Aggregator
கிளிநொச்சியில் எரிபொருள் தாங்கி வாகனம் தடம் புரண்டது
26 Jun, 2025 | 04:47 PM
கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி வாகனம் இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை தடம் புரண்டுள்ளது.
முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த குறித்த எரிபொருள் தாங்கி இன்று அதிகாலை 1.மணிக்கு தடம்புரண்டது.
குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை பெருமளவான டீசல் வெளியேறிதனால் பொது மக்கள் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
வலி. வடக்கில் விடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அருகில் உள்ள இராணுவத்தின் முன்னரங்க வேலிகளை நகர்த்த கோரிக்கை
வலி. வடக்கில் விடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அருகில் உள்ள இராணுவத்தின் முன்னரங்க வேலிகளை நகர்த்த கோரிக்கை
26 Jun, 2025 | 04:55 PM
வலி வடக்கில் விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் , யாழ் . மாவட்ட கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ராசிக குமார இன்றைய தினம் வியாழக்கிழமை (26) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
சந்திப்பின்போது, வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்குரிய நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெறாத போதிலும் தற்காலிக பின்னரங்க வேலியை அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
மேலும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிக்கும்போது அங்கு களவுகள் இடம்பெறுவதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதற்கு அமைவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அவற்றைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார்.
வடக்கில் நிலவும் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் இராணுவத் தளபதி ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.
உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்களை ஆளுநரும், இராணுவத் தளபதியும் பரிமாறிக்கொண்டனர்.
வலி. வடக்கில் விடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கு அருகில் உள்ள இராணுவத்தின் முன்னரங்க வேலிகளை நகர்த்த கோரிக்கை | Virakesari.lk
நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
"கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" - கனடாவில் பிரதமர்
"கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" - கனடாவில் பிரதமர்
26 Jun, 2025 | 05:46 PM
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பொதுநலவாயக் கல்வி அமைப்பின் (COL) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 2025 ஜூன் 24 ஆம் திகதி கனடாவின் வான்கூவர் நகரை சென்றடைந்தார்.
அங்கு அவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கம், பொதுநலவாயக் கல்வி அமைப்பு மற்றும் கனடாவின் உலகளாவிய விவகாரங்கள் (Global Affairs Canada) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
அத்தோடு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த "கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" எனும் தலைப்பிலான சிறப்பு சமூக கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வு, கனடாவில் வசிக்கும் சமயத் தலைவர்களுக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் பிரதமருடன் கலந்துரையாடுவதற்கான ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது.
"கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் ஒரு மாலைப்பொழுது" - கனடாவில் பிரதமர் | Virakesari.lk
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
மனிதப் படுகொலை, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் - இலங்கைக்கான ஈரானிய தூதுவர்
மனிதப் படுகொலை, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் - இலங்கைக்கான ஈரானிய தூதுவர்
26 Jun, 2025 | 07:34 PM
(இராஜதுரை ஹஷான்)
நெருக்கடியான சூழநிலையில் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானத்தை செயற்படுத்தினால் உலக பொருளாதாரம் மற்றும் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் இந்த தீர்மானத்தை நாங்கள் அமுல்படுத்தவில்லை என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் தெரிவித்தார்.
மனிதப் படுகொலை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும். உலக அமைதியை ஈரான் என்றும் வலியுறுத்துகிறது. இருப்பினும் எமது தேசியம் மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக போராடும் பொறுப்பு எமக்கு உண்டு எனவும் ஈரானிய தூதுவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள ஈரானிய தூதரகத்தில் வியாழக்கிழமை (26) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சர்வதேச யுத்த சட்டங்களுக்கு எதிராகவே இஸ்ரேல் செயற்படுகிறது. காஸாவின் உண்மை நிலையை சகல உலக நாடுகள் நன்கறியும்.அங்கு நாளாந்தம் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட சிவில் பிரஜைகள் கொல்லப்படுகிறார்கள்.
மனிதப் படுகொலை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும்.அனைவருக்கும் பொதுவான கடப்பாடுகள் உள்ளன.
உலக நாடுகளின் அமைதியை ஈரான் என்றும் வலியுறுத்துகிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவுள்ளோம்.இருப்பினும் ஒருசில நாடுகள் இராஜதந்திர கொள்கையை பின்பற்றவில்லை.
எமது தேசிய மற்றும் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. ஈரான் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு அமைவாகவே செயற்படுகிறது. மக்களின் அபிலாசைகளும்,அரச தீர்மானங்களும் தற்போதைய நிலையில் ஒருமித்ததாக உள்ளது.
நெருக்கடியான சூழநிலையில் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்மானத்தை செயற்படுத்தினால் உலக பொருளாதாரம் மற்றும் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் இந்த தீர்மானத்தை நாங்கள் அமுல்படுத்தவில்லை.
தற்போதைய நெருக்கடியான சூழலில் இலங்கை ஈரானுடன் இணக்கமாக பொதுவான வெளிவிவகார கொள்கையில் செயற்பட்டுள்ளது.இலங்கை எமது வரலாற்று ரீதியிலான நண்பன் என்றே குறிப்பிட வேண்டும்.இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.
மனிதப் படுகொலை, ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் - இலங்கைக்கான ஈரானிய தூதுவர் | Virakesari.lk