Yarl Forum
முன்னேற விருப்பமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: முன்னேற விருப்பமா? (/showthread.php?tid=2843)



முன்னேற விருப்பமா? - aathipan - 10-20-2005

முன்னேற விருப்பமா?

சமீபத்தில், 87ல் என்னுடன் +2 படித்த ஆறு நண்பர்களை ஒரு சேர சந்திக்க நேர்ந்தது. வெகு சந்தோஷமாய் அளவளாவிக் கொண்டோம். தற்போது எல்லாருமே நல்ல வேலையில், வசதியாக இருந்தனர் என்னைத் தவிர.

நாள் முழுக்க நாங்கள் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டதில் ஒரு முக்கிய விஷயம் என் மரமண்டையில் உறைத்தது. +2வில் என்னைவிட குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மற்ற நண்பர்கள், வாழ்க்கைப் பாதையில் பல படிகள் முன்னேற, நான் மட்டும் பின்தங்கியே இருந்தது ஏன் என தீவிரமாக யோசிக்க, என் மைனஸ்கள் செவிட்டில் அறைந்தன.

இருக்கிற வேலையே போதும், வருகிற சம்பளமே நிம்மதி என்று 17 வருடமாய் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்காது போனது, என் திறமைகளை ஒரு புள்ளியில் குவிக்காமல், பலவாய் சிதற விட்டு, எந்த துறையிலும் கொடி நாட்டாது வீணானது. முயற்சியே செய்யாமல் நாளைக்கு என்று எதையும் தள்ளிப்போடும் சோம்பேறித்தனம், நேரத்தை உரிய வகையில் பயன்படுத்தாமல் "டிவி', சினிமா என்று வீண் பொழுதுபோக்குகளில் என் பொன்னான நேரங்களை வீணடித்தது என்று என் குறைகள் தெளிவாக புரிய, எனக்குள் இருந்த கசடுகள் அகன்றன.

மற்றவர்களைவிட எந்த விதத்தில் நான் குறைந்து விட்டேன் என்கிற முனைப்பும், என்னாலும் அவர்களைப் போல முன்னேற முடியும் என்கிற உத்வேகமும் இப்போது உண்டாகியிருக்கிறது. முதல் அடியாக மல்டிமீடியா கோர்ஸில் சேர்ந்திருக்கிறேன். நிச்சயம் ஜெயிப்பேன் என்கிற நம்பிக்கையோடு நடைபோடத் துவங்கியுள்ளேன்.

என்னைப் போல், கிடைத்த வேலையும், சம்பளமுமே போதும் என்று இருப்பவர்களே... அந்த வட்டத்தைவிட்டு வெளியே வாருங்கள். இன்னொரு உலகம் நமக்காக காத்திருக்கிறது!

கே.ரவிச்சந்திரன், கோவை


- kurukaalapoovan - 10-20-2005

நீங்கள் விரும்பின உடனை முன்னேறேலாது. அதெல்லாம் முந்தின பிறப்பில நீங்கள் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்துத்தான் இருக்கு. நினைப்ப தெல்லாம் நடந்துவிட்டால் என்ற பாட்டு நினைவுபடுத்திப்பாருங்கோ கொஞ்சம். :wink:


- Netfriend - 10-20-2005

யார் இவர் கே.ரவிச்சந்திரன்இ கோவை அவரைவிட்டு உமக்காக (உங்களுக்காக) எனக்காக எழுதுகிறேன்..
அருமை ஆதிபன் உங்கள் அனுபவம்... அங்கு... அல்லது யாழில் இங்கு சொன்னதை அனுபவ உண்மையாக எண்ணலாம்.... அதுவே இங்கு கனபேரில் உள்ளது... நான் உட்பட... எது என்ன நடந்தாலும் சிலர் இங்கு சிலபேரில் மரியாதை வைக்கவேண்டி உள்ளது அது யாழ் உறுப்பினர்களுக்கு யாரும் சொல்லாமலே இருக்கு... Idea :| :!:


- vasisutha - 10-20-2005

என்ன அன்பகம் நீங்கள் இப்படி குழப்பிறீங்கள்?


- kurukaalapoovan - 10-20-2005

நீங்கள் திருப்பி திருப்பி என்னை அன்பகம் என்று கூப்புடுறியள் :evil:


- tamilini - 10-20-2005

kurukaalapoovan Wrote:நீங்கள் விரும்பின உடனை முன்னேறேலாது. அதெல்லாம் முந்தின பிறப்பில நீங்கள் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்துத்தான் இருக்கு. நினைப்ப தெல்லாம் நடந்துவிட்டால் என்ற பாட்டு நினைவுபடுத்திப்பாருங்கோ கொஞ்சம். :wink:

அப்படிப்போடுங்க. யோசியர் கைபாத்து அல்லது சாதகம் பாத்து உங்களுக்கு வெள்ளி திசை என்று சொன்னாத்தான் நாங்க முன்னேறலாம் என்ன. இது தெரியாமல்.

:evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 10-20-2005

kurukaalapoovan Wrote:நீங்கள் திருப்பி திருப்பி என்னை அன்பகம் என்று கூப்புடுறியள் :evil:



அய்யோ உங்களை இல்லை.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நான் நெற்ஃபிரண்ட்டை
கூப்பிட்டேன்.. அவர் எழுதுவது அன்பகம் எழுதுவது போல
இருக்கு அதான்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Netfriend - 10-20-2005

ஓ அப்படியா யாரப்பா அது... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> போய்பாக்கிறேன். 8)


- Rasikai - 10-20-2005

tamilini Wrote:
kurukaalapoovan Wrote:நீங்கள் விரும்பின உடனை முன்னேறேலாது. அதெல்லாம் முந்தின பிறப்பில நீங்கள் செய்த பாவ புண்ணியங்களை பொறுத்துத்தான் இருக்கு. நினைப்ப தெல்லாம் நடந்துவிட்டால் என்ற பாட்டு நினைவுபடுத்திப்பாருங்கோ கொஞ்சம். :wink:

அப்படிப்போடுங்க. யோசியர் கைபாத்து அல்லது சாதகம் பாத்து உங்களுக்கு வெள்ளி திசை என்று சொன்னாத்தான் நாங்க முன்னேறலாம் என்ன. இது தெரியாமல்.

:evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:roll: :roll:


- tamilini - 10-20-2005

என்ன ரசிகை முழிக்கிறீங்க. :roll: :roll:


- Rasikai - 10-20-2005

இல்லை இரண்டு பேரும் சாத்திரம் முற்பிறப்பு பற்றிக் கதைக்குறீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை அதுதான்


- aathipan - 10-20-2005

எனது அப்பா அம்மா எப்போதும் என்னை படி படி என்று சொன்னது கிடையாது. நானாக படித்தால் தான் உண்டு. எனது நண்பனின் வீட்டில் அப்படிக்கிடையாது. மிகவும் கண்டிப்பு. அவன் விரும்பிய துறையைத்தேர்வு செய்ய முடியாது. அவர்கள் சொன்ன துறையைத்தான் தேர்வு செய்தான். எப்போதும் சோகமாக காணப்படுவான். இன்று அவன் நல்ல நிலையில் இருக்கிறான். அதற்குக் காரணம் அவன் பெற்றோர்கள் கண்டிப்பாக வழிநடத்தியது. படிக்கின்ற போது கசப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் எல்லாம் இனிப்பாக மாறும்.


- inthirajith - 10-20-2005

எனக்கு ஒரு ஆசிரியராக வரத்தான் ஆசைபட்டேன் .ஆனால் ஏ எல் இல் நல்ல புள்ளிகள் எடுத்ததால் வைத்தியதுறைக்கு போகசொல்லி அழுத்தம் கொடுத்தார்கள்வீட்டில் . மனதில் இருந்த கலைத்துறை ஆர்வமும் நீர்த்து போய் வெறுப்புடன் பல்கலைக்கழகம் போனேன். அரைகுறையாய் போனது என் இலட்சியம்.படிப்புக்கும் சம்பந்தம் இல்லாத தொழில் இப்போது பிள்ளைகளின் மனதுக்கு பிடித்ததுறையில் விடுவது நல்லது என் அப்பிப்பிராயம்.