07-30-2005, 07:25 PM
,<b>போராளி ஆனார் திருமாவளவன்!</b>
ஜூலை 28...
சென்னை புறநகரான திரிசூலம் மலை குவாரி பகுதியில்...
பெட்ரோல் குண்டுகள் வெடித்து சிதற, அதிலிருந்து 'டைவ்' அடித்துத் தப்புகிறார் அந்த புதுமுக நடிகர்! மலை அடிவாரத்திலிருந்து கயிறைப் பிடித்தபடியே மலை உச்சிக்கு ஏறுகிறார். கையில் மெஷின் கன். கண்களில் போர் வேட்கை. அடுத்த சிறிது நேரத்தில், தன்னுடன் இருக்கும் போராளிப் படையினருக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் துவங்குகிறார் அந்த நடிகர்.
<img src='http://img241.imageshack.us/img241/610/p44a1dv.jpg' border='0' alt='user posted image'>
அசப்பில் ஈழ பிரபாகரனை நினைவூட்டும் தோற்றத்தில் உள்ள புதுமுக நடிகர், ஈழ தமிழர்களுக்காகப் போராடும் தளபதியாகவே அந்தப் படத்தில் முக்கிய தோற்றம் காட்டுகிறாராம்.
''கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகளாக்குவோம்! கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம்'' என்று உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் மத்தியில் அவர் வீர உரை நிகழ்த்த... படத்தின் டைரக்டர் கிருபா சரவணன் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்.
இப்படி உணர்வுபூர்வமாக போராளித் தளபதி பாத்திரத்தில் ஒன்றிப்போய் அந்த நடிகர் நடித்ததில் ஆச்சரியமில்லை... நிஜமாகவே புலிகளின் மீது பெரும் அபிமானம் கொண்ட தொல்.திருமாவளவன்தான் அந்த நடிகர்.
'அன்புத் தோழி' என்பது படத்தின் பெயர். கிட்டதட்ட அறுபது சதவிகிதம் முடிந்துவிட்டது.
எந்த பரபரப்பும் இல்லாமல், ஊரை விட்டு ஒதுங்கி இருக்கும் அந்த மலை குவாரி பகுதியில் வந்து நடித்துவிட்டுப் போகிறார் திருமாவளவன். தனது இயக்கத் தோழர்களைக்கூட ஷட்டிங் ஸ்பாட் பக்கம் வரவிடுவதில்லை. கடந்த சில நாட்களாக ஆலந்தூர் பகுதி அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தபடி, ஒரு பக்கா நடிகர் போலவே கால்ஷீட் தவறாமல் ஷ¨ட்டிங் போய் வருகிறார்!
<img src='http://img241.imageshack.us/img241/4195/p442kn.jpg' border='0' alt='user posted image'>
ஷட்டிங் இடையே ஓய்வில் அவரோடு பேசினோம்.
''சின்ன வயதில் நான் மேடை பக்கமே தலைகாட்ட மாட்டேன். அவ்வளவு கூச்சம். ஆனால், இன்றைக்கு நான் மேடைக்கு மேடை பேசியே ஆக வேண்டிய ஒரு பேச்சாளர். திரைப்படங்களை அதிகம் பார்த்தவனல்ல... ஆனால், இப்போது என்னை நடிகனாக நிறுத்தி இருக்கிறார்கள்! முழுக்க முழுக்க நண்பர்களுக்காக, நட்புக்காக, எனக்குப் பிடித்தமான கொள்கை முழக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இதில் நடிக்க நான் சம்மதித்தேன்.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மாதிரியே, மொழி மற்றும் இனத்தின் வளர்ச்சிக்காக அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழகத்தில் ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தை நடத்த வேண்டும் என்று நான் கனவு கண்டதுண்டு. தற்போதைய அரசியல் வேலைகளுக்கு நடுவே அது முடியவில்லை. அந்த ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ளும் வகையில், இந்தப் படத்தில் என் பாத்திரம் இருந்தது.
