Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
கண்ணதாசன் மற்றவர்களை குறைகூறவில்லை. தன் நடைபிழையென்றாலும் தான் செய்தசெயல்கள்தவறென்றாலும் மற்றவர்களை வாரிதிபோல் குறைகூறி நான் கேள்விப்பட்டதில்லை. அதுததான் அவரிற்கு அழகு.
வாரிதி, வசப்படாத இலக்கயித்தை வடமாக்கிக்கொண்டு இன்று அகம்பாவம் அதிகமாகி மற்றவர்களின் குறைகளை கூர்ந்து அதை வெளிச்சமாக்க முனைகின்றார். அதுதான் வேதனைக்குரியது. மற்றும்படி அவருடைய பேச்சுத்திறமை என்னைக்கவர்ந்து ஓன்று
[b] ?
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
எனக்கும் வாரிதியைப் அவ்வளவாகப் பிடிக்காதுதான்...ஆனால் ஒரு கருத்தை யார் சொன்னார் என்பதை பார்க்கமுதல் என்ன சொன்னார் எனப் பாருங்கள்...
நாம் எல்லோரும் சினிமா பார்க்கிறோம்...அதில வரும் நற்கருத்துக்களை உள்ளெடுத்தல் நல்லது..அதைவிடுத்து சினிமாக்காரரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்தால் சினிமாவே பார்க்கமாட்டோம்.....
கம்பவாரிதி ஒன்றும் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படவில்லை...தான் கண்ட பெற்ற அனுபவங்களைத்தான் சொல்லியிருக்கிறார்...அது கம்பவாரிதியாயிருந்தாலென்ன..கந்தசாமியாக இருந்தாலென்ன...
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வாரிதியுடன் ஓப்பிடும்போது எனக்குத்தெரிந்த ஓரு பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.வினாயகமூர்த்தி அவர்கள் ஒரு நல்ல பேச்சாளார். சைவம் பற்றியும் இந்;துமதம் பற்றியும் அவர் பேச்செடுத்தால் வார்த்தைகள் எங்கிருந்து வந்துவிழுகின்றன என்று எண்ணத்தோன்றும். ஆனாலும் கம்பவாரிதிபோல் அவரிற்கு நக்கல்கள் நையாண்டிகள் வார்த்தை வழுக்கல்கள் இட்டுப்பேசத்தெரியாது. அவருடைய பேச்சின் ஒவ்வொரு சொல்லிலும் பல்லாயிரக்கணக்கான அர்தங்கள் பொதிந்திருக்கும். பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளர் எனினும் தமிழ் அவரிடம் புகுந்துவிளையாடும். பல ஆலயங்களில் பத்துநாட்கள் நடைபெறும் திருவிழாவில் பத்துநாட்களும் அந்த பேராசிரியர் கதாப்பிரசங்கம் செய்தாலும் ஒரு நாள் கம்பவாரிதி வரும்போது வந்துகுவியும் மக்கள்வெள்ளம்போல் அமைவதில்லை. ஏன் என்று இன்றுவரை விடைதெரியவில்லை. தனது பேச்சுத்தன்மையைவிட பெண்களை கவர்வதற்கு அந்த வாரிதி வார்த்தைகளை வளைக்கின்றார். பேராசிரியரோ மக்கள் மத்தியில் கருத்துக்களை பரவமுயல்கின்றார் எப்போதுமே நாம் சிலவற்றை விலக்கிவைத்துக்கொள்வோம். அந்தவகையில் இதுவும் ஒன்றோ ?
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்போ வார்த்தையை வளைத்தால் பெண்கள் வளைவார்களோ...பரணி....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கண்ணதாசன் எப்படி மற்றவர்களைக் குறை கூற முடியும்...அவருடைய விடயம் தானே சந்தி சிரிச்ச விடயமாச்சே....! அப்படி அவர் ஏதாவது சொன்னால் இன்று 'ஜெ'யா அம்மாவிற்கு விழுவது போலத்தான் விழுந்திருக்கும்....! ஆனால் கருணாநிதி எப்படித் தப்பினார்.....அவருடைய தனிப்பட்ட வாழ்வியலும் அவ்வளவு நல்லதில்லையாமே....?! ஓ அதுதான்'ஜெ'யா அம்மா பற்றி தனிப்பட்ட ரீதியில் மூச்சும் விடாமல் இருக்கிறவர் போல...எல்லாம் சுயத்தைப் பாதுகாக்கும் திட்டம் தான்...!
