Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்கள் நிலை எண்ன?
#41
ஈழத்துளி அவர்களே...வரைபின் significant difference மட்டுமே தேவைக்கு ஏற்ப எங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது...! கிட்டத்தட்ட 50% வளர்ச்சி...ஏற்பட்டுள்ளது.. அதுதான் குறிப்பிட்டோம்...!
நீங்கள் சொன்னது போல...இதர இடங்களில் சின்னச்சின்ன மாற்றங்களும் இருக்கின்றன...! அதுமட்டுமன்றி இதுவும் ஒரு சமூகவியல் விஞ்ஞான ஆய்வின் தரவுதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

என்னதான் இயந்திரமயம் பணம் சம்பாதிப்பு என்று நாங்கள் சொல்லிக் கொண்டாலும்... வயதை ஏற்றிக் கொண்டாலும் பெண்களுக்கான திருமணத் தகுதியின் உச்ச எல்லை இயற்கையால் மாற்றப்படவில்லை...சராசரியாக 45 வயதுக்கு மேல் பெண் உடற்கூற்றியல் ரீதியாக சில செயற்பாட்டு மாற்றங்களை அடைகிறாள்...! அது அவர்களின் திருமணத்திற்காக நோக்கங்களைப் பாதிக்கச் செய்யலாம்...! அடுத்தது பிறக்கும் பிள்ளைகளுக்கிடையேயான வயது வேறுபாடு...இதுவும் முக்கியமான ஒன்று..அதற்கேற்ப பெண்ணின் திருமண வயது தீர்மானிக்கப்படுதல் நன்று..இது சாதாரண உயிரியல் அடிப்படையில் தரப்படும் விடயங்கள்...! எனி இவற்றிற்கு மேலதிகமாக... சமூகக்காரணி...உளவியல் காரணி...குடும்பக் காரணிகள் என்று பலதையும் கவனிக்க வேண்டியும் இருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
குறுவி சார் உங்களை மாதிரி நம்ம ஆளு தப்பிக்கிறதுக்கு வழிசொல்லவுமில்லை. நாங்கள் ஒரு சதமும் குடுக்கவுமில்லை. அப்பிடிக் கேட்டு வந்தவைக்கூட வாசலிலை வைச்சு துரத்தின மனிசியுங்க நாங்க.

வயது வித்தியாசம் பற்றி நளினம் பண்ணவில்லையுங்கோ குறுவி சார் அந்;த ஆணின் எதிர்பார்ப்பும் தன்னை விற்பதற்காக போட்ட விலையையும்தானுங்க நாங்க சொல்லியிருக்கிறம்.
இது வயது அதிகரிப்பை வலியுறுத்தி நளினம் பண்ணுவதாக உங்கள் திரிபுப்புத்தி போவதற்கு நாம் எதுவும் செய்யமுடியாது. சீதனம் கேட்டு 42தாண்டும்வரையும் காத்திருந்த அந்த மனிதனுக்குள் இருந்த பணப்பேயைத்தான் இங்கு காட்டியிருக்கிறேன். இதுகூட புரியாது வரைபு கரைபு என்று கருத்தை சொதப்புறீங்களே.
ஆண்கள் தங்களை விட 15-18வயது வரை பெண் இழமையாக இருக்க வேண்டுமென எண்ணுவது ஒன்றும் பெண்ணின் வாழ்வில் உள்ள கரிசனையில் என்று கணக்கிடுவது உங்கள் விஞ்ஞான புூர்வமான விளக்கத்துக்கும் ஆண்களின் இப்படியான மனோபாவத்துக்கு ஊக்குவிப்புமே தவிர சரியான வாழ்வை வாழ்வதற்கான வழியில்லை.
உங்களது விஞ்ஞான விளக்கங்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள்.

<b>*****தணிக்கை</b>
:::: . ( - )::::
Reply
#43
இதில கவனத்தில் எடுக்கவேண்டிய இன்னொரு விடயம் ஒருவர் வாழும் காலம்
இலங்கையில் சராசரியாக ஒரு பெண் 76 வயது வரைக்கும், ஒரு ஆண் 70 வயது வரைக்கும் வாழ்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன

நீங்கள் கூறியதுபோல் 10 வயது அதிகமுள்ள ஆணைத் திருமணம் செய்யும் பெண் 60 வயது முதல் 76 வயது வரை துணையின்றி விதவையாக வாழவேண்டும்
சமுகநலனில் அக்கறையிருப்பின் விதவைகள் உருவாவதை தடுக்க விருப்பமிருப்பின் திருமணத்தின்போது ஆணைவிட பெண் 6 வயது கூடியவளாக இருக்க வேண்டும்

இது நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?
இதை நீங்கள் யாரும் ஆதரிப்பீர்களா?
Reply
#44
[b]*****தணிக்கை

மேடம் நீங்க அந்த 42 வயசு ஆளைப் பற்றி எழுதேக்க...அதேன் 15 வயசு வித்தியசத்தில பொம்பிளை தேடினார்...என்று குறிப்பிட்டுச் சொல்லனும்...ஒரு இளம் பெண் தேடினார் என்றிருந்தா இந்த ஒப்பீடுகளுக்கு தேவை வந்திருக்காது என்று நினைக்கிறம்...திரிபில்ல...சிலபேற்ற நக்கல்கள் உலகத்தை இன்னும் சரிவரப் புரிஞ்சுக்கல்ல என்றதைக் காட்டிச்சு...அதுதான் சுட்டிக்காட்டினம்....!

சரிங்களா மேடம்...நாங்க ஊருக்காக சீதனம் வாங்கல்ல... வாங்கம்..இல்ல கேட்டவையை அடிச்சுக் கலைச்சம் என்று வீர முழங்கம் இடப்போறதில்லை...உலகத்தில எத்தினையோ கோடிச் சனம் சீதனமில்லாம கட்டுதுகள் வாழுதுகள்...அதுகள் போதும்..உங்களை விட சிறந்த உதாரணங்களாகும் எங்களுக்கு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#45
ஈழத்துளி Wrote:இதில கவனத்தில் எடுக்கவேண்டிய இன்னொரு விடயம் ஒருவர் வாழும் காலம்
இலங்கையில் சராசரியாக ஒரு பெண் 76 வயது வரைக்கும், ஒரு ஆண் 70 வயது வரைக்கும் வாழ்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன

நீங்கள் கூறியதுபோல் 10 வயது அதிகமுள்ள ஆணைத் திருமணம் செய்யும் பெண் 60 வயது முதல் 76 வயது வரை துணையின்றி விதவையாக வாழவேண்டும்
சமுகநலனில் அக்கறையிருப்பின் விதவைகள் உருவாவதை தடுக்க விருப்பமிருப்பின் திருமணத்தின்போது ஆணைவிட பெண் 6 வயது கூடியவளாக இருக்க வேண்டும்

இது நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?
இதை நீங்கள் யாரும் ஆதரிப்பீர்களா?

இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் பெண்களின் சராசரி ஆயுள் காலம் ஆண்களை விட அதிகம்...சம வயதை அடையும் இரண்டு முதியவர்களைப் பராமரிக்க ஆகும் செலவீனத்தோடு ஒப்பிடும் போது..குடும்பத்தில் துணைகள் தம்மைத் தாமே பராமரிக்கும் நிலையில் இயன்றவரை இருப்பது வரவேற்கப்படுகிறது...! பெண்ணோ ஆணோ ஒருவர் ஒப்பீட்டளவில் இளமையாக இருப்பின்...அவர் விதவையாகினும் தன்னைத் தானே குறிப்பிட்ட காலத்துக்கு பராமரிக்கும் தகுதியோடு இருப்பார்...! உங்கள் கணக்குப்படி 4 வயசு வித்தியாசம் என்றாலும் கூட பெண்...10 வருடங்கள் தனியத்தான் வாழ வேண்டும்...அதுவும் இயலாமைக் காலத்தில் இழப்புக்களை சந்தித்து...அதே நேரம் அவருக்கு ஒரு 60 வயதென்றால்...அவர் தன்னை இழப்பிலிருந்தும் சுதாகரித்து சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து வாழ முடியும்..! எது சிறந்தது...!

ஆண்கள் வயது கூடிய பெண்களைத் திருமணம் செய்ய முடியாதென்றல்ல...செய்யலாம்... அங்கு இரண்டு விடயங்கள் பிரதானமானவை...ஒன்று பெண்களின் இனப்பெருக்க தகுதிக்காலம் ஆண்களைவிடக் குறைவு என்பதும் அடுத்தது குடும்பப்பராமரிப்பில் தனிநபர் பராமரிப்பில் இயல்பாகவே பெண்ணின் பங்களிப்பு அதிகம் என்பதும்...கருத்தில் கொள்ளப்பட வேண்டும்...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
Quote:ஆண்கள் வயது கூடிய பெண்களைத் திருமணம் செய்ய முடியாதென்றல்ல...செய்யலாம்... அங்கு இரண்டு விடயங்கள் பிரதானமானவை...ஒன்று பெண்களின் இனப்பெருக்க தகுதிக்காலம் ஆண்களைவிடக் குறைவு என்பதும் அடுத்தது குடும்பப்பராமரிப்பில் தனிநபர் பராமரிப்பில் இயல்பாகவே பெண்ணின் பங்களிப்பு அதிகம் என்பதும்...கருத்தில் கொள்ளப்பட வேண்டும்...!

நாங்கள் இருப்பது 21 ம் நூற்றாண்டில் 18 19 ஆம் நூற்றாண்டில் அல்ல 10 பிள்ளைகள் பெறுவதற்கு
ஆகவே இனப்பெருக்க தகுதிக்காலம் பெரிதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை

குடும்ப பராமரிப்பில் பெண்ணிண் பங்களிப்பு அதிகம் என்று சொல்வதற்கும் இது 18 ம் நூற்றாண்டு ஆணாதிக்க சமுதாயம் அல்ல குடும்ப பராமரிப்பில் ஆண்களும் ஈடுபடும் 21 ம் நூற்றாண்டு ஆனால் எம்மவரில் பலர் இன்னும் 18 19 ம் நூற்றாண்டுபோல் வாழ்வதும் வாழ நினைப்பதும் வேதனைக்குரிய விடயம்

இன்று பிள்ளைகள் பெற்றோரை வைத்து பராமரிப்பதும் குறைவு இந்நிலையில் ஒருவருக்கொருவர் துணையாக இறுதிவரை வாழ பெண் ஆணைவிட வயது கூடியதாக அமைவது பொருத்தமானது அல்லவா?
ஆனால் இது நடக்குமா?

அத்தோடு இத்தலைப்பை ஆரம்பிக்க ஏதுவாக இருந்த தாயப் பெண்ணிண் உள்ளக்குமுறல்களை புலம்பெயர் பெண்களும் ஆண்களும் கருத்திலெடுப்பார்களா? சமுதாய நலனில் அக்கறை இருந்தால் கருத்தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்
ஆனால் மனிதன் சுயநலமுள்ள விலங்கு
Reply
#47
வயது வித்தியாசம் ஆணிலிருந்து பெண்ணுக்கு அதிகம் இடைவெளி இருக்ககூடாது என்பது எனது தாழ்மையான கருத்து-------------மனிசர் சரி மிருகம் சரி பறவை சரி இளமை யிலை தான் அழகுங்க இயற்கையாய் கொடுத்த அழகை அந்த அந்த நேரத்தில் அநுபவிக்கமுடியாமல் எங்களுடைய சமூக காரணிகளால் ஆணை நரை முடி கண்டு மைதானமாய் இருக்கிறவயதில் திருமணம் செய்யவேண்டிய நிலையிலிருப்பதால் அப்படியிருந்தும் அவருக்கு பருவ பெண் கேட்க வைக்குது . கேட்கிற துணிச்சல் இருக்கிறளவுக்கு சாதிக்கிற வீராப்பு இல்லாமையால் திருமணத்தின் பின் பல பிரச்சனைகள் வருகின்றன. அதற்க்கு பின் பெண்ணை குற்றச்சாட்டுவதில் அர்த்தமில்லை.வாழ்வில் காதல் பற்றி கதைப்போர் sex வாழ்வில் சரி வராவிடின் எவ்வளவு உளப்பிறழ்வுகளையும் சமூக பிரச்சனைகளும் உருவாக்கும் என்பதை கவனிக்க தவறுகிறார்கள்
Reply
#48
ஈழத்துளி Wrote:
Quote:ஆண்கள் வயது கூடிய பெண்களைத் திருமணம் செய்ய முடியாதென்றல்ல...செய்யலாம்... அங்கு இரண்டு விடயங்கள் பிரதானமானவை...ஒன்று பெண்களின் இனப்பெருக்க தகுதிக்காலம் ஆண்களைவிடக் குறைவு என்பதும் அடுத்தது குடும்பப்பராமரிப்பில் தனிநபர் பராமரிப்பில் இயல்பாகவே பெண்ணின் பங்களிப்பு அதிகம் என்பதும்...கருத்தில் கொள்ளப்பட வேண்டும்...!

