![]() |
|
எனது பதில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: எனது பதில் (/showthread.php?tid=8087) Pages:
1
2
|
எனது பதில் - thambythasan - 09-25-2003 http://www.sooriyan.com/etc/21.asp வணக்கம் இந்த பதிலுரை கம்பவாரிதி அவர்கள்; எழுதிய கட்டுரைக்கு வெளிநாட்டில் வாழும் அகதித் தமிழனின் ஒரு பதிலுரை. அது எதோ தெரியவில்லை இப்போது எல்லாம் ஈழத்து இலக்கியவாதிகளுக்கு வெளிநாட்டு தமிழர்களை குறை கூறி சிற்றின்பம் அடைவதில் பெருமகிழ்வு அடைகின்றார்கள். அவர்கள் தாம் கொண்ட தேசத்துக்காதலினால் வெளிநாட்டு தமிழர்களை அவ்வாறு மதிக்கும்படி சொல்கின்றார்கள். கம்பவாரிதி அவர்கள் எழுதிய கட்டுரையில் உண்மைகள் உண்டு தான். அவர் யாதார்த்தை எழுதியிக்கின்றார். வரவேற்கப்படவேண்டியதுதான். இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் சொல்லும் கருத்துக்களில் மறைந்திருக்கும் ஒரு பெரு உண்மையினை சொல்ல மறந்துவிட்டார். இன்று தேசத்தை நோக்கி படையெடுப்பவர்கள் வெளிநாட்டுக்கு வந்தவர்களில் அத்தனை பேர்களிலும் ஒரு 1 வீதத்தினர் மட்டுமே. தங்களுக்கு கிடைக்கும் சிறிய நேரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும், இந்தியாவின் தாஜ் மாகாளையும் தரிசிக்கச் செல்லாமல் ரமில் ஈழம் வருகின்றார்களே எதற்காக? ரிக்கட்டுகள் மலிவாய் கிடைக்கின்றது என கிழக்கும் அமெரிக்க நாடுகளுக்கு செல்லாமல் எதற்காக தங்கள் சொந்த நாட்டுக்கு வருகின்றார்கள்? யார் அவர்களின் கழுத்தில் துப்பாக்கியை வைத்து ரமில் ஈழத்துக்கு வரச்சொல்கின்றார்கள்? சிறிது யோசித்துப்பாருங்கள்? தப்பியோடியவர்கள் அப்படியா போன போன நாடுகளின் நீரோட்டத்தில் கலந்திருந்தால் இப்படி ஒரு தேசத்துக்கு யார் தண்ணீர் விட்டிருப்பார்கள்? நீங்கள் சொல்வது போல் வெறும் படம் காட்டுவதற்காக அங்கே வருகின்றார்கள்? போராட்டச் சு10ழலில் அழிந்து போன இலக்கியத்துக்கு மகுடம் சு}ட்டிக்கொண்டு, தம்மை மனதளவில் தள்ளி வைத்தவர்கள் (அவர்கள் சொந்த நாட்டில் வசித்தாலும் கூட) வெளிநாட்டுக்கு வந்து தள்ளிப்போனவர்களுக்கு சமமானவர்களே!! எத்தனையோ காரணங்கள் இருந்தும் தாய் மண்ணை நேசிக்கும் இந்த வெளிநாட்டுத் தமிழர்கள் இருக்கும் வரை எம் தமிழரின் வீரம் விலைபேசமுடியாது. உலகநாடுகள் தடை செய்தும் நாம் இப்போதும் தலை நிமிர்வதற்கு யார் காரணம்? யார் எம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவிசெய்யப்போவது? எம்மிடம் எண்ணைக் கிணறுகள் உண்டா? அமெரிக்கா கொடுத்த ஆயுதமா ஆணையிறவு வெற்றியை ஈட்டி தந்தது?? ஊர் சென்று திரும்பி வருபவர்கள் மற்றவர்களிடும் "எங்கட நாடு நாடு தான்" என்று சொல்லி அவர்களையும் ஊருக்கு அனுப்பி தமிழ் தேசியம் வளர்க்கின்றார்கள். வெளிநாட்டில் பிறந்தாலும் நாட்டை பார்த்தபின்னால் தான் தமிழைப் படிக்க வேண்டும் என்று சொல்லும் எத்தனை குழந்தைகளை உங்களுக்குத்தெரியும்? வெளிநாட்டு மக்களுக்குள்ளை எம் சொந்த கனவுகளை தொலைத்துவிட்டு ஆசையோடு அங்கே வருபர்களை அங்கு உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக மரியாதைக் கொடுத்து கவனிக்கும் போது அவர்களின் இதயம் நோகின்றது. அங்கே வருபவர்கள் வெளிநாட்டவர்களுக்கு சேவகம் செய்து விட்டு, அந்த பணத்தில் வருகின்றார்கள். அப்படி வருபவர்களிடம் நீங்கள் அடிமைகளா நடக்கும் எண்ணுவது அவர்கள் மகிழ்விக்கவல்ல, அவர்கள் கொண்டு வந்து பணத்திலும் பொருளிலும் ஆசைப்பட்டுத்தான் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். பிழை இருவரிலும் தான். நாம் மனிதத்தை தொலைத்துவிட்டோம். அன்பால் மற்றவரை நேசிக்கக் கற்றுக்கொள்வோம். ஒருவரையொருவர் புரிந்துகொள்வோம். அதை விட்டு கனடாவுக்கு ஒருவரைக் கூப்பிட்டு