5 days 14 hours ago
கதிர்காமம் பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான மருந்து, உணவுப் பொதி வழங்கி வைப்பு 29 JUN, 2025 | 04:50 PM திருக்கோணேஸ்வர ஆலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட கதிர்காம கந்தனை தரிசிக்க பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு சிறு அளவு மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி உகந்தைமலை முருகன் ஆலயத்தில் வைத்து அடியார்களின் நிதி ஒத்துழைப்பு மற்றும் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/218776
5 days 14 hours ago
"தெளிவில்லாத கோடுகள், தேய்ந்து போன விமான டயர்கள்" : டிஜிசிஏ அறிக்கை பற்றி விமானிகள் என்ன சொல்கிறார்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் இஷாத்ரிதா லாஹிரி பிபிசி நிருபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 26, 2025 அன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) டெல்லி மற்றும் மும்பை உட்பட நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய விமான நிலையங்களை ஆய்வு செய்ததாகக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜூன் 12 அன்று ஆமதாபாத்தில் நடத்த விமான விபத்திற்குப் பிறகு இந்தத் தணிக்கை தொடங்கியது. அந்த அறிக்கையில் எந்த விமான நிலையம் அல்லது விமான நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இந்திய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு விதிகளில் ஏற்பட்டுள்ள தவறுகள் மற்றும் மீறல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு விமானத் துறையில் ஆய்வு மற்றும் விசாரணைக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனம் விமான நேரம் மற்றும் பணியாளர்களின் வேலை நேரம் தொடர்பான விதிகளைத் தொடர்ந்து மீறியதாகக் கூறி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குமாறு ஏர் இந்தியாவிடம் டிஜிசிஏ கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் அதன் ஒருங்கிணைந்த இயக்கங்கள் கட்டுப்பாட்டு மையம் (ஐஒசிசி) இனி அதன் தலைமை இயக்க அதிகாரியின் (சிஒஒ) நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஐஒசிசி என்பது ஒரு விமான நிறுவனத்தின் முக்கிய அங்கம் ஆகும். இது பாதுகாப்பு மற்றும் விமானங்களின் தடையில்லா இயக்கம் ஆகியவற்றை உறுதி செய்யும். ஒரு விமான நிறுவனத்தில் இந்த மையம் தான் நிகழ் நேர திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் இயக்கம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் நிர்வகிப்பதற்கு பொறுப்பானது ஆகும். இவை விமானங்கள், விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் ரோஸ்டர்கள் தொடர்பான விவகாரங்களைக் கண்காணிக்கும் நிறுவனத்தின் இயக்கங்கள் துறையின் கீழ் வருகிறது. டிஜிசிஏவின் சமீபத்திய நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதன் அறிக்கையைப் புரிந்து கொள்ள பிபிசி பல தொழிற்சார் விமானிகள் மற்றும் வான்வழி வல்லுநர்களிடம் பேசியது. டிஜிசிஏ அறிக்கையில் என்ன உள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானத்தின் அமைப்பில் கண்டறியப்பட்ட குறைகள் லாக் புக்கில் பதிவு செய்யப்படவில்லை என டிஜிசிஏ தெரிவித்துள்ளது. விமான தொடர்புடைய பல முக்கிய விஷயங்கள் தணிக்கையில் சோதனை செய்யப்பட்டதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இவை விமானங்களின் இயக்கம், பாதுகாப்பு, தொடர்பு அமைப்புகள் மற்றும் விமான புறப்பாடுக்கு முன்பாக விமானியின் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கும். இதில் தெளிவில்லாத விமான ஓடுதளத்தில் கோடுகள் தொடங்கி மூன்று ஆண்டுகளாக தரவுகளை சரியாகப் பதிவேற்றாதது வரை டிஜிசிஏ பல குறைகளைக் கண்டறிந்துள்ளது. அதில் ஒரு விமானம் தேய்ந்த டயர்கள் இருந்ததால் புறப்படுவதற்கு முன்பாக ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே கண்டறியப்பட்ட குறைகள் விமானங்களில் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டதாக இந்த ஆவணம் பதிவு செய்துள்ளது. மோசமான கண்காணிப்பு மற்றும் குறைகளைக் களைவதில் போதாமை ஆகியவை குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது. "பராமரிப்பின் போது விமான பராமரிப்பு பொறியாளர் (ஏஎம்இ) விமான பராமரிப்பு கையேட்டின் படி (ஏஎம்எம்) போதிஒய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எடுக்கவில்லை. சில இடங்களில் பழுது வேலைகளில் ஏம்இ ஈடுபடுத்தப்படவே இல்லை. விமானத்தின் அமைப்பில் கண்டறியப்பட்ட குறைகள் லாக் புக்கில் பதிவு செய்யப்படவில்லை" என டிஜிசிஏ தெரிவித்துள்ளது. ஆமதாபாத் விமான விபத்தின் சொல்லப்படாத சோகங்கள் - மருத்துவ விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கு நேர்ந்தது என்ன? ஆமதாபாத் விமான விபத்தால் அடியோடு மாறிய வாழ்க்கை - செல்போனில் வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் எப்படி இருக்கிறான்? 2500 விபத்துகளை சந்தித்த போயிங் - ஏர் இந்தியாவின் மோசமான விபத்து எது? ஏர் இந்தியா விமான விபத்து பற்றிய புலனாய்வு எப்படி நடைபெறும்? விளக்கும் நிபுணர்கள் ஓடுதளத்தில் காணப்படும் விலங்குகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஓடுதளத்தின் நடுவில் உள்ள கோடு விமானம் தரையிறங்க உதவியாக இருக்கிறது. வெவ்வேறு விமான நிறுவனங்களுக்கு பணியாற்றும் மூன்று விமானிகளிடம் டிஜிசிஏ அறிக்கையை பிபிசி பகிர்ந்தது. அனைத்து விமானிகளும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் ஊடக கொள்கைக்கு கட்டுப்பட்டவர்கள். இதனால் பெயரைக் குறிப்பிடாமல் அவர்கள் பிபிசியிடம் பேசினர். நேரத்திற்குள் பயணத்தை முடிக்க வேண்டும் மற்றும் அடுத்த பயணத்திற்கு தயாராவதற்கு வழங்கப்படும் குறுகிய நேரம் (டர்ன் அரௌண்ட்) போன்றவை தான் ஏஎம்இயிடம் இருந்து வரும் தொழில்நுட்ப சிக்கல்களை முறையாக கையாள்வதை கடினமாக்குகிறது என ஒரு விமானி தெரிவிக்கிறார். மேலும் அவர், "பொறியாளர் கடைசி நேரத்தில் ஒரு குறையை கண்டுபிடிக்கிறார் என்றால் விமானம் பறப்பதற்கு பாதுகாப்பானதா இல்லையா என்பதை முடிவு செய்வது கடினமாகிறது." என்றார். குறைவான டர்ன் அரௌண்ட் நேரத்தால் பராமரிப்புக்கு போதிய நேரம் இருப்பதில்லை என விமானி தெரிவிக்கிறார். இத்தகைய சூழலில் பொறியாளர் பராமரிப்பு விதிகளை கடைசி நேரத்தில் செயல்படுத்த வேண்டியதாகிறது. பயணம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக விமானத்தின் எந்த சாதனங்கள் அல்லது பகுதிகள் இல்லாமல் பறக்கலாம் என்பதை இந்தக் கையேடு சொல்கிறது. "ஒரு சிக்கலான அமைப்பு மோசமானால் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரத்திற்கு பேக்அப் அமைப்பும் பழுதானால் என்ன செய்வது? இது வான்வெளி மற்றும் வானிலையின் நிலையையும் பொருத்தது. நேர அழுத்தமும் சூழ்நிலையை எங்களுக்கு மேலும் கடினமாக்குகிறது. எங்களால் அனைத்திற்கும் கவனம் செலுத்த முடியாது." என்று பிபிசியிடம் தெரிவித்தார் மற்றுமொரு விமானி அந்த அறிக்கையில் எழுப்பப்பட்ட ஓடுதளத்தில் தெளிவற்ற கோடு தொடர்பான பிரச்சனையே மீண்டும் எழுப்பினார். அவரின் பத்து ஆண்டு கால அனுபவத்தில் ஓடுதளங்களில், அதிலும் குறிப்பான இரண்டாம் நிலை நகரங்களில் வேறு பல பிரச்னைகளைச் சந்தித்ததாகவும் கூறுகிறார். "இந்த விஷயங்கள் பற்றி பல வருடங்களாக நாம் அறிந்திருந்தோம். ஓடுதளத்தின் மத்திய கோடு விளக்குகள் சரியாக வேலை செய்வதில்லை. நாங்கள் ஓடுதளத்திற்கு வெளியே சென்றால் மரங்கள் மற்றும் புற்களால் அந்த குறியீடுகள் தெளிவாகத் தெரிவதில்லை. புற்கள் சரியான நேரத்தில் வெட்டப்படுவதில்லை" என அந்த விமானி கூறுகிறார். மேலும் அவர், "விமான ஓடுதளத்தில் பள்ளங்கள் உள்ள விமான நிலையங்களுக்கு நான் சென்றுள்ளேன். விலங்குகளும் அங்கு