Aggregator
சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!
சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்ய மீண்டும் தடை!
இலங்கை முஸ்லிம் பெண்கள், சிறுமிகளின் உரிமைகளில் விருத்தசேதனம் ஏற்படுத்தும் தாக்கம்
சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!
ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2026
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த சின்னத்துரை தில்லைநாதன் - 75 வது அகவை வாழ்த்துகள்
தில்லைக்கு இன்று 75
29 JUN, 2025 | 02:33 PM
வீரகத்தி தனபாலசிங்கம்
வடமராட்சியில் எந்த சந்தியில் என்றாலும், எவரிடமாவது ‘றிப்போர்ட்டரை ‘ கண்டீர்களா என்று கேட்டால், அவர்கள் உடனே தில்லையைத் தான் கேட்கி!றார்கள் உடனடியாகவே என்று பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு தில்லைநாதன் வடமராட்சியில் மகா பிரபல்யம். அங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்ட மூத்த செய்தியாளர் அவர். கொழும்பிலும் கூட பிரதான தமிழ்ப் பத்திரிகை நிறுவனங்களில் வடபகுதி செய்தியாளர்களைப் பற்றி பேசும்போது தில்லையின் கதை வராமல் அந்த பேச்சு நிறைவுறாது.
அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து இன்னமும் கூட சுறுசுறுப்புக் குறையாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தில்லை என்று நாம் அன்புடன் அழைக்கும் சின்னத்துரை தில்லைநாதன் இன்று தனது 75 வது அகவையில் பிரவேசிக்கிறார். இதுவரையான முக்கால் நூற்றாண்டு வாழ்வில் அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தை தில்லை பத்திரிகைத்துறைக்கு அர்ப்பணித்திருக்கிறார்
வடமராட்சி மந்திகையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லையுடன் சுமார் நான்கு தசாப்தங்களுக்கும அதிகமான காலமாக எனக்கு நெருக்கமான நட்புறவு. அவரது எளிமையான சுபாவமும் நகைச்சுவையுணர்வு நிறைந்த பேச்சும் எவரையும் எளிதாக அவர்பால் கவர்ந்து விடும். தில்லைக்கு செய்தித்துறையில் நாட்டம் மிகவும் இளம் வயதில் அதாவது பள்ளிக்காலத்திலேயே முளைவிட்டுவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதையும் கூட.
புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து படிக்கும்போது தில்லையின் வகுப்பாசிரியரான டி.எம்.இராசலிங்கம் அந்த வேளையில் வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளின் நிருபர். ஓய்வான நேர இடைவெளியில் வகுப்பில் வைத்தே செய்திகளை எழுதிவிட்டு தினமும் அவற்றை தபாலில் சேர்ப்பதற்காக மாணவர்களிடம் கொடுத்து அனுப்புவது அவர் வழக்கம். அவ்வாறு செய்திகளை தபாலில் சேர்க்கும் வேலையை விரும்பிச்செய்த மாணவர்களில் ஒருவர் தில்லை.
ஆசிரியர் மறந்தாலும் தில்லை அவரிடம் சென்று ‘ சேர் இன்று தபால் கந்தோருக்கு போகத்தேவையில்லையா ‘ என்று தானாகவே கேட்டு செய்திகள் அடங்கிய தபாலுறைகளை வாங்கிக் கொள்வார். ஊரில் உள்ள புதினங்களை இந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு அவற்றை செய்தியாக்குவதிலும் இராசலிங்கம் வல்லவராம். அவ்வாறு புதினங்களை அவருக்குச் சொல்வதில் தில்லைக்கு ஒரு பிரியம்.
தாங்கள் தபாலில் சேர்த்த செய்திகள் பத்திரிகைகளில்ாபிரசுரமாகியிருக்கிறதா என்று தேடி வாசிக்கும் ஆர்வத்தையும் தில்லை நாளடைவில் வளர்த்துக் கொண்டார்.இவ்வாறு தான் பின்னாளில் பத்திரிகைத்துறையில் முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதற்கான விதையை ஊன்றிக் கொண்டதாக கூறுவார் தில்லை.
பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது மந்திகை வைத்தியசாலைச் சந்தியை கடந்தே அவர் செல்லவேண்டும். வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகள் விவசாயிகள் நிறைந்தது. அந்த சந்தியில் தினமும் ‘ குழைத்தரகர்கள் ‘ கூடி நிற்பார்கள். அவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள்.
வீடு நோக்கிச்செல்லும் தில்லையை அவர்கள் இடைமறித்து வீரகேசரியையும் ஈழநாட்டையும் கொடுத்து உரத்து வாசிக்கவைத்து நாட்டு நடப்புக்களை அறிந்துகொள்வார்கள். இதை தில்லை ஒரு நாள், இரண்டு நாள் அல்ல தினமும்் செய்ய வேண்டி வந்தது. பத்திரிகைகளில் இருந்த சகல செய்திகளையும் ஒன்றுவிடாமல் வாசிக்கவேண்டும் என்று விடாப்பிடியாக நிர்பார்களாம் அந்த குழைத்தரகர்கள்.
தில்லை ஒன்றும் விருப்பமில்லாமல் அதைச் செய்யவுமில்லை. செய்திகளை முழுமையாக வாசித்து முடிந்த கையோடு அந்த தரகர்கள் அருகில் தேநீர் கடையில் வடை, பகோடா போன்ற பலகாரங்களை வாங்கி தில்லைக்கு கொடுப்பார்களாம். சிறு வயதில் இருந்தே தனக்கு பத்திரிகை வாசிப்பில் அக்கறை வளர்ந்ததற்கு அந்த ‘ மந்திகைச்சந்தி செய்திவாசிப்பு ‘ முக்கியமான ஒரு காரணம் என்று தில்லை தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் சுவாரஸ்யமாக கூறுவதுண்டு.
பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்ட உடனடியாகவே தில்லை ஒரு செய்தியாளராக வேண்டும் என்பதைத் தவிர வேறு தொழிலில் நாட்டம் காட்டவில்லை. கண்டியில் இருந்து அப்போது வெளியாகிய ‘ செய்தி ‘ என்ற பத்திரிகையின் நிருபராகவே செய்தித் துறையில் அவர் காலடி வைத்தார். அந்த பத்திரிகையின் ஆசிரியர் சில வருடங்களுக்கு முன்னர் காலமான பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் மனைவியின் தந்தையார்.
‘செய்தி ‘ நடத்திய கட்டுரைப்போட்டிக்கு தில்லை எழுதிய அனுப்பிய கட்டுரைக்கு பரிசு கிடைத்தது. 50 ரூபா பரிசைப் பெறுவதற்காக அவர் 1968 ஆண்டு கண்டிக்கு சென்றபோது அந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற கே.ஜி.மகாதேவா ( பிறகு அவர் ஈழநாடு பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பல வருடங்கள் சேவையாற்றினார்) நிருபராகப் பணியாற்றுமாறு கேட்கவே தில்லை அடுத்த பேச்சின்றி இணங்கிக்கொண்டார். பத்திரிகைத்துறையில் அன்று பிரவேசித்த அவர் அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீண்டு இன்றும் தொடருகிறது அவரின் செய்திப்பணி.
பிறகு 1969 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையின் நெல்லியடி செய்தியாளராக இணைந்துகொண்ட தில்லை மூன்று வருடங்களில் (1972) வீரகேசரியின் புலோலி செய்தியாளரானார். வடமராட்சியின் திக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.சுந்தரலிங்கம் அன்றைய வீரகேசரி ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்துடன் தனக்கிருந்த நட்புறவை பயன்படுத்தி அந்த வாய்ப்பை தனக்கு பெற்றுக்கொடுத்ததாக நன்றியுணர்வுடன் தில்லை அடிக்கடி கூறுவார்.
1987 வரை புலோலி செய்தியாளராக பணியாற்றிய தில்லையை வடமராட்சி ‘ லிபறேசன் ஒப்பரேசன் ‘ இராணுவ நடவடிக்கைக்கு பிறகு வீரகேசரியின் அன்றைய செய்தி ஆசிரியர் காலஞ் சென்ற செ.நடராஜா வடமராட்சி செய்தியாளராக கூடுதல் பொறுப்புகளுடன் பணியாற்றுமாறு பணித்தார்.
பிறகு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து 1997 ஆம் ஆண்டில் அன்றைய வடபகுதி போர்நிலைவரங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண செய்தியாளராக அனுபவமும் பொறுப்பும் வாய்ந்த ஒருவரே செயற்படவேண்டும் என்று முடிவெடுத்த வீரகேசரி நிறுவனம் தில்லையை யாழ்நகரை தளமாகக்கொண்டு பணியாற்றும் யாழ்ப்பாண செய்தியாளராகவும் மாற்றியது. ஆபத்து நிறைந்த அந்த காலகடடத்திலும், தில்லை எந்த தயக்கமும் இன்றி துணிவாற்றலுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 2009 வரை செம்மையாகப் பணியாற்றினார்.
இலங்கையின் உள்நாட்டுப்போர் பிராந்தியச் செய்தியாளர்களை தேசியரீதியான முக்கியத்துவத்தைக் கொண்டர்களாக மாற்றியது. அன்றைய சூழ்நிலையில் அது தவிர்க்க முடியாதது. பிராந்தியங்களில் இடம்பெற்ற சம்பவங்களே போர்க்காலத்தில் பெரும்பாலும் தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல, வெளியுலகினதும் கவனத்துக்குரியவையாக இருந்தன. அந்த வேளையில் பிராந்திய செய்தியாளர்கள் உள்நாட்டு ஊடகங்களினால் மாத்திரமல்ல, சர்வதேச ஊடகங்களினாலும் பெரிதும் நாடப்பட்டவர்களாக இருந்தார்கள்.
அவர்களது செய்திகள் வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களை உலகறியச்செய்தன. அத்தகைய பணியை இடர்மிகுந்த சூழ்நிலைக்கு் மத்தியிலும், அர்ப்பணிப்புச் சிந்தையுடன் செய்த யாழ்ப்பாணச் செய்தியாளர்களில் தில்லைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகும் அவரின் பணி சுறுசுறுப்பாகத் தொடருகிறது.
1970 களின் பிற்பகுதியில் பருத்தித்துறையில் இடம்பெற்ற கமலம் கொலைவழக்கு, 1990 களின் பிற்பகுதியில் நடைபெற்ற செம்மணி கிருசாந்தி குமாரசாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகளை விரிவான முறையில் தில்லை அறிக்கையிட்டபோது முதலில் வீரகேசரியிலும் பின்னர் தினக்குரலிலும் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
அந்த வழக்கு விசாரணைகளின் தொகுப்புக்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தார்கள்.அந்த விசாரணைகள் பற்றிய செய்தி ஒரு நாள் பத்திரிகையில் வெளியாகத் தவறினாலும் உடனே வாசகர்களிடமிருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். அந்தளவுக்கு சிறப்பான முறையில் தில்லை செய்திகளை தொகுத்தளித்தார்.
போர்க்கால கட்டத்தில் இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் 2004 ஆம் ஆண்டில் விருது வழங்கிக் கௌரவித்த போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அந்த விருது தில்லைக்கு கிடைத்தது. அடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து கொழும்பில் நடத்துகின்ற பத்திரிகைத்துறைக்கான உயர்விருது விழாவிலும் தில்லை கௌரவிக்கப்பட்டார்.
அவரின் ஊடகத்துறைச் சேவையை பாராட்டி பருத்தித்துறை பிரதேச செயலகம் 2013 ஆம் ஆண்டில் ‘ கலைப்பருதி ‘ பட்டம் வழங்கியது. கல்வி அமைச்சின் விருது ஒன்றும் தில்லைக்கு கிடைத்தது.
பத்திரிகைத்துறைக்கு தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த காலஞ்சென்ற வீரகேசரி யாழ்ப்பாணச் செய்தியாளர் செல்லத்துரை போன்று அனுபவசாலிகளின் வரிசையில் வைத்து ஒப்பிடக்கூடிய ஒருவரான தில்லையை எந்த நேரத்தில் நேரடியாகக் கண்டாலும் அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டாலும், நலம் விசாரித்துவிட்டு அடுத்து உடனடியாக கதை பத்திரிகைத்துறைக்கு நகர்ந்து விடும்.
