Yarl Forum
சைவ சூப் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: சைவ சூப் (/showthread.php?tid=4693)

Pages: 1 2


சைவ சூப் - hari - 03-23-2005

சத்துக்கள் நிறைந்த, செலவு குறைந்த, ஆரோக்கியமான பான வகை சூப் ஆகும். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய இந்த சூப்புகள் பெரும்பாலும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு தொடக்க பானமாக அருந்தப்படுகின்றது. இதன் காரணம், இவை நாவின் சுவை மொட்டுகளை சுவையறிய தயார் படுத்துவதுடன் பசியுணர்வை தூண்டவும் செய்கின்றன. சாப்பிடுவதற்கு முன்பு சூப்பினை அதிகம் அருந்துவது மற்றும் மிகவும் சூடாக அருந்துவது என்பது பலரும் செய்யும் தவறு. இதன் விளைவு, அதிகப்படியான சூட்டினால் நாவின் சுவை மொட்டுகள் சுவையறியும் திறனை தற்காலிகமாக இழக்கின்றன. அதிகம் அருந்துவதால் பசி அடங்கி உணவு அதிகம் சாப்பிட இயலாமல் போகின்றது. எனவே, மிதமான சூட்டில் அளவாக அருந்துவது மிகவும் நல்லது.

<b> வெள்ளரி சூப்</b>

வெள்ளரிக்காய் 1
வெண்ணெய் 20 கிராம்
பால் 100 மி.லி
சோளமாவு 2 தேக்கரண்டி
பாலாடைக்கட்டி 25 கிராம்
சர்க்கரை கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் கால் தேக்கரண்டி
பாலாக்கு இலை சிறிது
உப்பு தேவையான அளவு



வெள்ளரிக்காயினை நன்கு கழுவி, தோலுரித்து துருவியில் துருவிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெயை இட்டு, அதனுடன் துருவிய வெள்ளரி மற்றும் பாலாக்கு இலைகளைச் சேர்க்கவும்.
சுமார் 4 நிமிடங்கள் அவற்றை வதக்கியவுடன் அதில் சோளமாவு சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வதக்கவும்.
தீயைச் சற்று குறைத்து, இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு சிறிது சிறிதாக ஊற்றிக் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
காய்கறிகள் நன்கு வேகும் வரை கொதிக்கவிடவும்.
பிறகு அதனை நன்கு கலக்கி அதனுடன் பால், மிளகுத்தூள், உப்பு மற்றும் துருவிய பாலாடைக்கட்டியைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
பாலாடைக்கட்டி உருகியவுடன் இறக்கி சூடாகப் பரிமாறவும்.

தமிழ் பெயர் வெள்ளரிக்காய்
ஆங்கில பெயர் Cucumber
அறிவியல் பெயர் Cucumis sativus

<b>சத்துக்கள் (100 கிராம் உண்பதில் அடங்கியுள்ளது) </b>

சக்தி (Energy) 13 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 96.3 கிராம்
புரதம் (Protein) 0.4 கிராம்
கொழுப்பு (Fat) 0.1 கிராம்
தாதுக்கள் (Minerals) 0.3 கிராம்
நார்ச்சத்து (Fibre) 0.4 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 2.5 கிராம்
கால்சியம் (Calcium) 10 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 25 மி.கி
இரும்பு (Iron) 0.60 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 14 மி.கி
சோடியம் (Sodium) 10.2 மி.கி
பொட்டாசியம் (Potasium) 50 மி.கி
செம்பு (Copper) 0.09 மி.கி
மாங்கனீசு (Manganese) 0.14 மி.கி
மாலிப்டினம் (Molybdenum) 0.070 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 0.23 மி.கி
குரோமியம் (Chromium) 0.002 மி.கி
கந்தகம் (Sulphur) 17 மி.கி
குளோரின் (Chlorine) 15 மி.கி
தையாமின் (Thiamine) 0.03 மி.கி
நியாசின் (Niacin) 0.2 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 14.7 மை.கி
வைட்டமின் சி (Vitamin C) 7 மி.கி


<b>தக்காளி சூப்</b>

தக்காளி அரைக் கிலோ
பெரிய வெங்காயம் 2
காரட் 1
உருளைக்கிழங்கு 1 (சிறியது)
பாலாடைக்கட்டி 25 கிராம்
வெண்ணெய் 30 கிராம்
சோளமாவு 30 கிராம்
பால் 100 மி.லி
மிளகுத்தூள் அரைத் தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

தக்காளி, காரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை கழுவி சற்று பெரிய துண்டங்களாய் நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தினையும் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் வெண்ணெயை விட்டு அதில் வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
வதக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறிகள் இவற்றுடன் பால், துருவிய பாலாடைக்கட்டி மற்றும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து ஒரு குக்கரில் இட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பிறகு இறக்கி ஆறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் மற்றும் சிறிதாய் நறுக்கிய பிரட் துண்டங்கள் சேர்த்து சற்று சூட வைத்து அருந்தவும்.

தமிழ் பெயர் தக்காளி
ஆங்கில பெயர் Tomato
அறிவியல் பெயர் Lycopersicon esculentum
சத்துக்கள் (100 கிராம் உண்பதில் அடங்கியுள்ளது)
சக்தி (Energy) 20 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 94 கிராம்
புரதம் (Protein) 0.9 கிராம்
கொழுப்பு (Fat) 0.2 கிராம்
தாதுக்கள் (Minerals) 0.5 கிராம்
நார்ச்சத்து (Fibre) 0.8 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 3.6 கிராம்
கால்சியம் (Calcium) 48 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 20 மி.கி
இரும்பு (Iron) 0.64 மி.கி
சோடியம் (Sodium) 12.9 மி.கி
பொட்டாசியம் (Potasium) 146 மி.கி
செம்பு (Copper) 0.19 மி.கி
மாங்கனீசு (Manganese) 0.26 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 0.41 மி.கி
குரோமியம் (Chromium) 0.015 மி.கி
கந்தகம் (Sulphur) 11 மி.கி
குளோரின் (Chlorine) 6 மி.கி
கரோட்டீன் (Carotene) 351 மை.கி
தையாமின் (Thiamine) 0.02 மி.கி
ரைப்போஃப்ளேவின் (Riboflavin) 0.06 மி.கி
நியாசின் (Niacin) 0.4 மி.கி
போலிக் அமிலம் (Folic acid) 30 மை.கி
வைட்டமின் சி (Vitamin C) 27 மி.கி


- eelapirean - 03-23-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- hari - 03-23-2005

<img src='http://www.eelakkathir.de/_borders/dance1.gif' border='0' alt='user posted image'>என்ட அருமை மகள் ஆடத்தொடங்கிட்டால் இனி சூப் செய்தமாதிரித்தான்!


- shobana - 03-23-2005

மரக்கறிகளின் விஞ்ஞானப்பெயர் இங்கவாசிக்க கஸ்டப்பட்டு கஸ்டப்பட்டு பாடமாகிய நினைவு வருகுது

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- thamizh.nila - 03-23-2005

வெள்ளரி சூப் நன்றாக இருக்கின்றது. நன்றி.


- tamilini - 03-23-2005

நன்றியண்ணா.. என்ன மகள் பந்தம் தொடருதோ நான் தான் வெட்டிவிட்டுவிட்டேன் எல்லோ..?? :twisted:


- THAVAM - 03-23-2005

தம்பி நான் தவத்தான் சொல்றன் ஆரோக்கியம் என்று சொல்லி இந்த வெள்ளைக்காரண்டை 'சூப்பு'' ''கீப்பூ'' என்று கண்டதையும் குடித்து உடம்பை கெடுக்காமல் நல்ல உடன் ''பனம்பால்' ஒரு முழுசு குடித்தால் உடம்புக்கு அதை விட வேற என்ன ஆரோக்கியம் எடுத்துப் பாரும் தெரியும் பொறும் ...... பொறும் தம்பி பிறகு புளிச்சது பழசு எதையும் அடிச்சுப்போட்டு தலையைச்சுத்தி வீழ்ந்து போட்டு கோத்தை கொப்புட்டை எனக்கு உதை வாங்கித் தந்து விடாதீர்கள்


- vasisutha - 03-23-2005

பல்லுப்போன ஆட்கள் குடிக்கிறத இங்கு போட்ட மன்னர் ஒழிக <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 03-24-2005

hari Wrote:<img src='http://www.eelakkathir.de/_borders/dance1.gif' border='0' alt='user posted image'>என்ட அருமை மகள் ஆடத்தொடங்கிட்டால் இனி சூப் செய்தமாதிரித்தான்!

என்ன மன்னா ஆங்கிலபெயர் விஞ்ஞான பெயர், என்று எல்லாம் கலக்கிறியள்.... இதுகளும் தொடங்கியாச்சா இப்ப...


