Aggregator

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30 வருடங்கள் கடந்து இன்னமும் சிறையில் ; அரசியல் கைதிகள் விடுதலை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோழர்கள் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்தில் - ரஜீவ்காந்

3 months 1 week ago

25 Mar, 2025 | 04:57 PM

image

பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர் என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் ஆனால் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன்மீண்டும் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்

மகசின் சிறைச்சாலைக்கு சென்று தமிழ்அரசியல்கைதிகள் சிலரை பார்த்த பின்னர் கருத்து தெரிவிக்கையில்இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

என்பிபி அரசாங்கம் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்துஆறுமாதங்களிற்கு மேல் ஆகிவிட்டது,இந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக மக்களிற்கு சில உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்கள்.

அதில் நாங்கள் தொடர்ச்சியாக வேலை செய்துகொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை மிகவும் முக்கியமானது  ஒன்று.

இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ,தொடர்ச்சியாக நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். இந்த நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசியல் கைதிகள் பல்வேறு ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்,இன்று 30 ஆண்டுகளிற்கு மேல் இந்த சிறைச்சாலைக்குள் பல அரசியல் கைதிகள் உள்ளனர்,

நான் அவர்களில் ஒரு சிலரை பார்ப்பதற்காக இங்கு வந்தேன். கிட்டத்தட்ட 19 வயதில் கைதுசெய்யப்பட்ட, பத்தொன்பது வயதில் கைதுசெய்யப்பட்ட சிவகுமார் பார்த்தீபன் என்ற இருவர் ,முப்பது வருடங்கள் கடந்தும் இன்று 50 வருடங்கள் ஆகியும் விடுதலையடைய முடியாமல் சிறையில் உள்ளனர்.

இவர்களின் விடுதலை தொடர்பாக விஜித ஹேரத் அவர்களிடம் ஒக்டோபர் மாதம் நான்,வலியுறுத்தியிருந்தேன் அதற்கு பதிலளித்த அவர் விடுதலை இடம்பெறுகின்றது அதற்கான வேலைகள் இடம்பெறும் என தெரிவித்திருந்தார்.

அதற்கு பின்னர் பிரதியமைச்சர் ஒருவரின் ஊடாக ஹர்சநாணயக்கார அவர்களிற்கு எடுத்துக்கூறியிருந்தேன்.அதற்குரிய பதில் எனக்கு கிடைக்கவில்லை.

அதன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பல்வேறு தகவல்களை அனுப்பியிருந்தேன்,செய்திகளை அனுப்பியிருந்தேன், எத்தனையோ  ஊடக சந்திப்புகள் ஊடாக அரசியல் கைதிகள் தொடர்பாக,அவர்களின் கஷ்டங்கள், ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதி,மக்கள் ஆணை கிடைத்திருக்கின்றது அவர்களின் விடுதலை என்பது காலத்தின் கட்டாயம் என்பதை தொடர்ச்சியாக எடுத்துக்கூறிக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இன்றுவரை இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் என்பிபி தோழர்கள் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தலிற்காக களத்தில் குதித்துள்ளனர்.

இவர்களிற்கு முதுகெலும்பு இருந்தால் அரசியல்கைதிகளின் விடுதலையின் பின்னர் இவர்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ளவேண்டும்.

தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிராமல் இந்த சித்திரவதையை இத்துடன் நிறுத்தி அவர்கள் வாழ்வதற்கு அனுமதிக்கவேண்டும்.

இதற்கு முன்னர் விடுதலையான எந்தவொரு அரசியல் கைதியும் இந்த சமூகத்திலே எந்தவொரு பிழையான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டு அரசியல் இலாபம் தேடும் நோக்கிலே இந்த அரசாங்கம் நகரக்கூடாது.

அவர்களின் விடுதலைக்கு எந்த காரணமும் தடையாகயிருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இரண்டு வருடங்களிற்கு முன்னர் நாற்பத்தெட்டு பேர் இருந்தனர்,38 பேரின் விடுதலை இடம்பெற்றுள்ளது அதேபோல மிகுதி பத்துபேரின், விடுதலை நிச்சயமாக  இடம்பெறக்கூடிய ஒன்றுதான்,

ஏனென்றால் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதியினால் அவர்களிற்கான பொதுமன்னிப்பை வழங்க முடியும்,சட்டமா அதிபர்அவர்களிற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடிசெய்து அவர்களை விடுதலை செய்யலாம்.ஏனென்றால் போதுமான வாக்குமூலங்கள் கிடையாது , சிங்களத்தில் பதியப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக கொண்டுதண்டனை வழங்கப்பட்டுள்ளது,

தண்டனையாகயிருந்தால் கூட அவர்கள் இரண்டு ஆயுள்தண்டனையை அவர்கள் எதிர்நோக்கி முடித்திருக்கின்றார்கள்.

