Aggregator
Am an atheist - சோம.அழகு
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Am an atheist - சோம.அழகு
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
திடீரென இடிந்து விழுந்த பாரதியார் வீட்டின் மேற்கூரை!
பெருசு. (இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்)
பெருசு. (இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்)
படம் தொடங்குனதுல இருந்து ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் சிரிக்கவைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவே பெரிய வெற்றி.
ஏற்கனவே இலங்கையில் வெளிவந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பதால் கதையின் ஒன்லைன் தெரியும். ஆணுறுப்பு எழுச்சியடைந்த நிலையில் இறந்துபோகும் ஒரு பெரியவர், குடும்பத்தினர் இதனை மறைத்து எவ்வாறு அவரை நல்லடக்கம் செய்கின்றனர். அதுதான் கதை. இதில் என்ன நகைச்சுவை செய்துவிட முடியும் என்கிற அதிருப்தியில்தான் படம் பார்க்கவே சென்றேன். சும்மா சொல்லக்கூடாது திரிகொளுத்தி பட்டாசாக வெடித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சியுமே நல்ல நேர்த்தி, நடித்தவர்கள் எல்லோருடைய பங்களிப்புமே மிகநன்று, சரியான டைமிங் டயலாக்ஸ், சின்னச் சின்ன முகபாவனைகளில், பார்வையில், பல்வேறு செய்திகளை குறிப்பால் உணர்த்தி அது கதையோட்டத்தில் கலக்கும் போது அடல்ட் காமெடியாக நன்றாகவே வொர்க்கவுட் ஆகிவிடுகிறது.
ஒன்றுமில்லை, இந்த ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கக்கூடிய குடும்ப உறுப்பினரில் மருமகள்களும் உண்டு. ஒரு மருமகள் வீட்டிற்கு வந்து மாமனாரின் இறப்பிற்கு முதலில் வருந்தி, பிறகு அவரது விறைத்த ஆண்குறியைப் பார்த்து அதிர்ச்சியடைந்து..... இந்தப் பிரச்சனையை மூடிமறைக்கும் பொறுப்புக்குள் நாமும் இருக்கிறோம் என்று சாந்தமானதும்... அருகில் நிற்கும் கணவனை ஏற இறங்க ஒரே ஒரு பார்வை பார்ப்பார். "இவருக்கு புள்ளையா பொறந்துட்டு நீயும் தான் இருக்கியே தெண்டமா" என்பது போலான பார்வை. Chandini Tamilarasan பிரம்மாதப்படுத்தி இருப்பார்.
மருமகள் 1 : என் புருஷன் குச்சியை வச்சு குழந்தைகளை அடிக்க மட்டும்தான் லாயக்கு
மருமகள் 2 : இந்த பால் கூட கொஞ்சம் லேட்டா பொங்கும். ஆனா என் புருஷன்!
இப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல ஏகப்பட்ட காட்சிகள் படத்தினுள் உண்டு, மீண்டும் சொல்கிறேன் இது அடல்ட் காமெடி. குழந்தைகளுக்கு உகந்தது அல்ல. பெரியவர்கள் ரசித்துச் சிரிக்க ஏற்ற படம். நிச்சயம் முகம் சுழிக்க வைக்கக்கூடிய நகைச்சுவை அல்ல. சென்சிபிலாகவே இருக்கும்.
இளங்கோ ராம் திறமையான இயக்குனர், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நன்றாக கட்டமைத்து இருக்கிறார்.
திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.