1 week 4 days ago
உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் குறித்து வௌியான தகவல்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசித்து விண்ணப்பிக்கலாம்.
2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://adaderanatamil.lk/news/cmcbwbtmh00dkqp4kyv46edvj
1 week 4 days ago
இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வோல்கர் டர்க் பாராட்டு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (24) பாராளுமன்றத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்னவும் கலந்துகொண்டனர். இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது, சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்திற்கு உயர்ஸ்தானிகரை வரவேற்றார். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் வன்முறை சம்பவங்கள் இல்லாமல், மக்களை பிளவுபடுத்தும் இன அரசியலை உறுதியாக நிராகரிப்பதை பிரதிபலிக்கக்கூடிய வகையில் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்தப்பட்டதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார். உண்மையான நல்லிணக்கம் ஒவ்வொரு தனிநபரின் இதயத்திலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்றும், மக்களால் வழங்கப்பட்ட ஆணை ஒற்றுமைக்கான அவர்களின் அபிலாஷையைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். சமூகங்களுக்கிடையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார். தற்போதைய பாராளுமன்றத்தின் முற்போக்கான உள்ளடக்கிய தன்மையை எடுத்துக்காட்டிய அவர், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை மற்றும் பார்வை குறைபாடுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை என்பவற்றை சுட்டிக்காட்டினார். இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டிய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், குறிப்பாக பல நாடுகள் எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய சூழலில் சமூகங்களை ஒன்றிணைத்தல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்தை அடைதல் என்பன உண்மையில் கடினமான பணியாகும் எனத் தெரிவித்தார். ஒவ்வொரு தனிநபரும் வேறுபாடுகள் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுவதற்கான அடித்தளம் மனித உரிமைகள் என்று சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய நாடுகள் சபை இந்த இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதை வலியுறுத்தினார். சபாநாயகருடனான சந்திப்பை அடுத்து, மனித உரிமைகள் ஆணையாளர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் பிரத்தியேக சந்திப்பை நடத்தினார். இதன்போது நாட்டின் சமூக - அரசியல் நிலைமை மற்றும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன், இலங்கையின் மனித உரிமை நிலைமை, நல்லிணக்கச் செயன்முறை, தேவையான சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பிலும் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இலங்கையில் நிலையான நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் நிபுணத்துவத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வழங்கும் என்றும் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். இந்தச் சந்திப்பில் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் (Marc-André Franch), மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய - பசுபிக் பிராந்தியத்துக்கான தலைவர் ரோரி முங்கோவன் (Rory Mungoven) உள்ளிட்ட ஐ.நா. பிரதிநிதிகள் குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmcbvq60e00djqp4k6uihh7n6
1 week 4 days ago
👉 https://www.facebook.com/watch?v=615000964377174 👈 ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம்! நைசாக... நழுவிய, சாணக்கியன்! செம்மணி போராட்ட களத்தில் பெரும் பரபரப்பு. Samugam 24×7
1 week 4 days ago
செம்மணி “அணையா விளக்கு” போராட்டக் களத்திற்கு சென்றார் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் Published By: DIGITAL DESK 3 25 JUN, 2025 | 05:46 PM யாழ். செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு சென்று நிலைமைகளை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன், செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர் தூவி கற்பூர தீபமிட்டு அஞ்சலி செலுத்தினார். குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப்புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளையும் கேட்டறிந்துகொண்டார். குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். https://www.virakesari.lk/article/218460
1 week 4 days ago
யாழ் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்க கோரி ஐந்தாம் நாளாக தொடரும் போராட்டம் Published By: VISHNU 25 JUN, 2025 | 06:55 PM யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி புதன்கிழமை (25) ஐந்தாம் நாளாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வடமாகாண அவைத் தலைவர் சி வி கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/218464
1 week 4 days ago
உண்மையாவா?இதை எதிர்பார்க்கவே இல்லை. உங்களுடன் சேர்ந்து நானும் கண்டிக்கிறேன்.
1 week 4 days ago
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்க முதலிருந்தே இஸ்ரேலியர்களின் ஆலோசனைப்படியே இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதும் அப்படியாகவே இருக்கலாம்.
1 week 4 days ago
அதானே? ஏன் போகவில்லை சுமந்திரன்? ஒரு கனதியான விவகாரம் பற்றி நடக்கும் போராட்டத்திற்குச் சென்று சில "விசிலடிச்சான் குஞ்சுகளுடன்" ஓடிப் பிடித்து விளையாடாமல் தவிர்த்த சுமந்திரனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்😂!
