தான் அவரது வீடு பரிசோதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பஸ்நாயக்க நிலமே ஆகியோரது இல்லங்களே சோதனைக்குட்படுத்தப்பட்டன. நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்று 20 நாட்களின் பின்னர் தேசபந்துவின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னணியில் அரசாங்கம் அரங்கேற்றும் நாடகமே காணப்படுகிறது.
தேசபந்துவின் மனைவி சட்டத்தரணியாவார். பொலிஸார் தமது இல்லத்தை சோதனைக்குட்படுத்தப் போவதில்லை என்பதை அறிந்ததால் தான் அவர் மதுபான போத்தல்களை அப்புறப்படுத்துவதற்கு கூட நடவடிக்கை எடுக்கவில்லை. தேசபந்துவின் நியமனம் சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் 2031ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார். எனவே தான் அவரை கைது செய்வதில் பொலிஸார் பின்வாங்கினர் என்றார்.
https://www.virakesari.lk/article/210020
3 months 2 weeks ago
23 MAR, 2025 | 05:51 PM லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் அமைதி காக்கும் பணிக்கு ஏப்ரல் 3ஆம் திகதி புறப்படவுள்ள 16ஆவது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு கஜபா படையணி தலைமையகத்தில் சம்பிரதாயங்களுக்கமைய அணிவகுப்பு மரியாதை வழங்கியது. நேற்று சனிக்கிழமை (22) இந்நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி தேசியக் கொடி, ஐக்கிய நாடுகள் சபைக் கொடி, இராணுவக் கொடி மற்றும் கஜபா படையணியின் கொடிகளை சம்பிரதாயமாக இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் கட்டளை அதிகாரியிடம் ஒப்படைத்தார். இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பல்வேறு படையணிகளைச் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்களை உள்ளடக்கிய 16ஆவது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவில் கஜபா படையணியின் லெப்டினன் கேணல் வை.எஸ்.எச்.என்.பீ. சில்வா கட்டளை அதியாரியாகவும், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லெப்டினன் கேணல் கேவீஏ கொடிகர பீஎஸ்சீ இரண்டாம் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றுவார்கள். பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, கஜபா படையணியின் படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 16ஆவது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/210013
3 months 2 weeks ago
23 MAR, 2025 | 05:51 PM

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் அமைதி காக்கும் பணிக்கு ஏப்ரல் 3ஆம் திகதி புறப்படவுள்ள 16ஆவது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு கஜபா படையணி தலைமையகத்தில் சம்பிரதாயங்களுக்கமைய அணிவகுப்பு மரியாதை வழங்கியது.
நேற்று சனிக்கிழமை (22) இந்நிகழ்வு இடம்பெற்றது.
இராணுவத் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி தேசியக் கொடி, ஐக்கிய நாடுகள் சபைக் கொடி, இராணுவக் கொடி மற்றும் கஜபா படையணியின் கொடிகளை சம்பிரதாயமாக இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் கட்டளை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பல்வேறு படையணிகளைச் 11 அதிகாரிகள் மற்றும் 114 சிப்பாய்களை உள்ளடக்கிய 16ஆவது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவில் கஜபா படையணியின் லெப்டினன் கேணல் வை.எஸ்.எச்.என்.பீ. சில்வா கட்டளை அதியாரியாகவும், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் லெப்டினன் கேணல் கேவீஏ கொடிகர பீஎஸ்சீ இரண்டாம் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றுவார்கள்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, கஜபா படையணியின் படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 16ஆவது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



https://www.virakesari.lk/article/210013
3 months 2 weeks ago
ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE படக்குறிப்பு, 45 பந்துகளில் முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் இஷான் கிஷன் கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 மார்ச் 2025 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2025 ஐபிஎல் சீசனையும் கடந்த சீசனைப் போல் அதிரடியாக தொடங்கி, சாதனை வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்து வெற்றி பெற்றது. ஏற்கெனவே 287 ரன்கள் எனும் சாதனை ஸ்கோரையும் சன்ரைசர்ஸ் அணிதான் அடித்திருந்தது. இன்றைய போட்டியில் 300 ரன்களை எட்டுவதற்கு 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டநிலையில் சன்ரைசர்ஸ் ஆட்டம் முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகளுடன் 2.200 என்ற வலுவான நிகர ரன்ரேட்டுடன் ஆர்சிபியை பின்னுக்குத் தள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 51 பவுண்டரிகள், 30 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன, மொத்தம் 528 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஹைதராபாத்தில் ஆட்டத்தைக் காண வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் இரு அணியின் பேட்டர்களும் வானவேடிக்கை காண்பித்தனர். மோசமான சாதனை படைத்த பந்து வீச்சாளர்கள் Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு பேட்டிங்கில் சாதனைகள் படைக்கப்பட்டதால், பந்து வீச்சாளர்களுக்கு சோதனையான ஆட்டமாக இருந்தது. ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர், ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தவராக மாறினார். கடந்த 2019, 2020 சீசன்களில் ஆர்ச்சரின் பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. 152 கி.மீ வேகத்தில் பந்துவீசி அச்சுறுத்தலாக திகழ்ந்த ஆர்ச்சர், இன்று 4 ஓவர்கள் வீசி 76 ரன்களை வாரிக்கொடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்களும் ஆர்ச்சருக்கு சற்றும் குறையவில்லை. தீக்சனா(52), பருக்கீ(49),சந்தீப் சர்மா(51), தேஷ்பாண்டே(44) என ரன்களை வாரிக்கொடுத்தனர். இவர்களில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய பரூக்கி அரை சதம் ரன்களை வழங்குவதிலிருந்து 1 ரன்னில் தப்பினார். சன்ரைசர்ஸ் பேட்டர்கள் இந்த ஆட்டத்தில் 17 பந்துகளில் மட்டுமே ரன் ஏதும் எடுக்கவில்லை. ஆட்டநாயகனாக ஜொலித்த இஷான் கிஷன் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE 45 பந்துகளில் ஐபிஎல் போட்டிகளில் முதல் சதம் அடித்த இஷான் கிஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருது வென்றார். சன்ரைசர்ஸ் அணியில் ஏற்கெனவே டிராவிஸ், அபிஷேக் என அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்குப் போட்டியாக இஷான் கிஷன் வந்துள்ளார். மைண்ட் கேமில் சன்ரைசர்ஸ் X பதிவை கடந்து செல்ல, 1 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு, 1 287 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் பிரமாண்ட இலக்கோடு ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இது போன்று இமாலய இலக்கை எடுத்துவிட்டாலே எதிரணி மனரீதியாக நம்பிக்கையிழந்து உடைந்து விடுவார்கள். இதன் பின்னர் எளிதாக பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி ஆட்டமிழக்கச் செய்து, நிகர ரன்ரேட்டை உயர்த்திக்கொள்வது கிரிக்கெட்டின் "உளவியல் ஆட்டத்தில்" முக்கியமான அஸ்திரமாகும். ஒருவரை மனரீதியாக வீழ்த்திவிட்டாலே பாதி வெற்றி கிடைத்ததுபோன்றது. இந்த கலையை சன்ரைசர்ஸ் அணி கடந்த சீசனில் இருந்து சிறப்பாகச் செய்து வருகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் " 280 ரன்களுக்குமேல் அடிப்போம் என எதிர்பார்க்கவில்லை,வியப்பாக இருக்கிறது. ஏதாவது ஒரு அணி இதுபோன்று பெரிய ஸ்கோரை எடுத்துவிட்டாலே ஆட்டம் ஒருதரப்புதான் ரன்களை துரத்திச்செல்லும்போது, ஆட்டம் கடினமானதாக மாறிவிடும் . இஷான் ஆட்டம் அற்புதமாக இருந்தது. முதல் ஆட்டத்துக்கு தயாரானதே பிரமிப்பாக இருந்தது, எங்களின் பயிற்சியாளர்களும் அற்புதமானவர்கள், அனைத்து வீரர்களும் தயாராக இருந்ததால், சரியான நேரத்தில் திறமையை வெளிப்படுத்த முடிந்தது" எனத் தெரிவித்தார். அதிரடித் தொடக்கம் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்காக கடந்த சீசனில் பல சாதனைகளைச் செய்த டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா கூட்டணி இந்த முறையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் ஓவரிலிருந்து டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை வெளுத்து கட்டினர். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பரூக்கி, சந்தீப் சர்மா ஓவர்களை அபிஷேக், ஹெட் என இருவரும் துவம்சம் செய்தனர். பவுண்டரி, சிக்ஸர் என ஓவருக்கு 10 ரன்ரேட்டில் ஸ்கோர் உயர்ந்தது. இந்தப் போட்டியிலும் ஏதோ சம்பவம் செய்ய காத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். 