அந்த துறைக்கு தன்னாலான பணியை தொடர்ந்தும் செய்யவேண்டும் என்ற தில்லையின் ஆழமான ஆர்வத்தின் வெளிப்பாடே அது. தில்லை மிகுந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்ந்துவடமராட்சியில் எங்காவது ஒரு சந்தியில் எவரிடமாவது ‘றிப்போர்ட்டரை ‘ கண்டீர்களா என்று கேட்டால், அவர்கள் உடனே தில்லையைத்தான் கேட்கிறோம் என்று பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு தில்லைநாதன் வடமராட்சியில் மகா பிரபல்யம்.
அங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்ட செய்தியாளர் அவர். கொழும்பிலும் கூட பிரதான தமிழ்ப்பத்திரிகை நிறுவனங்களில் வடபகுதி செய்தியாளர்களைப் பற்றி பேசும்போது தில்லையின் கதை வராமல் இருக்காது. அரைநூற்றாண்டு காலமாக பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து இன்னமும் கூட சுறுசுறுப்புக் குறையாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தில்லை என்று நாம் அன்புடன் அழைக்கும் சின்னத்துரை தில்லைநாதன் நாளைய தினம் 70 வது அகவையில் காலடிவைக்கிறார்.
மந்திகையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லையுடன் சுமார் நான்கு தசாப்தங்களாக எனக்கு நெருக்கமான நட்புறவு இருந்துவருகிறது. அவரது எளிமையான சுபாவமும் நகைச்சுவையுணர்வு நிறைந்த பேச்சும் எவரையும் எளிதாக அவர்பால் கவர்ந்துவிடும். தில்லைக்கு செய்தித்துறையில் நாட்டம் மிகவும் இளம் வயதில் அதாவது பள்ளிக்காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதையும் கூட.
புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து படிக்கும்போது தில்லையின் வகுப்பாசிரியரான டி.எம்.இராசலிங்கம் அந்தவேளையில் வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளின் நிருபர்.ஓய்வான நேர இடைவெளியில் வகுப்பில்வைத்தே செய்திகளை எழுதிவிட்டு தினமும் அவற்றை தபாலில் சேர்ப்பதற்காக மாணவர்களிடம் கொடுத்து அனுப்புவது அவர் வழக்கம்.
அவ்வாறு செய்திகளை தபாலில் சேர்க்கும் வேலையை விரும்பிச்செய்த மாணவர்களில் ஒருவர் தில்லை. ஆசிரியர் மறந்தாலும் தில்லை அவரிடம் சென்று ‘ சேர் இன்று தபால் கந்தோருக்கு போகத்தேவையில்லையா ‘ என்று தானாகவே கேட்டு செய்திகள் அடங்கிய தபாலுறைகளை வாங்கிக்கொள்வாராம். ஊரில் உள்ள புதினங்களை இந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு அவற்றை செய்தியாக்குவதிலும் இராசலிங்கம் வல்லவராம்.
அவ்வாறு புதினங்களை அவருக்குச் சொல்வதில் தில்லைக்கு ஒரு பிரியம்.தாங்கள் தபாலில் சேர்த்த செய்திகள் பத்திரிகைகளில் வந்திருக்கிறதா என்று தேடி வாசிக்கும் ஆர்வத்தையும் தில்லை நாளடைவில் வளர்த்துக்கொண்டார்.இவ்வாறுதான் பின்னாளில் பத்திரிகைத்துறையில் முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதற்கான விதையை ஊன்றிக்கொண்டதாக தில்லை கூறுவார்.
பாடசாலை முடிந்து தில்லை வீடு திரும்பும்போது மந்திகை வைத்தியசாலைச் சந்தியை கடந்தே செல்லவேண்டும். வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகள் விவசாயிகள் நிறைந்தது. அந்த சந்தியில் தினமும் ‘ குழைத்தரகர்கள் ‘ கூடி நிற்பார்கள். அவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள். வீடு நோக்கிச்செல்லும் தில்லையை அவர்கள் இடைமறித்து வீரகேசரியையும் ஈழநாட்டையும் கொடுத்து உரத்து வாசிக்கவைத்து நாட்டு நடப்புக்களை அறிந்துகொள்வார்கள். இதை தில்லை ஒரு நாள், இரண்டு நாள் அல்ல தினமும் செய்யவேண்டியேற்பட்டுவிட்டது.