இருந்தாலும் தயங்கினேன். எனது நீண்ட நாள் நண்பரும் வக்கீலுமான மன்னை சிவ.ராஜ சேகரன் தான் பேசிப் பேசியே என்னைக் கரைத்து விட்டார்''
என்று சிரித்தபடியே அருகில் உள்ள சிவ.ராஜசேகரனை திருமாவளவன் பார்க்க...
''சினிமாவிலிருந்து விஜயகாந்த் அரசியலுக்கு வருகிற நேரத்தில், அரசியலில் இருந்து நீங்கள் சினிமாவுக்கு போவதையும் மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள்!'' என்று சிரிக்கிறார் அவர்.
<img src='http://img241.imageshack.us/img241/5280/p455xj.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:blue'>படத்தில்
தொடர்ந்து திருமாவளவன்,
''எதிரிகளின் கண்ணில் எளிதில் படாமல் காக்கக்கூடிய இந்த 'காமாஃப்ளாஜ்' சீருடையை நான் மாட்டியபோது, எனக்கு உடலிலும் உள்ளத்திலும் புது மிடுக்கு சேர்ந்தது. தலையில் தொப்பி, கையில் இயந்திரத் துப்பாக்கி என்று என்னைப் புல்லரிக்க வைத்தது இந்தத் தோற்றம்'' என்று சிலிர்த்தது 'சிறுத்தை'!
''படத்தில் திருமணம், ஆடல் என்றெல்லாம் கூடாது என்பதை முதலிலேயே நிபந்தனையாகச் சொல்லிவிட்டேன். இயக்குநரும் தயாரிப்பாளரும் சம்மதம் தெரிவித்த பிறகே படப்பிடிப்பில் கலந்துகொண்டேன்'' என்றும் சொன்னார்!
<img src='http://img241.imageshack.us/img241/3197/p45b7tl.jpg' border='0' alt='user posted image'>
படப்பிடிப்பில்
''படத்தின் கதைதான் என்ன?'' என்றோம்.
''அது இப்போதைக்கு மர்மம். நான் ஏதாவது ஒன்றுகிடக்க ஒன்றாகச் சொன்னால் இயக்குநர் சண்டைக்கு வந்துவிடுவார். நான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் யுத்தம் உண்டு, இலங்கையில் சிலநாள் படப் பிடிப்பு உண்டு'' என்று மட்டும் சொன்னார்.
<img src='http://img241.imageshack.us/img241/3766/p45a0zj.jpg' border='0' alt='user posted image'>
வழக்கறிஞர் சிவ.ராஜசேகரனுடன்
நாம் படப்பிடிப்பு சம்பந்தப்பட்டவர்களிடம் விடாமல் தோண்டித் துருவினோம்.
கிடைத்த விவரங்கள் விறுவிறு.
படத்தின் புதுமுக கதாநாயகியாக அறிமுகமாகிறார் சௌமியா... இவர் பிரபல டைரக்டர் அகத்தியனின் மகள். இவருடைய ஒருதலைக்காதல் ஆவேசமான 'அன்புத் தோழி' கதைக்கு, அற்புதமான சென்டிமென்ட்டைச் சேர்க்கிறதாம். திருமாவளவன் சம்பந்தப்பட்ட ஒரு க்ளைமாக்ஸ் காட்சி, அவரது விடுதலைச் சிறுத்தை இயக்கத்தினர் அத்தனை பேரையும் கலங்கி விசும்ப வைத்துவிடும் என்கிறார்கள்.
முறுக்கு மீசை 'சிறுத்தை'க்கு திருஷ்டிப் பூசணிக்காய் உடைங்கப்பா!</span>
thanks
vikatan

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
(சில நேரங்களில் மாற்றுக்கருத்து மாற்றுக்கருத்து எண்டு உளையிடுகின்ற என்னைப்போல ஆட்களும் உண்மைகளை ஒத்துக்கொண்டுதானே ஆகோனும்ம்..அதுதானே ஜதார்த்தம்.. )