Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சொல்லு தலைவா!எங்கள் பகை கொன்று உங்கள் முன்னே வரவா?
#1
சொல்லு தலைவா !
எங்கள் பகை கொன்று
உங்கள் முன்னே வரவா

நில்லு தமிழா!
நீ பக்கம் நிற்க
அண்ணன் படை வெல்லும் அல்லவா! (சொல்லு)


கண்ணில் தெரியுதெங்கள் தேசம் - நாளை
கையில் வந்து சேருமல்லவா!
வையம் போற்றுமொரு நாடு - நாளை
எங்களது ஈழம் அல்லவா! (சொல்லு)


பாவம் கொஞ்சம் பாரு!
ஓடச் சொல்லிக் கேளு!!
ஓடாப்பகை நாமழித்து வீடனுப்பலாம்
ஈழமண்ணை மீட்டெடுத்து நாடமைக்கலாம்.
வன்னி மண்ணைப் பாரு - மண்ணை
தொட்டு நெற்றி பூசு
வீரம் வாழும் மண்ணு என்று வாழ்த்துப்பாடலாம்
வீழ்ந்த வீரர் காலடியில் பூக்கள் தூவலாம்.

அணைகட்ட உழைத்திட்ட அணிலாய் - நம்
அண்ணனின் அணியிலே செல்வோம்.
பகையென்று வருகின்ற எவர்க்கும் - நம்
மண்ணிலே புதைகுழி அமைப்போம்

பொன்னாடு நம்நாடு - அதுவே
பகைவன் சுடுகாடு
ஏய் வெற்றினு சொல்லு
ஏய் வெற்றினு சொல்லு - நாம்
வானில் கொடி நட்டு வரலாம்.


(வேறு)
வடக்கு கிழக்கு திசைகள் வேறு
ஈழ தேசம் ஒன்று
மண்ணை மீட்க வீழ்ந்த வீரர்
கனவுப் பண் பாடு
மாண்ட வீரர் கனவு மீட்க
எழுந்து போராடு


பகையென்று சொல்லு - வெறும்
தூசு என்றே வெல்லு
தும்முகின்ற நேரத்திலே நாம் துரத்தலாம்
அண்ணன் சொல்லும் வழியிலே கொன்றொழிக்கலாம்.
போடு ஆட்டம் போடு - நீ
வெல்லும் நேரம் ஆடு
ஆண்ட எங்கள் வீரம் கொண்டு
மீண்டும் ஆளலாம்
அண்ணன் ஏற்றும் கொடியிலே
துன்பம் தீர்க்கலாம்.


தேசத்தின் வேருக்கு நீராய் - நம்
உழைப்பினை அள்ளிக் கொடுப்போம். - சீறிடும்
மக்கள் படைக்கே - நாம்
மாண்புடன் வணக்கம் வைப்போம்

பொன்னாடு நம்நாடு - அதுவே
பகைவன் சுடுகாடு
ஏய் வெற்றினு சொல்லு
ஏய் வெற்றினு சொல்லு - நாம்
ஆழகக்கடல் வென்று வரலாம்.


சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்விற்காக இசையமைப்பாளரின் விருப்பத்தேர்வில் திரையிசைப்பாடல் ஒன்றின் மெட்டிற்கு எழுதப்பட்டது.
.
.!!
Reply
#2
அருமையாக இருக்கின்றது.. கவிதைக்கு வாழ்த்துக்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#3
நல்லா இருக்கு .......வாழ்த்துக்கள்..
! ! !!
Reply
#4
காலத்துக்கு ஏற்ப உணர்ச்சியூட்டும் வரிகளுடன்..நீண்ட நாட்களின் பின் உங்கள் கவி...! வாழ்த்துக்கள்..! தொடர்ந்து தாருங்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
அழகான கவிதை வாழ்த்துக்கள்

Reply
#6
கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
Reply
#7
காலத்தின் தேவையை உணர்த்தும் கவி

மிகவும் அருமை
Reply
#8
கவிதை மிகவும் நன்றாக உள்ளது. கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் ஈழத்தமிழனின் மனதில் சுடராயும் எதிரியின் மனதில் சூரியனாயும் எரியும்.

தொடர்ந்து உங்கள் கவிதைகளை தாருங்கள்.
.
Reply
#9
சகோதரா தயா - எழுச்சியை தூண்டும் வரிகள் -
அற்புதமாய் இருக்கு!-
ஆனாலும் -
பாடலுக்கு எழுதப்பட்டதென்றால்- ஒவ்வொரு பந்தியிலும் வரிகளின் எண்ணிக்கை கூடி குறைகிறதே - என்றும்- அது-இசையின்-போக்கை மாற்றாதா - என்று யோசிச்சன் -!

குற்றம் கண்டு பிடிப்பதாய் நினைத்திடாதீங்க- விசயம் தெரியாம கேக்கிறன் -! 8)
தொடருங்கள் - உங்க தாயக காதலை - கவி வடிவில் -! 8)
-!
!
Reply
#10
நல்ல வரிகள் தயா. ஏற்கனவே உள்ள ஒரு பாடலின்
இசைக்கேற்ப எழுதப்பட்டதென்றாலும், உணர்வெழுச்சிப்
பாடல் வரிகளாக அமைந்துள்ளன. தொடர்க.


Reply
#11
அருமையாக இருக்கின்றது.. கவிதைக்கு வாழ்த்துக்கள்
.
Reply
#12
வாழ்த்துக்கள் உங்கள் கவிகள் அருமை
>>>>******<<<<
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)