நாங்கள் இருப்பது 21 ம் நூற்றாண்டில் 18 19 ஆம் நூற்றாண்டில் அல்ல 10 பிள்ளைகள் பெறுவதற்கு
ஆகவே இனப்பெருக்க தகுதிக்காலம் பெரிதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை

குடும்ப பராமரிப்பில் பெண்ணிண் பங்களிப்பு அதிகம் என்று சொல்வதற்கும் இது 18 ம் நூற்றாண்டு ஆணாதிக்க சமுதாயம் அல்ல குடும்ப பராமரிப்பில் ஆண்களும் ஈடுபடும் 21 ம் நூற்றாண்டு ஆனால் எம்மவரில் பலர் இன்னும் 18 19 ம் நூற்றாண்டுபோல் வாழ்வதும் வாழ நினைப்பதும் வேதனைக்குரிய விடயம்

இன்று பிள்ளைகள் பெற்றோரை வைத்து பராமரிப்பதும் குறைவு இந்நிலையில் ஒருவருக்கொருவர் துணையாக இறுதிவரை வாழ பெண் ஆணைவிட வயது கூடியதாக அமைவது பொருத்தமானது அல்லவா?
ஆனால் இது நடக்குமா?

அத்தோடு இத்தலைப்பை ஆரம்பிக்க ஏதுவாக இருந்த தாயப் பெண்ணிண் உள்ளக்குமுறல்களை புலம்பெயர் பெண்களும் ஆண்களும் கருத்திலெடுப்பார்களா? சமுதாய நலனில் அக்கறை இருந்தால் கருத்தில் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்
ஆனால் மனிதன் சுயநலமுள்ள விலங்கு

ஈழத்துளி அவர்களே...இது 21 நூற்றாண்டு என்று சொல்லிக் கொண்டிருப்பதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை...சமூகச் சீர்திருத்தம் நோக்கி 19 நூற்றாண்டுப் போராடத் தொடங்கி இன்னும் போராடி முடிக்காத சமூதாயத்தைப் பிரலிபலிப்பவர்கள் நாங்கள்..! உலகம் 19, 20 இல் அனுபவித்ததை 21 இல அசை போட்டுப் பார்க்கும் நேரமிது...மேற்குறிப்பிட்ட இரண்டு ஆய்வுமுடிவுகளும் 19ம் 20ம் நூற்றாண்டின் விளைவுகளை மதிப்பிடும் ஆய்வுகள்...அவை 21 இற்கான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லச் செய்யப்பட்ட ஆய்வுகள்...அது பிற்போக்கான ஆய்வுகள் அல்ல...உங்களை அனைவரையும் விட எப்பவோ நாகரிகத்தையும் சமூக சமத்துவத்தையும் அடைந்துவிட்ட தேசங்களின் வெளிப்பாடுகள் அவை...அதையும் கொஞ்சம் கவனித்தல் நல்லது...! சிலவேளை 19,20 நூற்றாண்டின் மாற்றங்கள் மீண்டும் 18 க்குப் போகத் தூண்டுதோ தெரியவில்லை...அப்படித்தான் ஆய்வுகள் முடிக்கின்றன...!

அப்படி நீங்கள் உறுதியாக 21 நூற்றாண்டில் வாழ வேண்டும் என்று நினைத்தால் திருமணம் அவசியமில்லை... வாடகைக்கு அமர்த்தி ஒரு குழந்தையைக் குளோனிங் மூலம் பெற்றுக் கொண்டு...வாழலாம்...அதற்கும் தடையில்லை...சீதனமும் தேவையில்லை...அதுவும் சாத்தியமே....! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
stalin Wrote:வயது வித்தியாசம் ஆணிலிருந்து பெண்ணுக்கு அதிகம் இடைவெளி இருக்ககூடாது என்பது எனது தாழ்மையான கருத்து-------------மனிசர் சரி மிருகம் சரி பறவை சரி இளமை யிலை தான் அழகுங்க இயற்கையாய் கொடுத்த அழகை அந்த அந்த நேரத்தில் அநுபவிக்கமுடியாமல் எங்களுடைய சமூக காரணிகளால் ஆணை நரை முடி கண்டு மைதானமாய் இருக்கிறவயதில் திருமணம் செய்யவேண்டிய நிலையிலிருப்பதால் அப்படியிருந்தும் அவருக்கு பருவ பெண் கேட்க வைக்குது . கேட்கிற துணிச்சல் இருக்கிறளவுக்கு சாதிக்கிற வீராப்பு இல்லாமையால் திருமணத்தின் பின் பல பிரச்சனைகள் வருகின்றன. அதற்க்கு பின் பெண்ணை குற்றச்சாட்டுவதில் அர்த்தமில்லை.வாழ்வில் காதல் பற்றி கதைப்போர் sex வாழ்வில் சரி வராவிடின் எவ்வளவு உளப்பிறழ்வுகளையும் சமூக பிரச்சனைகளும் உருவாக்கும் என்பதை கவனிக்க தவறுகிறார்கள்

மனம் தான் எல்லாத்துக்கும் காரணம்...அது காதல் என்றால் என்ன... பாலியல் என்றால் என்ன....அதுக்கும் இலக்கங்களால் குறியிடப்படும் வயதுக்கும் என்ன சம்பந்தம்...80 வயசு ஆணும் 60 வயதுப் பெண்ணும் பாலியல் தேவையில் சமநிலையைத்தான் அடைவர்..உடற்கூற்று ரீதியில்...அப்படி இருக்க....80 வயது ஆணும் 80 வயதுப் பெண்ணும் தான் திருமணம் செய்து கடைசிக் காலத்தில் இயலாமையில் அவஸ்தைப்பட்டு அரச செலவில் அரச பராமரிப்பில் வாழ வேண்டுமா..??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
அவர்களின் கல்வித்திட்டமும் 21ம் நூற்றாண்டிற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டவைதான்
சிலர் இன்னும் 19 ம் நூற்றாண்டு சிந்தனைகளோடு இருப்பதற்கு காரணம் சுயநலமே
சமுகச் சீர்திருத்தத்தை எட்ட முடியாமல் இருப்பதற்கு இவர்களே காரணம்

21 ம் நூற்றாண்டிற்கான தீர்வுதான் திருமணத்தின்போது ஆண் பெண்ணைவிட 10 வயது அதிகம் இருக்கவேண்டும் என்பதா?

இந்தத்தீர்வு, அரச செலவில் முதியோரைப் பராமரிக்கும், 1000 பேருக்கு வெறும் 5 - 10 பேரே திருமணம் செய்யுமளவுக்கு திருமணம் செய்யும் வீதம் மிகக்குறைந்ததும் அத்துடன் விவாகரத்து பெறும் வீதம் மிக்ககூடியதுமான ஐரோப்பியர்களுக்கும் அவுஸ்திரேலியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் பொருந்தலாம் விவாகரத்தில் கடைசி இடம் பிடிக்கும் இலங்கைக்கு இது பொருத்தமானது அல்ல
இதோ கடைசிப் 10 நாடுகள்

Divorce rate per 1000 people


1. Sri Lanka 0.15 per 1000 people
2. Brazil 0.26 per 1000 people
3. Italy 0.27 per 1000 people
4. Mexico 0.33 per 1000 people
5. Turkey 0.37 per 1000 people
6. Mongolia 0.37 per 1000 people
7. Chile 0.38 per 1000 people
8. Jamaica 0.38 per 1000 people
9. Cyprus 0.39 per 1000 people
10. El Salvador 0.41 per 1000 people

குளோனிங் பற்றிக் கருத்துக் கூறியிருந்தீர்கள் இது அறியாமையில் கூறப்பட்டது என்று நினைக்கிறேன். நாங்கள் இங்கு எங்கள் நிலை பற்றியே கலந்துரையாடுகிறோம் மேற்குலகம் பற்றி அல்ல.
இலங்கை போன்ற பொருளாதார வளர்ச்சி குன்றிய நாட்டினருக்கு குளோனிங் என்பது சாத்தியமா? குளோனிங் முறைகளை அறியுமளவுக்கு எமக்கு கல்வி அறிவு இருக்கிறதேயன்றி குளோனிங் செய்யுமளவுக்கு வசதி இல்லை

தற்பொழுது தமிழர் தேசத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம், அதிலும் திருமணமுடிக்காதிருக்கும் முதிர் கன்னிகளின் எண்ணிக்கையே அதிகம். இந்நிலையில் ஆண்கள் யாவரும் தம்மைவிட 10 வயது குறைந்த பெண்களை திருமணம் செய்தால் முதிர்கன்னிகளின் நிலைதான் என்ன?

வரலாறு எமது வழிகாட்டி. 19 ம் நூற்றாண்டில் திருமணத்தின்போது ஆணைவிட பெண்ணுக்கு 10 வயது குறைய இருந்திருக்கலாம் அக்காலத்தில் ஆண் பெண் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கிட்டத்தட்ட சமமாகவே இருந்தது.
ஆனால் தற்போதய நிலமையில், தமிழர்தேச வளர்ச்சிக்காகவும் தமிழர் சமுகநலத்திற்காகவும் நாம் சிந்தித்து செயலாற்ற கடமைப் பட்டுள்ளோம்

தமிழர் தேசத்திற்கு பொருத்தமற்ற ஆய்வுகளை ஆதாரங்காட்டி கருத்து எழுதமுதல் தயவு செய்து சிந்திக்கவும்
Reply
#51
தமிழத்தேசம் 21 ம் நூற்றாண்டில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது, ஈழத்தில் கல்வியறிவு 90 வீதத்திற்கும் அதிகம், அவர்களின் கல்வித்திட்டமும் 21ம் நூற்றாண்டிற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டவைதான்
சிலர் இன்னும் 19 ம் நூற்றாண்டு சிந்தனைகளோடு இருப்பதற்கு காரணம் சுயநலமே
சமுகச் சீர்திருத்தத்தை எட்ட முடியாமல் இருப்பதற்கு இவர்களே காரணம்

21 ம் நூற்றாண்டிற்கான தீர்வுதான் திருமணத்தின்போது ஆண் பெண்ணைவிட 10 வயது அதிகம் இருக்கவேண்டும் என்பதா?

இந்தத்தீர்வு, அரச செலவில் முதியோரைப் பராமரிக்கும், 1000 பேருக்கு வெறும் 5 - 10 பேரே திருமணம் செய்யுமளவுக்கு திருமணம் செய்யும் வீதம் மிகக்குறைந்ததும் அத்துடன் விவாகரத்து பெறும் வீதம் மிக்ககூடியதுமான ஐரோப்பியர்களுக்கும் அவுஸ்திரேலியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் பொருந்தலாம் விவாகரத்தில் கடைசி இடம் பிடிக்கும் இலங்கைக்கு இது பொருத்தமானது அல்ல
இதோ கடைசிப் 10 நாடுகள்

Divorce rate per 1000 people


1. Sri Lanka 0.15 per 1000 people
2. Brazil 0.26 per 1000 people
3. Italy 0.27 per 1000 people
4. Mexico 0.33 per 1000 people
5. Turkey 0.37 per 1000 people
6. Mongolia 0.37 per 1000 people
7. Chile 0.38 per 1000 people
8. Jamaica 0.38 per 1000 people
9. Cyprus 0.39 per 1000 people
10. El Salvador 0.41 per 1000 people

குளோனிங் பற்றிக் கருத்துக் கூறியிருந்தீர்கள் இது அறியாமையில் கூறப்பட்டது என்று நினைக்கிறேன். நாங்கள் இங்கு எங்கள் நிலை பற்றியே கலந்துரையாடுகிறோம் மேற்குலகம் பற்றி அல்ல.
இலங்கை போன்ற பொருளாதார வளர்ச்சி குன்றிய நாட்டினருக்கு குளோனிங் என்பது சாத்தியமா? குளோனிங் முறைகளை அறியுமளவுக்கு எமக்கு கல்வி அறிவு இருக்கிறதேயன்றி குளோனிங் செய்யுமளவுக்கு வசதி இல்லை

தற்பொழுது தமிழர் தேசத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம், அதிலும் திருமணமுடிக்காதிருக்கும் முதிர் கன்னிகளின் எண்ணிக்கையே அதிகம். இந்நிலையில் ஆண்கள் யாவரும் தம்மைவிட 10 வயது குறைந்த பெண்களை திருமணம் செய்தால் முதிர்கன்னிகளின் நிலைதான் என்ன?

வரலாறு எமது வழிகாட்டி. 19 ம் நூற்றாண்டில் திருமணத்தின்போது ஆணைவிட பெண்ணுக்கு 10 வயது குறைய இருந்திருக்கலாம் அக்காலத்தில் ஆண் பெண் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கிட்டத்தட்ட சமமாகவே இருந்தது.
ஆனால் தற்போதய நிலமையில், தமிழர்தேச வளர்ச்சிக்காகவும் தமிழர் சமுகநலத்திற்காகவும் நாம் சிந்தித்து செயலாற்ற கடமைப் பட்டுள்ளோம்

தமிழர் தேசத்திற்கு பொருத்தமற்ற ஆய்வுகளை ஆதாரங்காட்டி கருத்து எழுதமுதல் தயவு செய்து சிந்திக்கவும்
Reply
#52
இயற்கையில் ஆண்கள் இளமையான இனப்பெருக்கம் செய்யத்தக்க பெண்ணை நாடுமாறும் பெண்ணோ தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு தரத்தக்க ஆணை நாடுமாறும் அமைக்கப்பட்டுள்ளார்கள். எப்படி பிள்ளை பெறுவது பெண் என்பது இயற்கையாக அமைந்துள்ளதோ, அவ்வாறே அதற்கு அமைவாக ஆண்-பெண் உயிரியலும் உளவியலும் இவ்வாறாக இயற்கையாக அமைந்துள்ளது.

அதே வேளை இன்றைய உலகில் பிள்ளைபெறுவதை பலரும் வாழ்வின் முக்கிய தேவையாக கொள்வதில்லை. ஆகவே இந்த இயற்கையின் போக்கு எல்லோருக்கும் தேவையற்றதும், எல்லோரும் விரும்பி பின்பற்றாத ஒன்றும் ஆகியுள்ளது. இன்று தமக்கு நன்கு பிடித்துக்கொண்ட ஒருவருடன், வயதை கருத்திலெடுக்காது வாழ, பல ஆண்களும், பெண்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் சமுதாய எதிர்பார்ப்புகள், கட்டுப்பாடுகள், எள்ளிநகையாடல்கள் போன்றவற்றை காரணமாக கொண்டு பலரும் செயற்பட வகையின்றி ~~இனியென்ன இப்படியே இருந்துவிட்டு போவோம்~~ என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

ஆகவே மக்கள் மத்தியில் இனப்பெருக்கத்தை மையமாக கொண்ட குடும்ப வாழ்வு பண்பாட்டை அகற்றி, வாழ்க்கைத்துணை குடும்பவாழ்வு பண்பாட்டை ஊக்கப்படுத்த எழுத்தாளர்கள், பாடசாலைகள், கல்விமான்கள், தமிழீழ அரசு ஆகியவை முன்வர வேண்டும். இனப்பெருக்கத்தை மையமாக கொண்ட குடும்பவாழ்வில் இளைய, குழந்தை பெற்று பராமரிக்க தக்க, பெண்ணுக்கு இருக்கும் தேவை அதிகரித்துக் கொண்டே போகும். வாழ்க்கைத்துணையை மையமாக கொண்ட குடும்ப வாழ்வில், வயதும் இளமையும் கருதப்பட வேண்டிய காரணிகள் அல்ல. மாறாக ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு து}ரம் நண்பர்கள் என்பதே அங்கு கருதப்படும் காரணி. இவ்வாறாக நட்பை அடிப்படையாக கொண்ட திருமணங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தப்பட்டு அவற்றிற்கான சந்தர்ப்பங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

Quote:தற்பொழுது தமிழர் தேசத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம், அதிலும் திருமணமுடிக்காதிருக்கும் முதிர் கன்னிகளின் எண்ணிக்கையே அதிகம்.
Reply
#53
21ம் நூற்றாண்டில் ஈழத்தின் வளர்ச்சி என்பது பல துறைகளில் விடயங்களில் சர்வதேச வளர்ச்சியுடன் ஒன்றினைந்தே செல்ல வேண்டும்...அந்த வகையில் வெறும் 90% கையெழுத்து வீதத்தை வைத்துக் கொண்டு ஈழத்தவர்கள் 21ம் நூற்றாண்டுக்கு தயாராகி விட்டார்கள் என்பது தவறு...!

சிறிலங்காவின் பாடத்திட்டம் என்பது பிரித்தானிய பாடத்திட்டத்துக்கு அமைவாகவே எப்போதும்.. இப்போதும் இருக்கின்றது..அதற்கேற்ப.. சுதேசியக் கற்கை நெறிகள் தவிர்ந்த.. மற்றவற்றில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன....! ஆனால் பிரித்தானியாவுக்கு ஒத்த கல்வியல் வளர்ச்சியை...ஏன் ஈட்ட முடியவிலை...??!
காரணம் கற்கைகை நெறிகளுக்கான வளப் பங்கீடு மற்றும் வள வகைகளில் மிகப் பெரிய குறைபாடு அங்குள்ளது..!

ஈழத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 21ம் நூற்றாண்டிலும் மாட்டு வண்டி ஆய்வு செய்கிறது...அது போருக்குப் பின்னான சமூகவியல் ஆய்வொன்றைச் செய்து சர்வதேசப் பார்வைக்கு அனுப்பி உள்ளதா...எங்களுக்குத் தெரிந்து அப்படி ஒன்று அறியக்கிடைக்கவில்லை...!

உங்கள் சமூகத்தின் 21ம் நூற்றாண்டுக்கான சமூகவியல் தேவைகள் என்ன...விவாகத்துக்கான வயதெல்லைகள் என்ன...என்னென்ன காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன...அவை எப்படி எதிர்காலத்தில் மாற்றமடையும்...இந்த விவாகத்துக்கான மாற்றங்கள் தரவல்ல சமூகத்தாக்கம் என்ன...???! இப்படி ஏதாவது...இருக்கா...???!

மேற்குலகத்தினர் 19, 20ம் நூற்றாண்டில் சமூக விளைவுகளை ஆராய்ந்து தந்த ஆய்வறிக்கையின் முடிவுளையே நாம் தந்தோம்...!

நீங்கள் இப்போ 21ம் நூற்றாண்டில் எதைத் தேடுகிறீர்களோ...அதை அன்றே (19,20களில்) அவர்கள் அனுபவித்துக் கண்ட சமூக விளைவுகளின் அடிப்படையில் 21க்கான கொள்கை வகுப்புக்காக அவர்கள் முன்வைக்கின்றார்கள்...அது அவர்களின் தேவை...அது மீள 19 இல்ல 18க்கு போவதாக இருந்தாலும்...அதற்குத் தேவை இருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்...அதற்காக அவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் நாட்டையும் 18 அல்லது 19க்கு கூட்டிச் செல்லவில்லை...! சமூகத்தின் தேவை எதோ அதற்கேற்ப பரிந்துரைகளை வழங்குகிறார்கள்...21ம் நூற்றாண்டென்று...கண்மூடித்தனமான மாற்றங்களை அவர்கள் கோரவில்லை...!

அண்மையில் யாழ் குடாநாடு பற்றிய ஒரு படத்தில் நாங்க பிறக்க முதல் ஓடிய சில ரக்ஷிகள் இன்னும் ஓடுகின்றன...அதே நிலையில்...தான் பல திட்டங்களும் அங்கு இருக்கின்றன...! இதுதான் 21ம் நூற்றாண்டில் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஈழத்தவர் வளர்ச்சியா...?! குளோனிங் என்பது ஈழத்தவரை இப்போதும் நாடக் கூடாத ஒன்றல்ல...அது மேற்குலகில் அறிமுகமாகி 20 வருடங்களுக்கும் மேல் கடந்துவிட்டது...ஆனால் ஈழத்தில் இன்னும் அதற்கான வாய்ப்பு வளம் இல்லை என்றால்...(நாங்கள் நினைக்கின்றோம்...பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் கொழுப்புப் பல்கலைக்கழகம் உயிரியல் தொழில்நுட்ப ஆய்வுகளைச் செய்கின்றன என்று,,,!) நீங்கள் எப்படி 21ம் நூற்றாண்டில் சர்வதேச வளர்ச்சியோடு போட்டி போடப் போகிறீர்கள்...???! குளோனிங் வெறும் பிள்ளைப் பெறுதல் மட்டுமல்ல...மலிந்த விலையில் ஊட்டமுள்ள உணவுகளைப் பெறவும் பயன்படுத்தப்பட்ட முடியும்..! இலங்கையில் அண்மையில் பரிசோதனைக் குழாய்க் குழந்தை பிறப்பிக்கப்பட்டது...இதை அண்டை நாடான இந்தியா எப்பவே செய்துவிட்டது...மேற்குலகம் தான் உங்கள் போக்குக்கு உகந்ததல்ல என்று கருதின் இந்தியர்கள் சீனர்கள் ஜப்பானியர்களோடு சேர்ந்து ஏன் இப்படியான துறைகளில் நீங்க வளர்ச்சியை ஊக்கிவிக்கவில்லை....??! ஒரு துறையை புறந்தள்ளி நீங்கள் நிச்சயம் 21ம் நூற்றாண்டில் சர்வதேச சமூகத்துடன் போட்டி போட முடியாது...! தேவையான சமூக வள மாற்றங்களை நீங்கள் பெறவில்லையோ கடந்த காலங்கள் போல 21ம் நூற்றாண்டில் வளர்ச்சி என்பதும் வெறும் கனவாகவே இருக்கும்...!

இலங்கையில் குடும்ப, அரச பராமரிப்பில்லாமல் பிச்சை எடுக்கும் முதியவர்கள் தொகை என்ன...???! அதையும் தயவு செய்து குறிப்பிடுங்கள் மற்றைய நாடுகளோடு சேர்த்து...! இப்போ அந்த முதியவரில் ஒருவருக்கு உழைக்கும் ஆற்றல் இருக்குமாயின்...அவரும் அவர் சார்ந்த துணையும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை இருக்குமா..???! மேற்குலகம்....கடந்த காலமாற்றத்தின் விளைவுகள் தொடர்பில் சிந்தித்து மாற்றங்களைக் கோருகிறது...நீங்கள் அதை பழமை வாதம் எங்கிறீர்கள்...இதில் எது அறியாமை... இரண்டு இடங்களிலும் நிகழப்போகும் எதிர்கால சமூக வளர்ச்சி என்பது அதை உங்களுக்குப் போதிக்கும்...!

அப்போ...உங்களில் பலர் மேற்குலகில் சுகம் தேடிக் கொண்டிருப்பீர்கள்...21ம் நூற்றாண்டில் புரட்சி கதைத்தப்படி...அப்போதும் ஈழம்...மீள 19 இல்ல 18 கிடக்கும்...அப்பதானே உங்களை பெரியவர்களாக அங்கு காட்டிக் கொள்ள முடியும்...! இதைத்தான் தமிழர்கள் காலம் காலமாகச் செய்தும் வருகின்றனர்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
Quote:இன்று தமக்கு நன்கு பிடித்துக்கொண்ட ஒருவருடன், வயதை கருத்திலெடுக்காது வாழ, பல ஆண்களும், பெண்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் சமுதாய எதிர்பார்ப்புகள், கட்டுப்பாடுகள், எள்ளிநகையாடல்கள் போன்றவற்றை காரணமாக கொண்டு பலரும் செயற்பட வகையின்றி ~~இனியென்ன இப்படியே இருந்துவிட்டு போவோம்~~ என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

ஆம் தற்கால தமிழ் இளைஞர்கள் சீதனம் சாதி மத பேதங்களுக்கு அப்பால் தமக்குப் பிடித்த துணையுடன் வாழத் தயாராக இருக்கிறார்கள் ஆனால் 19 ம் நூற்றாண்டு சிந்தனையுடன் இருக்கும் சிலரே இதை எதிர்க்கிறார்கள்

<b>சமுதாய எதிர்பார்ப்புகள் எள்ளிநகையாடல்களை கருத்திற்கொண்டால் ஆராக்கியமான மாற்றங்களை கொண்டு வருவது கடினம் </b>

புதிய மாற்றங்களை சமுதாயம் (என நாங்கள் கற்பனையில் உருவகித்திருக்கும் சிலர்) எள்ளிநகையாடும் ஏனெனில் இவர்கள் சாதி மத வேறுபாட்டினால் நன்மையடைபவர்கள்.

தற்கால தமிழ்த்தேசம் திருமண விடயத்தில் எதிர்நோக்கும் பிரச்சினை முதிர்கன்னிகளின் பிரச்சினை தாயகத்தில் 90 வீதத்திற்கும் அதிகமானவர்கள் திருமணம் செய்கிறார்கள் 1.5 வீதமானவர்களே விவாகரத்துப் பெறுகிறார்கள்
இப்பிரச்சினை இல்லாத, எமது சூழல் காரணிகளுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழலையும் பிரச்சினைகளையும் கொண்ட மேற்குலகம் செய்த ஆய்வு எமக்கு பொருந்தாது என்பதற்கு எம்மவர்கள் விடும் தவறுகளையும் பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி அந்த ஆய்வை ஏற்றுககொள்ள வேண்டும் என்பது ஏற்கமுடியாதது

தற்பொழுது தமிழ்த்தேசம் எதிர்நோக்கும் பிரச்சினையைப் பற்றி ஆராய்வதை விடுத்து எங்கள் கலவித்திட்டத்தில் என்ன குறைபாடு, பிச்சைக்காரர்கள் பற்றியோ அல்லது மோட்டார் வண்டி பற்றி ஆராய்வது பொருத்தமானது அல்ல
பொருளாதாரத்தடை யுத்தம் போன்ற பல காரணிகளுக்கு மத்தியில் தமிழத்தேசம் அடைந்து வரும் வளர்ச்சியை வெறுமனே யாழ் குடாநாட்டை மட்டும் கருத்திற்கொண்டு விமர்சிப்பது நகைப்பிற்குரிய விடயம்

யாழ்குடா முழுமையாக தமிழ்த்தேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை அங்கு வெளிநாட்டு புலனாய்வாளர்களும் இலங்கை அரசின் தீய சக்திகளுமே மக்களை தீய வழியில் இட்டுச் செல்கிறார்கள்.

குளோனிங் பற்றி அறியாமையில்தான் எழுதப்பட்டது என நினைத்தேன், ஆனால் அது விதண்டாவதத்திற்காகத்தான் எழுதப்பட்டது என்று இப்பொழுது புரிகிறது. குளோனிங்கும் தமிழ்த்தேசமும் பற்றிய கருத்துக்களை பொருத்தமான இடத்தில் தருகிறேன்

பரிசோதனைக் குழாய் குழந்தையை வசதி படைத்த இயற்கையாக குழந்தை பெற முடியாத தம்பதிகள் பெற்றுக்கொள்ளலாம் ஆனால் இதையே தமிழத்தேசத்திற்கு ஒரு தீர்வு என்பது எவ்வகையில் பொருந்தும்

தமிழ்த்தேசத்தில் குறைபாடுகள் இல்லை என்று கூறவில்லை தமிழ்த்தேச மக்களால் எவ்வாறு இப்பிரச்சினையை கையாளமுடியும், அவர்களின் இயலுமைக்குட்பட்டு எவ்வாறு தீர்க்கமுடியும் என்பதே ஆராயப்படவேண்டிய விடயம் :!:

சகோதரி அஸ்வினி நீங்கள் உங்கள் கருத்தில் தெளிவாக இருப்பதும் உங்கள் கருத்தை நிலையாக முன்வைப்பதில் தெளிவாகவும் இருக்கும் பட்சத்தில் இவ்வாறு கோபத்துடன் கருத்து எழுதவேண்டிய அவசியம் இல்லையே

இனிமேல் பொருத்தமற்ற கருத்துகளுக்கும் அர்த்தமற்ற விதண்டதவாதத்திற்கும் பதிலளிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் நானும் தவிர்த்துக்கொள்கிறேன்
Reply
#55
நிசம் ஒன்று - நிழல் இரண்டு
அஸ்வினிக்கு இது புரியாதோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Reply
#56
வணக்கம் இளைஞன் கன காலத்துப்பிறகு வந்திருக்கிறீர்கள்....வந்தாலும் வந்தீங்கள் இளமை பொங்க வந்திருக்கிறீர்கள்.......எத்தனை அழகு கொட்டி கிடக்குது........................ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#57
ஓமோம் நீங்கள் எல்லாரும் நல்லாத்தான் கருத்து சொல்லுறியள். சீதனம் ஒருதரும் வாங்காமல் விட்டால் கொஞ்ச நாளையாலை இன்னொரு விவாதம் செய்யவேண்டி வரும்.
யாழ்ப்பாணத்திலை இருந்து ஒரு இளைஞன் தினக்குரலுக்கு எழுதுவான் .சிறியவேலை செய்கின்ற எங்களை பெண்கள் திருமணம் செய்ய சம்மதிக்கின்றார்கள் .இல்லை தயவு செய்து எங்களையும் திருமணம் செய்யுங்கள் என்று. பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணம் இருக்கும்வரையும் சீதனம் வேலைகளில் ஏற்றத்தாழ்வு பார்த்தல் என்பன இருக்கத்தான் செய்யும்.. இங்கு விவாதிப்பவர்கள் செல்லுங்கள் எந்தப்பெண்ணாவது ஒரு குறைந்த வேலை செய்பவனை திருமணம் செய்ய சம்மதிப்பாளா?
அல்லது பெண்ணின் பெற்றோர்கள்தான் சம்மதிப்பார்களா?
வெளிநாடுகளில் வசிக்கின்ற எங்களையும் ஒரு வைத்தியரையும் காட்டி யாரை திருமணம் செய்கின்றீர்கள் என்று கேட்டால் 100 வீதம் வைத்தியர்தான் தெரிவு செய்யப்படுவார். எங்கள் சமூக அமைப்பு மாறும் வரையும் சீதனம் இருக்கட்டும். எங்களவர்களின் மனதிலுள்ள ஏற்றத்தாழ்வுகள்(வேலைகளில்)முதலில் மாறட்டும் அதன் பிறகு சீதனம் இல்லாமல் போகட்டும்.
Reply
#58
kakaivanniyan Wrote:ஓமோம் நீங்கள் எல்லாரும் நல்லாத்தான் கருத்து சொல்லுறியள். சீதனம் ஒருதரும் வாங்காமல் விட்டால் கொஞ்ச நாளையாலை இன்னொரு விவாதம் செய்யவேண்டி வரும்.
யாழ்ப்பாணத்திலை இருந்து ஒரு இளைஞன் தினக்குரலுக்கு எழுதுவான் .சிறியவேலை செய்கின்ற எங்களை பெண்கள் திருமணம் செய்ய சம்மதிக்கின்றார்கள் .இல்லை தயவு செய்து எங்களையும் திருமணம் செய்யுங்கள் என்று. பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணம் இருக்கும்வரையும் சீதனம் வேலைகளில் ஏற்றத்தாழ்வு பார்த்தல் என்பன இருக்கத்தான் செய்யும்.. இங்கு விவாதிப்பவர்கள் செல்லுங்கள் எந்தப்பெண்ணாவது ஒரு குறைந்த வேலை செய்பவனை திருமணம் செய்ய சம்மதிப்பாளா?
அல்லது பெண்ணின் பெற்றோர்கள்தான் சம்மதிப்பார்களா?
வெளிநாடுகளில் வசிக்கின்ற எங்களையும் ஒரு வைத்தியரையும் காட்டி யாரை திருமணம் செய்கின்றீர்கள் என்று கேட்டால் 100 வீதம் வைத்தியர்தான் தெரிவு செய்யப்படுவார். எங்கள் சமூக அமைப்பு மாறும் வரையும் சீதனம் இருக்கட்டும். எங்களவர்களின் மனதிலுள்ள ஏற்றத்தாழ்வுகள்(வேலைகளில்)முதலில் மாறட்டும் அதன் பிறகு சீதனம் இல்லாமல் போகட்டும்.

என்ன காக்கை இதற்க்கும் சீதனத்துக்கும் என்ன சம்பந்தம்? அப்படியாயில் சிறிய வேலை செய்பவன் சீதனம் வேண்டி பெரிய வேலை தேடச் சொல்கின்றீர்களா? ஒரு குடும்பத்தை கொண்டு நடாத்த கூடியளவுக்கு உழைப்பவனை எந்த பெண்ணும் நிராகரிக்க மாட்டாள்... யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பலரின் கவலை தாம் எவ்வளவு படித்தும் எந்த பெண்ணும் தம்மை ஏற்ப்பதில்லை ஆனால் வெளி நாடு என்றவுடன் தலையாட்டுகிறாள் என்று? இதற்க்கு என்ன காரணம்? நீங்கள் நாங்கள் காட்டும் எடுவை அதை வெளிநாட்டில் இருப்பவர்கள் முதலில் நிறுத்துங்கள்... சமையல் வேலை செய்யும் ஒருவன் தன்னை திருமணம் செய்ய வருபவளிடம் நான் அந்த உணவகத்தின் மேற்பார்வையாளன் எனக்கு கீழ் தான் எல்லாம் என்றால்... போச்சு அந்த பெண்னும் உண்மை அது என்று நினைத்து வெளி நாடு வந்தவுடன் அவன் பட்ட கடனை தானும் சேர்ந்து கட்ட வேண்டிய நிலை இருக்கிறது.... பெண்கள் பதவியையோ பட்டத்தையோ பார்த்து திருமணம் செய்யவும் இல்லை மாப்பிள்ளை தேடவும் இல்லை ஆனால் ஆண்கள் என்ன செய்கிறார்கள்? புகலிடத்தில் சிதனம் என்ற பதம் குறைவு என்று கதைக்கிறீர்கள் அதற்க்கு காரணம் என்ன என்று கேட்டால்... சீதனம் வேண்டினால் பெண் வீட்டில் இருந்து பல அழுத்தங்கள் வருமாம்.... அதனால் வேண்டுவதில்லையாம்.... அத்தோடு இங்கு பெண்கள் திருமணம் ஆகுமுன் உழைக்கும் பணம் அவர்களது கணக்கில் வைப்பகங்களில் இருப்பதால் திருமணம் ஆனா பின் அந்த பணமும் தமக்குரியது என்கிறார்கள் இதனிலும் பார்க்க இவர்கள் சீதனத்தை வேண்டியிருக்கலாம்....

என்னைப் பொறுத்தவரை சீதனம் வேண்டுபவனும்...
தன்னை பணத்திற்காக விற்பவனும் ஒன்று.......

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
<b>வரதட்சணை கொடுக்காததால் மணமேடையில், திருமணத்தை நிறுத்திய மணமகன்: மணமகள் கண்ணீர் </b>

திருவண்ணாமலை மாவட் டம் போளூர் அருகே உள்ள நரிக் குன்று கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக்குழந்தை (வயது 50). இவரது மகன் மாதவன் (வயது 27). பெங்களூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

அதே தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் வயலட் ராணி (25). பெங்களூர் காடு கொண்டன ஹள்ளியில் உள்ள தன்னலக்காடு பகுதியை சேர்ந்தவர்.

ஒரே இடத்தில் பணி புரிந்ததால் மாதவனுக்கும் வயலட்ராணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடை வில் இது காதலாக மாறியது. இருவரும் கடந்த 4 வருடங் களாக காதலித்து வந்தனர்.

இதுபற்றி அறிந்த வயலட் ராணியின் பெற்றோர் மகளின் விருப்பத்துக்கு ஏற்ப அவருக்கு மாதவனையே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மாதவனின் பெற்றோருடன் பேசி திருமணம் நிச்சயித்தனர்.

கடந்த மாதம் 17-ந் தேதி நரிக்குன்று கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் மாதவன்-வயலட்ராணி திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வயலட்ராணி தனது பெற்றோர் மற்றும் உறவினர் களுடன் முதல் நாளே நரிக்குன்று கிராமத்துக்கு வந்தார்.

மறுநாள் காலையில் மணப்பெண் அலங்காரத்தில் ஆயிரம் கனவுகளுடன் அவர் மாதவனை கைப்பிடிக்க மணமேடையில் காத்திருந்தார்.

முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மாப்பிள்ளை மாதவன் கோபத்துடன் மணமேடைக்கு வந்து தனக்கு 15 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சணையாக இப்போதே கொடுத்தால் தான் வயலட்ராணியின் கழுத்தில் தாலி கட்டுவேன். இல்லா விட்டால் இந்த திருமணம் நடக்காது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இதனால் மணமகள் வயலட் ராணி உள்பட திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கல்யாணம் நடக்காததால் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

தனது திருமணம் பாதியில் நின்றதால் வேதனை அடைந்த வயலட்ராணி இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாதவன், அவரது தந்தை சின்னக்குழந்தை, தாய் புஷ்பா மற்றும் சகோதரர் முத்து ஆகிய 4 பேர் மீதும் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னக் குழந்தை, புஷ்பாவை கைது செய்தனர். மாதவன், முத்துவை தேடிவருகின்றனர்.
----------
Reply
#60
வாழ்க :twisted:
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)