3.4 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 50 ரன்களை எட்டியது. இருவரின் பேட்டிங்கைப் பார்த்து மிரண்டு, சுழற்பந்துவீச்சாளர் தீக்சனாவை பந்துவீச அழைத்தார் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக். இது கைமேல் பலன் கொடுத்தது அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 11 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் தீக்சனா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு 19 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஹெட் அரைசதம் அடுத்ததாக சன்ரைசர்ஸ் அணிக்கு புதிதாக வந்துள்ள இஷான் கிஷன் களமிறங்கி டிராவிஸ் ஹெட்டுன் சேர்ந்தார். ஏற்கெனவே டிராவிஸ் ஹெட் ராட்சசத்தனமாக ஆடிவரும் நிலையில், அத்தோடு இஷான் கிஷனும் சேர்ந்து கொண்டு வெளுத்து வாங்கினார். ஆர்ச்சர் பந்துவீச அழைக்கப்பட்ட முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் சிக்ஸர், பவுண்டரி என 21 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்து, ஐபிஎல் வரலாற்றில் 5வது அதிகபட்ச பவர்ப்ளே ரன்கள் என்ற சாதனை படைத்தது. பவுண்டரிகளாகப் பறக்கவிட்ட டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் அரைசதம் எட்டினார். தேஷ்பாண்டே வீசிய 10-வது ஓவரில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து 31 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்து(9பவுண்டரி, 3 சிக்ஸர்) ஹெட் ஆட்டமிழந்தார். இஷான், டிராவிஸ் கூட்டணி 38 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து பிரிந்தனர். 10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. இஷான் சரவெடி ஆட்டம் X பதிவை கடந்து செல்ல, 2 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு, 2 அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷனுடன் சேர்ந்தார். ஹெட், அபிஷேக் ஆட்டமிழந்தால் என்ன நான் இருக்கிறேன் என்று ராஜஸ்தான் பந்துவீச்சை இஷான் கிஷன் வெளுக்கத் தொடங்கினார். ஆர்ச்சர் வீசிய 13வது ஓவரில் 3 சிக்ஸர்கள் உள்பட 22 ரன்கள் சேர்த்த இஷான் கிஷன் 25 பந்துகளில் அரைசதம் எட்டினார். தீக்சனா வீசிய 15-வது ஓவரில் நிதிஷ் குமார் 30 ரன்கள் சேர்த்தநிலையில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த கிளாசன், இஷானுடன் சேர்ந்தார். சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் பவுண்டரி என 14 ரன்களை கிளாசன் எடுத்தார். ஆர்ச்சர் வீசிய 18-வதுஓவரை துவம்சம் செய்த கிளாசன் 4 பவுண்டரிகள் உள்பட 23 ரன்கள் சேர்த்தார். சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து கிளாசன் ஆட்டமிழந்தார். இவர் 14 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 34 ரன்கள் சேர்த்திருந்தார். அதே ஓவரில் இஷான் கிஷன் 2 சிக்ஸர்களை விளாசி 45 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை நிறைவு செய்தார். 225 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய இஷான் கிஷன், 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். அடுத்த 50 ரன்களை வெறும் 20 பந்துகளில் விளாசி சதத்தைக் கடந்தார். தேஷ்பாண்டே வீசிய கடைசி ஓவரில் அங்கித்(7), அபினவ் மனோகர்(0) என விக்கெட்டை இழந்தனர். எனினும் இஷான் கிஷன் கடைசிப்பந்தில் பவுண்டரியுடன் இன்னிங்ஸை முடித்தார். 47 பந்துகளில் 106 ரன்களுடன்(11பவுண்டரி, 6 சிக்ஸர்) இஷான் கிஷன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் கடைசிவரை களத்தில் இருந்ததால்தான் சன்ரைசர்ஸ் அணியால் பெரியஸ்கோரைக் குவிக்க முடிந்தது. 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் தீக்சனா 52 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். விக்கெட் சரிவு 287 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கு இருந்த போதும், ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் நம்பிக்கையளிக்கும் விதத்தில் பேட்டிங்கை தொடங்கினார். ஷமி வீசிய முதல் ஓவரிலேயே சாம்ஸன் சிக்ஸர், 2 பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். சிமர்ஜித் வீசிய 2வது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் மனோகரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் பராக், ஒரு பவுண்டரி அடித்தநிலையில் அதே ஓவரின் 5வது பந்தில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து 4ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3வது விக்கெட்டுக்கு சாம்ஸன், நிதிஷ் ராணா சேர்ந்தனர். சாம்ஸன் வழக்கம்போல் சிக்ஸர், பவுண்டரி என விளாசியதால் ரன்ரேட் குறையாமல் சென்றது. ராணா 11 ரன்னில் ஷமி பந்துவீச்சில் கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஜூரெல் களமிறங்கினார். கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரி என 20 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது. நம்பிக்கையளித்த சாம்ஸன், ஜூரெல் X பதிவை கடந்து செல்ல, 3 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு, 3 சாம்ஸனும், துருவ் ஜூரெலும் இணைந்து அதிரடியாக ஆடி சன்ரைசர்ஸ் அணிக்கு சவால் விடுக்கம் வகையில் ஸ்கோரை உயர்த்தினர். 9-வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணியும் 100 ரன்களை எட்டியது. 10ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தனர். சாம்ஸன் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிமர்ஜித் வீசிய 13-வது ஓவரில் ஜூரெல் 3 சிக்ஸர்களும், சாம்ஸன் ஒருபவுண்டரி என 26 ரன்கள்சேர்த்தனர். 