உலாவி வரும், சமயங்களில் மயில், மான், மாடு கூட உலாவக் கண்டுள்ளேன்" என்றார். விமானிகளும் விமானப் பணியாளர்களும் ஓய்வெடுக்க நேரம் கிடைப்பதில்லை என மூன்றாவது விமானி கவலை தெரிவித்துள்ளார். சில சமயங்களில் அவர்கள் ஒரே நாளில் ஐந்து செக்டார்கள் பறக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். ஒரு செக்டார் என்றார் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பறப்பதைக் குறிக்கும். திரும்பிச் செல்வது ரிட்டர்ன் செக்டார் என்று அழைக்கப்படுகிறது. "நீங்கள் மாலை 4 மணிக்கு பயணத்தைத் தொடங்குகிறீர்கள் என கற்பனை செய்து கொள்ளுங்கள், ஆனால் விமானி மற்றும் விமான பணிக்குழு காலை 4 மணியில் இருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏன் சிரிக்க மறுக்கிறார்கள் என நீங்கள் யோசிக்கலாம், ஆனால் அவர்கள் மிகவும் சோர்வாக இருந்திருக்கக்கூடும்" என அவர் தெரிவித்தார். சோதனைகள் முறையாக செய்யப்பட வேண்டும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எல்லை தொடர்பான தரவுகள் சில விமான நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என டிஜிசிஏ தெரிவித்துள்ளது டிஜிசிஏ முறையாக பரிசோதனைகளை நடத்த வேண்டும் என வான்வெளி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு விமான நிலையத்தைச் சுற்றியும் அப்ஸ்ட்ரக்ஷன் லிமிட் என ஒன்று உள்ளது. இந்த எல்லைக்கு உள்ளாக எந்த விதமான கட்டுமானம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள அனுமதி பெறப்பட வேண்டும். இவை விமான நிலையங்களைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகள் ஆகும். விமானம் புறப்பட்டுச் செல்லவும் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு விமானங்களில் தடங்கலற்ற இயக்கத்தை உறுதி செய்ய இந்தப் பகுதி தெளிவாக இருக்க வேண்டும். இந்த எல்லை தொடர்பான தரவுகள் சில விமான நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என டிஜிசிஏ தெரிவித்துள்ளது. விமான நிலையங்களைச் சுற்றி பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் எந்த சர்வேயும் மேற்கொள்ளப்படவில்லை. "இவை ஒரு நாளில் நடக்காது. பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு வாரத்தில் விமான நிலையத்திற்கு அருகே ஒரு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அப்போது டிஜிசிஏ எங்கு சென்றது?" எனக் கேட்கிறார் விமானத் துறை வல்லுநர் சஞ்சய் லஜர். ஓடுதளங்களைச் சுற்றி உள்ள கட்டடங்கள் பற்றி நீண்ட காலமாக விமானிகள் புகார் அளித்து வருகிறார்கள் எனக் கூறுகிறார் முன்னாள் விமானியும் வல்லுநருமான கேப்டன் எம்.ஆர்.வாடியா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமான விபத்தில் சுமார் 279 பேர் கொல்லப்பட்டனர். "ஓடுதளத்தின் மத்தியக் கோடு தெளிவாக இருக்க வேண்டும், குறிப்பாக ஜம்போ ஜெட் போன்ற விமானங்கள் புறப்படுகின்றபோது. இந்தக் கோடுகள் சட்டப்பூர்வமாகப் பின்பற்ற வேண்டிய வழிகாட்டும் கோடுகள்" என்றார். இந்த அறிக்கை மங்கலான ஓடுதளங்கள் மற்றும் தேய்ந்து போன டயர்களைவிடவும் பல தீவிரமான குறைகளைக் கண்டறிந்துள்ளதாக முன்னாள் விமானி மோகன் ரங்கநாதன் தெரிவிக்கிறார். சில விமானங்களின் விமானிகளுக்கு அவர்கள் வழக்கமாக பறக்கும் விமானத்தை விட வேறு விமானத்தின் சிமுலேட்டரில் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது என டிஜிசிஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. "விமானத்துடன் ஒத்துப்போகாத சிமுலேட்டரைப் பயன்படுத்துவது தான் மிகவும் மோசமான தவறு. சிமுலேட்டரில் நடத்தப்பட்ட அனைத்து பயிற்சி அமர்வுகளும் செல்லாதவை என்பதே இதன் அர்த்தம். அந்த சிமுலேட்டரில் நீங்கள் பயிற்சியும் பெற முடியாது திறனை சோதனை செய்யவும் முடியாது. எனவே இந்த சிமுலேட்டரில் பயிற்சி பெற்ற அனைத்து விமானிகளின் உரிமமும் தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால் செல்லாதது ஆகிவிடும்." எனக் கூறுகிறார் வாடியா. ஏர் இந்தியா விபத்து குஜராத்தில் ஜூன் 12 அன்று ஆமதாபாத் செல்லவிருந்த ஏர் இந்தியாவின் ஏஐ-171 விபத்துக்குள்ளானது. ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். புறப்பட்ட சில வினாடிகளிலே விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். அதே வேளையில் விமானம் கட்டடத்தில் மோதியதில் பலர் உயிரிழந்தனர். கடந்த பத்தாண்டில் உலகம் முழுவதும் நடைபெற்ற விபத்துக்களில் மோசமான விபத்தாக இது மாறிப்போனது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn7dzkynpv5o
5 days 14 hours ago
செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 33 மனித எச்சங்கள் அடையாளம்! 29 JUN, 2025 | 03:50 PM யாழ்.செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்று பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டபோது மேலும், மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (29) வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகளை துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (29) அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், நாளைய தினம் திங்கட்கிழமை காலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/218768
5 days 14 hours ago
Published By: VISHNU 29 JUN, 2025 | 08:38 PM யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைவஸ்தை உடலினுள் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி இவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். https://www.virakesari.lk/article/218793
5 days 14 hours ago
Published By: VISHNU
29 JUN, 2025 | 08:38 PM

யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைவஸ்தை உடலினுள் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி இவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
https://www.virakesari.lk/article/218793
5 days 14 hours ago
விற்றால் தானே இவ்வளவு காசு வரும் அண்ணை?
5 days 14 hours ago
அண்ணாச்சி உங்க வீட்டிலையும் வந்து ..அஞ்சலி செலுத்தியிருக்க வேணும்...அதுதான் உங்கடை மனுசியின் கீப்பு..மகனின் நண்பன்..18 வயது பொடியன் படுக்கையறை கட்டிலில் கொல்லப்பட்டுக் கிடந்தானே ..அதுக்குத்தான்
5 days 15 hours ago
👍..................... 👍...........................
5 days 15 hours ago
இவ்வ்ளவு வருமானம் அரசுக்கு கிடைக்குது...பிறகேன் கடன் கடன் என்று கத்துகினம்
5 days 15 hours ago
நீங்கள் 2013 இல் டேவிட் கமெரூன் போன போது நடந்தவற்றைப் பேசுகிறீர்களா அல்லது முள்ளிவாய்க்கால் காலத்தைப் பேசுகிறீர்களா? 2013 எனில், உண்மையில் நடந்தது, உங்களைப் போன்ற கொம்பு சீவும் புலத்தமிழர்களின் அமைப்புகள், டேவிட் கமெரூன் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய அமைப்பு அமைச்சர் மாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று கோரினார்கள். கமெரூன், இதை மறுதலித்து, கொழும்பு போனார். மகிந்த அரசு அனுமதி வழங்க மறுத்த பின்னரும், பிரிட்டன் எம்பசியின் ஏற்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றார். கொழும்பில் எந்த சந்திப்பும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கவில்லை. ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சராக இருந்த விக்கி ஐயாவைச் சந்தித்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் குறிப்பிடும் தமிழ் தலைவர்கள் யாரும் ஒளித்துத் திரியவில்லை. ஒரு பிரிட்டன் பிரதமரை சும்மா போய் வாசலில் நின்று சந்திக்கும் நிலைமைகள் அன்றும் இல்லை, இன்றும் இல்லை. ஊரில் ஒரு கிராமசேவகரைச் சந்தித்த அனுபவம் கூட இல்லாதவர் போல இருக்கிறது உங்கள் கதை😂!
