Aggregator
சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு
27 Jun, 2025 | 02:24 PM
அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த சின்ன வெங்காய உற்பத்தியாளர்கள், நாட்டில் சின்ன வெங்காய இறக்குமதியை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீ மோகனிடம் மகஜர் ஒன்றை வெள்ளிக்கிழமை (27) கையளித்தனர்.
இது தொடர்பாக, யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள், போராட்டத்தைத் தொடர்ந்து தங்களது கோரிக்கையை மகஜராக வழங்கினர்.
தொடர்ச்சியாக சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திற்கு நிர்ணய விலை வழங்கப்படாததால் அதிக இழப்பை சந்திக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சின்ன வெங்காயத்தை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் வரையிலான காலப்பகுதியில், செலவுகள் அதிகமாக இருப்பதால், நிர்ணய விலைக்கு கீழ் விற்பனை செய்வது தங்களுக்கு பெரிய பாதிப்பாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து சின்ன வெங்காயத்தை அதிகளவில் இறக்குமதி செய்வது அவற்றின் விலையை குறைக்கச் செய்துள்ளதாகவும்,
இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெரிய தடையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், சின்ன வெங்காய இறக்குமதியை கட்டுப்படுத்தி, உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும் எனக் கோரி அவர்கள் மகஜரை கையளித்துள்ளனர்.
சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு | Virakesari.lk
சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !
சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது !
27 Jun, 2025 | 02:51 PM
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷவின் மனைவியின் சகோதரரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்க கைது ! | Virakesari.lk
பலாலி சந்தையை விடுவிக்க வேண்டும் ; வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
பலாலி சந்தையை விடுவிக்க வேண்டும் ; வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
27 Jun, 2025 | 04:10 PM
யாழ். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கன்னி அமர்வு ஞாயிற்றுக்கிழமை (27) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தவிசாளர் தனது தலைமை உரையில் தெரிவித்ததாவது,
எங்களுடைய மக்கள் இன்னும் 2400 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள், அவர்களை மீள்குடியேற்றுவதற்காக எங்களுடைய சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்காக அனைவருடைய ஒத்துழைப்பும் தேவையாக இருக்கின்றது.
எங்களுடைய பல உறுப்பினர்கள் கூட தமது சொந்த நிலங்களுக்கு திரும்பாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் தமது சொந்த நிலங்களுக்கு சென்று இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு நாங்கள் அவர்களுக்கான நிலங்களை பெற்றுக் கொடுப்பதோடு, அந்தப் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தை தொடர்ந்து நடைபெறுகின்ற அபிவிருத்தி திட்டங்களையும் நாங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் மீள்குடியேற்ற அமைச்சினால் 182 மில்லியனுக்கும் மேற்பட்ட ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதும் அதற்கான வேலை திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கின்றது.
எங்களுடைய சபையின் பக்கமும் ஒரு சில தவறுகள் இருக்கின்றன, அதற்கான மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் இருக்கின்றது. நாங்கள் சபையை பொறுப்பெடுத்த பின்னர் அதனை விரைவு படுத்த வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.
தொடர்ந்து சபைக்கான நிலையியற் குழுக்கள் அமைக்கப்பட்டதோடு , தீர்மானங்களும் எடுக்கப்பட்டது. இதன்போது பிரதேச சபைக்கு சொந்தமான பலாலி சந்தையை விடுவித்து தருமாறு கோரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறித்த தீர்மானம் மாவட்ட இராணுவ தளபதிக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எழுத்து மூலம் அனுப்பப்படும்.
அத்தோடு கடந்த 2023 ஆம் ஆண்டு விடிவிக்கப்பட்டுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தை மீள அமைப்பதற்கு விரைவில் அதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
பலாலி சந்தையை விடுவிக்க வேண்டும் ; வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம் | Virakesari.lk
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவிப்பு
ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவிப்பு
27 Jun, 2025 | 05:04 PM
படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல்செய்யவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் புதல்வர் ஜோசப்பரராஜசிங்கம் டேவிட் 20வருடங்களுக்கு பின்னர் வெள்ளிக்கிழமை (27) மட்டக்களப்புக்கு வருகைதந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கத்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,பிரதி முதல்வர் டினேஸ் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.
புதூர் பகுதியில் உள்ள மயானத்தில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் நினைவுத்தூபியில் அவரின் மகன் மற்றும் பாராளுமுன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர்,பிரதி முதல்வர் சுடர் ஏற்றி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதிகோரி ஒவ்வொரு வருடமும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணி போராட்டத்தினை நடாத்திவருகின்றது.
ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் கொலையில் முக்கிய சந்தேகநபராக பிள்ளையான் அவர்கள் நல்லாட்சிக்காலத்திலே கைதுசெய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து அவர் விடுதலைசெய்யப்பட்டார்.
அந்த விடுதலை பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. தென்னிலங்கையில் கூட நீதித்துறையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் அசாத் மௌலானாவின் வாக்குமூலம் இருந்தது.
ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் அந்த வழக்கினை தள்ளுபடிசெய்து குற்றவாளி கூண்டிலிருந்து பிள்ளையானை நீக்கியிருந்தார்கள்.
ஆனால் காலம்மாறியிருக்கின்றது.அந்த படுகொலையினை செய்ததாக சந்தேகிக்கப்படும் ராஜபக்ஸ ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தற்போது ஆட்சியில் இல்லை. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மீண்டும் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.
பிள்ளையான் கைதானது ஈஸ்டர் குண்டுத்தாக்குதலா அல்லது திரிபொலியுடன் இணைந்து மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் உட்பட ஏனைய கொலைகளைப்பற்றியா என்பது நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆனாலும் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் சார்பில் அவரின் படுகொலை வழக்கினை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.
இது தொடர்பான விடயங்கள் சில மாதங்களுக்கு முன்னர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் குடும்பத்தினரின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கவேண்டும்.
என்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார். இங்கு மூடிமறைக்கப்பட்ட,நீதி மறுக்கப்பட்ட பல படுகொலைகளை விசாரணைசெய்யப்படவேண்டும்.
இரு தினங்களுக்கு முன்னர் ஐநா மனித உரிமை ஆணையாளர் வந்தபோது அவர் எங்களிடம் சில விடயங்களை தெரிவித்திருந்தார் அதாவது காணாமல்ஆக்கப்பட்டவர்கள்,படுகொலைசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சி பத்து விடயங்களை முன்வைக்குமாறு கூறியிருந்தார்.
இதன்போது நாங்கள் முதலாவதாக ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் விசாரணையை மீளஆரம்பிக்கவேண்டும்,ரவிராஜ் படுகொலை,திருகோணமலை மாணவர்களின் படுகொலைகள்டு, மாணர்கள் கடத்தப்பட்டமை, இறுதி யுத்த காலப்பகுதியில் நேரடியாக கையளிக்கப்பட்டு காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் தொடர்பில் தெரிவித்திருந்தேன்.
இதேபோன்று அனந்தி சசிதரனின் கணவரின் வழக்கு போன்ற பல்வேறுவிடயங்களை தெரிவித்திருந்தேன். நாங்கள் நீதிக்கான போராட்டத்தினை கைவிடமாட்டோம்.
ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் நீதிகோரிய போராட்டத்தினை இலங்கை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் என்பதை அவரின் மகனுக்கு நாங்கள் உத்தரவாதமளிக்கின்றோம் என்றார்.
படுகொலை தொடர்பான வழக்கினை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவிப்பு | Virakesari.lk
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்திராகாந்தி பிறப்பித்த அவசரகால நிலையின் போது செய்யப்பட்ட உடன்படிக்கையே இன்று இந்திய மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்படுவதற்கு காரணம் - ஜெய்சங்கர்
அரச வைத்தியசாலைகளில் பல கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு : தனியாரிடம் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் : வைத்தியர் சமல் சஞ்சீவ
அரச வைத்தியசாலைகளில் பல கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு : தனியாரிடம் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் : வைத்தியர் சமல் சஞ்சீவ
Published By: Digital Desk 3
27 Jun, 2025 | 05:18 PM
செயற்கை முழங்கால் மாற்று உபகரணங்கள் மற்றும் பிற அறுவை சிகிச்சை கருவிகள் போன்ற முக்கியமான மருத்துவப் பொருட்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி வருமாறு சொல்வது, தற்போது பல அரச வைத்தியசாலைகளில் வழக்கமான விடயமொன்றாக மாறிவிட்டது. ஏனெனில் அவைகள் அதிகளவில் கையிருப்பில் இல்லை என சுகாதார தொழில் வல்லுநர்களின் தேசிய அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இந்தப் பொருட்கள் பின்னர் அறுவை சிகிச்சைக்காக நேரடியாக அறுவை சிகிச்சை அறைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் உபகரணங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட விசேட வைத்திய நிபுணர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமான விடயம் ஒன்று இல்லை என அவர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சுகாதார அமைப்பில் உள்ள பாரிய சிக்கலை எடுத்துக்காட்டுகிறது எனவும், வைத்தியசாலைகளால் வழங்கப்பட வேண்டிய மருத்துவ உபகரணங்களுக்கு நோயாளிகள் அதிக அளவு பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