1 week 4 days ago
செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்; அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு 25 JUN, 2025 | 05:31 PM செம்மணியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ''அணையா விளக்கு'' போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் வழங்குகின்றோம். அதேபோல நீதிக்கான இப்போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்படுகின்றன என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். செம்மணி போராட்டம் தொடர்பில் யாழில் புதன்கிழமை (25) ஊடக சந்திப்பு ஏற்படுத்தி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், செம்மணி போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலேயே சம்பவ இடத்துக்கு சென்றிருந்தேன். செம்மணி புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாரென்பது மக்களுக்கு தெரியும். இந்த கொலைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் மக்கள் எம்மிடமும் கூறியுள்ளனர். எனவே, எங்களுக்கும், அதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. செம்மணியில் இன்று குழப்பம் விளைவித்த இளைஞர்கள் சிலர், செம்மணி புதைகுழி சம்பவங்கள் நடந்த காலகட்டத்தில் பிறந்திருந்தார்களா என்பதுகூட தெரியாது. இப்படியானவர்களே அரசியல் வாதிகளை விரட்டியடிக்கும் செயலில் ஈடுபட்டனர். அணையா விளக்கு போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம், அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர். ஆளுங்கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என சமூகவலைத்தளங்கள் ஊடாக மக்கள் கருத்துகளை முன்வைத்து வந்தனர். ஒரு அமைச்சராக நான் போராட்டத்தில் பங்கேற்பது அப்போராட்டத்தக்கு வலுசேர்க்கும் என்பதே உண்மை. அந்த செய்தி சர்வதேசம் வரை செல்லும். அந்தவகையில் மக்களை சந்திப்பதற்காக இன்று நான் செம்மணிக்கு வந்தபோது ஒரு சில கும்பல், தமது அரசியல் இலாபத்துக்கு குழப்பம் விளைவித்தனர். இது தொடர்பில் மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. மக்களின் மனநிலை என்னவென்பதும், அவர்களின் வலி வேதனையும் எங்களுக்கு தெரியும். செம்மணியில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். செம்மணியில் மட்டும் அல்ல நாட்டில் மேலும் பல இடங்களிலும் புதை குழிகள் உள்ளன. எமது கட்சி தலைவர் உட்பட தோழர்களும் கொன்று புதைக்கப்பட்டனர். இப்படியான சம்பவங்களுக்கு நீதி வேண்டும். அதற்கான தேடலை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். இனவாதம், மதவாத மற்றும் பிரதேச வாதத்துக்கும், பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் எமது ஆட்சியில் முடிவு கட்டப்பட்டுள்ளது. ஒரு சிறு கும்பல் எம்மை, விரட்ட முற்பட்டாலும் நாம் குரோத மனப்பான்மையுடன் செயற்படப்போவதில்லை. ஒரு அமைச்சராக நான் பாதுகாப்பு தரப்புடன் சென்றிருக்கலாம். சம்பவத்தின் பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை. தனி மனிதனாகவே நான் வந்தேன். ஏனெனில் மக்கள் எம்முடன் இருக்கின்றனர். செம்மணியில் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் தெரிவிக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/218458
1 week 4 days ago
சுமந்திரன்... நரியன். எங்கை தனக்கு அடி விழும் என்று முன்பே தெரியும். 😂 ஏற்கெனவே சுமந்திரனுக்கு... அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என்று சர்வதேச லெவலில் வாங்கிக் கட்டிய அனுபவம் உண்டு. 🤣 செம்மணிக்கு தான் போனால்... கோட்டு, சூட்டு எல்லாம் கழட்டி துவைத்து எடுத்து விடுவார்கள் என்று தெரியும். அதுதான்... தான், பதுங்கிக் கொண்டு, சிவஞானத்தை நோட்டம் பார்க்க அனுப்பியவர். அதுகும் வந்து, வளமாய் வாங்கிக் கட்டிக் கொண்டு போயிருக்குது. 😂
1 week 4 days ago
ஓம் அண்ணா இதையும் நானும் அறிந்தேன் , இது பெருத்த ஆவத்தில் போய் முடியும் , இலங்கையர்கள் இப்பவே விழிக்கனும் இல்லையேன் பைப்பிலை காட்டி இலங்கை தீவையும் ஆட்டைய போட்டு விடுவாங்கள்.................2000வருடத்துக்கு முதல் யூதர்கள் இங்கு தான் வாழ்ந்தார்கள் என தங்கட பழைய பைப்பில்ல போட்டு இருக்கு என...................... யாழ்பாணம் சின்ன சின்ன குட்டி தீவுகளை கொண்ட அழகான இடம் , யூதர்களுக்கு எங்கட நாட்டின் மேல் கூட ஆசை வரக் கூடும்...........................................
1 week 4 days ago
மாற்றிப் பாருங்கள். முன்னர் நான் மாற்றிய ஞாபகம். இதிலே சுமந்திரன் ஏன் கலந்து கொள்ளவில்லை? முன்னமே தெரிந்துவிட்டதோ?
1 week 4 days ago
1 week 4 days ago
Published By: VISHNU 25 JUN, 2025 | 07:05 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) மாலை வந்திறங்கிய ஆணையாளர், முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார். அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார். அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள், மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் " அணையா விளக்கு" போராட்ட களத்திற்கு நேரில் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார். அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட "அணையா தீபத்திற்கு" முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். https://www.virakesari.lk/article/218465
1 week 4 days ago
Published By: VISHNU
25 JUN, 2025 | 07:05 PM

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) மாலை வந்திறங்கிய ஆணையாளர், முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார்.
அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார்.
அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள், மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ். வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் " அணையா விளக்கு" போராட்ட களத்திற்கு நேரில் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட "அணையா தீபத்திற்கு" முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.








https://www.virakesari.lk/article/218465
1 week 4 days ago
நான் எங்கையும் என்னை அறிவுஜீவி என சொன்னது கிடையாது , ஓவர் வில்டாப் விட்டதும் கிடையாது..............................
1 week 4 days ago
கடஞ்சா, சைனா மத்திய கிழக்கில் நடக்கும் சண்டைகள் என்று மட்டும் இல்லை, எந்தச் சண்டைகளிலுமே பங்குபற்றுவதில்லை. உலகில் இரு நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளுமே தங்கள் மேல் தீவிரமாக, தவிர்க்க முடியாமல் ஒரு சண்டை திணிக்கப்பட்டாலே அன்றி சண்டைகளில் ஈடுபடுவதில்லை. இன்றைய காலத்தில் ஒரு பத்து நாட்கள் நடக்கும் யுத்தமே ஒரு நாட்டை மிக இலகுவாக சில வருடங்கள் பின்னோக்கி கொண்டு சென்று விடும் என்ற தெளிவு எல்லா நாடுகளிடமுமே இருக்கின்றது. மிக அண்மையில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பார்த்தோம். ஒருவரின் வான்வெளிக்குள் அடுத்தவரின் யுத்த விமானங்களே பறக்கவில்லை. தங்கள் தங்கள் வான்வெளிகளிலேயே இரண்டு நாட்கள் சுற்றிப் பறந்து விட்டு இறங்கினார்கள். பின்னர் சமாதானம் என்றார்கள். அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டுமே தொடர்ச்சியாக உலகெங்கும் சண்டைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இஸ்ரேல் அதன் இருப்பிற்காக அங்கு பலருடன் போராடுகின்றது. அமெரிக்கா அதன் மதிப்பிற்காகவும், அதற்கு பொறுப்புகள் இருக்கின்றது என்றும் பல இடங்களுக்கும் போய் வருகின்றது. அமெரிக்கா வல்லரசே இல்லை, அமெரிக்காவிற்கு கேந்திர முக்கியத்துவமே கிடையாது என்று 25 வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். அமெரிக்க டாலரே மூழ்கிவிட்டது என்பதையும் பல வருடங்களாக வாசித்துக் கொண்டேயிருக்கின்றேன். சீனா முன்னே போய்விட்டது என்றும் தான். கோவிட் காலத்தில் அமெரிக்க வல்லமை அற்றது என்று வந்த செய்திகள் ஏராளம். அடுத்த 25 வருடங்களுக்கும் இதே செய்திகள் வரும். ஆனால் அமெரிக்கா இருக்கும் இடத்திலேயே இருக்கும், அமெரிக்க டாலரும் அங்கேயே இருக்கும். அப்படியே நான் போய்ச் சேர்ந்து விடுவேன்............ வேற யாராவது வந்து இதைப் போல யாழில் எழுதுவார்கள்....................🤣.
1 week 4 days ago
ஒரு காலத்தில் இலங்கையில் உள்ள யூதர்களை வெளியேற்ற போராட்டங்கள் நடந்தாலும் நடக்கலாம். கிழக்கு மாகாணத்தில் அறுகம்பே என்ற இடத்தில் சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேல்காரர்கள் கோவில் குளம் எல்லாம் கட்டி நீண்டகால இருப்புக்கு ஆயத்தமாகிறார்கள். இஸ்ரேலிய புலனாய்வுப்பிரிவே கூடுதலாக இங்கே வந்து தங்குவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் கூறுகின்றன.
1 week 4 days ago
ayatollah ali khameneiக்கு சிறுவர்கள் சிறுமிகள் மீது அதிக பாசம்.................எப்படி எங்கட தலைவர் செஞ்சோலை பிள்ளைகளை நேசித்தாரோ அதே போல் தான் khameneiயும் ஈரான் நாட்டு பிள்ளைகள் மீது அதிக பாசம் , இவரின் உடம்பை தொட்டு ஊனமுற்ற வயதான பாட்டி இவர் கை கொடுத்த பிறக்கும் இவரின் தோல தொட்ட கைய தன் வாயாலையே தன் கைய முத்தம் இட்டா🙏👍............................
1 week 4 days ago
பொதுமக்களால் ஓட ஓட கலைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் சீ.வி.கே சிவஞானம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற வடமாகாண சபை அவைத்தலைவரும், தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சீ.வி.கே சிவஞானம் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்று (25) 3ஆவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் மதியம் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சீ.வி.கே சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றி இருந்தனர். யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள் என கூறியே போராட்டக்களத்தில் இருந்து சீ.வி.கே சிவஞானத்தை அப்புறப்படுத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk