Posts: 69
Threads: 15
Joined: Oct 2005
Reputation:
0
நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு,
பட்டுப்போகாத உன் பசுமை நினைவுகள் மட்டும்,
திட்டுத்திட்டாய் படர்ந்து..
எனக்குள் நீ இன்னமும் இருக்கிறாய் என்று,
தொட்டு சொல்கின்றன.............
நீ வெட்டியெறிந்த வேரின் ஓரத்தில் சொட்டுகிறது இரத்தம்,
மீண்டும் நட்டுவைப்பாய் என்ற நம்பிக்கையில்
நான்.....
!
--
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
வரிகள் எங்கும் சோகம்...என்ன நடந்தது கவிப்பிரியனுக்கு...சோகம் தான் கவிதை எழுத வைக்குதோ...??! சரி...அதுவே ஆறுதலும் ஆகட்டும்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சுஇ
பட்டுப்போகாத உன் பசுமை நினைவுகள் மட்டும்
அருமை வரிகள்...
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
வெட்டியெறிந்துவிட்டவள் திரும்பவும் நடலாம். நண்பரே
ஆனால் மீண்டும் வெட்டமாட்டாள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. திரும்பவும் இப்படி கவிதை எழுதவேண்டி வரலாம். எதற்கும் வேறு ஒருத்தியை மரம் நடச்சொல்லும்.
கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
கவி அருமை கவிப்பிரியன்.
இவோன் வெட்டிய மரமெல்லாம் பட்டதில்லை.
<b> .. .. !!</b>