Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழம் தரப்போகின்ற ஜனாதிபதி
#1
வா ராசா நாளை நீ
ஜனாதிபதியாம்
முடிசூட்டிக்கொள் என்
தலைவனிட்ட பிச்சையது.
மானங்கெட்டு மதியிழந்து
சந்திரிகா கால்களில்
மிதிபட்டு பதவிபெற்றுவிட்டாய்.
உன் எஜமானிதான்
எம்படையை பெருக்குவித்து
படைக்கலமும் தந்தாள்.
நீ என்ன செய்யப்போகின்றாய்?

இனவெறிக்குதிரையில் உனக்கு
முன் நாலுபேர் ஒய்யாரமாய்
சவாரிசெய்து மூக்குடைந்து போயினர்
தீயை தொட்டு சூடென்றறியும்
மாதனமுத்தாவின் பேரன்தானே?
பதவி தந்த என் தலைவன்
உன்னை புழுதியில் தள்ளுகின்ற
காலம் வெகுதூரமில்லை ....
வாராசா நீதான் தமிழீழம்
தரப்போகின்றாய். வாராசா
Reply
#2
எண்ணி எத்தனை பேர் வந்தாலும்
எம் தலைவன் கால் தொட்டு
பணிந்து பணி செய்யும்
நிலை கொடு இறையோனே
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)