பேசச்சொல்லும் போது இறந்த கம்பரைப் பற்றி கட்டுக் கட்டாய் அடுக்கு மொழியில் உரையாற்றுவது தேவையில்லை. வருகிறபோது எம் மக்களின் துயரங்களை அவர்களின் இலட்சிய சிந்தனைகளை மேடைகளில் கூறி, மாறாதவர்களையும் தமிழர்களாய் மாற்ற வேண்டும். இறந்த இலக்கியத்தை தமிழரின் தேசம் விடிவு கண்டபின் எடுத்து வைத்து து}சு தட்டலாம் தானே?? நடவடிக்கையில் இறங்குவோம். கதைப்பதனால் குறைகள் பலவற்றை நாம் பட்டியலிடலாம் (இருவர் பக்கத்திலும்) நன்றி தம்பிதாசன் - கனடா - sOliyAn - 09-25-2003 அவரைவிடுங்கள் தம்பிதாசன்.. பெயரிலேயே தமிழர்களை அரக்கராயும் குரங்குகளாயும் பறவைகளாயும் (கழுகாக) தோற்றம்காட்டிய கம்பர் இருக்கிறாரே.. அதைவிட வேறென்ன தகமை அவருக்கு.. சீதையை வர்ணிப்பதில் எச்சி வடிப்போரை மூலையில் போட்டுவிடுங்கள். - sOliyAn - 09-25-2003 யாரோ போட்ட பிச்சையில் கோட்டு சூட்டுப்போட்டு வெளிநாடு வந்த வாருதி.. நல்லாத்தான் நுனிப்புல் மேய்ந்து தனது வெப்பியாரத்தை வெளிக்காட்டியிருக்கிறார். சொந்தங்களை பிரிந்து தனிமையில் தமது தேவைகளுக்காய் உள்ள வசதிகளுக்குள் நாட்டையும் உறவுகளையும் ஓரளவாவது காப்பாற்ற உழைப்பக்காக உருக்குலையும் உறவுகளை நன்றாகத்தான் உசாதீனம் செய்திருக்கிறது இந்த கம்பன் அடிநக்கி. கோயில்களை பேசுகிறார் இந்த மேதாவி.. டவுசருடனும் சேட்டுடனும் வணங்கும் பக்தர்களை கொழும்புக் கோயில்களில் பார்க்கவில்லையோ.. வெளிறாட்டில் அவருக்கு லென்ஸ் பூட்டி காட்சிகளைக் காட்டிவிட்டார்களாம். கிழமையில் ஒரு நாள் தமிழ் பாடசாலை சென்று ஒரு சில மணித்தியாலம் கல்விகற்று தமிழ் பேசும் சிறார்களின் அறிவைப் பாராட்டத் தெரியவில்லை.. அவர்களை ஊக்குவிக்க முடியவில்லை.. நளினம் கேட்கிறது இந்த வித்துவானுக்கு.. பரமசிவன் குளிர் நீரில் நீராடுறாராம்.. அதைப் பார்க்கும் மனங்களின் மகிமை புரியாததன்மையை அவரே வெளிக்காட்டியிருக்கிறாரே.. சட்டம்போட்ட கண்ணாடிகளுள் சிறையிருக்கும் சாமி படங்கள் இவருக்குத் தெரியவில்லையோ.. அவை தாயகத்திலும் உள்ளது புரியவில்லையோ..?! கொழும்பு காலிவீதியில் வெள்ளவத்தையில் நெருக்கமாக உள்ள கடைகளை காணவில்லையோ.. அவற்றில் அங்குள்ளவர்கள் வெளிநாட்டு உறவுகள் கஸ்டப்பட்டு உடலுருக்கி உழைத்தனுப்பும் பணம் புரள்வது தெரியவில்லையோ? காலிமுகத் திடலிலே விதம்விதமாகக் காற்று வாங்கும் சனங்களின் மொடேர்ன் ரெஸ்சுகளை பார்க்கவில்லையோ.. அவற்றின் பின்னணியில் வெளிநாடொன்றில் அவர்களின் தேவைகளுக்காய் கடனுடன் போராடும் உறவுகளின் நிலை உறுத்தவில்லையோ? பகுத்தறிவு இருந்தால்தானே இவையெல்லாம் தெரிவதற்கு.. கம்பனுக்குள்ளும் சீதையின் வர்ணனைகளுள்ளும் வாழ்க்கையை அடகுவைத்தவர்களுக்கு இதுவெல்லாம் எங்கே புரியும்.. ஏட்டுப்படிப்போடு வெற்றுச்சுரைக்காய்கள் தீர்க்காத பசியால் மற்றவனைக் குறை கூறவேண்டியதுதான்.. இனியாவது தாயகத்திலிருந்து தகுதியானவுர்களை வெளிநாட்டுக்கு வரவழைத்து அவர்களின் கருத்தை கேளுங்கள்.. இது ஒரு பாடமாக அமையட்டும். காகிதப் பூக்களை வரவழைத்து.. முகமனுக்கு அவர்கள் காட்டும் சிரிப்பை நம்பாதீர்கள்.. அவர்கள் போகவிட்டுப் புறங்கூறும் போக்கிரிகள்! - Ilango - 09-25-2003 கம்பவாரிதி இ.ஜெயராஜ் Wrote:ஒரு நிமிஷம் பொறுங்கள்! இதற்கு மேல் எதையும் நான் வாசிக்கவில்லை - Kanani - 09-26-2003 முகமூடி யாரும் போடலாம்....ஒரு விடயத்தை யார் சொன்னார் என்பது முக்கியமில்லை...என்ன சொன்னார் என்பதுதான் முக்கியம் அது கம்பவாரிதி சொன்னால் என்ன சாதாரண குடிமகன் சொன்னால் என்ன...விசயம் என்ன? எல்லாரும் இப்படி இல்லை...கனபேர் இப்படித்தான் நானும் பார்த்திருக்கிறன்...தாங்கள் தமிழாக்களோட பழகுறேல்லையாம்..தமிழாக்களுக்கு உதவி செய்யிறேல்லையாம்...எத்தினைபேர் இங்கு சொல்லியிருக்கினம்...அருகிலுள்ள தமிழனுக்கு உதவாதவன்தான் நாட்டிலுள்ள எம்மவருக்ககா உதவப்போகிறான்??? அதைவிட இங்கிருந்து கனபேர் ஊர் போறது...அங்க சனத்துக்கு தங்கள் ஆடம்பரத்தைக் காட்டவேயன்றி ஊர்ப்பற்றில் இல்லை...ஊர்ப்பற்று இருந்திருந்தால் எம்மவர் பாதிக்கப்பட்ட காலத்தில் போயிருக்கலாம்..பாதிக்கப்பட்ட இடத்திற்கு போயிருக்கலாம்...உதவியிருக்கலாம்..ஆனால்...இப்ப சமர் ஊருலா எல்லோ போகினம்... ஊர்ப்பற்று இருந்தால் அங்கு போகும்போது எதுக்கு ஆடம்பரம்? எதுக்கு ஆங்கிலத்தில் அலட்டல்? அங்குள்ள எம்மவர் தமிழர்தானே? நீங்களும் தமிழர்தானே..பிறகு ஏன் ஹாய் பேய்? எதுக்கு எம்மவரைப்பார்த்து பழக்கவழக்கம் இல்லாதவர் என்று அறிக்கை விடுகினம்? தாங்களே இங்கு வந்துதான் அவற்றைக் கற்றனர்...அதை பண்ணபாக சொல்லிக்கொடுப்பதை விடுத்து...அறிக்கை விடுகினம்!!! ஒரு குழந்தைக்கு ஒரு விடயத்தை சொல்லிக்கொடுக்க வேண்டுமாயின் நாம் அதன் நிலைக்கு சென்றுதான் விளங்கப்படுத்த வேண்டும்..அதைவிடுத்து கடுமையான அறிக்கை விடுவது உண்மையில் எம்மை நாமே கோமாளியாக்குவது போன்றது...இது அறிவு பொறுமை கருணை இல்லாதவன் செயலுக்கு ஒப்பானது!!! கொழும்பு நடவடிக்கைகளுக்கு முழுக்காரணமும் வெறிநாட்டு நம்மவரும் அவர்களின் பணமும்... நாம் இங்கு வந்தது...உழைத்துவாழவும் கஸ்ரப்படும் எம் உறவுகளுக்கு உதவவும்...கடன்பட்டு ஆடம்பரம் காட்ட அல்ல நீங்கள் ஆடம்பரத்திற்கு கடன் வாங்கி அனுப்ப...உங்கள் உறவுகள் கொழும்பில் ஆடம்பரம்... பெடியளுக்கு ஆடம்பரச் செலவுக்கு காசு அனுப்புறது நீங்கள் பெடியள் செல்போன் பில கட்ட காசு அனுப்புறது நீங்கள் பெடியள் கேள்பிரண்டுக்கு 1000 இல் பிரசண்ட் வாங்க காசு அனுப்புறது நீங்கள் கொழும்பில் வாடகை ஏத்தினது நீங்கள்.... கொழும்பில் சாமான் விலை ஏத்தினது நீங்கள்... மொத்தத்தில் எம்நாட்டின் ரூபா மதிப்பை இந்தளவுக்கு குறைத்ததற்கு நீங்களும் காரணமாகிறீர்கள் முதல்ல நீங்கள் காசு அனுப்புறதை நிற்பாட்டுங்கோ...கொழும்பி சாமான் விலை குறையு வாய்ப்புண்டு! முதல்ல நீங்கள் காசு அனுப்புறதை நிற்பாட்டுங்கோ...பெடியள் ஏதாவது படிக்கவோ அல்லது உழைக்கவோ முற்படுவாங்கள்.... எத்தனை எத்தனை இளஞ்சமுதாயம் வெளிநாட்டு மோகத்தில் படிப்பு வேலை இன்றி வீணே காலம் கழிக்கின்றனர் நீங்கள் இப்பிடி அனுப்ப பாதிக்கப்டுவது...அங்குள்ள வெளிநாட்டு வருமானம் இல்லாதேரும்..பெரும்பாலான நடுத்தர வர்க்க மற்றும் வறிய சிங்களவனும்...அத்துடன் நானும் வெளிநாடு போவேன் என காத்திருக்கும் உங்கள் இளஞ் சந்ததியும்தான்!!! - sOliyAn - 09-26-2003 இந்த கருத்தை லண்டனிலை இருந்து சொல்லியிருக்கவேணும் கணனி.. ஜேர்மனிலை இருந்து சொல்லாதீங்கொ.. தமிழை மறந்தும் தமிழ் பேச வெட்கப்பட்டும் தமிழரோடு பழகுவது கேவலம் என்றும் நினைக்கும் ஒரு பகுதி லண்டனிலைதான் கோயில்களிலை லெவல்காட்டுதுகள். ஜேர்மனியையோ சுவிசையோ ஏனைய ஐரோப்பிய நாடுகளையோ உங்களின் கருத்துக்குள் இழுக்காதீர்கள்.. தற்போது நீங்கள் நாட்டை மாற்றி படம்காட்டினாலும்கூட. ஒரு சில நுாறு டொலர்களுடன் வந்து தனது சொந்தங்களையும் போராட்டத்தையும் தோளில் சுமக்கும் உள்ளங்களைப் பாருங்கள்.. தனித்து இயங்கவேண்டிய நிலையிலும் தாயகம்மீது கொண்ட பற்றுதலினால்.. தமது நேரத்தை தியாகம் செய்து அலைந்து களைக்கும் உறவுகளைப் பாருங்கள்.. ஊருக்க வெறுங்கையுடன் சென்றால் உற்றம் சுற்றம் குறைகூறுமே என்ற பயத்தில்.. தமது தேவைக்காக ஒரு சிறு பணத்தையும்.. அவர்களுக்காக சில மடங்கு அதிகமான பணத்தையும் கடன்பட்டோ.. தமது எதிர்கால சேமிப்பிலிருந்தோ எடுத்துச் செல்லும் உறவுகளைப் பாருங்கள்.. அவர்கள் படம் காட்டவா போகிறார்கள்.. தமது பிறந்த