மகளை தூக்கி உள்ளை எல்லா போட சொன்னனான்..


- Malalai - 03-24-2005

என்ன மந்திரியாரே தூக்கிறதுலயே இருக்கிறயள் ஆ?....மன்னனே மனம் மாறி வாறர் நீங்கள் குழப்பிடுவியள் போல இருக்கு...


- Malalai - 03-24-2005

Quote:நன்றியண்ணா.. என்ன மகள் பந்தம் தொடருதோ நான் தான் வெட்டிவிட்டுவிட்டேன் எல்லோ..??
ஆகா ஆகா...மந்திரியாரும் மன்னன் தங்கையும் எங்கள் பந்தத்தை உடைக்கப் பாக்கினம் விட்டுடுவமா நாங்க....


- hari - 03-25-2005

பீட்ரூட் சூப்
<img src='http://thatstamil.indiainfo.com/images26/beetroot_soup1-250.jpg' border='0' alt='user posted image'>

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் அரை கிலோ

வெங்காயம் 1

எண்ணெய் 3 மேஜைக் கரண்டி

உருளைக்கிழங்கு 1

துருவிய எலுமிச்சம் பழத் தோல் அரைக் கரண்டி

எலுமிச்சம் பழச் சாறு 1 தேக்கரண்டி

உப்பு, மிளகுத்தூள் தேவைக்கேற்ப

செய்முறை:

பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச் சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத் தோலை துருவி எடுத்துக் கொள்ளவும்.

எண்ணெயை சுட வைத்து வெங்காயத்தை இரண்டு நிமிடம் வதக்கவும்.

பிறகு, நறுக்கிய பீட்ரூட், உருளைக்கிழங்கு துண்டுகள், துருவிய எலுமிச்சம் பழத் தோல், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். 15 நிமிடங்கள் வரை இவற்றை கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். எலுமிச்சம் பழச் சாற்றையும் சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விடவும். புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.


தேங்காய் பால் சூப்
<img src='http://thatstamil.indiainfo.com/images26/coconut-soup3-250.jpg' border='0' alt='user posted image'>
தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் அரை முடியில் எடுக்கப்பட்டது

பாதாம் பருப்புத் தூள் ஒரு மேசைக் கரண்டி

சீரகம 1 தேக்கரண்டி

கடுகு 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு 1 மேசைக் கரண்டி

பெய வெங்காயம் 1

செய்முறை:

தேங்காய்ப் பால், கடுகு, வெங்காயம் நீங்கலாக மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ள வேண்டும். காய்கறி வேக வைத்த சாறு மூன்று கப்புடன் மசாலாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கடுகு மற்றும் அந்த வெங்காயத்தை நெய்யில் வதக்கி சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கரண்டியால் கிளறிவிடவும். சில நிமிட கிளறலுக்குப் பின் சூடான தேங்காய்ப் பால் சூப் ரெடி!


- kavithan - 03-26-2005

மசாலா எப்படி தயார் செய்வது மன்னா,..? :roll:


- Malalai - 03-26-2005

ஏன் மசாலா செய்றதில ஆர்வம் காட்டுறியள் ஆ? என்ன மந்திரி பதவியை ரத்து செய்து விட்டிங்களா? :wink:


- hari - 03-26-2005

kavithan Wrote:மசாலா எப்படி தயார் செய்வது மன்னா,..? :roll:
:roll: :roll:


- தூயா - 03-26-2005

:roll: என்ன மசாலா? :roll:


- hari - 03-26-2005

ஹாய்! தூயா, கோமத ? ஒயகே சிங்கள தன்ங் கோமத ?


- தூயா - 03-26-2005

ஆயுபுவன் அய்யே, கொந்தாய்.மகே சிங்கள கொடக் கொந்தாய்.கோமத?


- thivakar - 03-26-2005

சமையல் வகுப்பில் சிங்களம் பேசியதற்காக இரண்டு மாணவர்கள் வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்........ஆதாரம் லங்கா ரூத்


- hari - 03-26-2005

யார் அதை சிங்களம் என்று சொன்னது, நாங்கள் இருவரும் புதியதொரு தமிழ் எழுத்து உருவில் எழுதிப்பார்த்தோம்! அது சரிவரவில்லை இப்படி அலங்கோலமாக வந்துட்டு! :wink: