06-13-2005, 10:57 AM
<img src='http://img35.echo.cx/img35/9532/birds213vi.jpg' border='0' alt='user posted image'>
<b>காக்கை ஒன்று குயிலிடம்
கா கா என்றது
காரணம் புரியாமல்
கானக் குயிலும் பதிலுக்கு
கானமிசைக்குது
காரணமறியா காக்கையும் முழிக்க
கானக் குயிலோ தொடருது கீதம்
கானகத்து வசந்தம்
காரணமாக்கும் என்று
காத்திருந்த குருவி
காடேகித் தேடுது உறவுகளை
காக்கையும் குயிலும் கிளைதனில்
காலத்தால் பகை மறந்து
கான சபை நடத்தும்
காட்சியது கண்கொள்ளா இன்பமாக
காலத்தால் ஏங்கிய கனவு
காட்சியாய் நனவாய்
காவியமாகும் என்று குருவி எண்ண
காலம் கணத்திலொரு கதை மாற்றுது
காத்திருந்து கறுவிய காகம்
கால் கிளப்பிப் பறக்குது
கானக் குயில் தானும்
கால் பதறிப் பறக்குது
கானகம் எங்கும்
காற்றில் ஒரு யுத்தம்
கா காவும் கூ கூவும்
காயங்கள் பட மாறுது சுருதி
கானகம் எங்கும் சிந்துது குருதி
காரணம் கேட்டால்
காக்கையின் கூட்டுக்குள்
கானக் குயிலாரின் உதயமாம் சங்கதி
காக்கையும் அறியாமல்
காரணம் முடித்தது தப்பாம்
கானகத்து வழக்கோடு
காலாறக் கொஞ்சம் வரப்பேக
காதில் விழுகுது சேதி
காக்கையோ குயிலோ
காரியமில்ல
கானகமேகா மனிதனும்
காரணமின்றிச் சிந்துறான் குருதி
காணி நிலத்துக்கு தானே சொந்தம் என்று
கார்காலம் காணுது கண்கள் - அங்கு
காரணம் புரியாமலே...!!!!!</b>
(சிந்தித்த சிலவரிகளைச் சிலாகிக்கிறோம் சிந்திக்க...!)
<b>காக்கை ஒன்று குயிலிடம்
கா கா என்றது
காரணம் புரியாமல்
கானக் குயிலும் பதிலுக்கு
கானமிசைக்குது
காரணமறியா காக்கையும் முழிக்க
கானக் குயிலோ தொடருது கீதம்
கானகத்து வசந்தம்
காரணமாக்கும் என்று
காத்திருந்த குருவி
காடேகித் தேடுது உறவுகளை
காக்கையும் குயிலும் கிளைதனில்
காலத்தால் பகை மறந்து
கான சபை நடத்தும்
காட்சியது கண்கொள்ளா இன்பமாக
காலத்தால் ஏங்கிய கனவு
காட்சியாய் நனவாய்
காவியமாகும் என்று குருவி எண்ண
காலம் கணத்திலொரு கதை மாற்றுது
காத்திருந்து கறுவிய காகம்
கால் கிளப்பிப் பறக்குது
கானக் குயில் தானும்
கால் பதறிப் பறக்குது
கானகம் எங்கும்
காற்றில் ஒரு யுத்தம்
கா காவும் கூ கூவும்
காயங்கள் பட மாறுது சுருதி
கானகம் எங்கும் சிந்துது குருதி
காரணம் கேட்டால்
காக்கையின் கூட்டுக்குள்
கானக் குயிலாரின் உதயமாம் சங்கதி
காக்கையும் அறியாமல்
காரணம் முடித்தது தப்பாம்
கானகத்து வழக்கோடு
காலாறக் கொஞ்சம் வரப்பேக
காதில் விழுகுது சேதி
காக்கையோ குயிலோ
காரியமில்ல
கானகமேகா மனிதனும்
காரணமின்றிச் சிந்துறான் குருதி
காணி நிலத்துக்கு தானே சொந்தம் என்று
கார்காலம் காணுது கண்கள் - அங்கு
காரணம் புரியாமலே...!!!!!</b>
(சிந்தித்த சிலவரிகளைச் சிலாகிக்கிறோம் சிந்திக்க...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->