5 days 15 hours ago
அனுராவின் கட்டுப்பாட்டுக்குள் இன்னமும் ராணுவம் இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
5 days 16 hours ago
இத்தாலிய கிரிகெட் அணிக்கு 90/80களில் ஒரு இலங்கை தமிழ் கிறிஸ்தவர் விளையாடி உள்ளார். இப்போதும் ஈடுபாட்டுடன் உள்ளார். ஆனால் விளையாடுவதில்லை.
5 days 16 hours ago
இத்தாலி அனைத்து கால்பந்து கிலப்புகளை தெரியும்....................juventus எனக்கு மிகவும் பிடிச்ச அணி , இவர்கள் இபோது கால்பந்தில் பெரிசாக சாதிப்பது கிடையாது............. இத்தாலியில் இன்னும் கிரிக்கேட் அழிய வில்லை , இத்தாலியும் வளந்து வரும் அணிகளில் ஒன்று , என்ன செய்வது அந்த நாட்டில் கால்பந்து rugby போன்ர விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கினம்..............................
5 days 16 hours ago
எல்லாமும் மாறி மாறி நடக்கும். AC Milan தெரியும்தானே? பிரபல இத்தாலிய கால்பந்து கழகம். அதை ஆரம்பித்தது ஆங்கிலேயர். அதுமட்டும் அல்ல நவீன கால்பந்தை இத்தாலிக்கு அறிமுகம் செய்தவர்களும் ஆங்கிலேயரே. ஆனால் இன்று நாம் இத்தாலியை ஏதோ கால்பந்தின் சாம்ராஜ்யம் போல நினைக்கிறோம். ஒன்று தெரியுமா ? AC Milan இன் ஆரம்ப முழு பெயர் Milan Football and Cricket Club. அப்போது இத்தாலியில் கால்பந்து பிரபலமாகாது கிரிகெட் பிரபலமாகாகி இருப்பின் இப்போ இத்தாலி ஒரு டெஸ்ட் நாடாக இருக்கும்।
5 days 16 hours ago
அவர்களிடம் ஆயுதம் இருந்தது. உங்களிடம் பேனா இருக்கிறது. அதை எவ்வளவு கூராக இங்குள்ளவர்கள் மீது பாவிக்கும் நீங்கள் கொலைகள் பற்றி பேசுவது.....????
5 days 16 hours ago
20 ஓவர் வருகைக்கு பிறக்கு தான் ஜரோப்பாவில் பல நாடுகள் கிரிக்கேட் விளையாட தொடங்கி இருக்கினம் , உதாரனத்துக்கு நேட்டோ அமைப்பை சேர்ந்த நாடுகளில் இஸ்ரேல் மற்றும் சில நாடுகள் தான் இன்னும் கிரிக்கேட் விளையாட ஆரம்பிக்க வில்லை , மற்ற நாடுகள் ஜரோப்பாவில் வெதுவாய் வளந்து கொண்டு வருகினம்..................... ஜரோப்பாவில் சில நாடுகள் கிரிக்கேட்டை அங்கிகறீக்க கூடும்................. இலங்கை முதல் முறை உலக கோப்பை தூக்கின போது கிரிக்கேட்டை சில நாடுகள் தான் விளையாடினவை , இபோது அந்த நிலை இல்லை , கால்பந்துக்கு பெயர் போன பிரேசில் நாடே கிரிக்கேட் விளையாடுகினம் என்றால் , கிரிக்கேட் எவளவு தூரம் வளந்து விட்டது 2007க்கு பிறக்கு👍.............................
