11-26-2005, 04:16 PM
[size=18]<b>அக்கரைப்பற்றுக்கு சென்ற 2 புலிகள் கடத்தப்பட்டு வெட்டிக் கொலை</b>
<b>அரச தரப்பு அரசியல்வாதியின் ஆயுதக் குழு மீது சந்தேகம்</b>
<b>அக்கரைப்பற்று முஸ்லிம் பகுதிக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சென்ற விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரான லெப். கேணல் சுரேஸும் மற்றொருவரும், கடத்தப்பட்டு பின் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை, ஆலையடிவேம்பு பள்ளியகுளம் குளக்கட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடனும் கத்திவெட்டுக் காயங்களுடனும் இருவரது உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொல்லப்பட முன்னர் இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டுமுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
திங்கட்கிழமை மாலை அக்கரைப்பற்றில் முஸ்லிம்களைச் சந்திப்பதற்காகவும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவும் புலிகளின் அரசியல் துறை உறுப்பினர்களான இவ் இருவரும் அக்கரைப்பற்றுக்கு சென்றுள்ளனர். எனினும் மாலை 4 மணிக்குப் பின்னர் இவர்கள் காணாமற் போயுள்ளனர்.
இவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த புலிகள் முயன்றும் அது சாத்தியப்படாது போய்விட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆலையடிவேம்பு பள்ளியகுளம் குளக்கட்டின் இரு புறங்களிலும் இருவரது உடல்களும் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
ஒருவரது சடலம் கழுத்தில் சுருக்கிடப்பட்டும் தலையிலும் மார்பிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயமும் உடலின் பல பகுதிகளிலும் கத்திவெட்டுக்காயங்களும் காணப்பட்டன.
மற்றையவரது உடலில் கத்திவெட்டுக் காயங்களும் தலையிலும் மார்பிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் காணப்பட்டதுடன் கைகள் இரண்டும் பின் புறம் கட்டப்பட்டிருந்தன.
இருவரும் கொல்லப்பட முன்னர் கடுமையாகத் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் உடல்களில் தென்பட்டதாக அக்கரைப்பற்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் பற்றி புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கூறுகையில்,
முஸ்லிம் பகுதிக்கு அவர்களைச் சந்திக்கச் சென்ற இருவரும் மாலை 4 மணிவரை எம்முடன் தொடர்பிலிருந்தனர். அதன் பின்னர் இவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
அரச தரப்பு அரசியல் வாதியொருவரின் ஆயுதக் குழுவே இவர்களை கடத்திச் சென்று படுகொலை செய்துள்ளதாகக் கருதுகின்றோம். தமிழ் - முஸ்லிம்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவரும் அந்த அரசியல் வாதியே இதனுடன் தொடர்புடையவரெனக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட லெப்.கேணல் சுரேஷ் ( 26 வயது - வாழைச்சேனை), லெப்.வெள்ளை (22 வயது - விநாயகபுரம், திருக்கோவில்) ஆகியோரது உடல்களை உறவினர்கள் அடையாளம் காட்டினால் மட்டுமே ஒப்படைக்க முடியுமென அக்கரைப்பற்று ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறிவிட்டது.
பாதுகாப்பு காரணங்களால் அவர்களால் அங்கு வர முடியாதெனத் தெரிவிக்கப்பட்டும் அதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுக்கவே, போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இதில் தலையிட்டன. எனினும் அவர்களது வேண்டுகோள்களும் ஏற்கப்படவில்லை.
இறுதியில் கண்காணிப்புக் குழுவுடன் வந்த போராளிகள் உடல்களை அடையாளம் காட்டிய பின்பே உடல்கள் ஒப்படைக்கப்படன.
இருவரது உடல்களும் பின்னர் மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.</b>
http://www.thinakural.com/New%20web%20site...Important-3.htm
வீரச்சாவடைந்த விடுதலைபுலி உறுப்பினர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

[b]
,,,,.
,,,,.