Yarl Forum
தமிழீழம் தரப்போகின்ற ஜனாதிபதி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தமிழீழம் தரப்போகின்ற ஜனாதிபதி (/showthread.php?tid=2399)



தமிழீழம் தரப்போகின்ற ஜனாதிபதி - வன்னியன் - 11-18-2005

வா ராசா நாளை நீ
ஜனாதிபதியாம்
முடிசூட்டிக்கொள் என்
தலைவனிட்ட பிச்சையது.
மானங்கெட்டு மதியிழந்து
சந்திரிகா கால்களில்
மிதிபட்டு பதவிபெற்றுவிட்டாய்.
உன் எஜமானிதான்
எம்படையை பெருக்குவித்து
படைக்கலமும் தந்தாள்.
நீ என்ன செய்யப்போகின்றாய்?

இனவெறிக்குதிரையில் உனக்கு
முன் நாலுபேர் ஒய்யாரமாய்
சவாரிசெய்து மூக்குடைந்து போயினர்
தீயை தொட்டு சூடென்றறியும்
மாதனமுத்தாவின் பேரன்தானே?
பதவி தந்த என் தலைவன்
உன்னை புழுதியில் தள்ளுகின்ற
காலம் வெகுதூரமில்லை ....
வாராசா நீதான் தமிழீழம்
தரப்போகின்றாய். வாராசா


Re: தமிழீழம் தரப்போகின்ற ஜனாதிபதி - தூயவன் - 11-19-2005

எண்ணி எத்தனை பேர் வந்தாலும்
எம் தலைவன் கால் தொட்டு
பணிந்து பணி செய்யும்
நிலை கொடு இறையோனே