அதுசரி வாரிதியைப்பற்றிய தனிப்பட்ட ஏதாவது விடயம் இருக்கோ என்னவோ...எல்லாரும் எடுத்து எறியிறதப்பாத்தா அப்படித்தான் கிடக்கு...அதுசரி காவிகளை நம்பிறதும் கொஞ்சம் கஸ்டம் தான்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
கண்ணதாசன் செய்யாததை மற்றவர்கள் செய்கின்றார்கள். அவர்கள் செய்வதில் ஒரு பங்குதான் அவர்செய்தார். குடித்தார் கும்மாளமிட்டார். பெண்கள் சகவாசம். ஆனாலும் தமிழிற்காய் தன்னை வளர்த்தார். தான் குடித்தேன் என்று ஓப்புக்கொண்டவர். ஒரு கோப்பையிலே என்குடியிருக்கும் என்று..பெண்பைததியம் என்பதையும் ஓப்புக்கொண்டவர். சில வேளைகளில் பிரபலங்கள் செய்யும் சிறுவிடயங்களே பிரபலம் ஆகிவிடுகின்றன.
வாரிதியார் எப்படியோ யாம் அறிந்ததை இங்கு பகரவிரும்பவில்லை
[b] ?
Posts: 37
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
சபாஸ் வம்பளக்காமல் இப்பத்தான் கொஞ்சம் கருத்துக்களோட களமாடத் தொடங்குறம்போலகிடக்கு வாழ்த்துக்கள்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஐயா அம்பலத்தாரே அப்பப்ப வம்பும்வரத்தான் வேணும் அப்பதான் களம் சுவாரசியமாக இருக்கும்...எப்பவும் சீரியசா இருந்தா...உம்மெண்ட மாதிரி இருக்காது...?!
அதுசரி தாங்கள் என்ன கனநாளைக்குப் பிறகு இங்கால கால் வைத்திருக்கிறியள்...ஏதாவது நாயை கீயை தேடிக்கொண்டு வந்தனியளோ....?!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 37
Threads: 4
Joined: Sep 2003
Reputation:
0
குருவிகள் கொத்துவதும் அவற்றின் ஆனந்தகீதமும் வலியல்ல ஆனந்தமே. நீங்க உங்க பாணியில கொத்திக்கொண்டும் கூவிக்கொண்டும் இருங்கோ. அதுவும் களத்திற்கு அழகே.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பாத்தியளே அனுபவத்தால அம்பலத்தார் வெண்டுட்டார்...உதுதான் சொல்லுறது அனுபவத்தை சரியாப் பாவிச்சா எதையும் தாங்குமிதயத்தை பெறலாம் என்று. நன்றி அம்பலத்தார்...நல்ல வழிகாட்டி...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
இது எனக்கு மின்னஞ்சலில் வந்திருந்தது. - மோகன்
கம்பவாரிதி ஐயாவுக்கு !
கடந்த 20 வருடப் போராட்டத்தில்
கதியிழந்து உறவிழந்து பொருளிழந்து வலுவிழந்து
தட்டுத் தடுமாறி நாம் தலைதெறித்தோடிய போது
"கலம்பு"வில் கஸ்டமின்றி கம்பன் கவிபாடிய நீர்
நாட்டுக்காய் நல்லதாய் நாலு செய்தீரா ஐயா !
வாழைப்பழத்தை ஒருக்கா கழட்டித் தாங்கோ - என
எங்க குழந்தை தமிழில் தானே கேட்டது
உங்கட "கலம்பு"வில ஓட்டைச் சிங்கலத்தில
நீங்க வசதி வாய்ப்போட வலம் வந்ததை
வசதியா மறந்திட்டியள் - போங்க !
உங்க "கலம்பு"வில ஆமியின்ர காவலரணில
உங்கட கம்பன் தமிழ் பேச வாய்ப்புக் கிடைக்கயில்ல
ஆதங்கத்தோட அவசரமா அத்தனை பனிப்புலத்திலும்
கம்பன் தமிழைக் கொட்டித் தீர்த்தீங்க - அப்ப
மகிழ்ந்தோம் நாங்கள்
தாரை தம்பட்டயோட மாலையும் போட்டு
கேடயமும் தந்து தங்கட தமிழைத் தூக்கி வச்சம் - ஆனால்
இப்படி அங்கபோய் எங்களக் கவிழ்ப்பீங்க - எண்டு
நாங்க கனவிலும் நினைக்கவில்லை
உங்க உறவுகளும் சமைச்சுப் போட்டாங்க - போகட்டும்.