5 days 16 hours ago
தென் தமிழீழத்தில் வீரச்சாவடைந்த வேவுப்புலி லெப் கேணல் சிவகாமி மற்றும் அவருடன் வீரச்சாவடைந்த ஐந்து போராளிகளுக்குமாக அமைக்கப்பட்டிருந்த வீரவணக்க நினைவாலயம்
5 days 17 hours ago
நான் யாரையும் நியாயப்படுத்தவில்லை. கொலைகளை யார் செய்தாலும் அது குற்றம் தான். தமிழ் தேசிய சூழலில் உள்ள அரசியல்வாதிகள், சிவில் சமூகம், ஊடகவியலாளர்கள் நினைத்திருந்தால் யுத்தம் ஆரம்பித்த 1980 களின் ஆரம்பத்தில் இருந்து கொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் ஆக்ககப்படவர்கள் பெயர் ஶ்ரீலங்கா இராணுவத்தால் அல்லது எந்த இயக்கங்களால் அந்த கொலை நடத்தப்பட்டது யார் மீது அதிக சந்தேகம. உள்ளது போன்ற விபரங்களுடன் திகதி வாரியாக ஒரு பட்டியலை தயாரித்திருக்க முடியும்.அதை சர்வதேச கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கலாம். அவை இந்த புதை குழுகளில் உள்ளனவா என்பதை டிஎன் ஏ பரிசோதனை மூலம் கண்டு பிடிக்கலாம்.மாவட்டங்களின் 1980 ம் ஆண்டுல் இருந்தான குடிசன மதிப்பு புள்ளிவிபரங்களின் துணையுடன் அதை செய்திருக்கலாம். அப்படி செய்வதன் மூலம் அந்த கொலைகளை யார் யார் செய்தார்கள் என்பதை விசாரணை உதவியாக அமையும். அத்தோடு அந்த கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் உலகில் எங்கு வசித்தாலும் அந்த பட்டியலை சரி பார்க்கவும் மேலதிக தகவல்களை வழங்கவும் நீதி விசாரணை சாட்சிகாக மாறவும் முடியும். இப்போது கூட காலம் கடந்து விடவில்லை. ஏனெனில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒரு சிலரவது தற்போது உயிருடன் ஏதோ ஒரு நாட்டில் வாழக்கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால், அதை செய்ய இவர்கள் எவருக்கும் அக்கறை இல்லை. அந்த கொலைகளை செய்தவர்களில் சிலர் தற்போது அரசியல்வாதிகளாக சிவில் சமூகத்தினராக, ஊடகவியலாளராகவோ அல்லது புலம் பெயர்ந்தோ மக்களுக்குள் பரவி இருக்கலாமென்பதால் அதை செய்ய இவர்களுக்கும் சற்று பயமாகவும் இருக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கை மூலம் நிச்சயமாக இலங்கை இராணுவத்தினர் செய்த கொலைகளை இனம் காண முடியும்.
5 days 17 hours ago
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல மீண்டும் தடை! செவ்வாய்க்கு முதல் விடுவிக்கப்படும்! written by admin June 29, 2025 வலி வடக்கு பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாண மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு மக்கள் சுதந்திரமாக சென்று வழிபட அனுமதியளிக்கப்படும். குறித்த ஆலயத்திற்கு சென்று விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தேன். அது நல்லெண்ண சமிக்ஞையாக யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் எடுக்கப்பட்ட முடிவாகும். அதனூடாக அதை கொழும்பு இராணுவ தலைமையகத்துக்கும் அறிவிக்கப்பட்டு தற்காலிகமாக விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பில் இராணுவத்திடம் கேட்ட போது, உத்தியோகபூர்வமாக கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் இருந்து எழுத்து மூலம் அனுமதி வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் எழுத்து மூலமாக ஆவணம் கிடைத்ததும் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்படும் – என மேலும் தெரிவித்தார். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல மீண்டும் தடை! பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்று முன்தினம் (27.06.25) வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28.06.25) மீள ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்த போதிலும் , இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதையில் இராணுவத்தினர் மூடி முட்கம்பி வேலி அமைத்திருந்ததுடன், இரு இராணுவத்தினர் கடமையிலும் ஈடுபடுத்தபட்டிருந்தனர். ஆலயத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை வழிபட சென்ற மக்கள் இராணுவத்தினர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்காததால் முட்கம்பி முன்பாக தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி பூப்போட்டு வழிப்பட்டனர். https://globaltamilnews.net/2025/217456/
5 days 17 hours ago
ஆண்களுக்கு செய்யும் சுன்னத் இஸ்லாமிய மத கடப்பாடு. யூதருக்கும். ஆனால் பெண் பிள்ளைகளில் உறுப்பை முடமாக்கல் female genital mutilation மத கடப்பாடு அல்ல. வெறும் சமூக பழக்கம். பிரிதானியாவில் இதற்கு எதிராக கடும் சட்டம் உண்டு. வெளிநாட்டில் கொண்டு போய் செய்தாலும் மீள வந்ததும் பெற்றார் மீது வழக்கு பாயும். இப்படி சட்டங்கள் இலங்கையிலும் தேவை. இரெண்டு பேரை தூக்கி 5 வருடம் உள்ளே வைக்க எல்லாம் சரிவரும்.