![]() |
|
நெருப்பெரிந்த நிலம்....................... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நெருப்பெரிந்த நிலம்....................... (/showthread.php?tid=2696) |
நெருப்பெரிந்த நிலம்....................... - kpriyan - 10-30-2005 நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு, பட்டுப்போகாத உன் பசுமை நினைவுகள் மட்டும், திட்டுத்திட்டாய் படர்ந்து.. எனக்குள் நீ இன்னமும் இருக்கிறாய் என்று, தொட்டு சொல்கின்றன............. நீ வெட்டியெறிந்த வேரின் ஓரத்தில் சொட்டுகிறது இரத்தம், மீண்டும் நட்டுவைப்பாய் என்ற நம்பிக்கையில் நான்..... - இவோன் - 10-30-2005 Quote:நீ வெட்டியெறிந்த வேரின் ஓரத்தில் சொட்டுகிறது இரத்தம், வெட்டியெறிஞ்ச மரம் இத்தனைக்கும் பட்டுப்போயிருக்கும். இனி திருப்பி நட்டாலும் பிரயோசனம் இல்லை. பேசாமல் வேறை ஒரு மரத்தை நடப்பாரும். நட்டால் மட்டும் போதாது.. ஒழுங்கா தண்ணியும் ஊற்ற வேணும்.. - kuruvikal - 10-30-2005 வரிகள் எங்கும் சோகம்...என்ன நடந்தது கவிப்பிரியனுக்கு...சோகம் தான் கவிதை எழுத வைக்குதோ...??! சரி...அதுவே ஆறுதலும் ஆகட்டும்..! :wink:
- shanmuhi - 10-30-2005 நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சுஇ பட்டுப்போகாத உன் பசுமை நினைவுகள் மட்டும் அருமை வரிகள்... - lollu Thamilichee - 10-30-2005 இவோன் Wrote:Quote:நீ வெட்டியெறிந்த வேரின் ஓரத்தில் சொட்டுகிறது இரத்தம், எவன் சொன்னது வெட்டிப்போன மரம் பட்டுப்போய் இருக்கும் என்று ??? அதுதான் அவர் சொல்ரார் எல்லோ "மீண்டும் நட்டுவைப்பாய் என்ற நம்பிக்கையில் நான்....." பிறகு என்ன தோழரே ??? அதை அவர் மீண்டும் நடுவார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- jeya - 10-30-2005 அதுதானே - வெண்ணிலா - 10-31-2005 மீண்டும் நட்டு வைப்பாள் என்ற நம்பிக்கை வீணாகாமல் போக வாழ்த்துக்கள். சோக கவிதை வரிகள் எனக்கும் ரொம்ப பிடித்திருக்கு . நன்றிங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 10-31-2005 வெட்டியெறிந்துவிட்டவள் திரும்பவும் நடலாம். நண்பரே ஆனால் மீண்டும் வெட்டமாட்டாள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. திரும்பவும் இப்படி கவிதை எழுதவேண்டி வரலாம். எதற்கும் வேறு ஒருத்தியை மரம் நடச்சொல்லும். கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள். - Rasikai - 10-31-2005 கவி அருமை கவிப்பிரியன். இவோன் வெட்டிய மரமெல்லாம் பட்டதில்லை. |