![]() |
|
மக்கள் தலைவர் வைகோ: மன்மோகன் சிங் புகழாரம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: மக்கள் தலைவர் வைகோ: மன்மோகன் சிங் புகழாரம் (/showthread.php?tid=3439) |
மக்கள் தலைவர் வைகோ: மன்மோகன் சிங் புகழாரம் - வினித் - 09-04-2005 மக்கள் தலைவர் வைகோ: மன்மோகன் சிங் புகழாரம் செப்டம்பர் 04, 2005 சென்னை: மக்கள் கூட்டத்தின் தலைவராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திகழ்கிறார் என்று பிரதமர் மன்மோகன் சிங் புகாழாரம் சூட்டியுள்ளார். பொடா சட்டத்தில் கைதாகி, வேலூர் சிறையில் இருந்த ஓராண்டு காலத்தில் தனக்கு வந்த மடல்கள், தான் எழுதிய கடிதங்களைத் தொகுத்து சிறையில் விரிந்த மடல்கள் என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நூலாக்கியுள்ளார் வைகோ. இந்த நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை இரவு நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு ஆங்கில நூலையும், திமுக தலைவர் கருணாநிதி தமிழ் பதிப்பையும் வெளியிட்டனர். ஆங்கில நூலின் முதல் பிரதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும், தமிழ் நூலின் முதல் பிரதியை தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசுகையில், மக்கள் கூட்டத்தை வசீகரிக்கும் தலைவர்களில் ஒருவர் வைகோ. அந்த அடிப்படையில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறையில் இருந்த காலகட்டத்தில் வைகோ புத்தகம் எழுதியுள்ளார். அது இப்போது நூலாக வெளியிடப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு அரசியல் கட்சியின் தலைவராக மிகவும் பொறுப்புடன் செயல்படுபவர் வைகோ. என்னிடம் எப்போது பேசினாலும், மக்கள் பிரச்சினைகள் குறித்தும், சமூக குறைபாடுகள் குறித்துமே பெரும்பாலும் பேசுவார். இதுபோன்ற தலைவரை தமிழகம் பெற்றுள்ளது மிகவும் சந்தோஷமான விஷயம். சிறையில் அடைக்கப்படும் எல்லாத் தலைவர்களும் இதுபோல புத்தகம் எழுதுவதில்லை. வைகோ பலவீனமானவர் அல்ல என்பதால் இது சாத்தியமாயிற்று. அவரது கொள்கை உறுதி, தன்னம்பிக்கை, மன தைரியம் ஆகியவற்றால் பொடா சட்டத்திற்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளார். ஒளிமயமான தமிழக வானில், வைகோவின் பெயரை பொன்னெழுத்துக்களால் இந்தப் புத்தகம் ஜொலிக்கச் செய்யும் என்றார் சிங். வைகோ பேசுகையில், தனது நூல்களை வெளியிட்ட மன்மோகன் சிங்குக்கும், கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி தென் மாநில மக்களின் மனங்களை குளிர வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தார். - Mathan - 09-05-2005 இதுவரை வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது வைகோ ஒரு மக்களை கவரக்கூடய, மற்றய பல தலைவர்களுடன் நல்ல உறவை கொண்டுள்ள ஒரு அரசியல்வாதியாக தெரிகின்றார். ஆனால் இவர் தமிழ்நாட்டை ஆள்வதற்கு மிக குறைவான வாய்ப்புக்களை கொண்ட ஒருவர் என்பது தான் கவலைக்குரியது. - Danklas - 09-05-2005 தமிழ் நாட்டை ஆழ்வதற்கு தமிழராக இருக்க கூடாதளேய் மதன்...