இரு பத்திரிகைகளிலும் இருந்த சகல செய்திகளையும் ஒன்றுவிடாமல் வாசிக்கவேண்டுமாம். தில்லை ஒன்றும் விருப்பமில்லாமல் அதைச் செய்யவுமில்லை. செய்திகளை முழுமையாக வாசித்துமுடிந்த உடனடியாக அந்த தரகர்கள் அருகில் இருந்த தேநீர் கடையில் வடை, பகோடா போன்ற பலகாரங்களை வாங்கி தில்லைக்கு கொடுப்பார்களாம். சிறு வயதில் இருந்தே தனக்கு பத்திரிகை வாசிப்பில் அக்கறை வளர்ந்ததற்கு அந்த ‘ மந்திகைச்சந்தி செய்திவாசிப்பு ‘ முக்கியமான ஒரு காரணம் என்று தில்லை தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் கூறுவார்.
பாடசாலை கல்வியை முடித்துக்கொண்ட உடனடியாகவே தில்லை ஒரு செய்தியாளராக வேண்டும் என்பதைத் தவிர வேறு தொழிலில் நாட்டம் காட்டவில்லை. அவர் கண்டியில் இருந்து வெளியாகிக்கொண்டிருந்த ‘ செய்தி ‘ என்ற பத்திரிகையின் நிருபராகவே செய்தித்துறையில் காலடி வைத்தார்.
அதன் ஆசிரியர் பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் மாமனாராவார். ‘ செய்தி ‘ நடத்திய கட்டுரைப்போட்டிக்கு தில்லை எழுதிய அனுப்பிய கட்டுரைக்கு பரிசு கிடைத்தது. 50 ரூபா பரிசைப் பெறுவதற்காக அவர் 1968 ஆண்டு கண்டிக்கு சென்றபோது அந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற கே.ஜி.மகாதேவா ( பிறகு அவர் ஈழநாடு பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பல வருடங்கள் சேவையாற்றினார்) நிருபராகப் பணியாற்றுமாறு கேட்கவே தில்லை மறுபேச்சின்றி இணங்கிக்கொண்டார். அன்று பத்திரிகைத்துறையில் பிரவேசித்த அவர் அதற்குப் பிறகு திரும்பிப்பார்க்கவில்லை. 52 வருடங்களாக நீண்டு இன்றும் தொடருகிறது அவரின் செய்திப்பணி.
பிறகு 1969 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையின் நெல்லியடி செய்தியாளராக இணைந்துகொண்ட தில்லை மூன்று வருடங்களில் (1972) வீரகேசரியின் புலோலி செய்தியாளரானார். வடமராட்சியின் திக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.சுந்தரலிங்கம் அன்றைய வீரகேசரி ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்துடன் தனக்கிருந்த நட்புறவை பயன்படுத்தி வாய்ப்பை தனக்கு பெற்றுக்கொடுத்ததாக நன்றியுணர்வுடன் தில்லை அடிக்கடி கூறுவார்.
1987 வரை புலோலி செய்தியாளராக பணியாற்றிய அவரை வடமராட்சி ‘ லிபறேசன் ஒப்பரேசன் ‘ இராணுவ நடவடிக்கைக்கு பிறகு வீரகேசரியின் அன்றைய செய்தி ஆசிரியர் காலஞ்சென்ற செ.நடராஜா வடமராட்சி செய்தியாளராக கூடுதல் பொறுப்புகளுடன் மாற்றினார்.