மண்ணை பார்க்க போகிறார்கள்.. ஓடுகிற மாடிப் படிகளில் ஏறக்கூட முதன்முதலில் பயமாகத்தான் இருக்கும்.. அதைப்போல பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் செல்ல யாருக்குமே அச்சமாகத்தான் இருக்கும்.. அதனால் சமாதான சூழலில்தானே அவர்களால் செல்லமுடியும்..?! எந்த பொடியளுக்கு ஆடம்பர செலவுக்கு பணம் அனுப்புகிறோம்? அனாதைகளுக்கா? பொடியளை நெறிப்படுத்த வேண்டியது அவர்களின் பெற்றோர்கள்.. அதற்குத்தான் ஒவ்வொருத்தனுக்கும் பகுத்தறிவு இருக்கு.. பகுத்தறிவற்று.. நாளும் பொழுதும் வெளிநாட்டு தமிழர்கள் படும் பாட்டை கூறும் செய்திகளை அறியாமல்.. அவர்கள் நடக்கும் பாதைக்கு நாம் எப்படிப் பொறுப்பாக முடியும்..? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு கம்பன்வீட்டு கைத்தறி எனக் காட்டவேண்டாம்.. கொழும்பில் யாரையா விலை ஏத்தினது.. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியால் ரூபாய் மதிப்பு குறைந்தது.. அதனால் விலை உயர்ந்தது. போராட்ட இடப்பெயர்வுகளால் சனங்கள் கொழும்பை நாடின.. அதனால் வாடகை உயர்ந்தது. பொடியள் கேள் பிரண்டுக்கு சங்கிலி கொடுக்கிராங்கள் என்றால்.. அந்த 'கேள்'களை வளர்த்தவிதம் தப்பு.. நாங்களா கேள்களுக்கு உணர்வுகளை துாண்டிவிட்டோம்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> முதலில் நாங்கள் அனுப்புற காசை நிப்பாட்டினால்.. எத்தனை சனம் துாக்குமாட்டி சாகுமோ.. அது உங்களுக்கெங்கே தெரியப்போகுது.. சிலவேளை வாரிதி எங்களை வரவேண்டாமென்று.. தான்போய் கொள்ளி வைக்கலாம்.. இங்குள்ள தமிழனுக்கு என்ன உதவி? அவனிடம் திறமை இல்லையா? ஜேர்மனியில் பெரும்பாலானோர் உடலைவருத்திதானே ஊதியம் பெறுகிறார்கள்.. அப்படி உழைக்கவேண்டியதுதானே.. இங்குள்ளவர்களுக்கு என்ன உதவி..? இங்குள்ளவர்களுக்கு உதவி வேண்டுமாம்.. அங்குள்ளவர்களுக்கு வேண்டாமாம்.. உதவி வசய்வதை உணர்ந்து செய்யுங்கள்.. அது பிரயோசனமாகிறதா என அறிந்து செய்யுங்கள் என்றால் நியாயம்.. உதவி செய்யாதே என்றால்.. இது என்ன கதை.. ம்.. கதைதான். - Mathivathanan - 09-26-2003 20 வருஷத்துக்கு முதல் நட்டது இப்பத்தான் காய்க்கத் தொடங்கியிருக்காக்கும். வெளிக்கிட்டது ஆக மூண்டிலிரண்டு பங்குதானே.. இப்படி ஒண்டு நடக்கோணுமெண்டால் உதெல்லாம் சர்வசாதாரணம். என்ன செய்தாலும் மக்களுக்காகத்தானே. நீங்கள் வையுங்கடா..வெடி. இருக்கிதிறலை இன்னும்பாதி கொழும்புக்குவர பிரச்சனை சமூகமா முடியும். வெளிநாட்டுக்காரன் இருக்கிறான் காசுதர தார. உங்களுக்கென்ன..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanthy - 09-26-2003 [size=18]கம்பவாரிதியின் கருத்துக்கு கண்டங்கள் கடந்த தமிழிச்சியின் கண்டனம். உண்மைதான் நாமெல்லாம் செய்தது துரோகம்தான் ஏதோவொரு சுயநலம் எங்களை ஊர் பிரித்தது ஏதோவொரு பயம் எங்களை ஓடவைத்தது பொய்சொல்லி நாமெல்லாம் - புகுந்த நாடுகளை ஏமாற்றியதும் உண்மையே இல்லையென்று யாருரைத்தோம்....? உங்கள் பழமொழிகளின் பாசையில் சொல்கிறோம் 'நன்றி மறப்பது நன்றன்று" (சிலவேளை அன்றே மறப்பது நன்றென நீங்கள் மறந்திருக்கலாம்) சீதை பத்தினியா ? ராமன் ஏகபத்தினி விரதனா ? புராணங்களைப் புழுகியே புகழ் வாங்கும் உங்களுக்கு யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள நேரமேது....! பொய்சொல்லி நாம் உளைத்த பணத்தில்தான் என்குடும்பம் , என்னு}ர் , மாமா , மச்சான் ஏன் நீங்களும் கோட்டுச் சூட்டுப்போட்டுக் கனடாவரவும் லண்டன் வரவும் கரன்சி வந்தது. மானமுள்ள தமிழனாய் - நீங்கள் மண்ணை நேசிக்கும் தமிழனாய் உங்கள் சொந்தப்பணத்தில் லண்டனைச் சுற்றியோ கனடாவைக் கலக்கியோ வந்திருந்தால் மெச்சியிருப்போம். ஆனால் புலம்பெயர்ந்தவனின் பிச்சையில் கௌரவ விருந்தினர்களாக , சிறப்புப் பேச்சாளராக வந்து போக எல்லாருமே பிச்சைத்தமிழனின் எச்சிற் காசுகளைத்தானே எதிர்பார்க்கிறீர்கள்....? பன்னீர் கொப்பளிப்பதில் நீங்களெல்லாம் வல்லவர்கள் யாமறிவோம் தண்ணீர் குடிக்கவே பொழுதின்றி கண்ணீர் வடித்தபடி குளிரில் , குழந்தைகளைக் காப்பகங்களில் விட்டுவிட்டு செத்த பிணங்களாய் உணர்வையடக்கி அவனவனின் உணவகங்களில் என்ன ஒய்யாரமாகவா இருக்கிறோம்....? சீறல் , சினத்தல் , கீறல் , கிளியல் எல்லாம் வாங்கித்தான் நீங்களெல்லாம் கலோப்பேச கிலோக்கணக்கில் அனுப்புகிறோம். என் பிள்ளை காப்பகத்தில் எப்படியிருக்குமோ....? எம் உயிர் வலியின் ரணமறியார் ஒருமாதம் பணம்பிந்தினால் , ஒருவாரம் தொi(ல்)பேசி போகாவிட்டால் 'செத்தா நாம் போய்விட்டோம் நாம் செத்தாலும் சொல்லமாட்டோம் இதோ போகிறோம் அனாதைமடம்" சொல்லால் கொல்லும் வல்லோரெல்லாம் உங்கள் வாழிடங்களில் அல்லது அருகாமையில் இல்லையா வாரிதி சொல்லுங்கள்.....? நாம் பிறந்த மண்ணை , நாம் வாழ்ந்த ஊர்களை , நமது நண்பர்களை ஆசையுடன்காண வந்தால் அங்கெல்லாம் முன்னிற்கும் பார்வைகள் எம் கைகளையே எதிர்பார்க்கும். 'புலத்தில் நாமெல்லாம் அழுதழுதே வாழுகிறோம்" சத்தியம் செய்தாலும் சனிபிடிப்பார் நம்பமாட்டார் பொய்யாம் சொல்கிறோம் பணத்தின் மேல் படுக்கிறோமாம். இங்கோ சிற்றி பாங்கும் , சேவீஸ் பாங்கும் சோறுக்கென மிச்சமிருப்பதையும் வழித்தெடுக்க 100யூரோ பிச்சைதாவென வேலையிடங்களில் பல்லிழித்து வாங்கும் 100ஐவிட ஆயிரம் வதைவாங்கும் எம்துயர் யார் புரிந்தீர்....? ஓமோம் நாங்களெல்லாம் பெரியவர்களல்லவா (உங்கள் பாசையில்) 'அம்மா சப்பாத்துப் பிஞ்சிட்டுது அப்பா யக்கற் வாங்கவேணும்" காலையழுத பிள்ளையின் முகம் வேலையிலும் வந்து நிற்கும் பிள்ளைகட்கு வரும் காசையும் நாம் சுளையாய் அனுப்புவது யாருக்காம்...? நம்பிள்ளை அனுபவிக்க வேண்டிய சுகமெல்லாம் அண்ணனும் , தம்பியும் , அக்காளும் , அக்காளின் பிள்ளையும் பழங்கிளங்களுமல்லவா அனுபவிக்கிறார்....? பிய்ந்த சப்பாத்துக்கு ஒட்டுப்போட்டு , கிளிந்த யக்கற்றுக்குத் தையல்போட்டு எம் பிள்ளை பழையதையே திரும்பிப்போடும். அங்கோ ஆளுக்கொரு சேமிப்பும் , ஆடம்பர ஆடைகளும் பொழுதுபோக்கி அழுதுவடிக்க மெகாசீரியலும் புதுபுதுப்படங்களும் அரட்டையடித்து சுகம் விசாரித்து கலோப்பேசி வானலையில் குரல் காட்ட சக்தியும் , தென்றலும் , சூரியனும் துணையாக அவர்க்கேது குறையங்கு....? ராசவாழ்க்கையென்பது அங்கெல்லோ உள்ளது. சத்தியமாய் சொல்கிறோம் இங்கு எம்வயிற்றில் பிறந்த பிள்ளைகள்தான் பாவத்தின் சின்னங்கள். இன்னும் துயிரிங்கு லட்சலட்சமாய் கிடக்கிறது சொல்ல நேரமில்லை. இல்லை சொல்லியழுதென்ன செய்யப்போகிறீர்....! அட்டைகள் நீங்கள் உறிஞ்சுமட்டும் உறிஞ்சிவிட்டீர் - நாம் பிச்சைக்காரர் பொய்சொல்லி அன்னியன் பணம்குடிக்கும் பெருச்சாளிகள் எல்லாம் சொல்வீர்கள் ஏனெண்டா உங்களுக்கு வேண்டிதெல்லாம் கறந்தாச்சுத்தானே இனியென்ன கவலை.....! ஐயா கம்பவாரிதி ! இலக்கியம் வளர்க்கும் நீங்கள் புலம்பெயர்ந்தோரைப் பழித்திட்ட பத்திக்கு இடம்தந்த இதழ்கூட இந்திய ராணுவத்திற்கு 'ஜெய்கிந்த" சொன்ன இதழ்தானே.....? மறந்திருப்பீர் எல்லாம் ஆனால் மறக்க முடியாதய்யா எதையும்.....! இலக்கியம் உங்கள் மூச்சென்று நீர் உரைப்பினும் கொழும்பானுக்கு வால்பிடித்து இலக்கியப்பரிசு வாங்க மட்டுமே நீங்களெல்லாம் லாயக்கு. சரித்திரம் சொல்ல எங்கள் இனத்தின் சரித்திரம் படைக்க உங்களால் முடியாது ஏனெனில் யதார்த்தம் உங்கள் கண்களுக்கு து}ரமய்யா..... 26.09.03. - yarl - 09-26-2003 இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.போய் வந்தவர்கள் தங்கள் அனுபவங்களை எழுதவேண்டும்.அதுதான் சரியான பதிலாக இருக்கும். - Kanani - 09-26-2003 Quote:இந்த கருத்தை லண்டனிலை இருந்து சொல்லியிருக்கவேணும் கணனி.. ஜேர்மனிலை இருந்து சொல்லாதீங்கொ.. தமிழை மறந்தும் தமிழ் பேச வெட்கப்பட்டும் தமிழரோடு பழகுவது கேவலம் என்றும் நினைக்கும் ஒரு பகுதி லண்டனிலைதான் கோயில்களிலை லெவல்காட்டுதுகள்.இதுக்கு நான் என்ன செய்ய யாழ்ல உலா வாற பேய் தான் நினைச்சமாதிரி என்ர நாட்டை மாற்றுது...இப்ப சரியாக் காட்டுது... நான் எழுதினது லண்டனை மையமாக வைத்துத்தான்...ஆனால் இவை ஜேர்மன் சுவிசுக்கு இது பொருந்தாது என்று கூறவும் முடியாது.... நான் கூற விளைந்ததை சாந்தியம்மா அப்படியே கவி வரியில் கூறியிருக்கிறார் Quote:'அம்மா சப்பாத்துப் பிஞ்சிட்டுது அப்பா யக்கற் வாங்கவேணும்" பிள்ளையையும் கிள்ளிப்போட்டு தொட்டிலையும் ஆட்டுறது இதுதான்.... பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்கோ...ஆடம்பரத்திற்கு நீங்கள் கஸ்ரப்பட்டு கடன்பட்டு அல்ல!! - yarl - 09-26-2003 இன்றைய தினக்குரலில் ஒளிவு மறைவின்றி யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஒரு யுவதி தனது தம்பி சகிதம் அங்கு தரித்து நிற்கும் பஸ்களில் ஒவ்வொன்றாக ஏறி பாடுகிறார். இவரோ பெரும்பான்மை சமூýகத்தைச் சேர்ந்தவர். வெலிஓயாவிலிருந்து இத்தனை தொலைதூரம் கடந்துவந்து யாழ் நகரில் யாசகம் கேட்கிறார். பஸ்ஸில் ஏறியவுடன் தமிழில் அச்சடிýக்கப்பட்டுள்ள நோட்டPஸ் ஒன்றை நீட்டுகிறார். ரபான் அடிýத்துக்கொண்டே சிங்களத்தில் பாடுகிறார். அப்பா ஊனமுற்றவராம். அவரால் உழைத்துச் சம்பாதிக்க முடிýயவில்லையாம். எனவேதான் இந்த யுவதி, யாழ்ப்பாண மக்களின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்து இங்கு யாசகம் பெற வந்திருக்கிறாராம். இந்த யுவதியின் எண்ணம் வீண் போகாதபடிý நாளாந்தம் ஏதோ ஓரளவு பணம் சேருகிறதாம். பெண் என்றால் பேயும் இரங்கும்போது மக்கள் இரக்கம் காட்டமாட்டார்களா?. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் புண்ணியத்தால் இப்படியெல்லாம் நிகழ்கிறது. - veera - 09-26-2003 அனைவருக்கும் புரிந்திருக்க வேண்டிய உண்மையை கம்பவாரிதி அறியாமல் விட்டது அவர் பிழைதான். ஆனாலும் ஆட்டுவிக்கும் போது ஆடுபவர் என்ன செய்யலாம்.தமது பெயரை நிலை நிறுத்திக்கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு ஒரு மனிதன் வந்து விட்டானென்றால் பிறகு அவனுக்கு சமூகத்தைப்பற்றிய கவலை வரவே வராது! தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும் விடயங்களை அலசத் துவங்கினால் தோளில் போடும் துண்டை தலையில் போடவேண்டிய நிலை தனக்கிருப்பதை முன்னர் வெள்ளவத்தையில் உணர்ந்திருந்த கம்பவாரிதி தற்போது புலம் பெயர் மண்ணில் வாழும் தமிழர்களின் வாழ்வியலை உணர மறுத்தது துரதிஷ்டமே.. கதிர்காமர் வரிசை நீண்டுகொண்டே போகுமோ? - Mathivathanan - 09-26-2003 உதவிசெய்யிற நாடுகளையே வாங்கிச் செலவழிச்சுப்போட்டுப் பழிக்கிறமாம். உதென்ன பெரிய விஷயமே..? பத்தாததுக்கு 4.5 பில்லியன் புறொமிஸ் பண்ணியிருக்கு. நாங்கள் போகாட்டியும்.. நாங்கள் திரும்பக் கட்டாட்டிலும்.. செலவழிக்கிற உரிமை எங்களுக்குத்தானிருக்கு. உதெல்லாம் பெரிய விஷயமே..? விட்டிட்டு உங்கடை வேலையைப்பாருங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 09-26-2003 புலத்துச் சொந்தங்களாக இருக்கட்டும் தாயகச் சொந் தங்களாக இருக்கட்டும் உண்மை நிலையை.... தங்களின் குடும்ப நிலைகளை.... தமிழர் பண்பாட்டை அறிந்தவர்கள் ஒழுங்காகத்தான் இருக்கின்றார்கள்....ஆனால் பகட்டுக்கும்... நாகரிகம் என்று அந்நியத்தை விளக்கம் இன்றி உள்வாங்கியவர்களும்....பணத்தால் தங்களை எடுப்பானவர்கள் என்று காட்ட எண்ணியவர்களுமே வாரிதியின் சாடலுக்கு உள்ளாகியுள்ளனர்...அதில் சிறிது உண்மையும் உண்டு....! ஆனால் எல்லாப் புலத்து உறவுகளும் தாயக உறவுகளும் அப்படியானவர்கள் என்பதும் தவறே....! வாரிதியின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கதும் ஒன்றே...முழுவதுமாக அதை நாம் நிராகரித்தும் விடமுடியாது காரணம்... அவரது சாடலுக்கு நம்மக்குள்ளேயே உதாரணங்களும் உண்டு என்பதுதான்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- veera - 09-26-2003 Mathivathanan Wrote:உதவிசெய்யிற நாடுகளையே வாங்கிச் செலவழிச்சுப்போட்டுப் பழிக்கிறமாம். உதென்ன பெரிய விஷயமே..? பத்தாததுக்கு 4.5 பில்லியன் புறொமிஸ் பண்ணியிருக்கு. நாங்கள் போகாட்டியும்.. நாங்கள் திரும்பக் கட்டாட்டிலும்.. செலவழிக்கிற உரிமை எங்களுக்குத்தானிருக்கு. உதெல்லாம் பெரிய விஷயமே..? விட்டிட்டு உங்கடை வேலையைப்பாருங்கோ. விட்டுவிடத்தான் வேண்டும்.ஏனெனில் நாம் நமக்குள் இருக்கும் உண்மையை உணர்வது குறைவுதானே.வெளியில் சென்று நமது விம்பத்தைத் தேடும் போது வாரிதிக்கும் இதுதான் கதி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - veera - 09-26-2003 Quote:வாரிதியின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கதும் ஒன்றே...முழுவதுமாக அதை நாம் நிராகரித்தும் விடமுடியாது சாடலுக்காகவன்றி உண்மை நிலையை எடுத்துரைக்க வாரிதி மட்டுமல்ல யார் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆனால் பேச்சுக்காக பேச்சின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக கேட்பவரைத் திசை திருப்புவதற்காக சுட்டிக்காட்டல் என்ற பெயரில் சாடல் நடந்தால் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. தலைப்பைத் தொடக்கி வைத்த தம்பிதாஸன் பார்வையும் பலரது பார்வையும் ஒரே மாதிரியாகத் தெரிகிற
- Paranee - 09-27-2003 வாரிதி வாரித்தான் இட்டிருக்கின்றார். விதிவிலக்குகளை அவர் எடுத்துக்கொள்ளவில்லை. முட்களை எடுத்திருக்கின்றார். மலர்ந்த மலர்களை அவர் மறந்துவிட்டார். இலக்கியவாதிகளும் விமர்சனக்கயவர்களும் இதைத்தானேசெய்துகொள்கின்றார்கள். இதற்கு விதிவிலக்கா கம்பனின் புகழ்பாடி வயிறுவளர்க்கும் இந்த சன்னியாசி. யாழ்மண்ணில் பிழைப்பு தோற்றபின்பு தலைநகர் தேடிவந்தவர்தானே இவர். சொகுசுவாழ்க்கைக்கு தன்னை அர்ப்பனித்த ஒரு சுயநலவாதி. குடிப்பது பால். தண்ணீர் இவர் கண்டது இல்லை. பழம் அதுவும் ஆப்பிள் ஆரஞ்ச். இதுதான் இவரது தினசரி உணவு. என்ன மனிதரய்யா ? ஓரு சுண்டு அரிசிக்காய் கையேந்தும் மக்கள் மத்தியில் காலிற்கு மேல் கால்போட்டுக்கொண்டு கம்பன் புகழ்பாடி தன்வயிறு வளர்க்கும் இவர் இதைப்பற்றி கதைத்திருக்ககூடாது. சொன்னதில் அர்த்தம் உண்டு ஆனாலும் சொன்னவரில் தப்பு உண்டு. முதலில் எமது முதுகின் அழுக்கை அகற்றுவோம் பிறகு மற்றவனின் அழுக்கை சுட்டிக்காட்டுவோம். கம்பரின் வாரிசோ கம்பரின் வாலோ யாரோ ! சொல்லமுதல் உங்களை சோதித்துக்கொள்ளுங்கள். புலம்பெயர்ந்தவன்தான் நானும் வயிற்றுப்பிழைப்பிற்காய் தேசத்தின் வெப்பத்தில் வாடிவிடாமல் இன்னுமு; பல பல காரணங்களினால் ஆனாலும் ஒரு நிமிடம் தாயகம் சென்றுவர சந்தர்ப்பம் கிடைத்தால் ஓடிவிடத்துடிக்கின்றேன் ஏன் பாசம். தாய் பாசம். ஊர்ப்பாசம் தாய் மண் பாசம். எவ்வளவுதான் பணம் கொட்டிக்கிடந்தாலும் அந்த மண்ணில் ஒரு தடவை கால்வைக்குமு;போது ஏற்படும் சந்தோசம் எங்குமே கிடைப்பதில்லை. வாழ்ந்து பாரய்ய இந்த புலம்பெயர் மண்ணில் புரிநதுகொள்ளவீர் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் ஓடும் அந்த ஏக்கங்களை. இனிமேலாவது வார்த்தைகளை அளந்து போடுங்கள். ஆற்றில் போடாவிட்டாலும் எம் ஆழமான மனதில் போடுகின்றீர் என்பதை மறந்துவிடாதீர்கள் சாந்தி அக்காவின் கவிதை என்னை மிக மிக பாதித்துவிட்டது. நன்றி. எல்லோர் மனதிலும் ஒரு வடு இருக்கின்றுது. அது எவர்க்கும் எளிதில் புரிவதில்லை. நட்புடன் பரணீதரன் - kuruvikal - 09-27-2003 வாரிதி சொன்னதில் முழுவதும் உண்மை இல்லை என்றாலும் உண்மை உண்டு....நாம் எமது தேசத்தை மதிக்கின்றோம்...மனதுள் தினமும் நினைக்கின்றோம்...தாயகத்தில் ஒரு துண்டுக்காணி இல்லாதவனும் கனடாவில் சொகுசு காண்பதும் உண்மை அவனிடம் உங்களால் தாயகப்பற்றைக் காணமுடியுமா...?! தாயகத்தைக் கொள்ளயடித்துச் சுருட்டியவனும் கனடாவில் வாழ்கிறான் அவனிடம் தாயகப்பற்றைக் காட்டமுடியுமா....?!படிப்பால் உயர்ந்துவிட்டேன் எனக்கு மேற்குலகே கதி என்று வந்தவனிடம் உங்களால் தாயகப்பற்றைக் காட்டமுடியுமா...?! இப்படிப் பலதுகள் உண்டு நாம் கண்டும் உள்ளோம்...! உதாரணமாக யாழ்பல்கலைக்கழகம் ஒவ்வொருவருடமும் சுமார் 75 மருத்துவர்களை உருவாக்கின்ற போதும் எத்தனை பேர் அங்கிருந்து சேவை செய்கின்றனர்...அதில் எத்தனை பேர் வெளிநாட்டில் வேலைதேடி வந்து நிரந்தர வதிவுரிமைக்காக அலைகின்றனர்...அங்கெல்லாம் உங்களால் தாயகப்பற்றைக் காட்ட முடியுமா...அவர்களிடம் உண்மையாக தாயகப்பற்று உள்ளதா...?! ஏன்...எத்தனையோ சிறுவர்கள் உறவுகளை இழந்து நிர்கதியாகியுள்ளனர்...ஆனால் புலத்தில் இருந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு தாயகத்தில் கோயில் கட்டுவதும் கும்பாபிசேகம் என்று காசை இறைப்பவர்கள் உண்மையான தாயகப்பற்றாளர்களாக இருந்தால் கோவிலுக்கொரு சிறுவர் புகலிடத்தை நடத்தட்டும் பார்ப்போம்...தாயகப்பற்றென்று எழுத்தில் எழுதுவோர் தான் அதிகம் அது அல்ல உண்மையான தாயகப்பற்று...ஒவ்வோர் மனதிலிருந்து உண்மையான சமூகச் சிந்தனை மிகு சிந்தனைகள் செயல்வடிவமாக வெளிப்படுவதே உண்மையான தாயகப்பற்று...அது உண்மையில் எத்தனை பேரிடம் உண்டு,,,! கம்பன் எப்படி வாழ்ந்தான் என்று நாம் கவி படிப்பதில்லை...அல்லது கண்ணதாசன் எப்படி வாழ்ந்தான் என்று கவி படிப்பதில்லை...கவி என்ன சொல்கிறது என்பதை அறியவே கவி படிக்கின்றோம்...வாரிதி என்ன வாழ்க்கை வாழ்கிறார் என்பது எமக்குத் தேவையில்லை...அவர் சமூகத்துக்கு என்ன செய்கிறார் என்பதுதான் தேவை....நாவலர் விபுலானந்தர் என்ற தமிழ் பெரும் புலமைகளுக்குப் பின் தாயகம் தரமறந்த தமிழ் இலக்கியப் புகழை தன் பேச்சாற்றலால் தமிழகம் வரை கொண்டு சென்றவர் வாரிதி என்றால் அது மிகையல்ல...அவரின் சொந்த நடவடிக்கைகள் தவறானதாக இருக்கலாம்...கண்ணதாசன் வாழ்ந்த வாழ்க்கையைப்பார்த்தால் அவரின் கவிதையைப்படிக்க அருவருப்பாக இருக்கும்...ஆனால் அதை மறந்துதானே கவிதை படிக்கின்றோம்....அது போல ஒரு இலக்கியவாதியாக வாரிதியைக் காண்பதே ஒரு நல்ல விமர்சகனுக்குச் சிறந்தது...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 09-27-2003 கண்ணதாசன் கவிதையில் தன் வாழ்க்கையையும் காட்டினார். இந்த மேதாவி மற்றவரை துாற்றி தன் அழுக்குகளுக்கு 'சென்ற்' அடிக்கிறார். ஊரில் இருந்துதான் கோயில்களுக்கு நிதி சேர்க்க வருகிறார்கள்.. வந்து நின்று 500 யூறோக்கு கீழை வாங்கமாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்கள்.. இதுவும் உண்மை குருவிகள். - kuruvikal - 09-27-2003 உண்மை..வாரிதியே ஊரில் சின்னக் கோயிலுக்கும் 8000/= தொடக்கம் வாங்கினவர்....அது அவர்களினதும் கோயில் நிர்வாகத்தினதும் 'கொடுக்கல் வாங்கல்கள்'...அதற்குள் இலக்கியம் சிக்கித்தவிப்பது வேதனைதான்...என்றாலும் இலக்கிய வாதத்திறமை என்பது அவரிடம் உண்டு என்பதும் என்னவோ ஏற்கவேண்டிய ஒன்றாகத்தான் இருக்கிறது...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|