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30 வருடங்கள் கடந்து இன்னமும் சிறையில் ; அரசியல் கைதிகள் விடுதலை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தோழர்கள் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளுடன் தேர்தல் களத்தில் - ரஜீவ்காந் | Virakesari.lk

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை : உரிமையாளருக்கு சிறைத் தண்டனை

3 months 1 week ago
25 Mar, 2025 | 05:09 PM மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான திங்கட்கிழமை (24) பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர். இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு மாதகாலம் சிறையில் அடைக்குமாறும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் கொல்கலனில் அமைக்கப்பட்டுள்ள இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை : உரிமையாளருக்கு சிறைத் தண்டனை | Virakesari.lk

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை : உரிமையாளருக்கு சிறைத் தண்டனை

3 months 1 week ago

25 Mar, 2025 | 05:09 PM

image

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில்  மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான்  திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவ தினமான திங்கட்கிழமை (24) பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு மாதகாலம் சிறையில் அடைக்குமாறும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் கொல்கலனில் அமைக்கப்பட்டுள்ள  இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை : உரிமையாளருக்கு சிறைத் தண்டனை  | Virakesari.lk

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு

3 months 1 week ago
நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய அரசின் அறிவிப்பு நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்றே - சிறீதரன் 25 Mar, 2025 | 05:40 PM இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ஆயுதப்படையின் முன்னாள் தலைவர் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜயசூரிய மற்றும் இலங்கை இராணுவத்தின் சார்பாக செயற்பட்ட துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடை ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று எனவும், அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ள சிறீதரன் எம்.பி, இந்த விடயம் குறித்து அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரித்தானிய அரசு விதித்துள்ள பயணத்தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கிறது. இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரித்தானிய அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதி கோரும் பயணத்தில் தமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத் தமிழர்கள் பார்க்கிறார்கள். எண்பது வருடங்களுக்கு மேலாக கேட்பாரற்று படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு தமக்கான நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையை பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பதை உலகம் இப்போதாவது உணரத் தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றுள்ளது. நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய அரசின் அறிவிப்பு நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்றே - சிறீதரன் | Virakesari.lk

Am an atheist - சோம.அழகு

3 months 1 week ago
சோம அழகு அவர்களின் தமிழ் சேவை பாராட்டுதலுக்குரியது! ஆனால், சிறார்களின் தமிழின் மீதான ஆர்வத்தை போலி விஞ்ஞானத்தை முன்வைத்து உருவாக்குவது நல்ல விடயமாகத் தெரியவில்லை. எபிரேயத்தில் இருக்கும் "ஆதாம், ஈவ்" போன்ற சொற்கள் தமிழில் இருந்து தான் அங்கே சென்றன என்பதும், ஆதாமும் ஏவாளும் வாழ்ந்த இடம் "செரண்டிப்" என பைபிளில் இருக்கிறது (பைபிளில் செராபிம்- Seraphim என்ற தேவதைப் பெயர் தான் இருக்கிறதேயொழிய செரண்டிப் என்ற பெயர் எங்கேயும் இல்லை) அது இலங்கை/இந்தியாவின் தென்முனை என்பதும் கோராவில் எந்த ஆதாரங்களுமில்லாமல் பரப்பப் பட்டுக் கொண்டிருக்கும் போலி விஞ்ஞானக் கருத்துக்கள். குமரிக் கண்டமும் அப்படியானது தான். இதை பற்றி இங்கே பல ஆண்டுகள் முன்பே விவாதித்திருக்கிறோம். இப்படியான போலி விஞ்ஞானத்தின் பால் அடுத்த தலைமுறையை ஈர்க்க எந்த தமிழ் ஆசிரியரும் உதவக் கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

3 months 1 week ago
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது! | Virakesari.lk

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

3 months 1 week ago

image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது! | Virakesari.lk

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை சுமந்திரனிடம் பிரித்தானிய பிரதிநிதி பென் மெல்லர் தெரிவிப்பு

3 months 1 week ago
போர் முடிந்த கையோடு கொண்டுவந்த விசாரணைகளை தடுத்ததே இவர் தானே.

நானும் ஊர்க் காணியும்

3 months 1 week ago
நான் அங்கு நின்ற ஆறு மாதகாலத்தில் நடந்தவற்றை மேலோட்டமாக முன்னர் எழுதியிருந்தேன். அதனால் எழுதாமல் விட்ட சிலதை இப்ப எழுதினாலத்தான் ஒரு தொடர்ச்சி வரும் என்பதனால் எழுதுகிறேன். வீடு எல்லாம் எழுதி முடிந்து கணவரும் சென்ற பிறகு ஒரு வாரம் செல்ல, அடுத்தநாள் காலை வாங்கிய வீட்டுக்குச் செல்கிறேன். தாயும் அந்தச் சகோதரியும் நிற்கின்றனர். நான் வளவைச் சுற்றிப் பார்க்கிறேன். நாம் வாங்கும்போது இருந்ததைவிட வளவு குப்பையாக இருப்பதுபோல் எனக்குத் தெரிகிறது. வீட்டுடன் சேர்ந்து ஒரு பக்கத்தில் இரண்டு தூண்கள் எழுப்பி ஓடு போட்டபடி ஒரு இடம். அதைக் கடந்துதான் வெளியே உள்ள டொயிலெட்டுக்குப் போகவேண்டும். அந்தத் தூண்களில் இரண்டு மறி ஆடுகள் கட்டப்பட்டிருக்கு. மூன்று குட்டிகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்க ஆசையாக இருந்தாலும் ஆடுகள் கட்டியிருந்த இடம் பார்க்க அருவருப்பைத் தருகின்றது. ஆடுகள் முந்தி இருக்கேல்லையே. எப்ப வாங்கியது என்கிறேன். கன நாட்களாக வளர்க்கிறோம். நீங்கள் வீடு பார்க்க வந்தபோது வெளியே உள்ள வளவில மேயவிட்டனான். அம்மாவுக்கு ஆட்டுப் பால் தான் கொடுக்கிறது என்கிறார் சகோதரி. நாம் முதல்முதல் வந்தபோது ஒவ்வொன்றாகப் பார்க்கவில்லை. பார்க்கத் தோன்றவுமில்லை. நாம் வந்து பார்த்த முதல் நாள் இரு மருங்கும் செவ்வரத்தம் கன்றுகள் சடைத்து நின்றன. இப்போது பார்த்தால் அவை எல்லாம் ஆடுகள் கடித்து மொட்டையாகத் தடிகள் மட்டும் நிற்கின்றன. ஏன் தங்கச்சி ஆடுகடிக்க விட்டீர்கள் என்றதற்கு சின்னக் குட்டிகள் தானே இன்னும் கட்டத் தொடங்கேல்லை என்கிறார். வீட்டுக்குள்ளே சென்று பார்க்கலாமா என்கிறேன். ஓம் போய் பாருங்கோ என்று கூற ஒவ்வொரு அறையாகப் பார்த்துக்கொண்டு வர மூன்றாவது அறையில் இரண்டு கதவுகள் தெரிகின்றன. வெளிப் பக்கம் ஒன்று. உள்ளே இருந்து திறப்பதற்கானது அடுத்தது. நான் மின்விளக்கைப் போட்ட உடன் அறையில் அங்காங்கே ஆட்டுப் பிழுக்கைகள் தெரிய என்ன தங்கச்சி இது என்கிறேன். சின்னக் குட்டி எண்டதால அவை உள்ளேயும் வந்து படுக்கிறவை என்று சாதாரணமாகக் கூற, வீடு பழுதாப் போயிற்றுது உங்கள் வேலையால் என்று நான் கோபமாய்க் கூறுகிறேன். இன்னும் மூன்று மாதத்தில நாங்கள் போயிடுவம் என்கிறார் சகோதரி. இனிமேல் ஆடுகளை உள்ளே விடவேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினாலும் அவர்கள் அதைக் கடைபிடிக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிய, எதுவும் பேசாது வெளியேறுகிறேன். அதன்பின் ஒரு வாரம் தென்னைகள் தறித்து வளவைச் சுத்தம் செய்து முடிய பின்னர் உயிர் வேலிகளைத் தறித்துவிட்டு தாகரவேலி அடைத்துவிட்டு, இருந்த கிழுவைகளை பின்பக்க தகர வேலியின் உள்ளே அரை அடி தள்ளி ஊன்றும்படி சொல்ல முன்னர் தென்னை தறிக்க வந்த இருவருமே அந்த வேலையையும் செய்கின்றனர். தென்னைகள் எவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளாகத் தண்ணீரே விடவில்லை. மழைத் தண்ணீர் மட்டும்தான். அதனால் செழிப்பற்று இருக்கு. புற்கள் மட்டும் பெரிதாக வளர்ந்திருக்கு. பலதும் முட்கள் உள்ள செடிகளாகவும் இருக்கு. அதனால் வேலைக்கு வந்த இருவருமே இரண்டு நாட்கள் பெரிய புற்களைச் செதுக்கி முடிக்கின்றனர். வீட்டின் ஒரு பக்கம் கிட்டத்தட்ட நான்கு பரப்பு நிலம் தோட்டம் செய்யக்கூடிய நிலையில் இருக்கு. ஆனால் ஒருமிளகாய்க் கன்று கூட