பிறகு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து 1997 ஆம் ஆண்டில் அன்றைய வடபகுதி போர்நிலைவரங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண செய்தியாளராக அனுபவமும் பொறுப்பும் வாய்ந்த ஒருவரே செயற்படவேண்டும் என்று முடிவெடுத்த வீரகேசரி நிறுவனம் தில்லையை யாழ்நகரை தளமாகக்கொண்டு பணியாற்றும் யாழ்ப்பாண செய்தியாளராக பணியாற்றவைத்தது. அது ஆபத்து நிறைந்த காலகட்டம் என்றபோதிலும், தில்லை எந்தவிதமான தயக்கமும் இன்றி துணிச்சலுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 2009 வரை பணியாற்றினார்.
இலங்கை உள்நாட்டுப்போர் பிராந்தியச் செய்தியாளர்களுக்கு தேசியரீதியான முக்கியத்துவத்தை தவிர்க்கமுடியாமல் கொடுத்தது. பிராந்தியங்களில் இடம்பெற்ற சம்பவங்களே போர்க்காலத்தில் பெரும்பாலும் தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல, வெளியுலகினதும் கவனத்துக்குரியவையாக இருந்தன.
அந்தவேளையில் பிராந்திய செய்தியாளர்கள் உள்நாட்டு ஊடகங்களினால் மாத்திரமல்ல, சர்வதேச ஊடகங்களினாலும் பெரிதும் நாடப்பட்டவர்களாக இருந்தார்கள்.அவர்களது செய்திகள் வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களை உலகறியச்செய்தன. அத்தகைய பணியை இடர்மிகுந்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் செய்த யாழ்ப்பாணச் செய்தியாளர்களில் தில்லைக்கு ஒரு முக்கிய இடமுண்டு.உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகும் அவரின் பணி சுறுசுறுப்பாகத் தொடருகிறது.
1970 களின் பிற்பகுதியில் பருத்தித்துறையில் இடம்பெற்ற கமலம் கொலைவழக்கு, 1990 களின் பிற்பகுதியில் நடைபெற்ற செம்மணி கிருசாந்தி குமாரசாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகளை விரிவான முறையில் தில்லை அறிக்கையிட்டபோது முதலில் வீரகேசரியிலும் பின்னர் தினக்குரலிலும் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்த வழக்கு விசாரணைகளின் தொகுப்புக்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தார்கள்.அந்த விசாரணைகள் பற்றிய செய்தி ஒரு நாள் பத்திரிகையில் வெளியாகத் தவறினாலும் உடனே வாசகர்களிடமிருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துவிடும்.அந்தளவுக்கு சிறப்பான முறையில் தில்லை செய்திகளை தொகுத்தளித்தார்.
போர்க்கால கட்டத்தில் இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் 2004 ஆம் ஆண்டில் விருது வழங்கிக் கௌரவித்த போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அந்த விருது தில்லைக்கு கிடைத்தது. அடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து கொழும்பில் நடத்துகின்ற பத்திரிகைத்துறைக்கான உயர்விருது விழாவிலும் தில்லை கௌரவிக்கப்பட்டார். அவரின் ஊடகத்துறைச் சேவையை பாராட்டி பருத்தித்துறை பிரதேச செயலகம் 2013 ஆம் ஆண்டில் ‘ கலைப்பருதி ‘ பட்டம் வழங்கியது. கல்வி அமைச்சின் விருதொன்றும் அவருக்குக் கிடைத்தது.
பத்திரிகைத்துறைக்கு தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த காலஞ்சென்ற வீரகேசரி யாழ்ப்பாணச் செய்தியாளர் செல்லத்துரை போன்று அனுபவம் மிக்கவர்களின் வரிசையில் வைத்து ஒப்பிடக்கூடிய ஒருவரான தில்லையை எந்த நேரத்தில் நேரடியாகக் கண்டாலும் அல்லது தொலைபேசியல் பேசினாலும் நலம் விசாரித்துவிட்டு அடுத்து உடனடியாக கதை பத்திரிகைத்துறை பற்றியதாக நகர்ந்துவிடும். அந்த
துறைக்கு தன்னாலான பணியை தொடர்ந்தும் செய்யவேண்டும் என்ற அவரின் ஆழமான ஆர்வத்தின் வெளிப்பாடே அது.
தில்லை மிகுந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்ந்து பத்திரிகைத்துறைப் பணியை செவ்வனே தொடர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறோம்.