09-04-2005, 05:18 PM
மக்கள் தலைவர் வைகோ: மன்மோகன் சிங் புகழாரம்
செப்டம்பர் 04, 2005
சென்னை:
மக்கள் கூட்டத்தின் தலைவராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திகழ்கிறார் என்று பிரதமர் மன்மோகன் சிங் புகாழாரம் சூட்டியுள்ளார்.
பொடா சட்டத்தில் கைதாகி, வேலூர் சிறையில் இருந்த ஓராண்டு காலத்தில் தனக்கு வந்த மடல்கள், தான் எழுதிய கடிதங்களைத் தொகுத்து சிறையில் விரிந்த மடல்கள் என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நூலாக்கியுள்ளார் வைகோ.
இந்த நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை இரவு நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு ஆங்கில நூலையும், திமுக தலைவர் கருணாநிதி தமிழ் பதிப்பையும் வெளியிட்டனர்.
ஆங்கில நூலின் முதல் பிரதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும், தமிழ் நூலின் முதல் பிரதியை தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியும் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசுகையில், மக்கள் கூட்டத்தை வசீகரிக்கும் தலைவர்களில் ஒருவர் வைகோ. அந்த அடிப்படையில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறையில் இருந்த காலகட்டத்தில் வைகோ புத்தகம் எழுதியுள்ளார். அது இப்போது நூலாக வெளியிடப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக மிகவும் பொறுப்புடன் செயல்படுபவர் வைகோ. என்னிடம் எப்போது பேசினாலும், மக்கள் பிரச்சினைகள் குறித்தும், சமூக குறைபாடுகள் குறித்துமே பெரும்பாலும் பேசுவார். இதுபோன்ற தலைவரை தமிழகம் பெற்றுள்ளது மிகவும் சந்தோஷமான விஷயம்.
சிறையில் அடைக்கப்படும் எல்லாத் தலைவர்களும் இதுபோல புத்தகம் எழுதுவதில்லை. வைகோ பலவீனமானவர் அல்ல என்பதால் இது சாத்தியமாயிற்று. அவரது கொள்கை உறுதி, தன்னம்பிக்கை, மன தைரியம் ஆகியவற்றால் பொடா சட்டத்திற்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளார்.
ஒளிமயமான தமிழக வானில், வைகோவின் பெயரை பொன்னெழுத்துக்களால் இந்தப் புத்தகம் ஜொலிக்கச் செய்யும் என்றார் சிங்.
வைகோ பேசுகையில், தனது நூல்களை வெளியிட்ட மன்மோகன் சிங்குக்கும், கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி தென் மாநில மக்களின் மனங்களை குளிர வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தார்.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>