உங்க தமிழ் விரும்பிகளும் இங்க நல்லா
புடைச்சுப் போட்டாங்களே - மறந்திட்டியள் போல !
கனடாவில கோயில் கோயிலாப் போய்
தமிழர் புடைசூழ கம்பன் கவி பாடிவிட்டு
போன வேகத்தில கனடாக் கோயிலைக் கடிச்சா
கம்பனுக்கே பொறுக்குமா - கம்பவாரிதியாரே !!
சின்னப்பிள்ளை வாழைப்பழத்தைக்
கழட்டித் தரச் சொன்னதற்காய்
ஊரே சிரித்ததாய் அப்பட்டமாய்ப் புழுகி - நாம்
உம்மைப் பார்த்துச் சிரிக்க வைத்திருக்கிறீர்
ஏன் தெரியுமா ?
உம்மட "கலம்பு"வில
தலையாட்டிகளும்
அரைவேக்காடுகளும்
டக்ளசுகளும்
கதிருகாமருகளும்
இன்னும் பல திரிசங்குத் தமிழ்க் கேவலங்களும்
தமிழ் மண்ணின் மானம் காக்க மறந்தபோது
உம்மட கம்பன் தமிழில
கனதியா ஏதும் கேட்டிருந்தீரென்றால்
இப்ப உம்மட கதையைக் கேட்டு
நம்ம ஊர் சிரித்திருக்கும் மகிழ்வோட !
ஆனா வாரிதியாரே !
நீர் தான் அப்போது ஒழித்திருந்து
கம்பனின் கட்டுத்தறிக்கு தமிழ்
சொல்லிக்கொடுத்தனீர் !! - இப்ப
பிறநாட்டில் பிறமொழியில் பயின்றாலும்
உம்ம நாட்டில் உம்ம மொழியில்
சுத்தமாய்ப் பேசவில்லை என்று
முறுமுறுக்கிறீர் நீர்
இதுவரை எங்கே போனீர் வாரிதியாரே !
டக்ளசு கொஞ்சமாவது தமிழ் காக்க
நீர் வகுப்பு நடத்தியிருக்கலாம்...
நாம இங்கிருந்து என்ன கொண்டுவராவிட்டாலும்
இங்கிருந்து அப்பப்ப கொடுத்த உதவியில
உம்ம தமிழ் காப்பாத்தப்பட்டத
இத்தனை கெதியா நீர் மறப்பீரென்று
சத்தியமா நாம நினைக்கவில்லைப் பாரும் !!
கனடாவில நீர் கம்பன் தமிழ் பேசியபோது
உமக்கு எங்கட தமிழ் மகள் (சின்னவள்)
மாலை போட நீர் புளகாங்கிதமாய் தலை நீட்டியது
நன்றி சொன்னது அந்தச் சின்னஞ்சிறுசைப்
புழுகியது கொஞ்சியது
கனடாவில் தமிழ் மணப்பதாய்
விஞ்சிப் பொய் சொன்னது
எல்லாத்தையும் இத்தனை இலகுவாய்
நீர் மறப்பதற்கு "கலம்பு"வில என்ன
கஞ்சாவா குடிச்சீர் சொல்லும் !
பிறநாட்டுத் தமிழரின்
பிறமுதுகில் குத்தி என்ன பயன் கண்டீர்?
சோரம் போன "கலம்பு"த் தமிங்கிலருக்கு முன்னே
கனடியத் தமிழ் மழலைகள் ஒன்றும்
சோரம் போகவில்லைப் பாரும் - நீர்
உம்ம கொழும்புத் தமிழரிட்டை
வாழைப்பழத்தைக் கொடுத்துப் பாரும்
அப்ப புரியும் - தமிழின் விளக்கம் !
"ஓப்பன் மை வாலைப்பலம்" என்ற உங்க
கொழும்புத் தமிழ விட
எங்கட "வாழைப்பழத்தைக் கழட்டித் தாங்கோ"
பெருங் குறையாத் தெரியவில்லை கம்பரே !!
அது போகட்டும்
இன்னலுறாத தமிழரெல்லாம்
பிறநாடு போனதாய் அழுகிறீர்
நீர் ஏன் போனீராம் சிங்கள நாடு
ஊரில தமிழ் படிக்க எத்தனை குழந்தைகள்
அழுதது நீர் "கலம்பு"விலயும்
பாரதத்திலயும் கம்பன் கவிபாடி
காலத்தை சுகமா ஓட்டிப்போட்டியள்
இப்ப
"கிடைச்ச விடிவுக்கு
பனிப்புலத் தமிழரும் காரணம்"
என்று தலைவரே சொல்ல
நீர் "கலம்பு"விலிருந்து - என்ன
கத்தரிக்காய்க் கட்டுரை எழுதிறீர்
உம்ம தமிழ்மண்ணில தமிழுக்காய் அழுவிற
ரமில் குலந்தைகளுக்கு நீர்
எப்ப தமிழ் சொல்லிக் கொடுக்கப்
போகப் போறீர்
அறிய ஆவலாயிருக்கிறோம்
கண்டீரே !!
பணம் பத்தும் செய்யும் - என்ற
உங்க கம்பராமாயணம் புரியுதுங்கோ - ஆனால்
எங்க பிறநாட்டுப் பணம் - மிக அதிகமா
உங்களுக்குத்தான் பத்தும் செய்ததை
இத்தனை கெதியாய் மறந்திட்டியள் பாருங்கோ !!
நம்ம பொடியன்கள் மறக்கவில்லை - மகிழ்ச்சி.
நாம நம்மட பிறநாட்டுப் பணத்தை
நம்மட சொந்தங்களுக்கு பத்தும் செய்ய
பத்திரமாய் அனுப்பி விட்டு
பத்து மணிவரை பீங்கான் கழுவி அடுக்குவது
உமக்குப் புரிய நியாயமில்லை - நீர்
"கலம்பு"வில் கம்பனின் மொத்தப் புத்தகம்
வாசித்த களைப்பில் தூங்கியிருப்பீர் !
ஆனால்
கனடா வந்து பார்த்ததை
நம்ம இளசுகள் மூன்று வேலையில் முக்குவதை
மற்றயதுகள் படித்துக்கொண்டு பாத்திரம் கழுவியதை
சின்னன்கள் கட்டாயமாய்
நாட்டியமும் நடனமும் தமிழ் வகுப்பும்
போய் வருவதை
கோயிலில் கூட்டமாய்த் தமிழ் பேசியதை
மண்டபம் நிறைத்து உம்ம தமிழ் சுவைத்ததை
தமிழ் பட்டப்படிப்பு நடப்பதை
இன்னும் எத்தனையோ உண்மைகளை
எப்படியையா சுத்தமாய் மறைத்தீர் - நீர்
"எலக்ஷன்" கேட்கலாம் அத்தனை பொய்யர் !!
பனிப்புலத்தில் முதல்தர நாட்டில் வாழ்ந்தாலும்
கடைக் கோப்பியோடு
இருவேலை செய்து
இருக்கும் என் குழந்தையின் தமிழ் வகுப்புக்குக்
காசு கட்டி மீதியை மொத்தமாய்
அங்குள்ள உறவுகளுக்கு அனுப்பியதை
இன்னும் அனுப்புவதை
நீர் பாத்திருக்க மாட்டீர் - பாவம்
"கலம்பு"வில் தூங்கியெழும்பும்
"கலம்புத் தமிலர் நீர்" - பாவம்.
எங்க தங்கத் தமிழ் மண்ணுக்கு
சுவிசும் கனடாவும் இன்னும் பல நாடுகளும்
கோடியாய்ப் பல வருடம் கொடுத்தபோது
நீர் எத்தனை இலட்சம் வாங்கிக்கொண்டு
இந்தியாவில் தமிழ் கொடுத்தீர் என்பதை
உங்கட "குஞ்சாச்சி" சொன்னா - ஆனா
நான் நம்பேல்ல - நீர் செய்வீரா !!
"கலம்பு"விலும் கனடாவிலும்
கனக்க மேடைகளிலயும் - உம்மட
கம்பன் தமிழுக்கு நல்ல வியாபாரம் - அதனால
உம்ம பாடும் பரவாயில்ல - போரும் !!!
இங்கயிருந்து நாம ஆடினதை - நீர்
பாத்தீரோ இல்லையோ - ஆனா
உம்மட "கலம்பு" ஆட்டத்தை
நாம பல வருடம் கண்கூடாப் பாத்தம்
சொல்லக் கூடாது
சூப்பர் ஆட்டமையா
அடிக்கடி - நீர்
பாரதத்தில அடிச்ச சிக்சரில
நம்ம தமிழ்மண்ணைச்
சுத்தமாய் வித்துப் போட்டீர் போம் !!
அது சரி
உமக்கு நன்றாய்க் கணக்கு வருகிறது.
வாரும் வாரிதியாரே !
நம்ம ஊரில
ஒருநாளும் நீர் வீதியில போகேல்லப் போல !!
அதுசரி நீர் "கலம்பு"த் தமிலர் என்றதை
நான் அடிக்கடி மறந்து போறன் பாரும்.
ஊரில போய் ஒரு வீதியில நடந்து
எத்தனை கோயிலென்று எண்ணிப்போட்டு
இங்க வந்து எண்ணிப் பாரும்.
கூட்டல் கழித்தல் சரியாப் போட்டீரென்றா
பனிப்புலம் பிச்சை வாங்க வேணும் கண்டீரே !
அங்க கட்டாத கோயிலும் குளமுமே வாரிதியாரே !!
ஆக
நீர் கனகாலமாய் நம்ம மண்ணுக்குப்
போக மறந்ததை மட்டுமாவது
பழிச்சென்று தெளிவாய்ச் சொல்லிப் போட்டீர் !!
கடன்வாங்கி வீடு கட்டினதுக்கு வேற
கவலைப்பட்டு எழுதியிருக்கிறீர்
எமக்கும் கவலைதான்.
அதுசரி
நீரேன் காணும் "கலம்பு"வில குடியேறினீர்
அதிகமா உமக்கும் "கலம்பு"வில
வீடிருக்குமே - சொந்தமா !!
என்ன சிரிக்கிறீர் - அப்ப உண்மை போல !!!
அதுக்கு யார் காணும் முழுக்காசும்
கொடுத்தது ??!
என்ன ? கொழும்பு வங்கியே !
சரி சரி !!
அப்ப உம்மட வங்கிக் கடன்
நியாயமானது எங்கட மட்டும் இங்க
அநியாயம் - என்ன
புதுக் கம்பராமாயணமையா இது ??
சொல்லுங்கள் தமிழ்வாரிதியாரே !!
உங்கட கவலை நியாயமானதெண்டா
நம்மட கவலையும் நியாயம் தானே - அதைவிட
வீட்டைக் கடனில வாங்காட்டி
வீட்டு வாடையை நீரா ஐயா கொடுப்பீர்
கூரையைப் பிய்த்துக் கொண்டு
உயர்ந்து நிற்கும் வாடை கொடுக்க
இரண்டு பேரும் உழைத்து - அதில
கொஞ்சமாய்ச் சேமித்து - அங்க
துவண்டுபோற நம்ம சனத்துக்கு அனுப்பினத
கம்பவாரிதி இப்படிக் கேவலப்படுத்தினது
எந்தமாதிரிச் சரி சொல்லுங்க ஐயாமாரே !!!
"பணவேசம்" போடும் தமிழர்கள்
பிறநாட்டுத் தமிழர்களல்ல
உம்மைப் போல - இங்கயும்
ஒன்றிரண்டு விதிவிலக்காய்
இருக்கத்தான் செய்யுதுகள் - ஆனால்
சத்தியமாய் நீர் சொன்னதைப்போல்
"பவுஷை" எங்கே காட்டுவது - என்று
பட்டுவேட்டியோடு பட்டுச்சால்வை போட்டு
பளபளப்பாய் மேடையேறி விளாசிப்
புகழுக்காய் அலையும் உம்மைப்போல்
நாங்கள் இங்கே "பவுஷ10"க்காய் அலையவில்லை.
கனடாவில் "டேவாரம்" பாடியதாய்ச் சொன்னீர்
உம்ம வாய் அழுக !
அது உம்மட "கலம்பு"வில தான் நடக்குது
கண்டியளே !
கனடாவில அச்சொட்டாய்
தேவாரம் பாடி அசத்துதுகள் - வேணுமென்றால்
திரும்பவும் வந்து பாரும் !!
சந்திக்குச் சந்தி தமிழ் வகுப்பு
நடன வகுப்பு தமிழ் கல்லூரி
தமிழில் பட்டப்படிப்பு - என்று
தமிழ் மணம் உச்சத்தில பறக்குது - நீர்
எந்த மூலையிலயோ
உம்மட சொந்தக்காரன் மகள்
செய்ததைப் பார்த்துப்போட்டுப் போய்
எப்படி இவ்வளவு உச்சமாய்க் கத்துவீர் ??
48 56 58 61 72 79 81 83 என்று
அவன்கள் அடிக்க அடிக்க
சொரணை கெட்டுத் திரும்பத் திரும்ப
சீனாக்கள் படலைக்குள்ள - சுகமாக
சகவாசம் செய்திட்டு
பிறநாட்டுப் பயணமும் சொகுசாச் செஞ்சுட்டு
"கலம்பு"வில போயிருந்து கொக்கரிக்கிறீர் !!
நாங்க தாய் மண்ணுக்கு வருகிறது
நம்ம பணமூட்டை முடிச்சை அவிழ்க்கவல்ல
நம்ம தாய் மண்ணை முத்தமிட !
அங்க அவர்கள் கனவுகாண்பது - துரதிர்ஷ்டம்.
இங்க அப்படியொன்றும் பணமரம் முளைத்ததுமில்லை
நாம் அதிலிருந்து புடுங்கியமில்லை ஆக
அவ்வப்போது கடைக்கோப்பி குடித்துவிட்டு
நம்ம உழைப்பை அப்படியே அங்க அனுப்பினத
அவர்கள் "பணமரமா" விளங்கிக்கொண்டு
நம்ம "பாக்கிலயும் சூட்கேசிலயும்" பணமரம்
தேடியது நம்மட தப்பில்லை கண்டியளே !!
நாங்க பிறநாடு போனாலும்
தமிழ் மானம் மறக்காம வாழுறம் - நீர்
"கலம்பு"வில இருந்தாலும் - நம்ம
தமிழ்ஈழம் மறந்து விட்டீர் - கவலை !
நாங்க அங்க வந்து
சாரம் கட்டி
மாங்காய்ப் பிஞ்சு பிடுங்கி
கள்ளும் கூழும் உறிஞ்சிக் குடிச்சு
உறவோட குலாவி
உளநிறைவோடதான் திரும்புறம்
சிலவேளை - உம்மட
உறவுகள் சில இதற்கு விதிவிலக்கெண்டால்
அதற்கு நாமென்ன செய்வது
நீர்
கம்பனைப் பாடி விட்டு
உம்ம உறவுகளுக்கு தெளிவா ஒரு
கடிதாசி போடும் - அதைவிட்டு
பரவலா எழுதி
பொய்யை நிஜமாக்கி
சிரிக்க வைக்காதேயும் !!
லண்டன் புழுகும் கனடாப் புழுகும்
நீர் விட்டதில்
உம்ம கட்டுரையென்னவோ
ஏகமாய்ப் பலராலும் சிரிப்பாய்ச்
சிரித்துக் கிடக்கிறது !!
கட்டாடியும் குருக்களும்
வீடு தேடி வந்ததாச் சொல்லிற
கம்பவாரிதி
தமிழீழம் போய் பல வருசம் போல !!
நடப்புத் தெரியாமல் உளறியிருக்கிறார் !
அங்க கட்டாடி மகன் இத்தாலியில எண்டு
அவர் துவைக்க மறுத்ததை மறந்திட்டார்!
குருக்களிட்ட
இருமணிநேர உரைநிகழ்த்த - கட்டாய்
விலைபேசியதும் மனிதருக்கு மறந்து விட்டது !
வெளிநாட்டவரைத் திட்டுவதில் மட்டும்
கம்பவாரிதி சும்மா சொல்லக் கூடாது
ஜமாய்த்திருக்கிறார் பாவம் வாரிதி மட்டும்
யாரிட்டயோ சரியா ஏமாந்த கோபம் தெரிகிறது.
நீர் ஒரு வெளிநாட்டு உறவிட்ட
ஏமாந்த கதைக்காய்
அத்தனை வெளிநாட்டுத் தமிழரையும்
ஒட்டுமொத்தமாய்க் கடித்திருக்கிறீரே
இது நியாயமா வாரிதியாரே ???