தனியார் மருத்துவ நிறுவனங்களிடமிருந்து செயற்கை முழங்கால் கருவிகளை வாங்க நோயாளிகள் ரூபாய் 350,000 க்கும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பணம் செலுத்திய பின்னர் நிறுவன ஊழியர்கள் அறுவை சிகிச்சைக்காக உபகரணங்களை அறுவை சிகிச்சை
தனியார் மருந்து நிறுவனங்களிடமிருந்து செயற்கை முழங்கால் கருவிகளை வாங்க நோயாளிகள் ரூ.350,000 க்கும் அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பணம் செலுத்திய பிறகு, நிறுவன ஊழியர்கள் அறுவை சிகிச்சைக்காக உபகரணங்களை அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அண்மையில் அதே வைத்தியசாலையில் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை உபகரணங்களின் சட்டவிரோத விற்பனை தொடர்பான சம்பவத்துடன் வேறுபட்டதல்ல என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
"ஏழை நோயாளிகளால் அறுவை சிகிச்சைகளுக்கு இவ்வளவு அதிகமான செலவுகளை தாங்கிக் கொள்ளமுடியாது". பல மாதங்களாக போதுமான அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்காததற்கு மருத்துவ வழங்கல் பிரிவை அவர் குற்றம் சாட்டினார். இது இந்த சட்டவிரோத மோசடிகள் தொடர அனுமதித்ததாக அவர் கூறினார்.
நாட்டின் இலவச சுகாதார முறையை மருந்து நிறுவனங்கள் இதுபோன்று தவறாகப் பயன்படுத்துவதை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. சுகாதார அமைச்சு தனது பட்ஜெட்டை நிர்வகிக்கவும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை முறையாக வழங்கவும் ஏன் தவறிவிட்டது என்பது குறித்து முழுமையான விசாரணையை தொடங்குமாறு அவர் ஜனாதிபதியை வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார நிலைமை ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும், சுகாதார அதிகாரிகளின் சீரற்ற முகாமைத்துவம் காரணமாக சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
இறுதியாக, தனிப்பட்ட இலாபத்திற்காக மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறையை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக முறையான விசாரணையை ஆரம்பிக்குமாறு வைத்தியர் சஞ்சீவ ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் பல கருவிகள், உபகரணங்களுக்கு தட்டுப்பாடு : தனியாரிடம் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவுறுத்தல் : வைத்தியர் சமல் சஞ்சீவ | Virakesari.lk
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்
சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
27 JUN, 2025 | 02:04 PM
சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி Face book, Whatsapp, Telegram, Skype, We Chat போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் முறைப்படி; விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் சிறிய பணத்தொகையை முதலீடு செய்தால் அதன் ஊடாக இலாபம் பெறலாம் என சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, சிறிய பணத்தொகையை முதலீடு செய்த நபர்களுக்கு பெருமளவிலான பணத்தை வழங்கி அதிகளவிலான இலாபத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் நம்பிக்கையை வென்ற பின்னர் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்யுமாறு கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இதனை அறியாத மக்கள் சிறிய பணத்தொகையை முதலீடு செய்ததால் கிடைத்த அதிகளவிலான இலாபத்தை நம்பி பெரியளவிலான பணத்தொகையை முதலீடு செய்து ஏமாறுகின்றனர்.
இரண்டாம் முறைப்படி; வீட்டிலிருந்து சம்பாதிக்க முடியும் என கூறி விளம்பரங்களை பதிவிட்டு, அதன் ஊடாக அறிமுகமான நபர்களின் வங்கி கணக்குகளை பெற்றுக்கொண்டு அதில் பணத்தை வைப்புச் செய்து அந்த பணத்தை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தால் பெரியளவிலான பணத்தொகை இலாபமாக கிடைக்கும் என கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் முதலாம் முறையில் குறிப்பிடப்பட்டுள்ள விளம்பரத்தின் அடிப்படையில் வங்கி கணக்குகளில் பணத்தொகையை முதலீடு செய்த நபர்களின் பணத்தை வேறு வங்கி கணக்குகளுக்கு இலகுவாக பணப்பரிமாற்றம் செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றம் நிதி மோசடிகள் இடம்பெறுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.