06-26-2004, 04:16 AM
<b>நடிகர் வடிவேலுவுக்கு அடி உதை </b>
பிரசாந்த் நடிக்கும் ஆயுதம் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 25) ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு வில்லன் நடிகர் நம்பிராஜன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். இவர் அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே உள்பட 70க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்தவர்.
அப்பொழுது அங்கு வந்த வடிவேலு நம்பிராஜனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு மேக்கப் அறைக்குள் சென்றார். சிறிது நேரம் வெளியே காத்திருந்த நம்பிராஜன் திடீரென்று உள்ளே சென்றார். உள்ளே சென்ற சில நிமிடங்களில் காரசாரமான சத்தம் கேட்டது. உடனே படக்குழுவினர் ஓடிவர, நம்பிராஜன் வடிவேலுவை அடித்து உதைத்துக் கொண்டிருந்தார். வடிவேலுவும் திருப்பி தாக்கினார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே படக்குழுவினர் தலையிட்டு நம்பிராஜனை விலக்கினர்.
நம்பிராஜன் பிறகு நேராக கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று வடிவேலு மீது புகார் கொடுத்தார். அதன் பின் நிருபர்களிடம் நம்பிராஜன் நான் வில்லன் நடிகராக இருந்தாலும் நன்றாக காமெடி டிராக் எழுதுவேன். அதை வடிவேலுவிடம் சொல்லுவேன். அது அவருக்கு பிடித்திருந்தால் டைரக்டரிடம் சொல்லி அந்தப் படத்தில் இடம் பெறச் செய்து விடுவார். இதற்காக எனக்கு ஒரு படத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். ஆனால் சமீபகாலமாக நான் சொல்லும் காமெடி டிராக்கை கேட்டு விட்டு அது ஒண்ணும் பெரிசா இல்லையே.. பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அதே டிராக்கை தானே யோசித்ததாக இயக்குனர்களிடம் சொல்லி படத்தில் வைத்துவிடுவார். எனக்குக் கிடைக்க வேண்டிய அந்த தொகையை அவரே வாங்கிக் கொள்வார்.
ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்பதற்காகத்தான் மேக்கப் அறைக்குள் போனேன். ஆனால் ரொம்பவும் தெனாவட்டாக பதில் சொன்னார். என்னால் வளர்ந்த ஒரு காமெடியன் என் காமெடி டிராக்கை திருடிக்கொண்டு என்னையே அலட்சியமாக பேசியதால் திடீரென்று எனக்கு வெறி வந்தது. அதனால் வடிவேலுவைப் போட்டு அடித்து உதைத்துவிட்டேன். இனி மேலும் என் காமெடியை பயன்படுத்தினால் அவரை சும்மாவிடமாட்டேன் என்றார் நம்பிராஜன்

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&