28 பந்துகளில் ஜூரெல் அரைசதம் எட்டினார். ஹர்சல் படேல் வீசிய 14வது ஓவரில் விக்கெட் கீப்பர் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து சாம்ஸன் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 7பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். ஆடம் ஸம்பா வீசிய 15-வது ஓவரில் ஜூரெல் 35 பந்துகளில் 70 ரன்கள் (5பவுண்டரி, 6 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷுபம் துபே, ஹெட்மயர் அதிரடியால் ராஜஸ்தான் அணி 17.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. கடைசி இரு ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 70 ரன்கள் தேவைப்பட்டது. ஹெட்மயர், ஷுபம் துபே இருவரும் கடைசிவரை போராடியும் தோல்வியில் முடிந்தது. ஹெட்மயர் 42 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஹர்சல் படேலிடம் விக்கெட்டை இழந்தார். ஷுபம் துபே 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹர்ஷல் படேல், சிமர்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq6y38n212ro
3 months 2 weeks ago
24 MAR, 2025 | 09:50 AM

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நன்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இணைய மோசடிகள் பல்வேறு வகையில் இடம்பெற்று வருகின்றன.
நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து அதில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலிடுவதன் மூலம் சிறிய அளவிலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
மக்கள் முதல் வருமானத்தை நம்பி அடுத்த தடவை பெரிய ஒரு தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த நிதியானது மோசடியாளர்களால் அபகரிக்கப்படுகிறது.
மேலும், வங்கி கணக்கில் பணத்தினை வைப்புச் செய்துள்ளவர்களது கணக்கு இலக்கங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்கள் என்பன ஆசை வார்த்தை கூறி மக்களிடமிருந்து மோசடியாளர்களால் பெறப்படுகிறது.
பின்னர் அவர்களது கைபேசிக்கு இரகசிய இலக்கம் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்த இரகசிய இலக்கமானது பெறப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி செய்யப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்றன. ஊர்காவற்துறை நீதிமன்றத்திலும் இவ்வாறான வழக்குகள் காணப்படுகின்றபடியால் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
https://www.virakesari.lk/article/210036
3 months 2 weeks ago

போலியான நிதி மோசடி குறித்து ஸ்ரீ தலதா மாளிகை எச்சரிக்கை!
எதிர்வரும் கண்டி, ஸ்ரீ தலதா மாளிகை ஆலய உற்சவத்துக்காக நன்கொடைகள் கோரி சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்படும் செய்தி குறித்து விகாரை நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
அதில், இவ்வாறு சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தியானது முற்றிலும் தவறானது என ஸ்ரீ தலதா மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அறிக்கையின்படி,
விகாரை உற்சவத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசாங்கத்துடன் இணைந்து ஸ்ரீ தலதா மாளிகையால் வழங்கப்படுகின்றன.
எந்தவொரு தனிநபர், குழு அல்லது அமைப்பும் அதன் சார்பாக நிதி சேகரிக்கவோ அல்லது தொடர்புடைய நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அதிகாரம் அளிக்கவில்லை என்பதை மாளிகை வலியுறுத்தியது.
இதுபோன்ற தவறான செய்திகளைப் புறக்கணிக்கவும், துல்லியமான தகவல்களுக்கு ஸ்ரீ தலதா மாளிகையின் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளை மட்டுமே நம்பியிருக்கவும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் – என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
https://athavannews.com/2025/1426253
3 months 2 weeks ago

தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது!
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படையின் முன்னாள் சிப்பாய் எனவும் , மற்றுமொருவர் களவாடப்பட்ட மின் கலங்களை கொள்வனவு செய்தவர் எனவும் ஏனைய மூவரும் களவுக்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர்கள் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின் கலங்களை களவாடியுள்ளனர் எனவும், மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகமாகும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Athavan News

தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களைத் திருடிய குற்றச்...
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலையடுத்து இக்கைது...