எங்கட இதயத்தில
இரத்தம் கொட்டக்கொட்ட
இரக்கமில்லாம அங்கயிருந்து
பொய் சொல்லியிருக்கிறீரே வாரிதியாரே !!
கடவுளுக்கும் இது அடுக்காது கண்டீரே !
தயவு செய்து
வேகமாய் மீண்டும் ஒருமுறை
உம்மட கட்டுரையை
சுத்தமாய்ப் படித்துப் பாத்து
உம்மட நெஞ்சில கைவைச்சு
கடந்துபோன உம்ம பிறநாட்டுப் பயணத்தை
அப்படியே ஓடவிட்டு
நீர் எழுதியது நியாயமா
நீர் உண்மையாய்ப் பார்த்தீரா
நகைச்சுவைக் கட்டுரை வரைந்தீரா
என்பதைத் தெளிவாய்ச் சொல்லும்
கையோடு அதற்காய்
மன்னித்து மறக்க வாய்ப்புக் கேளும் !!
இது துரோகம்
என்பது மட்டும் நிஜம் !!
நிதானித்து யோசித்துப் பாரும் - எல்லாம்
பட்டென்று உமக்குப் புரியாவிட்டாலும்
சொட்டுச்சொட்டாய் உறைக்கும்.
கம்பனைச் சொல்லி
தமிழ்மக்களைக் கேலி செய்தது
நியாயமில்லை - தயவுசெய்து
இதை மறக்காதீர் !!
அதுசரி
இறுதியாய் ஒரு கேள்வி !
காசியும் புதுவையும் நம்ம ஈழத்தைப் பாடும்போது
நீர் எங்க காசிக்கா போனீர் வாரி ??
20 வருசமும் எம்ம மண்ணை
எட்டிப் பாத்து சொட்டுத் தமிழ் பேசாத நீர்
மொத்தமாய் நீலிக் கண்ணீர் வடித்திருக்கிறீர்
அகதித் தமிழருக்காய்.
ஐயா கம்பவாரிதியே !
நீர் என்ன கிழித்தீர்
நம்ம தமிழுக்காய்
தமிழ் மண்ணுக்காய்
தமிழ் விழுமியங்களுக்காய்
தமிழ் விடுதலைக்காய்
தங்கள் திருவாய் மலர்ந்து
செப்புவீர் விரைவாய் ???!!!!
வாராதே வரவல்லாய் - இது
நாம் உமக்குச் சொல்லிக் கொள்கிறோம்
மறந்தும் இப்பக்கம்
வந்து தொலைக்காதேயும்.
லண்டனிலும் கனடாவிலும்
துடைப்பங்கள் தயார் !!!
நன்றி. வணக்கம்.
இப்படிக்கு
புலம்பெயர்ந்தாலும்
தமிழ் மானம் மறக்காத
ஈழத் தமிழன்
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
புலம்பெயர்ந்தாலும்
தமிழ் மானம் மறக்காத
ஈழத் தமிழனின் பதில் ........வரவேற்கத்தக்கது.
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
தமிழ் மானம் மறக்காத ஈழத்தமிழனுக்கு ஒரு "ஓ போடு" . . .
போட்டாரே ஒரு போடு . . .
வாரிதி கனவிலையும் நினைச்சுப் பார்த்திருக்காது . . .
இந்த மாதிரி லு}சுகளை இஞ்ச கூப்பிடுறுதுகளுக்கு முதல் வெளுக்கணும்.
இப்ப பட்டுத் தெளிஞ்சிருப்பினம்.
Posts: 64
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
வாரிதியின் மேல் உள்ள சீற்றத்தை கொழும்புத் தமிழர்கள் மீதும், இலக்கியலாளர்கள் மீதும், கம்பன் மீதும் சீறுவானேன்?
வாரிதி இங்கு வந்து நிறைகளை மட்டும் கூறிவிட்டு அங்கு சென்று குறைகளை மட்டும் அதுவும் நக்கல் தொனியில் கூறியதே அவர் செய்த பிழை. இங்கு தமிழ் மணக்கின்றது என்ப் புன்னகைத்துப் புகழ்ந்துவிட்டு அங்கு சென்று துர்நாற்றம் அடிக்கின்றது என எள்ளிநகையாடுதல் நன்றல்லவே.
பி.கு. : கலம்பு வால் தமிலர்களை, புலம்பெயர்ந்து வாளும் தமிளர்கள் எள்ளுவதால் என்ன பயன்?
-