![]() |
|
சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகள் 2005 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகள் 2005 (/showthread.php?tid=6667) Pages:
1
2
|
சிறுகதை கவிதை கட்டுரை - shanmuhi - 10-01-2004 சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகள் 2005 எழுத்தாளப் பெருமக்களுக்கு! இனிய வணக்கங்களுடன்.... பூவரசு இனிய தமிழ் ஏடு 2005 தைத்திங்கள் முதல் தனது 15வது ஆண்டுக்கான கலை, இலக்கியப்பணியில் அடியெடுத்து வைக்கிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துறைக்கு புத்துணர்வூட்டவும், புதிய பல படைப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும், உருவாகிவரும் புதியதலைமுறைக்கு தமிழை அறிமுகம்செய்துவைக்கவும் என்று உருவான பூவரசு, இன்று உலகின் பல தேசங்களிலும் வாழ்கின்ற கலை இலக்கிய ஆர்வலர்களினதும் படைப்பாளர்களினதும் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்ப்பணியாற்றும் சிற்றிதழ்களில் ஒன்றாக இது தனது பணியைத் தொடர்ந்த போதும், ஆர்வமிகக்கொண்ட வாசகர்கள் படைப்பாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களிடமிருந்துவரும் உற்சாக வார்த்தைகளே சாட்சி. இதுகாலவரை பூவரசால் நடத்தப்பெற்ற இலக்கியப்போட்டிகளில் ஏராளமான படைப்பாளர்கள் பங்குகொண்டு சிறப்பித்திருந்தார்கள். புலம்பெயர்ந்த எழுத்தாளர்களே பூவரசின் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று நாம் ஒருபோதும் வரையறை செய்யாதபோதும், இதுகாலவரை, புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மட்டுமே இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டிருந்தார்கள். ஆனால் இம்முறை பூவரசின் 15வது ஆண்டுக்கான போட்டிகளை அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்மட்டத்தில் நடாத்தலாம் என்று பூவரசு கலை இலக்கியப்பேரவை தீர்மானித்துள்ளது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் இப்போட்டிகளில் பங்குகொள்ள அன்புடன் அழைக்கின்றோம். அன்புடன் இந்துமகேஷ் (பூவரசு கலை இலக்கியப்பேரவை -ஜெர்மனி, சார்பாக) பூவரசு கலை இலக்கியப் பேரவை - ஜெர்மனி நடாத்தும் அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கான சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகள் 2005 சிறுகதை: நீங்கள் விரும்பிய கருவினைக்கொண்டதாக அமையலாம். கட்டுரை: 'மனிதர் மனிதராக...' என்ற தலைப்பில் அமையவேண்டும். கவிதை: 'அங்கிங்கெனாதபடி...' என்ற தலைப்பில் அமையவேண்டும் (மரபுக்கவிதையாக அல்லது புதுக்கவிதையாக அமையலாம்) பொதுவிதிகள்: * சிறுகதைகள் சாதாரணத் தாளின் (யு4) அளவில் 5பக்கங்களுக்குள்ளும், கட்டுரைகள் 3 பக்கங்களுக்குள்ளும், கவிதைகள் இரண்டு பக்கங்களுக்குள்ளும் அமையலாம் * போட்டிகளுக்கு அனுப்பப்படும் ஆக்கங்கள் இதுவரையில் வேறு எந்தப் பத்திரிகையிலோ சஞ்சிகையிலோ பிரசுரமாகாததாகவும், வானொலி, இணையத்தளம் போன்ற ஊடகங்களில் வெளிவராததாகவும், வேறு படைப்புக்களின் தழுவலாகவோ மொழிபெயர்ப்பாகவோ இல்லாததாகவும் அமைந்திருக்கவேண்டும் என்பது மிக முக்கியமான விதியாகும். * படைப்பாளர்கள் தமது பெயர்;, முகவரியுடன், போட்டிக்கென அனுப்பப்படும் ஆக்கமானது தனது சொந்தப் படைப்பே என்றும், வேறு எதனதும் மொழிபெயர்ப்போ தழுவலோ இல்லை என்றும், ஏற்கனவே பிரசுரமாகவோ வெளிவரவோ இல்லை