03-23-2005, 07:29 AM
சத்துக்கள் நிறைந்த, செலவு குறைந்த, ஆரோக்கியமான பான வகை சூப் ஆகும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய இந்த சூப்புகள் பெரும்பாலும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு தொடக்க பானமாக அருந்தப்படுகின்றது. இதன் காரணம், இவை நாவின் சுவை மொட்டுகளை சுவையறிய தயார் படுத்துவதுடன் பசியுணர்வை தூண்டவும் செய்கின்றன. சாப்பிடுவதற்கு முன்பு சூப்பினை அதிகம் அருந்துவது மற்றும் மிகவும் சூடாக அருந்துவது என்பது பலரும் செய்யும் தவறு. இதன் விளைவு, அதிகப்படியான சூட்டினால் நாவின் சுவை மொட்டுகள் சுவையறியும் திறனை தற்காலிகமாக இழக்கின்றன. அதிகம் அருந்துவதால் பசி அடங்கி உணவு அதிகம் சாப்பிட இயலாமல் போகின்றது. எனவே, மிதமான சூட்டில் அளவாக அருந்துவது மிகவும் நல்லது.
<b> வெள்ளரி சூப்</b>
வெள்ளரிக்காய் 1
வெண்ணெய் 20 கிராம்
பால் 100 மி.லி
சோளமாவு 2 தேக்கரண்டி
பாலாடைக்கட்டி 25 கிராம்
சர்க்கரை கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் கால் தேக்கரண்டி
பாலாக்கு இலை சிறிது
உப்பு தேவையான அளவு
வெள்ளரிக்காயினை நன்கு கழுவி, தோலுரித்து துருவியில் துருவிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெயை இட்டு, அதனுடன் துருவிய வெள்ளரி மற்றும் பாலாக்கு இலைகளைச் சேர்க்கவும்.
சுமார் 4 நிமிடங்கள் அவற்றை வதக்கியவுடன் அதில் சோளமாவு சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வதக்கவும்.
தீயைச் சற்று குறைத்து, இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
காய்கறிகள் நன்கு வேகும் வரை கொதிக்கவிடவும்.
பிறகு அதனை நன்கு கலக்கி அதனுடன் பால், மிளகுத்தூள், உப்பு மற்றும் துருவிய பாலாடைக்கட்டியைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
பாலாடைக்கட்டி உருகியவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும்.
தமிழ் பெயர் வெள்ளரிக்காய்
ஆங்கில பெயர் Cucumber
அறிவியல் பெயர் Cucumis sativus
<b>சத்துக்கள் (100 கிராம் உண்பதில் அடங்கியுள்ளது) </b>
சக்தி (Energy) 13 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 96.3 கிராம்
புரதம் (Protein) 0.4 கிராம்
கொழுப்பு (Fat) 0.1 கிராம்
தாதுக்கள் (Minerals) 0.3 கிராம்
நார்ச்சத்து (Fibre) 0.4 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 2.5 கிராம்
கால்சியம் (Calcium) 10 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 25 மி.கி
இரும்பு (Iron) 0.60 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 14 மி.கி
சோடியம் (Sodium) 10.2 மி.கி
பொட்டாசியம் (Potasium) 50 மி.கி
செம்பு (Copper) 0.09 மி.கி
மாங்கனீசு (Manganese) 0.14 மி.கி
மாலிப்டினம் (Molybdenum) 0.070 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 0.23 மி.கி
குரோமியம் (Chromium) 0.002 மி.கி
கந்தகம் (Sulphur) 17 மி.கி
குளோரின் (Chlorine) 15 மி.கி
தையாமின் (Thiamine) 0.03 மி.கி
நியாசின் (Niacin) 0.2 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 14.7 மை.கி
வைட்டமின் சி (Vitamin C) 7 மி.கி
<b>தக்காளி சூப்</b>
தக்காளி அரைக் கிலோ
பெரிய வெங்காயம் 2
காரட் 1
உருளைக்கிழங்கு 1 (சிறியது)
பாலாடைக்கட்டி 25 கிராம்
வெண்ணெய் 30 கிராம்
சோளமாவு 30 கிராம்
பால் 100 மி.லி
மிளகுத்தூள் அரைத் தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
தக்காளி, காரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை கழுவி சற்று பெரிய துண்டங்களாய் நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தினையும் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெயை விட்டு அதில் வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
வதக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள் இவற்றுடன் பால், துருவிய பாலாடைக்கட்டி மற்றும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில் இட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பிறகு இறக்கி ஆறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் மற்றும் சிறிதாய் நறுக்கிய பிரட் துண்டங்கள் சேர்த்து சற்று சூட வைத்து அருந்தவும்.
தமிழ் பெயர் தக்காளி
ஆங்கில பெயர் Tomato
அறிவியல் பெயர் Lycopersicon esculentum
சத்துக்கள் (100 கிராம் உண்பதில் அடங்கியுள்ளது)
சக்தி (Energy) 20 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 94 கிராம்
புரதம் (Protein) 0.9 கிராம்
கொழுப்பு (Fat) 0.2 கிராம்
தாதுக்கள் (Minerals) 0.5 கிராம்
நார்ச்சத்து (Fibre) 0.8 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 3.6 கிராம்
கால்சியம் (Calcium) 48 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 20 மி.கி
இரும்பு (Iron) 0.64 மி.கி
சோடியம் (Sodium) 12.9 மி.கி
பொட்டாசியம் (Potasium) 146 மி.கி
செம்பு (Copper) 0.19 மி.கி
மாங்கனீசு (Manganese) 0.26 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 0.41 மி.கி
குரோமியம் (Chromium) 0.015 மி.கி
கந்தகம் (Sulphur) 11 மி.கி
குளோரின் (Chlorine) 6 மி.கி
கரோட்டீன் (Carotene) 351 மை.கி
தையாமின் (Thiamine) 0.02 மி.கி
ரைப்போஃப்ளேவின் (Riboflavin) 0.06 மி.கி
நியாசின் (Niacin) 0.4 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 30 மை.கி
வைட்டமின் சி (Vitamin C) 27 மி.கி

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&