அவர்கள் நட்டிருக்கவில்லை. அந்த நிலத்தை உழவு இயந்திரத்தினால் உழுதுவிடு என்று கணவர் கூற 6000 ரூபாய்க்கு ஒருவரைக் கூப்பிட்டு உழுதால் மண் சம நிலைக்கு வரவில்லை. அவரிடமே சிறிய மண்ணைச் சமப்படுத்தும் இயந்திரம் இருக்கிறதா என்று கேட்க தன்னிடம் இல்லை என்று வேறு ஒருவரை ஒழுங்குசெய்து தருகிறார். அதில் ஏதாவது பயிர் வைப்போமா என்று கணவருடன் கதைத்தால் அது நாங்கள் போய் இருக்கும்போது வைக்கலாம் என்கிறார். பின்பக்கம் முழுதும் வாழைகள். அதுவும் பாராமரிக்கப்படாமல் இருக்கு. அவர்கள் வீட்டை விட்டு எழும்பும் மட்டும் பேசாமல் இரு என்கிறார் மனிசன். வீட்டின் பின்பக்கம் ஒரு பெரிய பாலாமாரம். வலது பக்கத்தில் இன்னொரு பெரிய பாலாவும் மாமரமும். நான் ஊஞ்சல் ஆடியபடி அந்த சகோதரியுடன் கதைத்துக்கொண்டு இருக்கிறேன். “இந்தப் பாலாமரத்தையும் தறியுங்கோ அன்ரி” “ஏன் நல்ல வடிவாத்தானே இருக்கு மரம்” “இல்லை அன்ரி. மரம் உள்ளால கோறையாப் போச்சு. வீட்டுக்குமேல சரிஞ்ச விழுந்தால் உங்களுக்குத்தான் வீண்செலவு” “மரத்தைப் பார்த்தால் அப்பிடித் தெரியேல்லையே” “மரம் ஒரு காய் கூட இப்ப ஐந்தாறு வருஷமாக் காய்க்கவுமில்லை” “நான் இறங்கிப் போய் மரத்தைச் சுற்றிப் பார்க்கிறேன். பெரிதாக கோறையானமாதிரித் தெரியவில்லையே” “உங்களுக்கு வெளியில தெரியாது. உள்ளுக்குள்ள சரியாப் பழுதாக்கி இருக்கும். நான் சொன்னதைச் சொல்லீற்றன். உங்கடை வீடு. உங்கடை விருப்பம்” அடுத்தநாள் தென்னை தறித்தவர்களைக் கூப்பிடுகிறேன். என் நண்பரின் அம்மா வீட்டில் வேலை பார்ப்பவர்கள் என்பதால் அவர்கள் மேல் கடும் நம்பிக்கை. “இந்தப் பிலாமரம் கோறை பத்திக் கிடக்கு என்று அந்தப் பிள்ளை சொல்லுறா. ஒருக்காப் பாருங்கோ தம்பியவை” “ஓமம்மா. வெட்டுறதுதான் நல்லது” “கனகாலமா காய்கவும் இல்லையாம். சரி அப்ப வெட்டுங்கோ” “மரத்தை எங்கையம்மா போடுறது” “வெட்டுங்கோ முதல்ல பிறகு ஆரன் விறகுக்குக் கேட்டால் குடுப்பம்” “நான் பெரிய துண்டுகளைக் கொண்டு போகட்டே” “எப்பிடிக் கொண்டு போவியள்” “லான்ட்மாஸ்டர் கொண்டுவந்து ஏத்துவம்” “கொண்டுபோய் என்ன செய்வியள். லாண்ட்மாஸ்டர் பிடிக்கிற காசுக்கு அங்கினையே வாங்கிப்போடலாமே” “இப்ப விறகு சரியான விலையம்மா” “பிலாவிலையளையும் சின்னக் கொப்புகளையும் நான் எடுக்கிறன் அன்ரி. பிலாவிலை ஆடுகளுக்கு நல்ல சத்து, நல்லாப் பால் சுரக்கும்” எனக்கு உள்ளுக்குள் சரியான மகிழ்ச்சி. தானாகவே வளவு சுத்தமாகுதே என்று. பாலாமாரம் வெட்டி முடிந்து அவர்கள் மரங்களைத் துண்டுபோட்டு லாண்ட்மாஸ்டரில் ஏற்றிக்கொண்டு இருக்கும் போது என் ஓட்டோ வருகிறது. “ஏனக்கா உதை வெட்டினனீங்கள்? ஓட்டோக்காரர் கேட்கிறார். கோறையாயிற்றுது என்று இவ சொன்னா. அதோடை காய்கிகிறதும் இல்லையாம். என்கிறேன். அவர் சென்று மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அவசரப்பட்டிடிட்டியள் அக்கா என்கிறார். எனக்கும் ஏதோ ஒருமாதிரி இருந்தாலும் மரம் வெட்டியாச்சு இனி ஒண்டும் செய்ய ஏலாது என்று மனதைத் தேற்றிக்கொள்கிறன். ஓட்டோவில் செல்லும்போது அவங்கள் பாலாமாரத்தைக் கொண்டுபோய் நல்லவிலைக்கு விப்பாங்கள். அதுதான் அவங்களும் சேர்ந்து வெட்டியிருக்கிறாங்கள் என்கிறார். சரி விடுங்கோ. காய்க்காத மரத்தை வச்சிருந்து என்ன பலன் என்கிறேன். மேலால கொஞ்சத்தை வெட்டியிருந்தாலே காய்க்குமே அக்கா. சரி வெட்டியாச்சு. இனிக்கதைச்சுப் பிரயோசனம் இல்லை. வாற கிழமையே ஒரு பாலாக் கன்றை நடுவம் என்று கூறுகிறேன்.

கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்

3 months 1 week ago
பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுக்கும் கலாசாரத்தை முறியடிக்க வேண்டும்.

சீனத் தூதுவரின் இல்லத்தில் ரணிலுக்கு இராப்போசனம்

3 months 1 week ago
@தமிழ் சிறி அனுரவின்ர பிறந்தநாளுக்கு இந்திய தூதரகத்தில் ரெட் வெல்வெட் கேக் வெட்டி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 😎

கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்

3 months 1 week ago
ஒரு சோக்கலேட்டுக்கு அடித்தவர் என்றால் மனித தனமை இல்லாத மிருகமா? புலிகளின் சொத்துகளுக்கு ஆட்டையை போட்டவர்களை என்ன செய்வது?

நானும் ஊர்க் காணியும்

3 months 1 week ago
முன்பு நீங்கள் எழுதியதை வாசிக்க எனக்கு கிடைக்கவில்லை, இப்போ கிடைத்திருக்கிறது. வாங்கிய வீட்டுக்கு என்ன நடந்ததென அறிய ஆவல். ஊரில் நடக்கும் விடயங்களை பார்த்தால்நெஞ்சு பக்கு பக்கென்று அடிக்குது.

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை சுமந்திரனிடம் பிரித்தானிய பிரதிநிதி பென் மெல்லர் தெரிவிப்பு

3 months 1 week ago
சும்மாவே எந்த தூதுவரின் அலுவலக கதவு திறந்திருந்தாலும், உள்நுழைந்து படம் எடுத்துப்போடும் சுமந்திரன், இப்போ உள்ளூராட்சி தேர்தல் வருகிறது சும்மா இருப்பாரா? ஏதோ மக்களுக்கு நல்லது செய்வதுபோல் எந்த தூதுவர் வருகிறார், எந்த பணிப்பாளர் வருகிறாரென காத்துக்கிடக்கிறார் போலுள்ளது. இத்தனை வருடங்களாக சாதிக்காதவர் இனித்தான் சாதிக்கப்போகிறார்? இனியும் உந்த போலி சந்திப்புகள், வாக்குறுதிகளை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.