Aggregator
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்காவில் அகோர வெய்யில்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மன்னாரில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு! ஒருவர் கைது!
அமெரிக்காவில் அகோர வெய்யில்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்?
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஜஸ்பிரித் பும்ரா: தோல்வியை ஆச்சரிய வெற்றியாக மாற்றும் மந்திர பந்துவீச்சாளர்
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை ஆணிக்கட்டைகளை வீசி மடக்கிப் பிடித்த பொலிஸார் - பளையில் சம்பவம்
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை ஆணிக்கட்டைகளை வீசி மடக்கிப் பிடித்த பொலிஸார் - பளையில் சம்பவம்
25 JUN, 2025 | 10:31 AM
யாழ் - பளை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற கனரக வாகனத்தினை நிறுத்த பொலிஸார் ஆணிக்கட்டைகளை டயரில் வீசி மடக்கி பிடித்துள்ளனர்.
பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த காரணத்தினாலேயே பொலிஸார் டயரிற்கு ஆணிக்கட்டைகளை வீசியுள்ளனர்.
ஆணிகட்டைகள் டயரில் சிக்கியதால் கனரக வாகனத்தின் நான்கு சில்லுகளும் காற்று போன நிலையில் வாகனத்தை வீதியில் நிறுத்தி விட்டு சாரதியும் உதவியாளரும் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
அதன் பின்னர் பலத்த சிரமங்களின் மத்தியில் கனரக வாகனத்தினை மீட்ட பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
தப்பியோடிய நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனுமதிப் பத்திரத்தில் மோசடி - மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகன சாரதிகள் மூவர் கைது
அனுமதிப் பத்திரத்தில் மோசடி - மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகன சாரதிகள் மூவர் கைது
25 JUN, 2025 | 10:22 AM
மணல் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பாத்திரங்களில் மோசடி செய்து மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் மூன்று கனரக வாகன சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் பகுதியில் இருந்து ஆற்று மணல் ஏற்றிச் சென்ற மூன்று கனரக வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (24) தனங்கிளப்பு பகுதியில் வழிமறித்து சோதனையிட்டனர்.
இதன்போது, தரை மணலை ஏற்றுவதற்கான அனுமதிப் பத்திரத்தினை பெற்று, பொலிஸார் பார்த்தபோது, அதில் ஆற்று மணலை ஏற்றுவதற்கான அனுமதி என மோசடியாக மாற்றம் செய்து மணலை ஏற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து மூன்று கனரக வாகனங்களையும் கைப்பற்றிய பொலிஸார், அதன் சாரதிகளையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.