10-01-2004, 08:56 AM
சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகள் 2005
எழுத்தாளப் பெருமக்களுக்கு!
இனிய வணக்கங்களுடன்....
பூவரசு இனிய தமிழ் ஏடு 2005 தைத்திங்கள் முதல் தனது 15வது ஆண்டுக்கான கலை, இலக்கியப்பணியில் அடியெடுத்து வைக்கிறது.
புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துறைக்கு புத்துணர்வூட்டவும், புதிய பல படைப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும், உருவாகிவரும் புதியதலைமுறைக்கு தமிழை அறிமுகம்செய்துவைக்கவும் என்று உருவான பூவரசு, இன்று உலகின் பல தேசங்களிலும் வாழ்கின்ற கலை இலக்கிய ஆர்வலர்களினதும் படைப்பாளர்களினதும் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ்ப்பணியாற்றும் சிற்றிதழ்களில் ஒன்றாக இது தனது பணியைத் தொடர்ந்த போதும், ஆர்வமிகக்கொண்ட வாசகர்கள் படைப்பாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களிடமிருந்துவரும் உற்சாக வார்த்தைகளே சாட்சி.
இதுகாலவரை பூவரசால் நடத்தப்பெற்ற இலக்கியப்போட்டிகளில் ஏராளமான படைப்பாளர்கள் பங்குகொண்டு சிறப்பித்திருந்தார்கள். புலம்பெயர்ந்த எழுத்தாளர்களே பூவரசின் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று நாம் ஒருபோதும் வரையறை செய்யாதபோதும், இதுகாலவரை, புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மட்டுமே இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஆனால் இம்முறை பூவரசின் 15வது ஆண்டுக்கான போட்டிகளை அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்மட்டத்தில் நடாத்தலாம் என்று பூவரசு கலை இலக்கியப்பேரவை தீர்மானித்துள்ளது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் இப்போட்டிகளில் பங்குகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
அன்புடன்
இந்துமகேஷ்
(பூவரசு கலை இலக்கியப்பேரவை -ஜெர்மனி, சார்பாக)
பூவரசு கலை இலக்கியப் பேரவை - ஜெர்மனி நடாத்தும்
அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கான
சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகள் 2005
சிறுகதை: நீங்கள் விரும்பிய கருவினைக்கொண்டதாக அமையலாம்.
கட்டுரை: 'மனிதர் மனிதராக...' என்ற தலைப்பில் அமையவேண்டும்.
கவிதை: 'அங்கிங்கெனாதபடி...' என்ற தலைப்பில் அமையவேண்டும்
(மரபுக்கவிதையாக அல்லது புதுக்கவிதையாக அமையலாம்)
பொதுவிதிகள்:
* சிறுகதைகள் சாதாரணத் தாளின் (யு4) அளவில் 5பக்கங்களுக்குள்ளும், கட்டுரைகள் 3 பக்கங்களுக்குள்ளும், கவிதைகள் இரண்டு பக்கங்களுக்குள்ளும் அமையலாம்
* போட்டிகளுக்கு அனுப்பப்படும் ஆக்கங்கள் இதுவரையில் வேறு எந்தப் பத்திரிகையிலோ சஞ்சிகையிலோ பிரசுரமாகாததாகவும், வானொலி, இணையத்தளம் போன்ற ஊடகங்களில் வெளிவராததாகவும், வேறு படைப்புக்களின் தழுவலாகவோ மொழிபெயர்ப்பாகவோ இல்லாததாகவும் அமைந்திருக்கவேண்டும் என்பது மிக முக்கியமான விதியாகும்.
* படைப்பாளர்கள் தமது பெயர்;, முகவரியுடன், போட்டிக்கென அனுப்பப்படும் ஆக்கமானது தனது சொந்தப் படைப்பே என்றும், வேறு எதனதும் மொழிபெயர்ப்போ தழுவலோ இல்லை என்றும், ஏற்கனவே பிரசுரமாகவோ வெளிவரவோ இல்லை என்றும் உறுதிப்படுத்திய கடிதத்தை இணைத்து அனுப்பவேண்டும்.
* பரிசுக்குரிய ஆக்கங்களை பூவரசு கலை இலக்கியப் பேரவையால் நியமிக்கப்படும் நடுவர் குழுவினர் தேர்வு செய்வார்கள்.
* பரிசுக்குரியனவாகத் தேர்வுபெறும் படைப்புக்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும்.
(ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த பிறநாடுகளில் வாழும் படைப்பாளர்கள் பரிசுபெறும் பட்சத்தில் அவர்களுக்குப் பணப்பரிசில் வழங்கப்படும்.)
ஆங்கங்களை அனுப்பவேண்டிய முகவரி:
`Poddikal 2005`
Poovarasu,
Postfach 10 34 01,
28 034 Bremen,
Germany.
மின்னஞ்சல்மூலம் அனுப்புவதாயின்:
Poovarasu_Germany@hotmail.com எனும் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->