- MUGATHTHAR - 09-05-2005 Quote:தமிழ் நாட்டை ஆழ்வதற்கு தமிழராக இருக்க கூடாதளேய் அதுவும் தம்பி ஈழத்தமிழருக்கு குரல் குடுக்கிற தெண்டு அவ்வளவுதான் - வினித் - 09-05-2005 கருணாநிதியின் பார்வையில் `சேகுவேராவாக வைகோ' உச்சிமுகர்ந்து முத்தமிட்டு அன்பு பொழிந்தார் "மாவீரன் சேகுவேராவின் உருவத்தில் வைகோ தெரிகிறார்", என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் நடந்த வைகோ நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது: வைகோ சிறப்பாக வீறு கொண்ட நடையில் வீழ்ச்சியுள்ள தமிழகத்தை எழுச்சியுறும் வகையில் உணர்ந்து இந்த நூலை எழுதியுள்ளார். இந்த புதையல் பெட்டகத்தை அளித்த வைகோவுக்கு நன்றி சொல்வதா அல்லது அவரை எழுத வைத்தவர்களுக்கு நன்றி சொல்வதா என்று தெரியவில்லை. 19 மாத காலம் அவர் சிறையில் இல்லாமல் இருந்தால், இந்த நூலை அவர் எழுதியிருக்கமாட்டார். அவர் சில புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதுவும் பாராளுமன்றத்தில் அவர் பேசிய உரைகள் தான் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவர் உட்கார்ந்து எழுதிய புத்தகம் எதுவுமே இல்லை. அவரை உட்கார்ந்து எழுதச் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த விழாவில் வைகோவுக்கு பொன்னாடை போர்த்தி உச்சி முகர்ந்து முத்தமிட்டேன். இது மேடைகளில் மட்டும் காணுகிற உருக்கம் மட்டும் இல்லை. எங்கள் இதயங்களும் அப்படித்தான் உள்ளது. எனக்கு சில கடிதங்களை அவர் எழுதியுள்ளார். உலக நாடுகளுக்கு 74 ஆம் ஆண்டில் அவர் நண்பர்களோடு சென்ற போதும் எனக்கு கடிதம் எழுத மறக்கவில்லை. நியூயோர்க், லண்டன், பாரிஸ் நகரங்களிலிருந்து வைகோ கடிதம் எழுதியுள்ளார். (அக்கடிதங்களை காண்பித்தார்). வேறு சிலரும் எனக்கு கடிதங்கள் எழுதியுள்ளனர். அதில் காட்டப்படாத கடிதங்களும் உள்ளன. எந்த நாட்டில் வைகோ இருந்தாலும், நம் நாட்டை பற்றிய கவலை அவருக்கு உண்டு. `உலகின் சில நகரங்களை நம் நாட்டோடு ஒப்பிட்டு பார்க்கும்போது மனம் ஊமையாக அழுகிறது' என்று லண்டனிலிருந்து எழுதியுள்ளார். `இன்னொரு கடிதத்தில் `தங்கள் நலம் அறிய ஆவல். தங்கள் நலத்தில் தான் எங்கள் வாழ்வும் அடங்கியிருக்கிறது' என்றும் எழுதியுள்ளார். இப்படி எழுதிய வைகோவை உச்சி முகர்ந்து முத்தமிட்டதில் என்ன தவறு இருக்கிறது. புரட்சி வீரன் சேகுவேராவை பற்றி வைகோ எழுதியுள்ளார். புரட்சியில் ஈடுபட்ட சேகுவேரா மாண்டு போனான். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த சேகுவேரா கியூபாவில் புரட்சி செய்து பொலிவியாவில் கண்ட துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டான். அவன் மறைந்து போனான் என்ற பகுதியை மறைத்துவிட்டு, நூலைப் படிக்க வேண்டும். ஏன் என்றால், சேகுவேரா உருவத்தில் தம்பி வைகோ தெரிகிறார். அதற்காகத்தான் சேகுவேரா மறைந்ததை மறைக்கச் சொன்னேன். அது நடந்துவிடக்கூடாது. சேகுவேரா இறக்கும் முன்பு கூட `புரட்சிக்கு இன்று தோல்வி' என்று தான் கூறினான். ஒரு புரட்சியாளனின் மூச்சு 39 வயதில் அடங்கிவிட்டது. இந்த வீரனைப் போல பல வீரர்களின் வரலாற்றை வைகோ ஏன் கடிதமாக எழுதியுள்ளார். அது போன்ற வீரர்கள் தமிழகத்தில் உலவிட வேண்டும் என்பதற்காக. அப்படிப்பட்ட வீரர்களால் தமிழ்நாட்டில் பல சாதனைகள் ஏராளமாக நடைபெற வேண்டும் என்பதற்காக. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற இரு கட்சிகள் இடதுசாரிகள் என்ற ஒரே குடையின் கீழ் அழைக்கப்படுவதுபோல தி.மு.க., ம.தி.மு.க. என்று பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், நாம் எல்லாம் திராவிட இயக்கம் என்று தான் அழைக்கப்படுவோம். வைகோவின் தாயாருக்கு மரியாதை... நூல் வெளியீட்டு விழா முடிந்ததும் வைகோவிடம் `உங்கள் தாயார் எங்கே?' என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டார். `அவர் மேடையின் கீழே அமர்ந்து இருக்கிறார். வயது அதிகமாக இருப்பதால், அவரை மேடைக்கு அழைத்து வருவது கடினம்', என்று வைகோ தெரிவித்தார். `பரவாயில்லை. மேடையிலிருந்து இறங்கி நானே சென்று பார்க்கிறேன்', என்று கூறிவிட்டு விறுவிறுவென மேடையிலிருந்து கீழே இறங்கினார். வைகோவின் தாயாரை சந்தித்து வணக்கம் தெரிவித்தார். வைகோவின் குடும்பத்தாரையும் சந்தித்து பிரதமர் பேசிவிட்டுச் சென்றார். -------------------------------------------------------------------------------- |