10-20-2005, 11:46 AM
முன்னேற விருப்பமா?
சமீபத்தில், 87ல் என்னுடன் +2 படித்த ஆறு நண்பர்களை ஒரு சேர சந்திக்க நேர்ந்தது. வெகு சந்தோஷமாய் அளவளாவிக் கொண்டோம். தற்போது எல்லாருமே நல்ல வேலையில், வசதியாக இருந்தனர் என்னைத் தவிர.
நாள் முழுக்க நாங்கள் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டதில் ஒரு முக்கிய விஷயம் என் மரமண்டையில் உறைத்தது. +2வில் என்னைவிட குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மற்ற நண்பர்கள், வாழ்க்கைப் பாதையில் பல படிகள் முன்னேற, நான் மட்டும் பின்தங்கியே இருந்தது ஏன் என தீவிரமாக யோசிக்க, என் மைனஸ்கள் செவிட்டில் அறைந்தன.
இருக்கிற வேலையே போதும், வருகிற சம்பளமே நிம்மதி என்று 17 வருடமாய் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்காது போனது, என் திறமைகளை ஒரு புள்ளியில் குவிக்காமல், பலவாய் சிதற விட்டு, எந்த துறையிலும் கொடி நாட்டாது வீணானது. முயற்சியே செய்யாமல் நாளைக்கு என்று எதையும் தள்ளிப்போடும் சோம்பேறித்தனம், நேரத்தை உரிய வகையில் பயன்படுத்தாமல் "டிவி', சினிமா என்று வீண் பொழுதுபோக்குகளில் என் பொன்னான நேரங்களை வீணடித்தது என்று என் குறைகள் தெளிவாக புரிய, எனக்குள் இருந்த கசடுகள் அகன்றன.
மற்றவர்களைவிட எந்த விதத்தில் நான் குறைந்து விட்டேன் என்கிற முனைப்பும், என்னாலும் அவர்களைப் போல முன்னேற முடியும் என்கிற உத்வேகமும் இப்போது உண்டாகியிருக்கிறது. முதல் அடியாக மல்டிமீடியா கோர்ஸில் சேர்ந்திருக்கிறேன். நிச்சயம் ஜெயிப்பேன் என்கிற நம்பிக்கையோடு நடைபோடத் துவங்கியுள்ளேன்.
என்னைப் போல், கிடைத்த வேலையும், சம்பளமுமே போதும் என்று இருப்பவர்களே... அந்த வட்டத்தைவிட்டு வெளியே வாருங்கள். இன்னொரு உலகம் நமக்காக காத்திருக்கிறது!
கே.ரவிச்சந்திரன், கோவை

:| :!:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நான் நெற்ஃபிரண்ட்டை