என்றும் உறுதிப்படுத்திய கடிதத்தை இணைத்து அனுப்பவேண்டும். * பரிசுக்குரிய ஆக்கங்களை பூவரசு கலை இலக்கியப் பேரவையால் நியமிக்கப்படும் நடுவர் குழுவினர் தேர்வு செய்வார்கள். * பரிசுக்குரியனவாகத் தேர்வுபெறும் படைப்புக்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும். (ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த பிறநாடுகளில் வாழும் படைப்பாளர்கள் பரிசுபெறும் பட்சத்தில் அவர்களுக்குப் பணப்பரிசில் வழங்கப்படும்.) ஆங்கங்களை அனுப்பவேண்டிய முகவரி: `Poddikal 2005` Poovarasu, Postfach 10 34 01, 28 034 Bremen, Germany. மின்னஞ்சல்மூலம் அனுப்புவதாயின்: Poovarasu_Germany@hotmail.com எனும் முகவரிக்கு அனுப்பிவையுங்கள் - tamilini - 10-01-2004 தகவலுக்கு நன்றிகள் அக்கா.. நமது எழுத்தாளர்கள் எழுதுவார்கள் அது சரி முடிவுத் திகதி ஏதும் இல்லையா...??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 10-01-2004 tamilini Wrote:தகவலுக்கு நன்றிகள் அக்கா.. நமது எழுத்தாளர்கள் எழுதுவார்கள் அது சரி முடிவுத் திகதி ஏதும் இல்லையா...??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&முடிவுத் திகதியை யாழ் முற்றத்திலே அறிந்துகொள்ளலாமே! நன்றி சண்முகி!! - kavithan - 10-01-2004 நன்றி தகவலுக்கு Quote:கவிதை: 'அங்கிங்கெனாதபடி...' என்ற தலைப்பில் அமையவேண்டும் இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்..... எழுதாளர்கள் எழுதுவினம்....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 10-01-2004 ச Quote:இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்.....த்தியமாய் எனக்கும் விளங்கல.. தேவையில்லை தானே என்று விட்டுவிட்டன்..! - kavithan - 10-01-2004 tamilini Wrote:சQuote:இந்த தலைப்புக்கு என்ன அர்த்தம்.....த்தியமாய் எனக்கும் விளங்கல.. தேவையில்லை தானே என்று விட்டுவிட்டன்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eelavan - 10-01-2004 என்ன கவிதன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் தமிழ் என்று எழுதலாமே - vasisutha - 10-02-2004 தகவலுக்கு நன்றிகள் ஷண்முகி. - sOliyAn - 10-02-2004 அன்பு இராஜன். நலம்தானே! தாங்கள் குறிப்பிட்டபடி யாழ்.இணையத்தில் பூவரசு போட்டிகள் பற்றிய விபரங்கள் பார்த்தேன். சுடச்சுட வந்த கருத்துப் பதிவினையும் கண்ணுற்றேன். தமிழினியும், கவிதனும் கவிதைத் தலைப்புப் புரியவில்லை என்பதுபோல் பாவனை செய்வது எனக்குச் சிரிப்பூட்டியது. கவிதைக்கான தலைப்பு என்பதால் கவிதையிலேயே பதில் சொல்லவேண்டும்போல் இருந்தது. எழுதிவிட்டேன். இந்தப் பதில் அவர்களுக்கு அவசியம் எனத் தாங்கள் கருதினால் இதனை அவர்களுக்கு அனுப்பிவிடுங்கள். நமது எழுத்தாளர்களிடமும் கவிஞர்களிடமும் நான் கொண்டுள்ள அதீத நம்பிக்கையிலேயே நான் இதுபோன்ற தலைப்புக்களைத் தேர்வுசெய்கிறேன். அன்புடன் உங்கள் இந்துமகேஷ் ************************************** கீழே நான் வரைந்துள்ள கவிதை (?!) கவிதனுக்கும் தமிழினிக்குமாக... அங்கிங்கெனாதபடி... அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திட்ட அரும்பொருளை அறிகிலீரோ? ஆனந்தத் தமிழ்கொண்டு அழகான கவிபடைத்து அனுப்பிடவே துணிகிலீரோ? எங்கும் தமிழ்முழங்க இணையம்வழி ஓடிவரும் என்னருமைத் தமிழின் உறவே! ஏதுமறியாதவர்போல் ஏனிந்தப் புன்னகையோ ஏந்திடுக எழுதுகோலே! -அன்புடன் இந்துமகேஷ் (எங்கடை தமிழிலை சொல்லுறதெண்டால் அங்கிங்கெனாதபடி... எண்டது அங்கினை இங்கினை எண்டில்லாமல் எங்கினையும் இருக்கிறது. ஆகாயம், காத்து, அன்பு, பாசம், எண்டு உப்பிடி உங்கினை அங்கினை எண்டில்லாமல் எல்லா இடத்திலையும் இருக்கிற சங்கதியள்...... உதுக்குமேலை நான் என்னத்தைச் சொல்ல...? -இந்துமகேஷ்) மகேஷ் அண்ணை! கவிதனும் தமிழினியும் போட்டிபோட்டுக்கொண்டு கவிதை எழுதி அனுப்பப் போகினம். இருந்து பாருங்கோ!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 10-02-2004 வணக்கம் மகேஸ் அண்ணா.. உங்கள் விளக்கத்துக்கு.... அதோடை சேர்த்து நல்லதொரு கவிதையும் வடித்திருக்கிறீர்கள்...நீங்கள் சொன்ன மாதிரி அங்கினை இங்கினை என்றது விளங்கினது ஆனால், இப்படி விளக்கத்திலை வருமோ .. எழுத சொல்லீனமோ என்று தான் ஒரு குழப்பத்திலை கேட்டேன்.... அதற்கு அருமையாக விளக்கம் அளித்த மகேஸ் அண்ணாவுக்கும், அதனை இங்கு பிரசுரித்த சோழியன் அண்ணாவுக்கும் ரொம்ப நன்றி.. என்ன தமிழினி அக்கா இப்ப புரிஞ்சுதா தலைப்பு அங்கிங்கெனாதபடி அகிலம் முழுவதும் தமிழருவி பரப்பி பதினைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பூவரசு இதழின் கலை இலக்கிய போட்டிக்காய் நீங்கள் விரும்பிய கருவில் "சிறுகதையும்" 'மனிதர் மனிதராக...' என்ற தலைப்பில் கட்டுரையும் "அங்கிங்கெனாதபடி" என்ற தலைப்பில் கவிதையும். வரைந்து அனுப்பிடுவீர் . பூவரசு இதழின் முகவரிக்கோ..! மின்னஞ்சலுக்கோ..! - sOliyAn - 10-02-2004 நீங்களும்தான் கவிதன்! உங்களைமாதிரி இளைஞர்கள் பலர் தமிழ் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.. இளைஞர்களது தமிழ் ஆக்கங்கள் கணனிக்கப்பாலும் விரிய வேண்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 10-02-2004 sOliyAn Wrote:நீங்களும்தான் கவிதன்!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 10-02-2004 நான் தலைப்பை புரிந்து இங்கு சொல்ல வந்தேன் அதற்குள் விளக்கம் கொடுத்துவிட்டார்கள் நன்றிகள்.. அண்ணாக்களுக்கும் தம்பிக்கும்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shanmuhi - 10-02-2004 பூவரசு இனிய தமிழ் ஏடு 2005 தைத்திங்கள் முதல் தனது 15வது ஆண்டுக்கான கலை, இலக்கியப்பணியில் அடியெடுத்து வைôÀ¨¾ þðÎ Å¡úòÐ츨Çò ¦¾Ã¢Å¢òÐì ¦¸¡û¸¢§Èý. <b>þó¾ Ţơ ¿¨¼¦ÀÚõ §À¡Ð ¡ú¸Ç ¿ñÀ÷¸ÙìÌõ «¨ÆôÒ ¸¢¨¼ìÌÁ¡...? ? ?</b> - sOliyAn - 10-03-2004 உங்களுக்கென்ன.. பிறேமனுக்கு வந்தால் தங்கவும் இடம் இருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->3 நாள் நடக்கப் போகுதென்று கேள்விப்படுறன்.. எதுக்கும் றெடி பண்ணுங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tholar - 10-03-2004 அப்படியா? - shanmuhi - 10-03-2004 Quote:உங்களுக்கென்ன.. பிறேமனுக்கு வந்தால் தங்கவும் இடம் இருக்கு..µ... ¿ýÈ¢¸û. ãýÚ¿¡ð¸û ¿¢¸ú׸ǡ... §¸ð¸§Å Á¸¢ú¡¸ þÕ츢ýÈÐ. ¦¿üȢ¢ø „ñÓ¸¢..¸¢..¸¢ ±ýÈ ¿¡ÁòÐòмý ÅóÐ ¬ƒÃ¡¸¢Å¢Î§Åý. - kavithan - 10-03-2004 shanmuhi Wrote:Quote:உங்களுக்கென்ன.. பிறேமனுக்கு வந்தால் தங்கவும் இடம் இருக்கு..µ... ¿ýÈ¢¸û. அடடா... போய் வாருங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tholar - 10-09-2004 நிகழ்வுகள் விபரம் களத்தில் வருமா? - sOliyAn - 10-10-2004 நிச்சயமாக! |